Wednesday, 19 July 2017

தென்றல் ஜூலை 2017 இதழில் எனது சிறுகதை

தென்றல் ஜூலை 2017 இதழில் எனது சிறுகதை

Wednesday, 24 May 2017

31.05.2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை


31-மே-2017 தேதியிட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழின் "சொல்வனம்" பகுதியில் எனது "பூ" என்ற தலைப்பிலான எனது கவிதை ஒன்று பக்கம் 62ல் வெளியாகியிருக்கிறது.

எனது கவிதையை தேர்வு செய்து வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.Monday, 22 May 2017

Alien Covenant

Alien Covenant


It is not just Ridley Scott but even I don't personally believe that humans are just a mere by-product of a molecular evolution over a very long period of time. Earth has trillions and trillions of species on board but rape exists only in one species and that is humans is one, not a rejectable reason why I think Humans don't belong to this planet which has so many other "cultured" species possessing the right qualities to co-exists in this wonderful planet.

I personally liked the point in the film where the two protagonists discuss that a creator would always create something that doesn't come in way of his own survival. The basic 3 Rules with which Robots are created is one fine example for this. If we are Gods to Robots and in order to ensure robots are always under us we have laid restrictions in its directives, then why God himself would not have done the same to us? As a 'restricted' species, how are we expecting to reveal god or his elements when he has purposefully restricted us?

Ridley Scott says we all are 'restricted' species by design in such a way that we don't step in the way of the one who created us all. Interesting. Isn't it? Most importantly, he says, we don't belong to this planet and that if there are aliens around then we are the ones.

Supporting to this, is the survival of David in the rouge planet because almost half of all that roams around in that planet are engineered by him and to take his experiments and creations to the next level, David pretends to be Walter and takes over Covenant ship to the new habitable planet which is at 7-years-of-cryogenic-sleep distance.

If you have already seen Prometheus and Aliens vs predators movies, the ugly creatures that appear all through the movie would not surprise or shock you much. In fact, as a sci-fi movie, Alien Covenant is not that difficult to understand too as it has nothing to do with warping, alternate timelines, black holes, worm holes and so many other quantum physics terminologies. But showing the same ugly creatures this time, in white color doesn't  make much of a difference.

I don't understand the point when the ugly alien was stuck in that huge transport vehicle and fell off the ship. If you notice, it doesn't fall as if it falls in space which is nothing but vacuum. Ideally, it should follow the ship because technically it was a part of the ship until fall and therefore it should have retained the same velocity since in vacuum there is no resistance to a speeding object.

Any speeding object in vacuum continues to drift away in the same speed because there is no medium at all. How does it fall? In space, mass doesn't matter except gravity and warping. Right?

One other thing I didn't understand was when their sensors picked up a signal in a planet which is only weeks away, they immediately choose to check it out and the moment the expedition group lands, they roam around the land with no masks or any concern about the breathable atmosphere or anything like that. How is that possible?

Neglecting all these, Alien Covenant was a worth-watching sci-fi movie. I love Sci-fi and I should agree, it was worth for the 11 dollars.

Wednesday, 10 May 2017

வேரை நோக்கிய பயணம்

வேரை நோக்கிய பயணம்


Wednesday, 26 April 2017

03 மே 2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை

3-மே-2017 தேதியிட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழில் சொல்வனம் பகுதியில் "காட்டு விலங்கு" என்ற தலைப்பிலான எனது கவிதை பக்கம் 52ல் வெளியாகியிருக்கிறது.
எனது கவிதையை தேர்வு செய்து வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.Fiction: Aliens by Ram Prasath


"Sir, we heard that you are suspended from NASA operations due to your stupid attitude issue within the organization?" the reporter of DailyNews.com asked.

​"Yes. It is true that I have been suspended" Collins said.

"We have also been told that you floated across unreliable informations about America's first moon landing?" the reporter further asked.

"You must have also heard that I claimed alien-visits to Earth" Collins said.

"Yes sir" the reporter replied firmly.

"So what is your question now?" Collins asked.

The reporter thought for a moment.

"Sir, with due respect, I don't agree that Earth has been threatened by Aliens ever since we sent man-made objects to moon sir. So you must had been crazy about those of your unreliable informations" he added.

"I hope you agree that Neil Armstrong was the first to land on the moon" Collins asked.

"Yes sir."

"What do you think that came back from moon?" Collins asked.

The reporter's eyebrows shrunk.

"Wasn't it, Neil?" he asked.@Thanks

Saturday, 22 April 2017

26.04.2017 இந்த வார ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை

26 ஏப்ரல் 2017 தேதியிட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழின் சொல்வனம் பகுதியில் எனது கவிதை "கோணங்கள்" வெளியாகியிருக்கிறது.
எனது கவிதையை தேர்வு செய்து வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...23.03.2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை

23 மார்ச் 2017 ஆனந்த விகடன் இதழில் வெளியான கவிதையின் பிரதி இங்கே...
எனது கவிதையை தேர்வு செய்து வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..
Friday, 21 April 2017

ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை


23-மார்ச்-2017 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான எனது கவிதைக்கு சன்மானத்தொகை எனது வங்கிக்கணக்கில் வரவு வைத்துவிட்டதாக ஆனந்த விகடன் அலுவலகத்திலிருந்து இன்று வந்த மின்னஞ்சலை பார்த்த பிறகு தான் 23 மார்ச் 2017 ல் எனது கவிதை வெளியாகியிருப்பதையே தெரிந்துகொள்கிறேன்.

எனது கவிதையை தேர்வு செய்து வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கவிதை வெளியான இதழின் பிரதி நண்பர்கள் யாரிடமேனும் இருந்தால் பகிர இயலுமா?

எதற்கு இந்த அலைச்சல்? பேசாமல் ஆனந்த விகடன் இணைய பிரதிக்கு சந்தா கட்டிவிடலாமே? நல்ல ஐடியா தான்.. ஆனால் ஒரு நாளின் பெரும்பாலான நேரங்கள் அலுவலக வேலை, எதையேனும் வாசிப்பது, எழுதுவது என்று கணிப்பொறி திரையிலேயே கழிகிறது.. நானெல்லாம் துண்டு சீட்டில் எதையேனும் கிறுக்கி வைத்தால் கூட எடுத்து படித்து விடுபவன். என்னிடம் ஆனந்த விகடனின் எல்லா இதழ்களும் கிடைத்தால்!!

ஓ மை காட்..

நினைத்து பார்க்கவே கொடூரமாக இருக்கிறது. இதை யோசித்தே இத்தனை நாளும் சந்தா கட்டாமல் இருந்தேன்.. சந்தா கட்டிவிட்டால் கண்டிப்பாக என்னை கட்டுப்படுத்தவே முடியாது.. ஆண்டின் அத்தனை இதழ்களையும் வரி விடாமல் வாசிப்பதோடு மீள் வாசிப்பு வேறு செய்து பார்த்துவிடுவேன்.. அது ஒரு மாபெறும் அக்சஷனுக்குள் என்னை தள்ளிவிடும் வாய்ப்பிருக்கிறது. Literarlly its a trap. எழுதுவதற்கான நேரம் குறைந்துவிடலாம்.

இது போன்ற சன்மானத்தொகைகள் ஆண்டு முடிவில் ஒரு புத்தகமாக உதவுகின்றன. அதுவும்  வாசகனை வாங்கச்செய்ய வேண்டிய கட்டாயம் இல்லாத புத்தகம். கடந்த மூன்று - நான்கு வருடங்களாக புத்தக வெளியீட்டில் எனது ஃபார்முலா இதுதான். இதனால் எனக்கும் நஷ்டமில்லை என்பதால் நண்பர்களுக்கோ, தெரிந்தவர்களுக்கோ வாசிக்க இலவசமாக தருவதில் எவ்வித தயக்கமும் இல்லை.

எனது கணித நாவலை அப்படித்தான் பலருக்கு தந்திருந்தேன்.. விமர்சனங்கள் ஏதும் பெரியதாக வெளியாகவில்லை. உள்ளடக்கம் தரமானதுதான். அதில் துரும்பளவு கூட சந்தேகமில்லை. இருப்பினும்..................................................

தமிழ் எழுத்துலகத்தின் இயங்குமுறை சற்று அல்ல, ரொம்பவே சிக்கலானது. அது யார் யாரையோ காணாமல் அடித்திருக்கிறது.. நானெல்லாம் எம்மாத்திரம்? அதனால் விட்டுவிடலாம்...

கைவசம் நிறைய சிறுகதைகள் இருக்கின்றன. கவிதைகள் இருக்கின்றன.. தொகுத்தால் நான்கைந்து தொகுப்பாவது தேறும். அத்தனைக்கும் இன்னும் பணம் சேரவில்லை. சேரும் வரை வெளியிடும் எண்ணமும் இல்லை. பணம் வாங்காமல் எந்த பதிப்பாளராவது புத்தகமாக்க முன்வந்தால் நான்கைந்து புத்தகங்கள் வெளியீடு காணும்.. 

Monday, 10 April 2017

Haramkhor - Review

Haramkhor - Review


Haraamkhor, I would not say a class movie but can definitely say a movie taken in a class. Yes. The dull looking talented actor Nawazuddin Siddiqui's recent flick went on to theaters with a lot of criticism because of the story line of the movie.

Guess what! School teacher having an affair with his student!

Anti-social, definitely the movie is but I am wondering what might have made this talented actor to sign for this movie. I should say Siddiqui is fearless in accepting characters that come in his way and perhaps that is what he considers, his best. Badlapur was his first one that I happened to see sarcastically when I could not find any good movie to watch in that long boring in-flight from Germany to Atlanta by Lufthansa on a warm summer day. Initially, I just wanted to give it a try and honestly speaking it was Siddiqui's body language that drew me into the movie for the next few hours.I remember once, in Kapil Sharma show, Shah Rukh Khan admitted Siddique's acting skills in front of so many people and that is not an easy recognition to get from Bollywood Baadshaah.

Haraamkhor is difficult to narrate and not that it should not be narrated at all.

In this existentialist world, these kind of stories are the flavors of reality and by that, Haraamkhor is just another story of the society that we belong to, undoubtedly. So we definitely have to digest it and perhaps should even take the time to assimilate it because it is in this society that all our loved ones are dwelling. Things like this happen a lot in cities and towns and most stories submerge like a submarine vessel under water but have their own place in the bunch of gossips that are left as a trail.

The film has been taken in such a way that, One cannot blame the teacher alone for the adultery. Enough rationale has been left in the film to let the viewer conclude that it was a perfect magnetism between the teacher and the student.

I would say, the word "Freedom" has been terribly misunderstood. Haraamkhor can be described as a film that is shedding light on the other side of those for whom, between freedom-with-responsibility and freedom-without-responsibility, it is the later that is easy to adapt. The Sandhya's father has another family which Sandhya gets to know at some point in time and that is when she begins to feel "left-behind". At this stage, she happens to see her teacher Shyam with a small boy and she purposefully tries to keep herself away from Shyam from then on. But she could not cut down his classes and the continuing negligence from his father continues to keep her within the reach of Shyam and the rest of the story becomes easily predictable.

Siddique is so natural at playing the role of a rural school teacher. Be it the scene when he stares at Sandhya who plays a video game while on their way to the town to meet a doctor or the scene when he, after having given up arguing with his wife goes back to Sandhya whom he had ignored on the way back from hospital, he is so casual at displaying a common poor school teacher's mentality.

The word freedom is just an illusion and so long as it remained an illusion, they both could cage themselves in their "whatsoever" love but once the freedom became unbounded from the illusion, the reality hits them so badly but unfortunately the movie ends up brutally there itself leaving enough clue to the viewer that the entire film was only filmed for financial benefits.

Towards the end,  not only they both paid their cost for the irresponsible-freedom that they enjoyed but also made their dependents pay an un-comparable price. The only difference was, it was Shyam's wife in Shyam's case and I don't have to tell you who would it be in the case of Sandhya.


Friday, 24 March 2017

STORY: ALIENS

STORY: ALIENS

By: Ram Prasath
aliens
“Sir, we heard that you are suspended from NASA operations due to your stupid attitude issue within the organization?” the reporter of DailyNews.com asked.
“Yes. It is true that I have been suspended” Collins said.
“We have also been told that you floated across unreliable informations about America’s first moon landing?” the reporter further asked.
“You must have also heard that I claimed alien-visits to Earth” Collins said.
“Yes sir” the reporter replied firmly.
“So what is your question now?” Collins asked.
The reporter thought for a moment.
“Sir, with due respect, I don’t agree that Earth has been threatened by Aliens ever since we sent man-made objects to moon sir. So you must had been crazy about those of your unreliable informations” he added.
“I hope you agree that Neil Armstrong was the first to land on the moon” Collins asked.
“Yes sir.”
“What do you think that came back from moon?” Collins asked.
The reporter’s eyebrows shrunk.
“Wasn’t it, Neil?” he asked.

@Thanks

Saturday, 18 March 2017

பிள்ளையார் எம்.பி.ஏ - சிறுகதை


அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "தென்றல்" மார்ச் 2017 இதழில் வெளியான எனது சிறுகதையின் புத்தகப்பிரதி இங்கே.. எனது சிறுகதையை தேர்வு செய்து வெளியிட்ட தென்றல் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகள்.Sunday, 12 March 2017

Arrival - Review

Arrival - Review


kudos for the Asian writer! He stood out with his extraordinary script on alien's communication strategy. I understand the concept of representing a "whole" and speaking in terms of a "whole". But how could that "whole" have arrived in the first place? If you consider different languages as those by-products that come out at different temperatures by boiling oil in the furnace, looks like the language of aliens, as shown in the movie, is a language that was invented as the last by-product in the by-product-chain.


However, I like the concept of representing "whole". I would be interested to know their definition of time. Because in our world an event is an ordered sequence of tiny or even minuscule events. The order is the significant logical piece here. Now if you consider the world where this order of events happens at the same time, then I further think that there should not have been a concept of a beneficiary. Imagine a world with no concept of the beneficiary? That is what the ancient Hinduism says.
Just be there! Feel the nature as an inherent part of you. You and nature are no different. It is just that you got five senses while nature got trillions. Be there. Feel it. Let it take over you and be blissed. That's all.
Towards the end of the movie, I could definitely get that we all are going back in our inventions. I would not be surprised if we at the end, knock the door of a cave man and ask him to accommodate us.
"To survive we need food" must have been the first flaw of Ape-kind. Notice here, I am using the word "Ape-kind" not "Man-kind". Perhaps we all should have unlearnt it, the moment it sprang up in our deepest ocean-mind. Language, as we all know, a communication tool must have been unnecessary. That means we all are making life a complicated one with those "unnecessary" stuffs that we have invented to keep us at the side of the so-called "beneficiary".
A "whole" is nothing but time, which is greatly and minusculely sliced and put in order. All we are doing is choosing an order and our purpose is to continue to keep us or maintain us at the state of "beneficiary". State is a fictional component. An inherent food for logical brains. The spark that sapiens got somewhere in their brain cells must have been a technical or design fault.
I like the movie for triggering all these thoughts in me.

Saturday, 11 March 2017

Passengers - review

Saw "Passengers". Nice movie. What if one wakes up midway in a long journey to a distance planet? A journey that lasts almost 120 years? Well, he takes an year of time to wake up a girl for his company. If I were in his shoes, might have woken up a girl immediately.Passing by a giant star, ship loosing gravity and the sight of her being held in a bubble were wonderful scenes. Kudos to the creative head. The design of the ship itself is magnificient. Chris Patt looked manly in Jurassic Park series. Here in this, I think he has attempted to look like an young boy. Voyaging to a new home has been shown in so many films. Interstellar for example. But Passengers looks like a sci-fi drama. Most of the times, it is either Chris or Jennifer that is talking to the robot.

How could he bring up a tree in the middle of the ship despite familiar equations like water, soil, sunlight and seed? I am clueless but can go with that since the movie comes under scifi. 

Sunday, 5 March 2017

பிள்ளையார் எம்.பி.ஏ - சிறுகதை

பிள்ளையார் எம்.பி.ஏ - சிறுகதை"உங்களுக்கு எப்போதிலிருந்து கண் என்று சொல்லப்படும் அந்த உறுப்பில் வலி இருக்கிறது?" என்ற அந்த கண் மருத்துவருக்கு கண் மட்டுமே சரியாக இருப்பதுபோல் பட்டது கயல்விழிக்கு. கறுத்த முகம். அதில் அடர்ந்த புருவங்கள், கேசம். எரிகல் மழையால் சேதமுற்ற ஒரு கிரகத்தை போல் அவரது முகமெங்கும் சிறுசிறு பள்ளங்கள். அந்த முகம்! அந்த முகம்! ஐயோ..சட்டென எவருக்கும் 0புருவச்சுருக்கம் தரச்செய்யும் முகம். அந்த முகத்தில் எது, பார்ப்பவரை உடனே அசூயை கொள்ளச்செய்கிறது என்கிற கேள்வியை தனது ஆராய்ச்சி மனத்தில் தொடர்ந்து இயங்கவிடாமல் தடுத்தாள் கயல்விழி. அந்த முகத்தை பார்க்கப்பார்க்க அவளுக்குள் என்னவோ செய்தது. முடிந்தவரை அந்த முகத்தை பார்ப்பதை தவிர்த்தாள் கயல்விழி.

"ஒரு நான்கைந்து நாட்களாக‌" என்றாள்.

"சமீபமாக எங்கேனும் அடிபட்டதா உங்களுக்கு?"

"ஆமாம். நான்கைந்து நாட்களுக்கு முன்பு ஒரு முறை தூக்கத்தில் கட்டிலிலிருந்து தவறி விழுந்துவிட்டேன். அப்போது பின்மண்டையில் அடிபட்டது. அப்போதிருந்துதான் இப்படி இருக்கிறது"

"மூளைக்கு செல்லும் சில நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நவீன மருத்துவத்தில் சரி செய்துவிடலாம். சின்னதாக உங்கள் கண்களில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும். மிக எளிமையான அறுவை சிகிச்சை தான். மூன்றிலிருந்து ஆறு மணி நேரங்கள் மயக்கத்தில் இருப்பீர்கள். அவ்வளவுதான். உங்கள் வழக்கமான வேலைகளை நீங்கள் எப்போதும் போல பார்க்கலாம்" என்றார் அவர்.

அதுவரை அந்த மருத்துவரை முடிந்தவரை பார்க்காமல் தவிர்த்தபோதிலும், பார்க்க கிடைத்த ஒன்றிரண்டு தவிர்க்க முடியாத தருணங்களில் கவனித்ததில் அவர் தனது ஆள்காட்டி விரலால் மூக்கின் நுனியில் அவ்வப்போது லேசாக தேய்ப்பதையும், பக்கவாட்டு நெற்றில் ஒரு துளி வியர்வை வழிவதையும் கவனித்துக்கொண்டாள்.

அவரிடமிருந்து மீண்டும் தனது பார்வையை வலுக்கட்டாயமாக விலக்கிக்கொண்டே.

"சரி" என்றாள் அவள்

"நீங்கள் இப்போது மேஜையைப் பார்த்துதானே பேசுகிறீர்கள்?" என்று அவரது குரல் மட்டும் கேட்டது

"ஆமாம்" என்றாள் அவள்.

இப்போது மேஜை மீதிருந்த காகிதத்தில் ஒரு கை பேனா பிடித்து எதையோ கிறுக்கியது. அந்த கைகளும் கறுப்பாகத்தான் இருந்தன. தடித்த தோலாகத்தான் இருக்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது.

"உங்கள் பெயர் என்ன?" என்றாள் கயல்விழி.

"என் பெயர் ........... . அது எதற்கு? நான் தற்காலிக மருத்துவர் தான். உங்களுக்கு மருத்துவம் பார்க்க இருப்பவர் வேறொருவர்" என்று வந்த பதிலில் அவள் உள்ளுக்குள் ஏதோவோர் நிம்மதி உணர்வு படர்ந்ததென்னவோ உண்மைதான்

பக்கவாட்டில் திரும்பில் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். ஒரு ரோஜாச்செடியில் அழகான செவ்விதழ் ரோஜா பூத்திருப்பதை கண்டாள். அதையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.


*******கயல்விழி கண்விழித்தபோது அந்த ஆஸ்பத்திரியின் வெண்மை நிறைந்த அறை ஒன்றில் வெண்மை நிற திரையொன்று சூழ, அவளது பஞ்சுப்பொதிக்குள் குழந்தையென கிடத்தப்பட்டிருப்பதைத்தான் முதலில் உணர்ந்தாள். கடந்த ஐந்து நாட்களாக எப்போது உறக்கம் கலைந்து எழுந்தாலும் வரும் தலைவலி இப்போது இருக்கவில்லை என்பதை உணர்ந்தாள்.

வெண் தலையணையிலிருந்து லேசாக முகத்தை உயர்த்தி அப்படியும் இப்படியுமாக அசைத்துப் பார்த்ததில் கூட அப்படி ஒரு தலைவலி மீள்வதாக தோன்றவில்லை.

"வணக்கம். என் பெயர் ரமணி. உங்கள் அழகான மீன்களுக்கு, மன்னிக்கவும் கண்களுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர். எப்படி உணர்கிறீர்கள்?" என்ற குரல் கேட்டு திரும்ப, அவள் கண்கள் சட்டென விரிந்தன. அந்த முகத்தை இட்டு நிரப்பிக்கொள்ள ஆயிரம் கண்கள் தேவைப்படும் போலிருந்தது அவளுக்கு. ஆயிரம் கண்களில் இட்டு நிரப்பினாலும் போதாமல் இன்னுமோர் ஆயிரம் கண்கள் தேவைப்படுமென்று தோன்றியது. அங்கே சிவந்த முகத்தின் இதழோரம் ஓர் புன்னகை தவழ நின்றிருக்கும் ஆடவனை எங்கோ ஜென்மங்களை கடந்து பார்த்த உணர்வு மிஞ்சியது.

"இப்போது தலைவலி இல்லை" என்றாள் கயல்.

"நிச்சயம் இருக்காது. இனிமேல் உங்களுக்கு எவ்வித தொந்திரவும் இருக்காது" என்றான் ரமணி.

அந்த ஆணழகனிடம் பேசிக்கொண்டிருக்கவே "தலைவலி இன்னும் இருக்கிறது" என்று சின்னதாய் ஒரு பொய் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது. செக்கச்செவேலென்ற வட்டமான திருத்தமான முகம். பொலிவான, பிரகாசமான முகம். அடர்த்தியான கருகருவென மீசை. தாடி மழித்த இடங்களில் பச்சை புல்லின் நிறம். தரையில் இறங்கி நின்றிருப்பின், அவனை அண்ணாந்துதான் பார்த்திருக்க வேண்டி இருந்திருக்குமென்று தோன்றியது.

"இருந்தாலும் லேசாக ஒரு உறுத்தல் இருக்கிறது" என்றாள் வேண்டுமென்றே.

"அப்படியா? அது அப்படியிருக்க வாய்ப்பில்லை.. தொடர்ச்சியாக அப்படி இருக்கிறதா?"

"இல்லை. சற்று முன் வரை இருந்தது..இப்போது இல்லை.. மீண்டும் வருமோ என்று தோன்றுகிறது"

"சரி..அப்படியானால் நீங்கள் ஒன்றிரண்டு நாட்கள் பாருங்கள்.. அப்படியும் பிரச்சனை இருந்தால் பிறகு மீண்டும் வாருங்கள்... ஒரு முறை சோதித்து பார்த்துவிடலாம்.."

அந்த அழகான முகத்தை மீண்டும் மீண்டும் காண இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் செயற்கையாய் உறுத்தல்களை உருவாக்கலாம் என்று தோன்றியது.

"ஆனால் நான் நகரத்தின் இந்தப்பக்கத்திற்கு அதிகம் வந்ததில்லை. என் வேலை நகரத்தின் மறுகோடியில் தான். இங்கே இத்தனை தூரம் வருவது சற்று சிரமமாக இருக்கிறது. உங்களுக்கு சிரமம் இல்லையென்றால், நீங்கள் நகரத்திற்குள் வருகையில் எனக்கு தெரிவிப்பீர்களா? நாம் நகரத்துக்குள்ளேயே கூட சந்திக்கலாம்"

"அதுவும் சரிதான். நான் தினமும் காலை வேளைகளில் கடலோரமாக ஓட்டம் பழகுவேன். நீங்களும் சேர்ந்துகொள்ளுங்களேன்"

'உன் அகன்ற தோள்களுக்கும், திமிறும் இளமைக்குமான ரகசியம் அது ஒன்றுதானா?' என்று மனதுக்குள் நினைத்தபடியே

"அட! இது ஒரு நல்ல யோசனை" என்றாள் கயல்.

அவர்களிருவரும் சினேகமாய் புன்னகைத்துக்கொள்வதாய் நடித்துக்கொண்டே எதிராளியின் புன்னகையில் ஈர்ப்பை தேடிக்கொண்டிருந்தார்கள்.


*******

அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் கடலோரம் மெல்லிய ஓட்டத்திற்கான ஆடைகளை அணிந்து ஆஜராகியிருந்தாள் கயல். ஆனால் ரமணி எங்கும் தென்படவில்லை. சற்றே ஏமாற்றமாக இருந்தது. ஒரு 15 நிமிடம் காத்திருந்தாள். பிற்பாடு, வாகன நெரிசலை காரணம் சொல்லி, ஒரு சின்ன ஓட்டம் ஓடிவந்து இன்னுமொரு 15 நிமிடங்களை கரைத்தாள். பின்னர் 'வேலை பளுவாக இருக்கலாம்' என்கிற காரணத்திற்காய் இன்னுமொரு 15 நிமிடம் கரைத்தாள்.

பிறகு அவனுடைய தாமதத்துக்கு தான் ஏன் காரணம் சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்று தன்னைத்தானே கடிந்துகொண்டாள். 'நமக்கெல்லாம் அதிர்ஷ்டம் அவ்வளவுதான்' என்றெண்ணியபடி அவள் வீட்டுக்கு செல்லத்திரும்ப,

"வணக்கம்" என்று சொல்லி புன்னகைத்தான் ரமணி.

"இதுதான் நேரத்துக்கு வரும் லட்சணமா?" என்றாள் பொய்க்கோபத்துடன்.

"ஏன்? அதற்கென்ன? சொன்ன நேரத்துக்குத்தான் வந்தேன்" என்றான் ரமணி இதழோரம் தொகுத்த அதே புன்சிரிப்புடன்.

"இல்லையே. ஐந்தரை மணியிலிருந்து காத்திருக்கிறேன் 15 நிமிடங்களாக காத்திருக்கிறேனே"

"பொய். நீங்கள் ஐந்திற்கே வந்துவிட்டீர்கள். நான் தான் பார்த்தேனே"

"அப்படியானால் இங்குதான் இருந்தீர்களா?"

"ஆமாம்"

அத்துணை எளிதாக அகப்பட்டுக்கொள்வோம் என்று அவள் நினைத்திருக்கவில்லை. ஆனால், பதிலுக்கு அவனை சற்றே ஏமாற்றிப்பார்க்க வேண்டிய கட்டாயக்கணக்கொன்று துவங்கிவிட்டதை மனதுக்குள்ளாக குறித்துக்கொண்டாள். இருவரும் ஓடத்துவங்கினார்கள். மிக மெதுவாக. அதிக நேரமெடுக்கும் என்று சொல்கிற அளவுக்கு மெதுவாக.

"உங்களுக்கு இறை நம்பிக்கை இருக்கிறதா? எந்த கடவுளை மிகவும் பிடிக்கும்?" என்றான் ரமணி.

"பிள்ளையார்.. என்னவோ பிறந்ததிலிருந்தே பிள்ளையார் என்றால் எனக்கு அலாதி பிரியம்" என்றாள் கயல்.

"உடலை ஒரு தமிழ்ப்பட நாயகி போல் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் எத்தனை நாட்களாக இப்படி ஓடுகிறீர்கள்?"

"துவக்கத்தில் இப்படி வீதிகளில் ஓடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் வீட்டிலேயே உபகரணங்கள் வைத்து ஓடிக்கொண்டிருக்கிறேன். இன்று நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான் வந்தேன். வீதிகளில் ஓடிக்கொண்டிருந்தபோதெல்லாம் பெரும் தொல்லை. யாரேனும் காதல் கடிதம் நீட்டுவார்கள்"

"அதனால் என்ன தொல்லை"

"அது எப்படி அறிமுகம் இல்லாதவர்களுடைய கடிதத்தை ஏற்க முடியும்?"

"ஆனால் நீங்கள் அறிமுகம் இல்லாதவர்களுடன் அறிமுகம் செய்துகொள்வதில்லையே. பிறகு எப்படி அவர்கள் தங்கள் காதலை தெரிவிக்க முடியும்? உங்கள் சமூக வளையில் அன்னியர்களுக்கு அனுமதி இல்லையே."

"அது சரிதானே"

"அது எப்படி சரியாகும்? உங்களையொத்த புத்திசாலி உங்கள் ஜாதிக்குள், உங்கள் மதத்திற்குள், நீங்கள் படிக்கும் கல்லூரிக்குள், நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்திற்குள் மட்டும் தான் இருக்க முடியுமா? உங்களுக்கென இறைவன் படைத்த ஆண், உங்களுடன் பொதுவான நட்புகளுடன்,  நீங்கள் வந்து செல்லும் இடங்களுக்கு வர முடிந்தவனாகத்தான் இருக்க முடியும் என்று நீங்களாக நினைத்துக்கொள்வதற்கு பெயர் தான் கடவுள் நம்பிக்கையா? உங்கள் பிள்ளையார் எம்.பி.ஏ படித்தவர் என்று அர்த்தப்படுத்துவது போலிருக்கிறது"

"பிள்ளையார். எம்.பி.ஏ. நகைச்சுவையாக இருக்கிறது" என்று சொல்லி சிரித்தாள் கயல்.

அப்போதுவரை அந்த 45 நிமிடங்களை கடத்த பட்ட கஷ்டத்தில் கிஞ்சித்தும் தேவைப்படாமல் அடுத்த ஒன்றரை மணி நேரங்களை அவர்கள் ஒன்றாக அந்த நெடிய கடலோர ஓடு தளத்தில் பேசிக்கொண்டபடியும், சிரித்துக்கொண்டபடியும், விவாதித்துக்கொண்டபடியும் கடத்தினார்கள்.

மறுநாளும் சந்திப்பதாய் உறுதிமொழி பரஸ்பரம் பகிர்ந்துகொண்ட பிறகே பிரிய வேண்டிய நிர்பந்தங்களுக்கிணங்கி பிரிந்தார்கள்.*******


அன்று முழுவதும் இன்னதென்று வகை பிரித்தறிய முடியாத ஓர் குதூகலம் அவள் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டிருப்பதை உணர முடிந்தது அவளுக்கு. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து முழுமையாக 36 மணி நேரங்கள் கடந்துவிட்டிருந்தன. எள்ளவிலும் பிரச்சனைகள் இருக்கவில்லை என்று அவள் கணித்திருந்த அலுவலக நேரத்தில் அவளது அறைக்கதவை யாரோ தட்ட,

"வாருங்கள்" என்றாள்.

உள்ளே வந்தவனைப் பார்த்து திடுக்கிட்டாள் கயல்.

"ரமணி! நீங்க எங்க இங்க....?"

"ரமணியா? யார் அது? என்னை தெரியவில்லையா? நான் தான் கணக்காளன் குலோத்துங்கன்" என்றார் குலோத்துங்கன்.

கயல் தலையை ஒருமுறை சிலுப்பிக்கொண்டாள். இப்போது அவளுக்கு தெளிவாக தெரிந்தது. குலோத்துங்கன் தான். ஆனால் சற்று முன் கதவு திறந்து உள்ளே நுழைந்தவன் ரமணியாய் தெரிந்தது எப்படி?

திரைப்படங்களில், தொலைக்காட்சிகளில் காதலில் விழுந்தவுடன் பார்ப்பவனெல்லாம் காதலனாக தெரிவதாக காட்டப்பட்ட போதெல்லாம் அதை சும்மா என்று நினைத்தது எத்தனை தவறென்று உணரக்கிடைத்த வாய்ப்பென அந்த நிகழ்வை அவள் தனக்குள்ளாக கருதிக்கொண்டாள். குலோத்துங்கன் அறையை விட்டு வெளியேறும் வரை காத்திருந்துவிட்டு, வெளியேறியதும், பாத்ரூம் சென்று கண்ணாடியில் முகம் பார்த்து சிரித்துக்கொண்டாள். கன்னம் சிவந்திருந்தது.

அன்று மாலை நூலகம் சென்றபோதும், மீண்டும் காய்கறிக்கடைக்கு சென்றபோதும் ஆங்காங்கே யார் யாரோ ஒரு சில நொடிகளுக்கு ரமணி போலவே தோன்றினார்கள். தலை சிலுப்பி மீண்டும் பார்த்தபோது அவர்கள் கடந்து போய்விட்டிருந்தார்கள்.

தன்னுடைய வீட்டுக்கு வந்தபோது வாசலில் காவலாளி ரமணி போலவே தோற்றமளித்தான். சாயந்திரம் வீட்டுக்கு வந்து விற்ற விற்பனை பிரதி நிதி கூட ரமணி போலவே தோன்றினான் என்று அவனிடம் இரண்டொரு வார்த்தை அதிகம் பேசினாள்.


*******


அடுத்த நாள் காலையிலேயே எழுந்து பல் துளக்கி, முகம் கை கால் கழுவி கூந்தலை அள்ளி முடிந்துவிட்டு ஓட்டத்திற்கான உடைகளை அணிந்துகொண்டு தன்னுடைய இயந்திர புரவியை கிளப்பி கடலோரம் ஐந்து மணிக்கு வந்து சேர்ந்துவிட்டிருந்தாள் கயல். அவனுக்காக காத்திருந்தாள். சற்றைக்கெல்லாம் தன்னுடைய காரிலிருந்து இறங்கி நடந்து வந்தான் ரமணி. முந்தினம் துவங்கிய கட்டாயக்கணக்கை நேர் செய்ய வேண்டியது நினைவுக்கு வந்தது. வரட்டும் என்று கருதிக்கொண்டு, அவனுக்கு எதிர் திசை பார்த்து முதுகு காட்டி நின்றுகொள்ள,

"வணக்கம் கயல்" என்ற அவனின் குரல் கேட்டு எதேச்சையாக திரும்புபவள் போல திரும்பினாள் கயல். ரமணியே தான்.

"யார் நீங்கள்? என் பெயர் எப்படி தெரியும் உங்களுக்கு?" என்றாள் கயல்.

ரமணியின் முகத்தில் சட்டென ஒரு பீதி படர்ந்ததை பார்த்து ரசித்தாள். ஆனால் அதோடு விட்டுவிடக்கூடாது என்று முடிவு செய்துகொண்டாள்.

"நீங்கள்.... இது.... நான்..." என்று ரமணி இழுப்பதை உள்ளுக்குள் ரசித்தாள்.

"சொல்லுங்கள். யார் நீங்கள்? உங்களுக்கு யார் வேண்டும்?" மீண்டும் கேட்டாள்.

சற்றே அதிர்ச்சியுடன், ரமணி தனது ஆள்காட்டி விரலால் மூக்கின் நுனியில் லேசாக தேய்த்த காட்சியும், பக்கவாட்டு நெற்றில் ஒரு துளி வியர்வை வழிந்த காட்சியும் அவளை அவளது நினைவடுக்குகளில் பரபரப்புடன் தேடச்செய்தது. அன்றொரு நாள் ரமணியின் மருத்துவமனைக்கு முதன் முறையாக சென்றபோது அங்கே அவளை முதலில் எதிர்கொண்ட அந்த கரிய நிற, மேடு பள்ள முகம் கொண்ட அந்த ஆணின் செய்கைகள் தான் அவைகள் என்பதை சிரமங்கள் அதிகமின்றி அவள் கண்டுகொண்டாள்.

"ரமணிக்கு அவசரமாக ஒரு நோயாளியை பார்க்க வேண்டி இருந்ததாம். இன்று வர முடியாது என்பதை சொல்லச்சொல்லி அனுப்பினார்" என்ற ரமணியைப் பார்த்து குழப்பமுற்றாள் கயல்.

ரமணியே வந்து ரமணியைப்பற்றி ஏன் சொல்லவேண்டும்? ஏதோவோர் நாடகம் போல் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. ஆனாலும் அது எங்கே தான் செல்கிறது பார்க்கலாம் என்கிற எண்ணத்தில்,

"சரி..மிக்க நன்றி" என்றாள் கயல். ரமணி ஏதும் சொல்லாமல் தன் வழியே திரும்பி நடந்தது அதிர்ச்சியாக இருந்தது. ரமணியால் வர முடியவில்லை என்று ரமணியே வந்து சொன்னது நடந்திருக்கிறது? எப்படி சாத்தியம்? அப்படியானால் வந்தது ரமணி இல்லையா? அல்லது இதுவும் ஒரு விளையாட்டா? அவன் சற்றைக்கெல்லாம் திரும்ப வந்து 'கயல், நன்றாக ஏமார்ந்தாயா?' என்று சொல்லி சிரிப்பான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அது நடக்கவில்லை.

அப்போதுவரை அலுவலகத்தில் குலோத்துங்கனின் வருகையில் ரமணியின் உருவம் தெரிந்ததும், சாலைகளிலும், நூலகத்திலும் ரமணியின் உருவம் தெரிந்ததும் தற்செயல் என்று எண்ணியது தவறோ என்று தோன்றியது. இது எல்லாவற்றையும் இணைக்கும் ஒரு இழை இருக்கலாமோ என்கிற எண்ணம் தந்தது.

தனக்கு மன நலம் சரியில்லையோ என்கிற எண்ணம் வந்தபோதுதான் தான் நிலைகுலைந்து கீழே விழுந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தாள் கயல்.


*******

அன்று காலை சுமார் பத்து மணி அளவில் வேறொரு மருத்துவமனையில் வேறொரு மருத்துவரின் எதிரால் அவள் அமர்ந்திருந்தாள்.

"நீங்கள் சமீபமாக ஏதேனும் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டீர்களா?" என்றார் மருத்துவர்.

"ஆமாம். சமீபமாக தலையில் அடிபட்டது. அதிலிருந்து காலையில் கண்விழிக்கையிலேயே தலைவலி. அதற்கென மருத்துவம் எடுத்துக்கொண்டேன்" என்றாள் கயல்.

"மூளைக்கு செல்லும் ஓர் நரம்பு சேதமாகியிருக்கிறது. நாம் தினம் தினம் நமது கண்களால் பார்க்கும் காட்சிகள் மூளைக்கு செல்லவில்லை என்றால் நமக்கு பார்வை என்ற ஒன்றே இருந்தும் பலனில்லை. அந்த ஓர் நரம்பு சேதமாகியிருக்கிறது. அது முழுமையாக செயல்படவில்லை. எத்தனை சதவீதம் செயல்படவில்லையோ அதற்கு மாற்றாக உங்கள் மூளைக்குள் ஒரு சிப் பொறுத்தப்பட்டிருக்கிறது. இப்போதுவரை உங்களை சோதித்ததில் இதைத்தான் கண்டுகொண்டோம்"

"அது உண்மைதான்.. அந்த சிகிச்சையின் போது எனக்கும் அதுதான் சொல்லப்பட்டது"

"ஆனால் அந்த சிப்புக்குள் ஏதேனும் குறைகள் இருந்தால்  கூட இப்படி உங்களுக்கு நிகழ்ந்திருக்கலாம்"

"அதை சோதிக்க முடியுமா?"

"நீங்கள் மயக்கத்தில் இருந்தபோது அதையும் வெளியே எடுத்து சோதித்து விட்டோம். அதில் உங்கள் தலைவலிக்கான தீர்வோடு இன்னுமொன்றும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது.."

"அது என்ன?"

"ஒரு குறிப்பிட்ட உருவம் தெரிந்தால் அதை இன்னொரு உருவமாக மாற்றிக்காண்பிக்கும் ஒரு பகுதி அதில் கண்டெடுத்தோம்"

"அந்த உருவம் எது என பார்க்க முடியுமா?"

"உடனே பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு அந்த மருத்துவர் தனக்கு பக்கவாட்டில் இருந்த பெரிய திரையின் பொத்தானை அழுத்த, அது இரண்டு உருவங்களை காட்டியது. ஒன்று  அந்த கரிய, தடித்த தோள் உருவம் தானென கண்டுகொள்ள கயலுக்கு அதிகம் நேரமாகவில்லை. இரண்டாவது ரமணி.

"இவர்களை உங்களுக்கு தெரியுமா?"

"தெரியும். இருவருமே மருத்துவர்கள். இரண்டாமவர் எனது காதலர். பெயர் ரமணி"

"இந்த இருவருமே ஒன்றுதான்.. முதலாமவர் தான் உண்மையான நபர் என்று நான் சொல்லவில்லை.. உங்கள் கண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சிப் சொல்கிறது"

"அப்படியானால், நூலகத்திலும், காய்கறிக்கடையிலும் ரமணியின் உருவம் தெரிந்ததே.. எனது அலுவலக கணக்காளர் ஒருவரிடம் கூட அதே உருவம் தெரிந்ததே. அது எப்படி?"

"பூமியில் இருக்கும் எல்லா பொருட்களும் நம் கண்ணுக்கு தெரிவது அதன் மீது பட்டு திரும்பும் ஒளியால் தான். ஒரு குறிப்பிட்ட உடலை மட்டும் உருவ மாற்றம் செய்ய மற்ற உடல்களிலிருந்து அந்த உடலை மட்டும் வேறுபடுத்தி காட்ட வேண்டி இருக்கிறது. அதற்கென அதிகமாக ஒளியை திருப்பும் இயல்பு கொண்ட சில திரவங்கள் இருக்கின்றன. அதனை நம் உடலில் நாம் தேய்த்துக்கொள்ளும்போது அது மற்ற உடல்களைக்காட்டிலும் அதிகமான ஒளியை திருப்பி விடுகிறது.. அந்த அதிகப்படியை கண்டுபிடித்து அதை மட்டும் வேறொரு உருவமாக மாற்றத்தான் அந்த சிப்பில் மென்பொருள் எழுதப்பட்டிருக்கிறது. உங்கள் கணக்காளர், விற்பனை பிரதி நிதி முதலானவர்கள் அன்று அப்படி அதிகப்படியான ஏதேனும் சரும பூச்சை பயன்படுத்தியிருக்கலாம்" என்ற மருத்துவரை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் கயல்.

கயலுக்கு எல்லாமும் நொடியில் புரிந்தது. தன்னிடம் நெருங்கி பழக, தனது அவலட்சண முகத்தை சிப் மூலமாக மறைத்து இரண்டு நாளாக ஏமாற்றியவன் அவன் தான் என்று. அந்த ரமணி, ஒரு சிவந்த மேனிக்காரன் அல்ல. அடர் மீசைக்காரன் அல்ல. மெலிந்த தோல் காரனல்ல. அகண்ட மார்புக்காரனல்ல.

"உங்கள் தலைவலிக்கு இத்தனை சிக்கலான சிகிச்சை தேவையில்லை.. மருந்துகளாலேயே குணப்படுத்திவிட முடியும்" என்று சொல்லிக்கொண்டிருந்த மருத்துவரின் மீது எத்தனை முயன்றும் அவளால் தனது கவனங்களை குவிக்க முடியவில்லை.


*******


இரவெல்லாம் உறக்கம் வரவில்லை கயலுக்கு.

ரமணியின் முயல்வுகளுக்கான தர்க்கம் புரிந்துவிட்டிருந்தது. மனதில் இடம் பிடிக்க தலைவலிக்கான சிகிச்சையை தனக்கு சாதகமாய் அவன் பயன்படுத்திக்கொண்டதில் எதுவோ ஈர்த்தது.  அதை போக்கிரித்தனம் என்பதா, புத்திசாலித்தனம் என்பதா, அறிவு ஜீவித்தனம் என்பதா?

எத்தனை ரிஸ்க்? சிக்கினால் மருத்துவத்துக்கான உரிமத்தை இழக்க வேண்டி வரும். இனி எப்போதும் மருத்துவம் செய்ய இயலாது. வருமானம் போகும். வாழ்க்கை போகும். கம்பி எண்ணக்கூட நேரலாம். அத்தனையிலும் ரிஸ்க். இதில் எத்தனை மடத்தனம் இருக்கிறதோ அத்தனைக்கு காதலும் இருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது.

ரமணியின் பக்க நியாயம் அவன் சொல்லாமலே புரிந்தது. காரணத்தோடுதான் அவன் பலதும் முந்தைய நாள் ஓட்டத்தில் அவளுடன் பகிர்ந்திருக்கிறான் என்பதை தாமதமாக புரிந்துகொண்டாள் கயல்.

'நிறம் பிறப்பால் வருவது. சருமம் பிறப்பால் வருவது. கல்வி, புத்திசாலித்தனம், சமூக இடம் போன்றவற்றிலும் பிறப்பால் அமையும் சுற்றுப்புறத்தின் பங்கு மிக இருக்கிறது. ஒரு பெரிய மருத்துவமனையில் மிகப்பெரிய பெயர் பெற்ற கண் மருத்துவன் நான். அந்த உயரம் நவீன யுகத்தில் அடைவது அத்தனை எளிதல்ல‌. எல்லாமும் பொருந்தி வருகிறது. கடவுள் உனக்கென படைத்த ஆண் நான் தான் என்பதை எப்படி தவறென நீரூபிப்பாய்?' என்று அவனின் அசரீரி அவளிடம் கேட்பது போலிருந்தது.

யோசித்து பார்த்தால் அப்படியேதும் அவனுக்கெதிராய் சொல்ல முடியாதுதான். நாம் யாரை நண்பர்களாக தேர்வு செய்கிறோம்? நாம் வசிக்கும் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களை என்றால், நம் நட்புகளை நமது பொருளாதாரமும், சாதியும், மதமும் அல்லவா தீர்மானிப்பதாக ஆகிவிடுகிறது? நாம் பயிலும் கல்லூரி என்றால், நமது ஏட்டு சுரைக்காய் கல்வி அல்லவா தீர்மானிப்பதாக ஆகிவிடுகிறது? நாம் வேலை பார்க்கும் அலுவலகம் என்றால் முதலாளித்துவம் என்றல்லவா அர்த்தமாகிறது? அப்படியானால் இறைவன் என்கிற மாபெரும் சக்தியின் ஆளுமையை இந்த மூன்றுக்குள் நாம் சுருக்கிவிட்டதாகத்தானே அர்த்தமாகிறது? ஆத்திகம் பேசிக்கொண்டே நாத்திகமாக நடந்துகொள்ள முடியுமா? கருமை நிறம், தடித்த தோல் மீதான ஒவ்வாமை ஏன்? தொடர்ந்து வெள்ளைத்தோலையும், மெல்லிய சருமத்தையும் பார்த்து பழகிவிட்டதால்தானோ?

வெளியே கவிந்திருந்த இருளுக்கு தன் மூளைக்குள்ளே வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டிருந்தாள் கயல்.

*******

மறு நாளும் தவறாமல் ஐந்து மணிக்கே அவள் கடலோரம் வந்துவிட்டிருந்தாள். ரமணி அவளை நோக்கி வந்தான். அதே கரிய உருவம். தடித்த தோல்கள். முகமெங்கும் மேடு பள்ளங்கள்.

கயல் ரமணியைப் பார்த்து சினேகமுடன் சிரித்தாள். அந்த சிப் ஏற்கனவே எடுக்கப்பட்டிருப்பது ரமணிக்கு தெரிய வாய்ப்பில்லை.

"அங்கும் இங்கும் ஒளிந்து நோட்டம் விடாமல் சரியான நேரத்துக்கு இன்று வந்துவிட்டீர்களே?" என்றாள்.

"ஒளிய வேண்டிய தேவைகள் இன்று இல்லை" என்றான் ரமணி.

இருவரும் ஓடத்துவங்கினார்கள். ஒரு மணி நேரம் எதை எதையோ பேசியபடியே ஓடினார்கள். வழமை போல சிரித்தார்கள். வழமை போல விவாதித்தார்கள். ஓட்டம் முடிவுக்கு வந்த கட்டத்தில்,

"ரமணி, நான் உங்களுடன் ஓட்டம் பழகுவது இன்றுதான் கடைசி நாள் என நினைக்கிறேன்" என்றாள் கயல்.

"ஏன்? என்னாயிற்று?" என்றான் ரமணி.

"கடல் காற்று உடலுக்கு அந்நியமாகிவிட்டது போலிருக்கிறது. உடல் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது"

"சரி. உங்கள் உடல் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளுங்கள்"

"சரி.. அப்படியானால் நான் கிளம்பட்டுமா? நேரமாகிறது. இன்றைக்கு அலுவலகத்திற்கு சற்று சீக்கிரம் செல்ல வேண்டும். சில கலந்தாய்வுகள் இருக்கின்றன"

"சரி. வந்தனம்"

இருவரும் தங்கள் வழியே பிரிந்தார்கள்.

சிப் வெளியே எடுக்கப்பட்டுவிட்டதை சொல்லாமல், ரமணி உருவாக்கிய 'ஆணழகன்' பிம்பத்திலேயே அவனை விட்டு விலகிச்செல்வதாக காட்டிவிட்டதால் அவனால் மேற்கொண்டு தன் மீது 'நிற வேற்றுமை, குழு மனப்பான்மை ஆதரவு' என்கிற குற்றச்சாட்டை சுமத்த முடியாமலாக்கி சூழலை புத்திசாலித்தனமாக கையாண்டுவிட்டதாக கயல் நினைத்துக்கொண்ட அதே வேளையில், அன்றைக்கு அதிகப்படியான ஒளியை வெளியிடும் பூச்சுகளை சருமத்தில் பூசாமல் வந்தும், கயல் தன்னை எப்போதும் போல நடத்தியதில் அவள் நடிக்கிறாள் என்பதை உணர்ந்தும் வெளிக்காட்டாமல், அவளை அவளது பொய் முகத்தோடே நிரந்தரமாக பிரிய முடிவு செய்திருந்தான் ரமணி.

பட்டம் பெற்ற பிள்ளையாரை விட  பட்டம் பெறாத பிள்ளையார் போதும் என்று எண்ணியபடியே தன் போக்கில் நடந்தான் ரமணி.

 - ராம்பிரசாத்

@நன்றி
தென்றல் (http://tamilonline.com/thendral/article.aspx?aid=11401)

உங்கள் எண் என்ன - விமர்சனம் - 5

உங்கள் எண் என்ன - விமர்சனம் - 5
Arun Ganesh J
About the Novel :
The novel was so interesting to study. The story was so oriented to the original life . And I was so proud to study the Tamil's First Mathematical Fiction, The story shows how the life was oriented with maths How the sexual attraction Major Role between the male and female, it shows the varies of relationship by the sentence like ( Anti relationship by dead lock ) , ( Anti relationship with right person by dead lock ) , the main thing which shows the value of advice by a correct person in our novel the character name ( Columbus and Selvem ) , Simply Excellent story for latest generation and youths . and the special thank for you to giving the opportunity to study the Tamils first mathematical Fiction ....

Saturday, 4 March 2017

STORY: KNIFE


STORY: KNIFE


By: Ram Prasath
knifedman
As a sharp knife was on its way penetrating that tall man’s chest and he screamed loudly while his clothes went red, the director shouted “cut” thrice indicating to the crew that the scene was over.
The crew relaxed and was getting ready for the next shot. Dale took the knife and pressed its edge on his palm and he saw that the knife instead of piercing his palm, went silently into the handle itself with the pressure from his other hand by a spring. Reducing pressure, the spring inside the handle was to relieve the knife out of the handle.
“How much does this fetch you?” Dale asked keeping that fake knife on the table inbetween them.
“What? Supporting actor roles in films?” Carter responded.
“What else?”
“Smaller it may be but this is a very genuine job with a proper pay check Dale”
“Contract killing is nothing but the same thing with a real knife but it fetches hell lot of money with which one can live the life of a prince of Abudhabi” saying so he took out a knife from his pocket and placed it on the table next to the fake knife.
“But that is illegal Dale”
“As long as you don’t make it electronically into a bank trasaction, you are free to spend the money the way you want Carter. No tax. No forms. Nothing”
“let me go with what I have Dale”
“Loser!!” he said and grabbed the knife from the table and hid it inside his pant packet.
“I am gonna go on an assignment and I will be paid a huge-some with which I am gonna go to Florida for 3 months vacation Carter” he said and left. Carter stared at Dale until his head vanished.
Dale was on his assignment the next day. He had come to the spot where he had to kill a businessman at his garage. Once he saw the guy at the garage working on his Bentley, he tip toed to him, pulled out his knife from his packet and thrusted with great pressure on his back.
To his surprise, the handle of the knife gave way and the sharp bottom of the knife went smoothly inside the handle piercing nothing. The business man shouted “Guards!! Guards!!” and there appeared several heads in military uniforms with snipers in hand.

@Thanks

Wednesday, 1 March 2017

STORY: A MURDER

STORY: A MURDER

By: Ram Prasath
murder
“A Million?”
“Five. One settlement”
The dark figure that sat inside the Rangerover thought for a moment and pulled out a bag and handed it over to Donovan and Jimmy. Donovan and Jimmy took the bag, pulled its zip and looked into it. Packs of dollar notes worth 5 million!
“No crazy moves gentlemen. I need a clean work. If any of you play foul games, it would only be a matter of another 10 million to hunt you guys down” saying so the figure inside the Scorpio handed over a photo to them.
It was the fifth murder that Donovan has been contracted along with Jimmy and not even once were they caught. Credit should go to their unique skills. Obviously they charged more for each contract.
At the same night, they both hid themselves amidst the thick bushes nearby and entered into the premise of the target, they had to kill. A silencer fitted gun, just a bullet and a right time was all that were needed to put the target down for funeral the next day.
Donovan and Jimmy together moved out the house and rushed to a safe zone where they can relax and free themselves from the eyes of local civilians so as to not get caught.
“What next?” Donovan asked.
“No more assignments for another 3 months. Lets burn the money we got. We’re going to Las Vegas” Jimmy said and to spend money for the Air tickets he opened the bag and carefully retrieved a bunch of hundred dollar notes only to realise that the notes were fake currencies.


@Thanks

Tuesday, 28 February 2017

01.03.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை

01.03.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை

இந்த வாரம் ஆனந்த விகடன் இதழில் சொல்வனம் பகுதியில் எனது "இசை" கவிதை வெளியாகியிருக்கிறது. பிரதிகள் இங்கே..
எனது கவிதையை வெளியிட தேர்வு செய்த ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...


Tuesday, 14 February 2017

உங்கள் எண் என்ன- நாவல் - குங்குமம் விமர்சனம் - 4

20.ஜனவரி.2017 தேதியிட்ட குங்குமம் இதழில் "ரீடிங் கார்னர்" பகுதியில் எனது "உங்கள் எண் என்ன" நாவல் நூலுக்கு விமர்சனம் வெளியாகியிருப்பதை இன்று தான் இணையத்தில் கவனித்தேன். கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து கண்ணில் படுகிறது.

ஒரு பேச்சுக்கு நான் இந்த நூலை எழுதியிருக்கவில்லையென்றாலும் இந்த நாவலை உலகத்தரம் என்று  கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்திருப்பேன். ஆனால் எழுதியது நானாயிற்றே. நம் நாவலைப்பற்றி நாமே எப்படி சொல்லிக்கொள்வது? அடக்கமோ என்ன கருமாந்திரமோ, பெருமையாக சொல்லிக்கொள்ள விடவில்லை.  ஆனால் பத்து லட்சம் பேருக்கு குங்குமம் பத்திரிக்கை சொல்லிவிட்டது.

எனக்கு தோன்றியதே குங்குமம் இதழாசிசிரியர் குழுவுக்கும் தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது என்றே நினைக்கிறேன். அந்த வகையில் குங்குமம் இதழின் விமர்சனத்தால் பேருவகை அடைகிறேன். தன்னம்பிக்கையின் நரம்புகள் பலம் பெறுகின்றன‌.

நண்பர்கள் யாரிடமேனும் இந்த இதழின் பிரதி இருந்தால் ஸ்கேன் செய்து அனுப்ப இயலுமா? இந்த நாவல் குறித்த எல்லாவற்றையும் ஆவணத்தப்படுத்த தேவைப்படுகிறது.

Thursday, 9 February 2017

15.02.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை

15.02.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை


Thursday, 2 February 2017

உங்கள் எண் என்ன - விமர்சனம் - 3

உங்கள் எண் என்ன - விமர்சனம் - 3

கண்ணன் ராமசாமி:

முன்னுரை:
இந்த ஆண்டு நான் முதலில் வாசித்த புத்தகமாக இந்தப் புத்தகம் விளங்குவது பல விசித்திரமான எண்ணங்களை உருவாக்கித் தந்திருக்கின்றது. இந்தியாவின் முதல் Mathematical fiction இது தான் என்கிற பதாகையைத் தாங்கி வந்திருக்கும் இதன் எழுத்தாளர் திரு. ராம் பிரசாத், திரு.கவுதம சித்தார்த்தனின் பரிந்துரையின் பேரில் எனக்கு அறிமுகமானார். எனக்கு கணிதப்புனைவாக ஒரு கதை சொல்ல வேண்டும் என்று பல நாட்களாக ஒரு ஓரத்தில் ஆசை இருந்து வந்தது. இந்த உணர்வே, இவர் என்னிடம் இந்த நாவலைப் பற்றிப் பேசிய பிறகு தான் நினைவுக்கு வந்தது. அதுவரை வாகனத்தில் செல்லும் போது எங்கேயோ டயரில் மாட்டி இழுத்து வரப்பட்ட துணிக் கிழிசலைப் போல நான் இதனை தாங்கி வந்திருக்கிறேன்.
நான் ஏன் Mathematical fiction எழுத ஆசைப்பட்டேன்? வெகு ஜன சினிமாக்கள் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று சொல்லும் போதெல்லாம் கலைத் துறை தொடர்பான திறமைகளைப் பற்றி மட்டுமே பேசுகின்றன எனும் ஆதங்கம் என் மனதளவில் இருந்து வந்தது. இதையும் தாண்டி மக்களால் சாதிக்க முடியாதா என்கிற கேள்வி என் மனதில் எழுந்தது.
இந்தியாவில் படித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகளிடம் பிடித்த பாடம் எதுவெனக் கேட்டால் கண்டிப்பாக பலர் கணிதம் இல்லை என்பார்கள். அதற்குக் காரணம், அது வாழ்க்கையில் இருந்து அந்நியப்பட்டுக் கிடப்பதால் தான் என்பார்கள். 
வானத்தில் வர்ண ஜாலம் புரிய சூரியன், நீர்த் துகள்களை பட்டகமாக (Prism) உபயோகித்துக் கொள்ளும் நிஜத்தை கண் கூடாக பார்த்த யாருக்கும், இயற்பியலில் Dispersion of light ஐ பற்றிப் படிக்கும் போது சுவை மிக்கதாக இருக்கும். ஆனால் முழுவதுமாக எண்களாலும், சமன்பாட்டாலும், தியரங்களாலும் இறுகிக் கிடக்கும் மண் மேட்டினைப் போன்ற கணிதத்தை, இளக்கி சுலபமாகப் புரிந்து கொள்ள நிஜ உலக ஒப்பீடுகள் இல்லாமல் இருப்பதே பாலைவன வரட்சியை ஒத்த நிலைமையினை இந்தத் துறைக்குள் புகுத்தியிருக்கிறது. 
இன்று வரையில் இந்திய மொழிகளில் ஒரு முயற்சி கூட இந்த விரிவான பரப்பில் இல்லை என்றால், இத்தகைய வரண்ட நிலத்திலிருந்து ஈரத்தைத் தோண்டிக் கண்டுபிடிக்கும் செயல் கடினமானதாக இருக்கும் எனும் காரணமே சட்டென நினைவுக்கு வருகிறது. இதன் காரணமாகவே, உலக அளவில் எழுதப்பட்ட Mathematical fiction கள் எல்லாமும் சுவாரசியம் குன்றி விடுமோ என்கிற பயத்தை நிறப்பிக் கொள்ள, மக்களால் சுலபத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய Crime மற்றும் Bio fiction ஆகிய ஜானர்களுக்குள் அடங்கி விடுகின்றன. இதையும் மீறிப் போனால் Space travel தொடர்பான, Sci-fic கதைகளாக இருக்கின்றன. 
ஆனால், மனித உணர்வுகளையும், அதிலும் ஆண் பெண் உரவில் ஏற்படும் விரிசல்களைப் பேசி, அதனை நேரடியாக கணிதத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் மூலமாக அல்லாமல் ஒப்பீட்டளவில் சில வார்த்தைகளை எடுத்துக் கொண்டு, அந்த வார்த்தைகளின் மூலமாக கதை சொல்ல முயற்சித்திருக்கும் இந்த நாவலின் சாதனை அசாத்தியமானது. 
ஆங்கிலத்தில் Mathematical fiction என்று தேடினால் சுமார் 65 புத்தகங்கள் கிடைக்கின்றன. கணிதம் கற்பிக்கப்படும் முறையில் ஆங்கிலமும், இலத்தீனமும், ரோமன் எழுத்துக்களும் எண்களும் மிகுந்திருப்பதால் இந்த எண்ணிக்கை குறைவு என்றே கூறுவேன். தமிழில் ஒரு கணிதப் புனைவு எழுத வேண்டும் என்றால் ஒட்டு மொத்தமாக பொருள் மாறாது தமிழில் மொழிப்பெயர்க்கும் வேலை கடினமானதாகவும் அயற்சியூட்டக் கூடியதாகவும் இருக்கும். ஆனால் இதை இந்தப் புத்தகத்தை எழுதியுள்ள ராம்பிரசாத் அனாயாசமாக கடந்து வந்திருக்கிறார். கணிதத்தின் கோட்பாடுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு, அவற்றின் மாறிலிகளுக்குள் மனிதர்களையும் சூழ்நிலைகளையும் பொருத்தி, இந்தக் கதையை சுவை குன்றாது படைத்திருக்கிறார்.
மேஜிகல் ரியலிசம்:
கதைக்கு பதிப்பாளர் கொடுத்துள்ள முன்னுரையில்,
ஐந்து கதாப்பாத்திரங்களுக்குள் நிகழும் ஒரு வரிக் கதையானாலும் அதனை விளக்க எடுத்துக் கொண்ட களமும், உணர்வுகளை பிரதிபலிக்கும் ஆழமான விவாதங்களும் இதனை வித்யாசமான படைப்பாக முன்னிருத்துகிறது என்று சொல்கிறார்கள். இந்த முன்னோட்டம் கதையிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்கிற சரியான அறிவிப்பாக உள்ளது. எனக்கும் பல இடங்களில், செல்வத்தின் உணர்வுகளை அவன் வெளிப்படுத்தும் விதம் பிடித்திருந்தது.
உதாரணமாக, தன்னுடைய மனைவியின் கள்ளக் காதலை அவன் அறிந்த பிறகு, கதவை பூட்டி வைக்க இனி தேவையில்லை என்று அவன் எண்ணுவது, அவள் ஏன் தன்னை ஏமாற்றினாள் என்று யோசிக்கையில், தன்னிடம் ஏதேனும் குறை இருக்கிறதா என்று அவன் யோசிக்கும் விதம், இப்படியாக ஒரு ஆணின் பார்வையை நன்கு வெளிப்படுத்தி இருக்கிறார் ராம் பிரசாத். பதிப்பாளரின் கருத்துத்தோடு சேர்ந்து மற்றொரு அறிவிப்பையும் கொடுக்கத் தோன்றுகிறது. 
இந்தக் கதை கள்ள உரவு தொடர்பான களத்தை விவரித்து தொடங்கி வைத்த பிற்பாடு, கொலம்பஸ் எனும் அமானுஷ்ய மனிதன் செல்வம் என்கிற நாயகனுக்கு அறிமுகம் ஆவதில் இருந்து ஒரு வகையான மேஜிகல் ரியலிச தளத்திற்கு மாறுகிறது. மனைவி கள்ள உரவு கொள்வதை எவ்வாறு எதிர் நோக்க வேண்டும் என்கிற வித்யாசமான பார்வையை கணிதத்தின் துணை கொண்டு, அவர்களது நிலைப்பாட்டில் இருந்து பல அர்த்தங்களை (இங்கே அர்த்தம் என்கிற வார்த்தை ஒரு மாறிலியாக வருகிறது) எடுத்துக் கொண்டு விளக்குகிறான் கொலம்பஸ். ராம் பிரசாத் இந்த வித்யாசமான பார்வையினை, ஒரு புத்தகத்தை புரட்டி செல்வம் தெரிந்து கொண்டான் என்று எழுதியிருக்கவும் முடியும். ஆனால், கொலம்பஸ் என்கிற பெயரை வரலாற்றிலிருந்து கடன் வாங்கிக் கொண்டு, தான் கண்டுபிடித்த ஒரு தியரியை முன்வைப்பதன் மூலம் எழுத்தாளர் மேஜிகல் ரியலிசத்தை கதையின் சுவாரசியத்திற்காக உபயோகித்திருக்கிறார். ஆனால், இது கதையை நகர்த்துவதற்கு மட்டும் தான் பயன்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகு, கதையின் பிற்பாதியில் விவாதங்களாகவும், விளக்கங்களாகவும் கடக்கிறது. பெரிதாக கதையில் எந்த திருப்பங்களும் இல்லை. மேஜிகல் ரியலிசத்தை மேலும் உபயோகித்து, கதையை இன்னமும் சுவாரசியமாக எடுத்துச் சென்றிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
சிறப்பம்சம்:
இந்தக் கதை ஒரு வரியில் முடிந்து விட்டாலும், சமூகத்தில் நடந்த பல்வேறு கள்ள உரவு, கற்பழிப்பு, ஆணவக் கொலை தொடர்பான உதாரணங்கள், அவை ஏன் நிகழ்ந்தன என்பதைப் பற்றிய விவாதங்கள் வழி நெடுகிலும் நிறைந்துள்ளன. சாதியின் குறியீடுகளான நிற வேற்றுமை, பொருளாதார ஏற்றத் தாழ்வு, படிப்பு, வேலை, சூழல், வாழ்விடம், திறமைகள் ஆகியவை ஆண் பெண் உரவில் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்று ஒவ்வொன்றையும் ஒவ்வொரு மாறிலியாக கருதிக் கொண்டு, அதன் அடிப்படையில் அறிவியல் ரீதியாக பாலியல் தேர்வு நிகழ வேண்டும் என்று பேசுகிறது நாவல். இது தான் இக்கதையை சிறப்பானதாக மாற்றும் கூறு.
கணிதம்:
கணிதத்தின் பல கூறுகளை இந்தக் கதையில் காண முடிகிறது. இதை வாசிப்பவர்களுக்கு, பள்ளியில் படித்த பல கோட்பாடுகள் நினைவுக்கு வரும் என்பதை, செல்வத்தின் வாயாலேயே சொல்லி விடுகிறார் எழுத்தாளர்.
சரி, தவறு என்பதே ரிலேடிவிட்டி (சார்பியல்) தான் என்பது,
மனிதர்களின் அனுபவம் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட தொகுதி (finite set) என்று சில உதாரணங்களின் மூலம் விளக்குவது,
உடற்பயிற்சிக்கும் வரைபடக் கோட்பாட்டிற்கும் ஒப்புமையைக் கொண்டு வருவது,
இந்த உடலின் செல் இயக்கத்தை கணிதத்தின் மூலம் கணக்கிடுவது, மரத்தின் இலைகளின் எண்ணிக்கை என்பது Fibonacci எண் என்பது,
இப்படியாக அனைத்தும் கதையின் ஓட்டத்தில் படிக்கையில் சுவாரசியத்தை அள்ளி விடுகின்றன.
மேலும், கொலம்பஸ் தன்னுடைய RODE என்று பெயரிடப்பட்ட அட்டவனையை செல்வத்தின் வாழ்க்கையோடு பொருத்தி விளக்கும் போது, சரியான இடை வெளியில், மனிதர்கள் எல்லாம் படிமங்களைப் போலத் தான், அனைத்துமே முரண் இருமைகள் தான் என்பதாக, கணிதத்தின் பல்வேறு கோணங்களை விளக்கிக் கொண்டே போகிறான். ஒவ்வொரு மனிதரும் எடுக்கும் முடிவுகள் எவ்வாறு அவர்களை ஒரு சூழ்நிலையை நோக்கி உந்தித்
தள்ளுகின்றன என்பதற்கும் ஒரு வரைபடத்தை வரையும் இடத்தில், விதியை மதியால் விளக்க முனைகிறான் கொலம்பஸ். இளவரசன், கோகுல் ராஜ் கொலை வழக்குகளுக்கும், நிர்பயா கற்பழிப்பு வழக்குக்கும் கூட இந்த அட்டவனையை பயன்படுத்தினால் அவசியமே இருந்திருக்காது என்பது கொலம்பஸின் வாதம். அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் சார்த்தருடன் கூட்டு சேரும் டார்வின் தான் சரியான வழி என்பதும் கொலம்பஸின் முடிவு. இந்த அட்டவணையின் உதவியோடு, ஒரு மாற்றுத் திறனாளி அல்லது வேறு வகையில் பாதிக்கப் பட்டவர்கள் கூட துணை தேடலாம் என்பது, எல்லோரையும் உட்படுத்திய ஒரு வழியாக இதனை நம்ப வைக்கிறது.
கணிதத்தை சுலபமாக புரிய வைக்க முடியுமா?
தன்னுடைய அட்டவனையை கொலம்பஸ் சுலபமாக புரிய வைக்க நிறைய முயற்சி எடுக்கிறான். மக்களுக்கு அந்நியமான கணிதத்தை, அவர்களுக்கு நெருக்கமான துரௌபதி கதையோடு பொருத்தி விளக்கும் இடம் அட்டகாசமாக உள்ளது. இந்த இடத்திலேயே, ஒரு பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ, அவள்/அவனுடைய அர்த்தத்திற்கு பொருந்தும்படியான ஒரு துணை அமைவது முக்கியம் என்பதை புரிய வைத்து விடுகிறான் கொலம்பஸ். மேலும், இந்த அட்டவனையை திரும்பத் திரும்ப ஒரு குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல கொலம்பஸ் செல்வத்திற்கு சொல்லிக் கொடுக்கிறான். இது ஒரு புதிய முயற்சி என்பதால், இத்தகைய விவரமான விளக்கங்கள் தேவை தான்.
பிறகு, ஒரு பெண் தன்னிடம் இருந்து விலக முடிவெடுத்து விட்ட பிறகு அவளை மன்னிப்பதன் மூலம் அந்தப் பெண்ணுக்கும் தனக்கும் தேவையான சரியான துணையை நெருங்க முடியாமல் போவதற்கு அந்த ஆண் காரணமாகி விடுவதை, யதார்த்தப் பின்னணியில் இருந்து கொண்டும், பொதுவான கருத்தோட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து கொண்டும் விளக்க முற்படுகிறான் கொலம்பஸ். இதற்கு சுவாரசியமாக Anti- relationship by deadlock என்றொரு terminology ஐயும் கொடுத்து விடுகிறான். யதார்த்தப் பின்னணியில் இருந்து கொண்டு அவன் விளக்கும் 1000 ஆண்களுக்கு 930 பெண்கள் எனும் கணக்கை நாம் பல இடங்களில் கவனித்திருக்கிறோம். ஆயினும், ஆண் பெண் உரவை இந்த ஒரு பின்னணியில் இருந்து நம்மால் ஏன் சிந்திக்க முடியாமல் போனது எனும் கேள்வியை நம் மனதில் இக்கதை எழுப்பாமல் இல்லை.
விமர்சனம்:
கதையின் பல சிறப்பம்சங்களை நாம் பார்த்துவிட்ட நிலையில், சில விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டி இருக்கிறது.
எந்த ஒரு படைப்புக்கும் மேல் சட்டையைக் காட்டிலும் அடிப்படையான ஆழம் மிக்கதான கருத்தாக்கம் தான் மிக முக்கியமானது. இந்த நாவலின் பரிந்துரையின் படி, பாலியல் தேர்வு முறையில் கொலம்பஸ் - ன் சார்ட் எல்லா வகையான உரவுச் சிக்கல்களுக்கும் வழி சொல்கிறது என்றாலும், இந்தக் குறிப்பிட்ட கதையில் ஆணாதிக்கம், பெண்ணியம் குறித்த புரிதலின்மை ஆங்காங்கே தென்படுகின்றன. 
அந்த அட்டவனையை யார் எப்படி உபயோகிக்கிறார்களோ, அவ்வாறு அது பாலியல் தேர்வினை மாற்றிச் சொல்லும். ஒரு மனிதரின் குறிப்பிட்ட சில அர்த்தங்கள் மற்றொரு பெண்ணிற்கு ஒத்துப் போதலின் விளைவே நல்ல உரவுக்கு அடித்தளம் என்றாலும், இருவருக்கும் இடையிலான முரணான அர்த்தங்களை கண்டுபிடிப்பது என்கிற வேலையில் தான் சிக்கலே உள்ளது.
உதாரணத்திற்கு,
1.    செல்வா தன்னுடைய மனைவி சரளா எதிர் வீட்டு மாதவனுடன் கள்ள உரவு கொண்டது ஏன் என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்கிறான். அவனுக்கு இன அடையாளம், கருமை நிறம் முதலான சில அர்த்தங்கள் கிடைக்கின்றன. கதை முடிவு வரை உண்மையான அர்த்தத்தை சரளாவின் வாயால் அவன் கேட்கவே இல்லை. கள்ள உரவு கொண்ட சரளா சொல்லும் உப்புக்கு சப்பில்லாத காரணம், அவளுடைய மனதை அறிய முடியாத ஒரு ஆணின் பார்வை, வாசகருக்கு ஏதேனும் சொல்ல வேண்டுமே என்று எண்ணி உருவாக்கப்பட்டதாகவே கருத முடிகிறது. ஒரு பேச்சுக்கு, இந்தக் கதையில் வாழும் கதாபாத்திரங்கள் நிஜ வாழ்வில் இருந்தால் இதைத் தாண்டிய மற்றொரு முடிவு சாத்தியமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. அதே நேரம் செல்வத்தை காட்டிலும் மாதவன் எந்த விதத்திலும் மேலானவன் இல்லை எனும் முடிவும் செல்வத்திற்குத் தோதாகவே உருவாக்கப் பட்டிருக்கிறது. இது கதையில் வரும் ஆணின் பார்வைக்கு தோதாக வாசகரை தயார் படுத்தும் முயற்சி என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.
2.    செல்வம் தன்னுடைய பெண்ணியம் குறித்தான பார்வையை சரளா ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அவளுடைய புரிதலின்மை என்கிறான். இந்த எண்ணம் அவனை ஆணாதிக்கம் என்கிற ஒன்று இல்லவே இல்லை என்று முடிவு செய்ய வைக்கிறது. ஒரு பெண் ஆடை அணியும் போது அவளை வரம்புகளை பின்பற்றச் செய்ய வேண்டும் என்கிற செல்வத்தின் வேட்கை ஒரு ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு தான் என்று அவனுக்குத் தோன்றவே இல்லை. மேலும் கற்பழிப்புக்கான காரணங்கள் யாவை என்கிற அறிவியல் பூர்வமான ஆய்வில் செல்வம் இறங்கவே இல்லை.
மாற்றுக் கருத்துகள்:
“நவீனமாக ஆடை அணிவதற்கென்ன? எல்லாம் நம்ம கிட்ட தானே இருக்கு?” என்று சரளா சொல்வதை நவீனத்துவவாதிகளின் போலிப் பரப்புரையாக நினைத்து செல்வம் உதாசீனப் படுத்தி விடுகிறான். அவன் நவீன ஆடையால் கவனச் சிதறல் ஏற்பட்டு படிப்பு கெட்டுப் போகலாம் என்று சொல்லும் போது, இதே குறைபாடுகள், நுகர்வுக் கலாச்சாரத்தால் தூக்கிச் செல்லப்பட்ட உலகில் உள்ள ஆணுக்கு இருந்தும், அவன் சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரத்தை அனுபவிப்பது எப்படி? என்கிற கேள்விக்குள் அவன் செல்லவில்லை.
தன் நிற, இன அடையாளத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் ஒரு ஆண், அதில் இருந்து விடுபட்டு படிப்பில் முன்னுக்கு வர வேண்டும் என்று எண்ணுவது தவறில்லை என்கிறான் செல்வம். ஆனால், பல ஆண்டுகளாக ஆணின் பேச்சை கேட்டு நடப்பதே பெண்ணுக்கு நல்லது என்கிற பரப்புரையை வைத்தே பெண்ணின் மீதான பிடிமானத்தை ஆண் விட்டுக் கொடுக்காமல் வைத்திருக்கிறான் என்பதை செல்வம் அறியவில்லை. அத்தகைய பிடிமானத்தை உடைத்து எறிந்து, தன்னுடைய நலனை தானே காத்துக்கொள்ள பெண்ணுக்கு திராணி இருக்கிறது என்பதை நிரூபிக்கும் பெண்களும் இருக்கிறார்கள் என்று செல்வம் யோசிக்கவில்லை.
கற்பழிப்பு வழக்குகளில் ஈடுபட்டவர்கள் எதற்காக ஒரு பெண்ணை தன் வசப் படுத்துகின்றனர் என்பதற்கு அவர்களின் வாக்குமூலங்களே சாட்சியாக உள்ளன. பொதுவாக கற்பழிப்புகள், நான்கு வகையான காரணங்களால் நிகழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1. ஆண் பெண்ணின் மீது செலுத்தும் ஆதிக்கம்- தனக்கு அடங்காதவள் என்கிற ஆதிக்க இழப்பினால் உண்டாவது
2. ஒரு பெண்னை அடைய வேண்டும் என்று முடிவு செய்த ஆண், இருவரும் ஒன்றாக சந்திக்கும் போது சூழலை தனக்குச் சாதகமாக ஏற்படுத்திக் கொள்வது - Acquaintance rape. இதில் போதையால் கட்டுப்பாடு இழப்பு முதலான காரணங்களும் அடக்கம்.
3. ஒரு பெண்ணை/ஆணை கொடுமை செய்ய வேண்டும் என்று வேண்டுமென்றே இயங்குவது- Sadist rape, குழந்தைகளை வன்கொடுமைக்குள்ளாக்குவது, மத/இன காரணங்களுக்காக செய்வது, போர் சமயத்தில் நிகழும் கற்பழிப்புகள் ஆகியவையும் இதில் அடக்கம்.
4. பாலியல் வேட்கையை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு செய்யப் படும் கற்பழிப்பு. இதற்கு ஆங்கிலத்தில் Sexual gratification என்று பெயர்.
இவ்வாறாக அனைத்து வன்கொடுமைகளுக்கும் தொடர்புடைய குற்றவாளியின் மன நிலையே காரணம் என்பதும், அந்த குற்றவாளிகளை எங்கோ ஓர் இடத்தில் சந்திக்கும் பெண்கள் அணியும் உடை என்பது, அந்தக் குற்றவாளியின் தவறை மறைக்க எடுத்துக் கொள்ளப்படும் மேலோட்டமான காரணம் மட்டுமே என்பதும் சாட்சியங்களின் மூலம் நிரூபனமான உண்மை. 
இவற்றை அறியாமல் ஒரு பாலியல் வண்புணர்வுக்கு உடை தான் காரணம் என்றும், அதன் அடிப்படையில் பாசம்/பாதுகாப்பு என்கிற போர்வையில் தன்னுடன் வாழும் பெண்களுக்கு அறிவுரையின் பெயரில் கட்டுப்பாடுகளை விதிப்பதும் தவறு என்று செல்வத்திற்கு தோன்றவே இல்லை.
உதாரணங்கள்:
செல்வத்தின் பெண்ணியம் குறித்த பொதுவான புரிதலின்மைகளுக்கு கதையில் பல இடங்களில் உதாரணங்கள் இருக்கின்றன.
1.    ஒரு பெண் தனித்துவமாக முடிவெடுக்கிறாள் என்று புரிய வைக்க முயற்சிக்கும் போது, பெண்ணின் அதிகார மையமான அப்பா, அவளுடைய துணையை தேர்ந்தெடுக்கும் போது, பெண் தேர்வு செய்யும் படிப்பை மனதில் வைத்தே முடிவெடுக்க வேண்டியிருக்கிறது என்பதை காரணமாக சொல்கிறான் கொலம்பஸ். ஆனால், இங்கே சமூகத்தில் பி.ஈ, மெடிக்கல் எனும் இரண்டு ஆதிக்க படிப்புகளை மட்டுமே பெண்களும் ஆண்களும் தேர்வு செய்கிறார்கள் என்பதிலேயே கடிவாளம் இடப்பட்ட குதிரைகளாகத் தான் அவர்கள் வலம் வருகிறார்கள் எனும் உண்மை ஒளிந்திருப்பதை கொலம்பஸ் கவனிக்க வில்லை. சரளா, பி.ஈ அல்லாது ஒரு model/air hostess/actor/journalist என்று போயிருந்தால் அவளுடைய அப்பா அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பார் என்பதை கொலம்பஸ்-ற்கு சொல்ல அங்கு ஆளில்லை.
2.    ஐ.டி துறையில் வேலை பார்க்கும் செல்வம், தனக்குத் தெரிந்த பார்வையை மட்டும் கொண்டு, அங்கே பெண்கள் எல்லோரும் மென்மையாக நடத்தப் படுகிறார்கள் என்று குறிப்பிடுகிறான். ஐ.டி துறையில் மேனேஜர் முதலான மேலதிகாரிகளின் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் பெண்களை செல்வம் பார்த்திருக்கவில்லை என்பது இங்கே புரிகிறது. Women cell எனும் கருத்தாக்கம் சேவைத் துறையில் சம்பிரதாயமாகி விட்டதற்கு எதிராகவே தொழிற் சங்கங்கள் வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்தன. இதையும் செல்வம் அறியவில்லை.
3.    சரளாவின் கள்ள உரவை, அவள் நவீன உடை அணிய விரும்பும் விடயத்தை கவனித்திருந்தால் முன்பே ஊகித்திருக்க முடியும் என்று கொலம்பஸ் கூறுகிறான். இதன் மூலம், நவீன உடை அணியும் விருப்பம் என்பது கள்ள உரவை நாடும் விருப்பத்தோடு தவறாக ஒப்புமை படுத்தப் படுகிறது. நவீன உடை அணியாத குடும்ப அமைப்பில் கள்ள உறவே இல்லை எனும் அர்த்தத்திற்கும் இந்த ஒப்புமை வழி வகுக்கிறது. பெண்களுக்கு நிகராக இன்று நவீன உடை அணியும் (FCUK ஜெட்டி எனக்கு நினைவுக்கு வருகிறது) ஆண்கள் எல்லோரும் கள்ள உறவு கொள்கிறார்களா என்கிற கேள்வியை கோலம்பசிஸ்-இடம் கேட்கத் தோன்றுகிறது.
4.    இவை அனைத்துக்கும் மேலாக, அறிவியல் கோட்பாடுகளை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தக் கதைக்கு கரும்புள்ளியாக ஒரு தவறான கருத்து கொலம்பஸ்-ஆல் முன்வைக்கப் படுகிறது. 420 முட்டைகளைக் கொண்ட ஒரு பெண், தன்னை விட தகுதி குறைந்த ஆணின் வித்திடம் தன் முட்டைகளை ஒப்படைக்கும் போது, நல்ல வித்து உருவாகக் கூடிய சாத்தியக் கூறுகளில் 50% குறைகிறது என்று தான் அர்த்தம் என்கிறான் கொலம்பஸ். இந்தக் கருத்தை அவன் டார்வினின் கோட்பாட்டில் இருந்து கடன் வாங்கி இருப்பது புரிகிறது. ஆனால், இந்தக் கோட்பாட்டை வைத்து தான் ரத்தக் கலப்பு கூடாது என்று ஹிட்லர் வாதிட்டான் என்பதை கொலம்பஸ் யோசிக்கத் தவறி விட்டான். ஹிட்லருடைய இந்தக் கருத்துக்கும், பொதுவாக கறுப்பர்களுக்கும், ஆசியர்களுக்கும் எதிரான கருத்து வன்முறைக்கும் அடிப்படையான டார்வினின் கருத்து முழுமையற்றது என்பதால் அதை அவரே ‘பீகல்’ என்கிற கப்பலில் பயணம் செய்து திருத்த முனைந்தார் என்பதை கொலம்பஸ் படித்து அறியவில்லை. டார்வினின் சமகாலத்து விஞ்ஞானியான க்ரேகர் மெண்டலின் “Law of Inheritence” தத்துவம், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் குணங்களும், திறமைகளும், பகுதியாக பிரிக்கப் படாமல், மொத்தமாக (100%) பிள்ளைகளின் மேல் கடத்தப்படும் என்பதை நிரூபித்திருக்கிறது என்பதை கொலம்பஸ் அறியவில்லை.    
இந்த உதாரணங்களின் மூலம் என்ன அறிய முடிகிறது என்றால்,
செல்வத்தின் “தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வின் (Selective research)” அடிப்படையில் அவன் உருவாக்கிக் கொண்ட சில கோட்பாடுகளை சரளா ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு அவளுடைய பொதுச் சிந்தனை குறைபாட்டை காரணமாக சொல்கிறான் செல்வம். தன்னைப் போன்று அவள் படித்து சிலவற்றை தெரிந்து கொள்ளவில்லை என்கிறான். அவனில் இருந்து பிரிந்த Conscience ஆக நான் பார்க்கும் கொலம்பஸின் வாயால், தன்னை தானே ஒரு கற்பூர புத்தி என்று அவனே சொல்லிக் கொள்கிறான். அதனால் ஆணாதிக்கம் என்று ஒன்று இல்லவே இல்லை என்றும் எல்லாம் அர்த்தங்களின் பொருந்தாமை என்கிறான்.
சரி தவறு என்பதே ரிலேடிவிட்டி எனும் கருத்து முழுமையாக ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. ஒரு சிங்கம் அதிகாரப் போட்டியில் மற்றொரு சிங்கத்தை கொல்வது என்பது தவறல்ல எனக் கூறலாம். அது மனிதனின் பார்வையில் தான் தவறு எனலாம். ஆனால், ஆறறிவுள்ள மனிதனுக்கு மற்றொரு மனிதனை கொலை செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இல்லாத பட்சத்தில், சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவன் செய்யும் செய்கையை சரி தவறு என்று பிரிப்பது தானே சரியான பார்வையாக இருக்க முடியும்?
அது போல, பெண்களுக்கு எதிரான ஆண்களின் ஆதிக்கம் என்பது தவிர்த்து விடக் கூடியது என்பதாலேயே அது தவறான செய்கையாக அறியப் படுகிறது.
இத்தகைய பேச்சுக்களை வைத்து செல்வம் தன்னுடைய தவறான பொதுக் சிந்தனை அறிவை வெளிக்காட்டுகிறான். ஒருவன் எதையுமே படிக்காமல் கருத்துச் சொல்வது எவ்வாறு ஆபத்தோ அதைக் காட்டிலும் தவறானதை படித்ததால் உருவாகும் கொள்கை பிடிப்பு அதிக நாசங்களை உருவாக்கும் என்பதை அறியாதவனாக இருக்கிறான் செல்வம். ஒரு பெண் கவிதை கூட்டத்தை வெறுக்கிறாள் என்பதற்கு, அவள் காணும் வெகு ஜன கேளிக்கைகளுக்கும், கவிதையின் ஆழமான ரசனைகளுக்குமான வேறுபாட்டை அறியும் சூழலை இச்சமூகம் சிறு வயதில் இருந்து ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்கிற காரணம் செல்வத்திற்கு புரியவில்லை. இத்தகைய வேறுபாட்டினை ஆண் சமூகத்தில் இருந்து பிரியும் தனிநபர்கள் சுய தேடலின் விளைவாக தெரிந்து கொள்வதற்கு பின்னால் அவர்கள் தங்களுடைய குடும்பங்களில் அனுபவிக்கும் ஆதிக்கமும், சுதந்திரமுமே காரணம் என்பதையும் உணரவில்லை. அடக்குமுறைக்கு உள்ளாகும் பெண், தன் சுற்றுப் புறத்திலும் அத்தகைய பெண்களையே பார்க்கிறாள். ஆனால், ஒரு ஆண் தன் வாழ்நாளில், சுதந்திரமான ஒரு ஆணையாவது பார்த்து விடுகிறான். இதுவும் அவனுடைய கருத்து விஸ்தரிப்புக்கு காரணமாக அமைகிறது.
இவ்வளவு பெரியதான புரிதலின்மைகளின் அடிப்படையில் காணும் போது, அவனுக்கும் சரளாவுக்கு இடையில் ஆணாதிக்கம் மட்டும் தான் பிரச்சனை என்றும் ஆகலாம். செல்வம் தான் ஒரு தாழ்ந்த சாதி என்பதாலும், சாதியை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலும், சரளா ஒரு மேல் சாதிக்காரி என்பதாலும் தனக்கு ஆணாதிக்கம் இல்லை என்று நினைத்து விட முடியாது. ஆணாதிக்கம் எனும் கோட்பாடு மேலும் ஆழமான விவாதங்களைக் கோருகிறது என்பதை செல்வம் உணரவில்லை.
செல்வம் தவறை ஒப்புக்கொள்ள மாட்டான் என்பதால் சரளா அவனை வேண்டுமென்றே திருப்திப் படுத்த ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத காரணத்தை சொல்லியிருக்கலாம். இப்படியாக இக்கதைக்குள் பல சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், ஒன்று மட்டும் தெளிவு!
கொலம்பஸ் முன்வைக்கும் RODE அட்டவணை தவறாக சொல்லப் போவதில்லை. நான் முன்பு கூறியதைப் போலவே, இதன் கணிதப் பார்வை முழுமையானதாக இருக்கிறது!
ஆனால் அந்த சார்ட் ஐ பயன்படுத்தும் தவறான மனிதப் புரிதல்கள் தான் சிக்கலை ஏற்படுத்துகின்றன என்பது இந்த நாவலின் பரிந்துரையும் முழுமையான தீர்வுகளை தந்துவிடப் போவதில்லை என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. 
இந்த அட்டவனையை உருவாக்கிய கொலம்பஸ்-ஐ போல,
இந்தச் சார்டை உபயோகித்து பிற்காலத்தில் குடும்பநல வழக்குகளில் தீர்ப்பு சொல்லும் நீதிபதியின் சிந்தனையின் முடிவை பொருத்து சூழ்நிலைகள் விடப்படும் என்கிற ஆபத்து இடையில் நிற்காமல் இல்லை.
இரண்டு மாறுபட்ட வழக்குகளில், ஒன்றில் தீர்ப்பு இவ்வாறு வருகிறது.
நிற வேற்றுமைக்கு எதிராக கருப்பு-வெள்ளை ஜோடி ஒன்று நிர்வாணமாக ஒரு பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறது. இது நோக்கத்தை முன்வைத்து தவறில்லை என்கிறார் ஒரு நீதிபதி.
ஒரு மைனர் பெண்ணை தனிமையில் கற்பழிப்பு செய்துவிட்ட ஆண், அந்தப் பெண்ணின் ஒத்திசைவோடு தான் அந்தச் செயலை செய்தான் என்று அவனை விடுவிக்கிறது மற்றொரு நீதிமன்றம். அந்தப் பெண் பாலியல் குறித்த முழுமையான புரிதலுக்குள் நுழைவதற்கு முன் இந்த முடிவு எப்படி சரி என்கிற கேள்வி அந்த நீதிபதியின் மனதினில் எழவில்லை. இதனால் அனைத்து சட்டங்களும் உடல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகும், சமூக ரீதியில் புறக்கணிக்கப்படும் பெண்ணுக்கு தான் சாதகமாக உள்ளது எனும் வாதமே நீதிபதிகளின் முடிவில் கேள்விக்குள்ளாக்கப் படுகின்றது. 
முடிவு:
முடிவாக, அறிவியல் ரீதியில், பெண்ணியம் சார்ந்து இங்கு நான் குறிப்பிட்ட அனைத்தும் விமர்சனங்கள் மட்டுமே. ஆனால் இவை இந்த புத்தகத்தின் நோக்கத்திற்கு எந்த வகையிலும் எதிரானதாக அறியப்பட வாய்ப்பில்லை. ராம் பிரசாத்தின் இந்த தேடல் கணிதப் புனைவு எனும் புதிய களத்தில் benchmark ஐ அமைத்துக் கொடுத்திருக்கிறது. இது நாவல் வடிவத்தில் மட்டுமில்லாது அறிவியல் அடிப்படையிலும் முக்கிய முயற்சி. அறிவியல் கண்டுபிடிப்புகளில் நேர்மையானவை ஒன்றுக்கு இன்னொனன்று முரணாக இருப்பதில்லை. எல்லா கண்டுபிடிப்புகளும் உண்மையை நோக்கிய ஒரு படி தான் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. அது போல, ஆணும் பெண்ணும் இணைந்து வாழ வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தை வலியுறுத்தும் இந்தப் படைப்பு, உண்மையை நோக்கிய ஒரு படி என்று தீர்க்கமாக சொல்ல முடியும். இந்த வகையில் கொலம்பஸ் ன் அட்டவனையை உபயோகத்துக்கு, தன்னுடைய ஆணாதிக்க சிந்தனை தான் எல்லா பிரச்சனைகளுக்கு காரணம் என்பதை உணர்ந்து, நல்ல துணையை தேடிக் கண்டுபிடிக்கும் செல்வத்தை இரண்டாம் பகுதியில் காட்சிப்படுத்த வேண்டும் என்று எழுத்தாளரை கேட்டுக் கொள்கிறேன்.
பரிந்துரை:
புதிய கருத்தும், வடிவமும், ஒரு முறையல்ல, இருமுறை படிக்கத் தூண்டும் அளவிற்கு சிறந்தவையாக இருக்கின்றன. அதனால், நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.