ராணி (22.7.2012) வார இதழில் என் க‌விதை

22.7.2012 தேதியிட்ட இந்த‌ வார ராணி வாரந்திரியில் நான் எழுதிய "கோர முகம்" என்ற தலைப்பிலான கவிதை பக்கம் 39 ல் வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கவிதை வெளியான பக்கத்தின் பிரதி இங்கே. கவிதையை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் இடுமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

கோர முகம்

தளும்பித் தளும்பி நிரம்பி
மின்சார விளக்கொளி
அறை முழுவதும்
இருட்டை விரட்டுகிறது...


ஆனாலும்
சின்னஞ்சிறு
தேநீர் கோப்பையின்
முதுகில் கொஞ்சமேனும் இருள்
அடர்த்தியாய் படிவதைத்
தவிர்க்க முடிவதில்லை...


சில நேரங்களில் வெளிப்படும்
மனிதர்களின்
கோர முகங்கள் போல‌...


- ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)

# என் கவிதையை வெளியிட்ட ராணி வார இதழுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.