பெரிய ஆளும், சிறிய ஆளும்
The prestige என்றொரு படம். மேஜிக் பற்றியது. ஆனால், interludeல் எடிசன்/டெஸ்லா குறித்தும் வருகிறது.
எடிசன் காலத்தில் எடிசனை விடவும் டெஸ்லா தொழில் நுட்பத்தில் வல்லவராக இருந்தார். அதனால் எடிசனே டெஸ்லாவை வேலைக்கு வைத்துக்கொண்டார். எடிசனுக்கு தன் கண்டுபிடிப்பை வியாபாரம் செய்வதில் தான் ஆர்வம் இருந்தது. டெஸ்லாவுக்கோ கண்டுபிடிப்புகளில் மட்டுமே ஆர்வம் இருந்தது.
எடிசனுடன் பொருத்திப் பார்க்கின் டெஸ்லா அதிபுத்திசாலி மற்றும் பண்பாளர். டெஸ்லாவிடமிருந்த ஒரே ஒரு எதிர்மறைப் பண்பு, டெஸ்லா கொஞ்சம் introvert. அவருக்கு தொழில் நுட்பங்கள் மீது அபாரமான ஆழமான புரிதல் இருந்தது. இப்படி இருப்பவர்கள் பெரும்பாலும் introvert ஆகத்தான் இருப்பார்கள். ஐன்ஸ்டைன் முதல் ராமானுஜன் வரை பெரும்பாலான நேர்மையான அதிபுத்திசாலிகள் introvert களாகத்தான் இருப்பார்கள்.
ஆனால் எடிசனிடம் அறிவு ஜீவித்தனத்தை விடவும் வியாபார மூளையே அதிகம் இருந்தது. எடிசன் DC current கண்டுபிடிக்கிறார். டெஸ்லா கண்டுபிடித்தது ACஐ. அதுமட்டுமல்லாமல், வயர் இல்லாமலேயே மின்சாரத்தைக் கடத்தவும், டெலிபோர்டெஷன் செய்யவும் கூட வழிமுறைகள் அவரிடம் இருந்தன. ஆனால் டெஸ்லா தன் புத்தியை பணமாக்க முயற்சிக்கவில்லை.
எடிசன் வியாபாரம் செய்ய மனிதர்களின் ஆதரவு தேவை என்பதை அறிந்துவைத்திருந்தார். விளைவு: தன் ஆதரவாளர்களை வைத்து டெஸ்லா எங்கு சென்றாலும் தொடர்ந்து சென்று அவரது ஆராய்ச்சிக்கூடத்தை கொளுத்தினார். தொடர்ந்து இடையூறுகள் செய்தார்.
காலம் டெஸ்லா யார் என்று நிரூபித்தது. ஆயினும் எடிசன் ஃபார்முலா இன்னமும் அழியவில்லை.
எடிசன் ஃபார்முலாவைப் பின்பற்றி இன்னமும் ஜல்லி அடிப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களிடமிருந்தெல்லாம் சில பொதுவான குணாதிசயத்தைப் பார்க்கலாம்.
1. என்ன செய்தாலும் அதற்கு ஜால்ரா தட்ட ஒரு கூட்டத்தை வைத்திருப்பார்கள். அந்த கூட்டத்தின் பசி அறிந்து தொடர்ந்து அதற்கு தீனி தந்துகொண்டே இருப்பார்கள். கூட்டமும் வளராது. இவர்களும் வளர மாட்டார்கள்.
2. பேசுவது புழங்குவது எல்லாமே தான் உருவாக்கி வைத்திருக்கும் குழுவுடன் மட்டுமே என்றிருப்பார்கள். புதியவர்களிடம் பேசுவதில்லை. பேசினால் உருவாக்கிவைத்திருக்கும் 'பெரிய ஆள்' பிம்பம் உடைந்துவிடும் அல்லவா?
3. பொதுவான, திறன்களை சோதிக்கும் தளங்களை இவர்களாகவே ' நான் அதையெல்லாம் தாண்டி ரொம்ப நாளாச்சு. அதெல்லாம் வளர்றவங்களுக்குத்தான் தேவை. எனக்கில்லை' என்று தவிர்த்துவிடுவார்கள். உண்மையில், அங்கெல்லாம் இவர்களுக்கு மரியாதை இருக்காது என்பது இவர்களுக்கே தெரியும். அங்கெல்லாம் போனால் வளர்த்துவைத்திருக்கும் பெரிய ஆள் பிம்பம் உடைந்துவிடுமே என்ற கவலை இவர்களுக்கு.
நிஜமாகவே திறமைசாலிகளை கண்டுகொள்ள நான் சில வழிகள் வைத்திருக்கிறேன்.
1. எத்தனை உயரம் வளர்ந்தாலும், ஜால்ரா தட்டும் கூட்டத்துக்கிடையே என்று மட்டும் ஓய்ந்துவிடாமல் தொடர்ந்து எவரையும் எதிர்கொள்ளும் திறன்களுடன் இருப்பது. இவர்கள் யாரையும் கண்டு பயப்பட மாட்டார்கள். ஆதலால், குழுவைத்தாண்டி வெளி ஆள் அண்டினாலும் கவலை இல்லை இவர்களுக்கு.
2. எத்தனை உயரம் வளர்ந்தாலும், திறன்களை சோதிக்கும் தளங்களின் மூலம் தன் திறன்களை கூர் தீட்டிக்கொள்ள தன்னிடத்திலிருந்தும் கூட இறங்கி வர தயங்க மாட்டார்கள். இதுதான் உண்மையான திறமை. நிஜமாகவே திறமைசாலியாக இருப்பவன் எந்த தளத்தைக் கண்டும் அஞ்சமாட்டான்.
3. உண்மையில் குழு என்பது நம்மை நம் திறன்களை வளர்க்காது. மழுங்கடிக்கவே செய்யும். ஆதலால் நிஜமான திறமைகள் கொண்டிருப்பவன் முதலில் குழு மனப்பான்மையை ஊக்குவிக்க மாட்டான்.
எனக்குத் தெரிந்து இவைகள் தான் 'உண்மையான பெரிய ஆட்கள்' என்பவர்களின் பண்புகளாகப் பார்க்கிறேன். ஆதலால், ஒரு குழுவுக்குள்ளேயே அதிகம் புழங்குபவர்கள், திறன்களை சோதிக்கும் தளங்களை புறக்கணிப்பவர்கள் என் பார்வையில் கள்ள மெளனிகளே. அவர்கள் எடிசன் போல. தான் வாழும் காலம் வரைக்கும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே புழங்கி செத்து மடிவார்கள். காலம் அவர்களை மிக எளிதாகப் புறக்கணித்துவிடும்.
The Prestige திரைப்படத்தில் இதை ரொம்பவும் subtle ஆகக் காட்டியிருக்கிறார்கள். Tesla is true genius.