Tuesday, 27 December 2016

நூல் வெளியீட்டு விழா

01.01.2017 புத்தாண்டன்று எழும்பூர் இக்சா மையத்தில் லா.ச.ர நூற்றாண்டு விழாவோடு எனது "உங்கள் எண் என்ன?" நாவல் புத்தக வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது. அழைப்பிதழ் இங்கே. நண்பர்கள் விழாவிற்கு வருகை தந்து உங்கள் ஆதரவை நல்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


Friday, 16 December 2016

உங்கள் எண் என்ன? - நாவல்

எனது மூன்றாவது நாவல் "உங்கள் எண் என்ன?"

தமிழின் முதல் Mathematical Fiction...
கிடைக்குமிடம்

No-52-C,Basement, North Usman Road, 
Near Panagal Park Flyover North End, 
Thiyagaraya Nagar, Chennai, 
Tamil Nadu 600017
Phone044 2815 6006

Thursday, 1 December 2016

01.12.2016 கணையாழி - "நியூட்டனின் ஆப்பிள்" கவிதை

கணையாழி டிசம்பர் 2016 இதழில் எனது " நியூட்டனின் ஆப்பிள்" கவிதை வெளியாகியிருக்கிறது. கவிதை வெளியான பக்கத்தின் பிரதி இங்கே. எனது கவிதையை தேர்வு செய்து வெளியிட்ட கணையாழி ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.Wednesday, 23 November 2016

30.11.2016 ஆனந்த விகடனில் எனது கவிதை30.11.2016 தேதியிட்ட இந்த வார ஆனந்த விகடனில் பக்கம் 56ல் 'சவால்' என்ற தலைப்பிலான எனது கவிதை வெளியாகியிருக்கிறது. புத்தகத்தை கடையில் வாங்கி கவிதை வெளியான பக்கத்தை பிரித்து அதன் வாசம் முதற்கொண்டு நுகர்ந்து மகிழ அமேரிக்கா சென்றுவிட்டு இந்த இரண்டு வருடங்களில் சென்னையில் இருக்கும் இன்று அமைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.
என் கவிதையை தேர்வு செய்து வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கும், கவிதை வெளியான தகவலை பகிர்ந்த தோழர் சேயோன் யாழ்வேந்தன் என்கிற கோபாலகிருஷ்ணன் திருமூர்த்தி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


Tuesday, 15 November 2016

Armless

STORY: ARMLESS

By: Sri Ram
hummar
“So, hunting for a job you ended up in here?” Ryan asked.
“Yes. Is there a problem with it?” David replied politely.
“There is a problem dude. Have you ever looked at yourself in the mirror? You ain’t look like a contract killer but you definitely look like a research student at Carnigie. Nobody give you any assignment kid”
“Guess, I am qualified for the job then!” Ryan didn’t miss to notice it. David looked composed when he said that.
They both hid themselves inside a stolen number-plate changed Porche and were keenly observing Fernando, the town’s biggest business magnet in his Hummer smoking a cigarette while his driver drove the Hummer moments later after buying some medicines from the CVS pharmacy.
“He is the fish. A real big fish. You would be paid a million if you ensure his corpse burn in fire” Ryan said after keeping a stack of 100 notes of 100 dollar currency in David’s pocket. The Hummer was already on the road.
Ryan leaned forward a bit and looked David in his eye.
“You have seen his beauty?” he said in a croaky voice.
“No. Stay. I got to do something here” David opened up the door and jumped out. He then strolled into the pharmacy.
When he came back he had a pack in his hand that had ‘Candiderma’ written on its sides.
“What is it for?” puzzled Ryan asked.
“You don’t want to know everything about my body” David said.
That left Ryan a bit disappointed as he thought it must have got something to do with the assignment.
“Do you have Fernando’s number?” David asked.
“What are you up to kid? You would not want the cops to find you from the list of calls in Fernando’s mobile. Would you?” Ryan warned.
“Weren’t you taught about numbers in school?” David insisted.
Ryan glazed at David and shared Fernando’s number with David. When David called, it was none other than Fernando who lifted the phone.
“It’s Fernando” Fernando said.
As Ryan looked at David hauntedly,
“Lived your life? Had all fun on the planet? Enough of a sucking life, Fish. I will have you killed by 3PM tomorrow” David said.
The man at the other end laughed uncontrollably on the phone.
“Who are you kiddo? There are 70 tough men holding weapons of the century in my home guarding my breath. Cut the call before I change my mind. It’s your good time that you called me when I am in good mood to forgive kids” Fernando replied.
“You have no clue Fernando. Do you remember the Bulgarian Smuggler whom you believe you have killed?”
“Yes”
“Did you ever get his corpse?”
The other end was silent for a brief moment.
“For now this tiny piece of information is my identity card, Fernando. You should learn to do a clean job my dear friend. Like the one that is to happen tomorrow at 3PM. The clock has already started ticking”
David cut the call and looked at Ryan who now looked at Ryan and his phone in his right hand, alternatively with fear and worry in his eyes.
“Are you crazy? Wouldn’t he go to cops if you keep him informed? Who was that Bulgarian anyway?” Ryan shouted.
“Be ready with the rest of my share of money” saying so David leaned back and closed his eyes. Ryan was able to hear him snoring moments later.
The next day morning saw heavy load of cops guarding Fernando’s home. By post noon around 4PM, the local television scrolled flash news about Fernando’s death by heart attack.
Ryan came running to David who was in the backyard of his work shop in downtown with a bottle of wine.
“Fernando died an hour before” Ryan announced.
“Yes. I know”
“What are you are waiting for? The Cops might come here anytime. Just run”
“Why would the cops come here? Fernando already had blood pressure and has already suffered two heart attacks. Those guys at the pharmacy have already told me. It was fear that killed him. I am entitled only for sending fear to his door step but that ain’t culpable homicide dude. ” With Ryan’s eyes transfixed in his eyes, David further asked
“Where is the rest of my money? Ninety thousand dollars”.
 - SriRam

Thanks

Tuesday, 8 November 2016

McArthur Treatment - Prose in QuailBell Magazine

McArthur Treatment
By Sri Ram
QuailBellMagazine.com


Billie and Ryan played in the trampoline as their parents, Bruce and Martha watched them over. The wind was not that heavy that day and the sun was at the top, right above their head. Every time the sun brought warmth on the skin the wind tried to blew it away.

Joy filled children jumped together on the trampoline. Every time they jumped the trampoline tried to send them to space but gravity brought them back. Yet the trampoline didn’t seem to give up. Billie used his foot to give that extra push so that he stayed higher than his younger brother, Ryan, every time he jumped.

"Honey, our kids Billie and Ryan” Bruce stared at his kids for a moment meaningfully and then said, “They are growing. We have to raise them with all the comfort, high education and quality food but I am getting rotten slowly”.

He wept with tears that ran through his cheeks. He tried to hide it using his hands from his children.

“You need not cry. It’s not a big thing” Martha consoled.

“Isn’t it a big thing? My two kidneys have failed. I need to undergo dialysis twice a week. Without a kidney I can no longer hold on to my job as a Chef in the Hotel which would screw us financially" Bruce said. He seemed a lot worried.

His medicine bills and the dialysis costs were going high and were a major figure in his monthly budget for the home. In order to manage they even had to put Billie and Ryan in schools that ranked very low in that part of the town where they lived. No vacation, no shopping, no hotels, not even to Pizza Hut once in a while. Billie and Ryan both cribbed Bruce a lot to take them to Universal Studios Florida but all Bruce could give back to them was nothing more than lame excuses.

"I understand. I tried my level best to hunt for a job but I could not get one, Bruce. I do not have experience in any field as you know. But even if I had experience I could not have gotten a job. The government disallows more than one person in a family in job. I gave it a thought about it last night. I have an idea and it’s not like we can’t do anything about it," Martha said.

"Idea! What is it?" By now, the slight cool wind dried out the tears in his eyes.

"Why don't we try the McArthur treatment?" Martha said. Truth was she had long been considering to go for McArthur treatment ever since Bruce’s medical bills began to grow. Martha because of her parent’s financial instability had given up her school studies at a very young age. Now it was difficult for her to digest that she could not be helpful in any way to her family’s financial needs. With McArthur treatment she felt she struck gold.

"McArthur?!" Bruce said thoughtfully.

He was quite familiar with that word by then as the treatment was spreading across the continent like a forest fire. In every street there rose someone who claimed to have undergone that treatment. In a conversation with some of his friends over a lazy evening, he recalled, this one was discussed in detail. One of his distant relative as he remembered, who worked in a bottling company and earned a very low figure took the treatment and later relocated to Bahamas.

The idea was simple. Solar power has always been free and abundant. The much needed food gets converted into energy in the intestines. Humans needed energy to stay alive and fit. The great idea of McArthur treatment was, with the help of sensors and solar cells on the skin solar energy can be absorbed and can be used to extract fundamental elements from the air and convert them into energy that a human body would have otherwise derived from the food.

Nutrients, vitamins, minerals, carbohydrates, glucose are the same kind of complex compounds that are the building blocks in all or most of the foods. The McArthur treatment involved deploying a device like thing inside the body with microscopic solar cells array and suction plate on the skin. The device acts more or less like a combined fusion and fission reactor that fuses atoms to complex molecules and splits complex molecules to atoms. The basic elements are nothing but carbon, hydrogen, oxygen, sulfur, calcium, silicon and nitrogen which are abundant in the air and according to the treatment solar energy can be used to perform these fusion and fission reactions in a cyclic process.

"So? I work as a Chef, Martha. Tasting food is a part of my job. How do you think it would help our family if I take up the treatment? “Bruce asked confusedly.

"No. Not you, Bruce. You haven't got the whole point. I have one healthy kidney with me which I can donate to you while I can survive with McArthur treatment. We can bring up our children with that job of yours and our monthly budget would come down a bit with my going McArthur way because I would not need food," Martha said.

For a moment Bruce could not speak a work. He found difficulty in searching for words to praise Martha’s benevolence. With much love Bruce hugged Martha and kissed on her lips passionately.

The idea sounded materialistic to him but to Martha it was her own loss and gain. Even though she proposed it willingly deep inside she was only half-hearted with that idea. She had loved food ever since her childhood. Mere odor of her favorite Dunkin' Doughnuts could leave her mouthwatering instantly. Be it steak, waffles, mozzarella cheese, bacon, avocado, blueberries, asparagus she never missed a chance. At a corner of her heart she longed for Bruce to reject her suggestion and come up by himself with an alternative one but that didn’t happen.

The government knew that hunger was the driving force that brought humans together to live, co-ordinate and work in groups. If there was no hunger there was no motivation for a structured and organized living. Therefore the government indeed had laid several restrictions in taking McArthur treatment. With the restrictions on not everyone can take up the treatment. One must have a valid reason to take it and there was a controlling agency that scanned the applications and approved if it found the reason appropriate.

Bruce considered himself lucky to have got Martha as his wife. With that his love on her doubled. He thought one eligible candidate in a family could bring the monthly expenses down. Gradually Martha prepared her psychological self for what was to happen with her.

Bruce and Martha, together approached King Sherman Hospital in Colorado. While Martha signed as a donor to give away one of her kidneys to Bruce and for a McArthur treatment for herself Bruce registered himself as receiver for the kidney that Martha intended to donate. Martha was given appointment on March thirteenth and since it was best to use a fresh organ within 30 hours from the time it was amputated from the donor Bruce chose his appointment on the following day the fourteenth of March. Martha and Bruce managed major part of the expenses through the Medical Insurance that they paid installments for every month.

Until the scheduled date Bruce took dialysis once in every 3 days. Dialysis made him weak and sick every time he took it. But he knew there was no other choice. Once after the treatment he believed he would not need to undergo this pain. He had heard from someone through word by mouth that organs created from stem cells in the lab brought psychological problems like hallucinations, depressions, and genetic problems like cancer, tumor and so on as side effects. Even though one in several hundred or may be thousand suffered such side effects it bothered him so much that he wanted to have real organ transplantation. That way he was happy to receive Martha's kidney.

On one of the day that followed when Bruce was away on work and both the kids had gone to school, Martha stood in front of the mirror in the toilet. She lifted her shirt and stared at that part of the abdomen where she believed the kidney would be. Her right hand fingers gently rolled over her abdomen while her left hand held the shirt up. Goosebumps appeared on her stomach wherever her petal like fingers rolled. She wanted to feel the organ that she chose to lose but she was unable feel it. The very thought that she was going to lose one of her organs made her feel sorry for herself. She pitied on herself but there was no other go. One of the organs that belonged to her from birth was no longer going to be hers. Tears made her eyes wet and ran down through her cheeks. She felt like she was going to lose something and that something was going to make her incomplete from then on. But the very fact that it was not going to some stranger and that it was only going to be a part of her own husband on whom she has so much love consoled her only a bit.  She cried a lot. She cried after a very long time. She cried so much as if there should not be anything to cry later.

In the days that followed she prepared some of her favorites like prawns, halibut, hamburgers, salmon, oysters, pasta, and ham and so on, served her husband and children and tasted herself to her stomach full, as if she was never going to have a chance later. While she thoroughly enjoyed every moment of her favorite spicy food rolling through her throat and her eyes shed salty tears.

The day of March thirteenth was windy with heavy shower unusual for that part of the year. The highway was slippery yet Bruce took Martha and the children in his car to the King Sherman Hospital where she was admitted for the surgery followed by McArthur treatment. Since the climate was getting worse he didn't want to leave the children at home alone. After ensuring Martha was taken to the operation theatre Bruce took the children to his mother-in-laws place.

In the operation theatre before Martha was given sedation she took time to feel her kidney from above her stomach skin by touching with her delicate fingers. She even wished her eyes were capable of seeing the inside through her abdominal flesh. Even though she couldn’t feel it, she imagined as if she touched it one last time. She closed her eyes and took a deep breath after which she was made to inhale a gas and then she lost her conscious.

Meanwhile Bruce left Billie and Ryan at his mother-in-law’s place and asked his mother-in-law to take care of them until his return with Martha.

On his way back unfortunate Bruce was struck by a lightning followed by a heavy thunder that flipped his car away from the slippery highway into a tunnel that no longer was in use. He was brought to King Sherman Hospital 2 days later by a country man who passed by and found him stuck under a fallen tree. It took Bruce another two days to gain his conscious and when it happened he was in bed in one of the emergency ward in the hospital.

"Da...da....Doctor! Da.. Doctor!" he moaned in pain. With much difficulty he tried to lift himself from the bed. He was immediately attended by a girl who wore a pale blue nursing apron. She held him by his shoulder and made him lean back on the bed with his head on the pillow.

"Relax you lucky! Everything has been taken care of and you are perfectly normal now. No need to worry." she said with a peace bringing smile.

"But I am a kidney patient" he said in a hoarse voice. His voice trembled. His eyes searched for Martha, Billie, and Ryan all around.

"I told you. Everything has been taken care of. You are lucky. Considering your physical conditions, you have been allowed to go through McArthur treatment absolutely free of cost." she announced.

Bruce eyes widened. He stared at her in shock. He could not believe what he just heard.

"What?!" he shouted in in shock and disappointment.

* * *

When Martha came to the spot, she had come along with the chief doctor Dr. Dinsel. He had a pad in his hand which held the file that contained the details of Bruce’s and Martha’s applications.

“Dr. Dinsel, this is my husband Bruce and he was the one supposed to have received my kidney?” she shouted in dismay.

The doctor held up the pad and looked into the papers through the corner of the spectacles that he wore.

“Uhmmm.” He grinned.

“Yes. His name is there in the list,” he said.

"As per the appointment given to you, Martha, I see that, you have presented yourself at the right time. So as scheduled we have taken out your healthy kidney to transplant it to your husband Bruce. But that schedule was on the following day. Followed by the amputation we did McArthur treatment to you which again went as per the appointment you have made with us. But in order to receive the organ your husband Mr. Bruce should have come and admitted on the scheduled date and time. We waited for him much longer beyond the scheduled time but he didn’t turn up. We could not ask you because you were still in sedation after McArthur treatment. We cannot keep a healthy kidney idle for much longer time you know? There is a lot of demand for healthy real organs. So we gave it to someone based on priority.” he added.

Martha had no words to speak. She simply stared at the doctor as he spoke.

“It was not our mistake, my dear Martha. Your husband, Mr. Bruce, was brought to this hospital as an emergency accident case. You know it pretty well we could not have identified him without his SSN or driver’s license. We couldn’t have known in any way that he was to receive your kidney. An emergency is an emergency. We have to treat it that way,” he stopped and looked at Martha and Bruce.

Few seconds of disturbing silence passed.

Having realized that both were not in their elements, he continued.

“It was our duty to do the needful to anyone who has met with an accident. When we examined he had two kidneys that didn't function. His intestines were injured in the accident. He had a deep cut in his gall bladder, liver and pancreas that could not be saved. We had to get them amputated and removed. McArthur procedure was the right option considering the emergency situation. So it was our duty to save him by treating him with McArthur procedure. Since it was done as an integral part of post-accident treatment McArthur procedure comes to your husband at an absolute free of cost. You must understand that considering the emergency situation he was in that was the best we could do to him," he explained.

As the chief doctor, nurse and Bruce looked at with heavy tears from her eyes Martha began to cry loudly. Salty drops of tears flowed down from her eyes uncontrollably while she knelt down on her knees. Everyone saw her hands gently caressed her abdomen while she wept.


@Thanks
Quail Bell Magazine (http://www.quailbellmagazine.com/the-unreal/fiction-mcarthur-treatment)
Literary Yard Magazine ( https://literaryyard.com/2016/11/08/story-hunger-games/ )

Sunday, 6 November 2016

A prose in QuailBell Magazine

Erynn Porter representing QuailBell Magazine has written to me to inform me that they have chosen one of my work to feature in their upcoming Magazine. Though I gave it a name, they want to feature it in a different name and I have proposed one.
I am eager to see the prose published.

திண்ணையில் சில கவிதைகள்

அஸ்திவாரம்
அத்தனை பெரிய கோயிலுக்கு
எப்படி அஸ்திவாரமிட்டிருப்பார்கள் என்று
யோசனையாகவே இருந்தது…
கடவுளிடம்
நான் செய்த தவற்றை
ரகசியமாக ஒப்புக்கொண்டபோது
அந்த நந்தி
ஒட்டுக்கேட்டது போலிருந்தது…
கோயிலை விட்டு வெளியேறும்வரை
அந்த நந்தியை
திரும்பி திரும்பி பார்த்தபடி இருந்தேன்…
ஒருமுறை கூட அது
என்னை
திரும்பி பார்க்கவில்லை என்பதில் இருந்த‌
இனம் புரியாத அந்த ஏதோவோர் உணர்வில்தான்
கோயிலின் அஸ்திவாரம்
தெளிவாக தெரிந்தது…
– ஸ்ரீராம்
***********************************
குதிரை சவாரி
அந்த குதிரை
வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது…
எங்கள் பாதையில் வந்து
அது விழுந்துவிடுமோ என்கிற‌
அச்சம் எங்களுக்கு இருந்தது…
நாங்கள் அதன் பாதையில் வர‌
வேகங்குறைத்து நின்ற அந்த
கருங்கல் குதிரை
எங்கள் ஊர்தி கடந்ததும்
மீண்டும் வேகமெடுத்து நகர்ந்தது
இம்முறை எங்கள் முதுகின் பின்னால்…
– ஸ்ரீராம்
***********************************
கோணம்
விண்கல்லடி பட்ட,
கொப்புளங்கள் கூடிய,
முற்றிலும் உயிர்ப்பற்ற,
ஆங்காங்கே கருத்த‌
தனது முகத்தை
பூமியில்
வெண்ணிலவாகத்தான் பார்க்கிறார்கள்
என்பது தெரியாமல்
தாழ்வுமனப்பான்மையில்
எட்டவே நிற்கிறது
நிலவு…
– ஸ்ரீராம்
***********************************
அடையாளம் –
தன்னை எப்போதும்
அந்தரத்தில் தொங்கும்
வெண் பனியாய் சித்தரிக்கும்
குளத்து நீர் குறித்து
விண்கல்லடி பட்ட,
கொப்புளங்கள் கூடிய,
முற்றிலும் உயிர்ப்பற்ற,
ஆங்காங்கே கருத்த‌
நிலா
என்ன நினைத்திருக்கும்?
– ஸ்ரீராம்

Monday, 31 October 2016

ENCOUNTER: QF in Literary Yard Magazine

STORY: ENCOUNTER

By: Sri Ram
encounter1
The container trucks that transport brand new cars between states, lorries carrying sacks of rice and wheat and jewelry shops are among a few that Arun have laid his thieving hands on yet, the police never rounded him up as he held them in his good book with eye-brow-raising amounts of bribe money. Contract killers Ashok and Vethanathan were arranged to kill Arun.
Since the cops were all in favor of him, even the rich jewelry shop owners could not get him behind the bars which made them approach contract killers. Meanwhile Arun have already reached out to promote himself a part of local politics. Someone was always seen around guarding him. Since he had plans to jump into politics seriously, he made it a habit to meet and spend time with local people.
“This would be a lot easier if we get two more with us” said Vethanathan.
“Don’t even think about it Vetha. Two more would lessen our share of money. The less the number the more the share” said Ashok.
“hmmm” Vetha grinned but he caught Ashok’s attention when he shouted “Idea” after considerably a long time.
On the second day past noon, in the market amidst so many people around, Ashok and Vethanathan shot Arun with their pistol to death instantly. Arun’s guards fled away from the scene almost immediately. A bevy of men and women from the neighborhood watched Vetha and Ashok standing next to Arun lying on the floor in a pool of blood.
Contract killers Ashok and Vetha walked unhurriedly with guns in their pockets while someone behind their back said,
“That’s called a Police Encounter”.
Needless to say Ashok and Vetha were both dressed up like local cops.

@Thanks

Saturday, 29 October 2016

Festival: QF in Literary Yard

STORY: FESTIVAL

By: Sri Ram
festival
Contract killers Mani and David were given assignment for the month.
The assignment sheet said that they were to kill a guy named Arul, aged 35, an ex-military man. There was a photograph that clearly showed Arul in close-up. Arul looked handsome without beard much like an actor from Bollywood. Mani and David both noted his physique that was well trained.
Some quarry lords wanted him to be killed since he played as informer to the local police on their sand mafia by the quay.
“Look how handsome he is? Unfortunate that he is going to die in our hands” said Mani.
In a week’s time, they spotted Arul in a village near Dindugal town. He had come for a festival.
Mani and David tolerantly waited for the night to fall.
It was festive eve and there held folk dance at the center of the village as part of the festival and people from the village walked briskly to witness the dance. Once it became dark Mani and David walked slowly through a bevy of men in lungi and women in saree. While admiring the stout healthy lady who crossed them lastly Mani and David with sharp knives tugged inside their lungi approached Arul’s hut.
There was no one to be found inside. Disappointed Mani and David inquired about Arul at another hut in the neighborhood. An old man in his late 80s opened up.
“He must have crossed you. Didn’t you see?” he said.
“No! Where?” Stammered David asked anxiously.
“The one at the last. He plays the role of a woman named Hidimbi of Mahabharata in today’s play. There are no better actors than Arul in the whole district to play that role you know that?” he said.

@Thanks
Literary Yard Magazine

Monday, 24 October 2016

26.10.2016 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை

26.10.2016 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை


26.10.2016 தேதியிட்ட இந்த வார இதழுடன் ஆனந்த விகடன் தனது 90 ஆண்டு கால பயணத்தை பூர்த்தி செய்கிறது. சின்ன வயதில் ஆனந்த விகடனுடன், அம்புலி மாமா , சிறுவர் மலர் ஏதோ பாடபுத்தகம் போல் படித்திருக்கிறேன். எழுத்தாளர்கள் சுஜாதா, பாலகுமாரனை அறிமுகம் செய்தது ஆனந்த விகடனே. பிற்பாடு குங்குமம், குமுதம் என்று விரிந்தது. இந்த பத்திரிக்கைகளை தொடர்ந்து படித்ததே நான் இப்போது எழுதும் ஆக்கங்களுக்கான அடித்தளம் என்று சொல்லலாம்.

பலரிடமிருந்து ஒரு கேள்வியை அதிகம் எதிர்கொண்டிருக்கிறேன். "எழுத்துக்கு எது மொட்டிவேஷன்?" என்று.

ஆனந்த‌ விகடன், குமுதம், குங்குமம் இதழ்களை என்னையும் அறியாமல் ஒரு ஏகலைவனாக எட்ட நின்று வாசித்தே கற்றிருக்கிறேன் என்று சொல்லலாம். நான் சிறுவயதில் பார்த்து படித்து வளர்ந்த பத்திரிக்கை தனது 90 வது வயதை 360 பக்கங்களுடன் கொண்டாடும் இதழில் எனது கவிதையும் வெளியாகியிருப்பது பேருவகை அளிக்கிறது.


கவிஞர்கள் மனுஷ்யப்புத்திரன், பழனிபாரதி கவிதைகளுடன் எனது "சீசர் போல்" கவிதையும் வெளியாகியிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

பத்திரிக்கை கையில் கிடைக்கப்பெற்ற நண்பர்கள் யாரேனும் கவிதை வெளியான பக்கத்தை பிரதியெடுத்து அனுப்ப இயலுமா?

ஆனந்த விகடன் 90 வயதை பூர்த்தி செய்யும் சிறப்பிதழில் மனுஷ்யப்புத்திரன், பழனி பாரதி கவிதைகளுடன் எனது கவிதையையும் தேர்ந்தெடுத்து வெளியிட்ட ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
21.09.2016 ஆனந்தவிகடனில் எனது கவிதை


21.09.2016 ஆனந்தவிகடனில் எனது கவிதை


ஆனந்த விகடன் இதழில் வெளியான கவிதைகளுக்கான சன்மானப்பட்டியல் இன்று ஆனந்த விகடன் அலுவலகத்திலிருந்து வந்திருந்தது. அந்த பட்டியலை பார்த்த போதுதான் 21 செப்டம்பர் 2016 இதழில் எனது இரண்டு கவிதைகளை ஆனந்த விகடன் தேர்வு செய்து வெளியிட்டிருப்பது தெரிய வந்தது.

இந்த மின்னஞ்சல் மட்டும் வந்திருக்கவில்லையென்றால் எனக்கு நிச்சயமாக தெரியவந்திருக்காது. கவிதை வெளியான வாரத்தில் போய் கேட்டாலே ஆனந்த விகடன் புத்தகம் கடைகளில் கிடைக்காது. கவிஞ‌னுக்கு வெளியாகும் அவனுடைய‌ ஒவ்வொரு ஆக்கமும் ஒரு குழந்தை போலத்தானே. எழுதிய ஆக்கம் வெளியான பக்கத்தை நேரில் பார்ப்பதில் கிடைக்கும் பரவசமே அலாதி. இரண்டு கவிதைகள் ஒரே இதழில் வெளியாகியிருக்கின்றன. இரட்டிப்பு பரவசம். நண்பர்கள் யாரிடமேனும் 21 செப்டம்பர் 2016 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழ் இருப்பின் பிரதியெடுத்து அனுப்ப இயலுமா?

நன்றிகள்.

இப்போதைக்கு இணையத்தில் கிடைத்த பிரதி தான் கையிருப்பு
நட்புடன்,
ராம்ப்ரசாத்

சோப்பு - சிறுகதை

சோப்பு - சிறுகதை


அந்த கடைக்குள் வெண்ணிலா நுழைந்தபோது அது அத்தனை சிறிய கடையாக இருக்குமென்றோ, அதிலும் ஓர் நகைக்கடையாக இருக்குமென்றோ அவள் நினைத்திருக்கவே இல்லை. வீட்டு வேலை என்று தான் அழைக்கப்பட்டிருந்தாள். அதுதான் அவளுக்கும் வழக்கம்.

வெண்ணிலா புரியாமல் பார்க்க, தினக் லால் பேசினார்..

” நம்பள்கி கடை இது.. ஜொல்ஸ் கொஞ்சம் இருக்குது.. அதை க்ளீன் பண்ணனும்.. ” என்றுவிட்டு உள்ளே திரும்பி அகலம் குறைவான ஓர் கதவை காட்டினார். வெண்ணிலா கதவு திறந்தாள். சின்ன டாய்லர். அதில் எங்கு பார்த்தாலும் தண்ணீர். சோப் ஒன்றும் தாம்பாளமும் இருந்தது.

“களுவி குடுத்துடு.. இந்தா பணம்..” என்றுவிட்டு ஐந்நூறு  ரூபாய்த் தாள் ஒன்றை தந்தார் தினக் லால்.

எப்போதும் வீடுகளில் பாத்திரங்கள் தேய்ப்பது தான். முதல் முறையாக ஒரு கடையில். அதுவும் நகைகளை. வாழ் நாளில் கடைசியாக எப்போது குந்துமணி தங்கத்தை ஸ்பரிசித்தது என்று ஒரு கணம் யோசனை போனது. எந்த பிரதானமான நிகழ்வும் நினைவுக்கு வரவில்லை.

வேலை செய்யும் வீட்டு அம்மாக்கள் அணியும் நகைகளை ஏக்கத்துடன் பார்த்தது தான். தொட்டது கூட இல்லை. தங்கள் தொட்டு பார்க்க எப்படி இருக்கும் என்று பார்க்க வெகு நாட்களாக வெண்ணிலாவுக்கு ஒரு ஆசை. என்றாவது நிறைவேறும் என்று காத்திருந்து காத்திருந்து அந்த நொடி வரை வந்தாகிவிட்டது. கடைசியில் தொட்டுப்பார்க்க ஆண்டவன் தனக்கென அருளிய ஒரே ஒரு வாய்ப்பு , அதை கழுவும் வாய்ப்புத்தானோ என்று ஒரு கணம் தோன்றியது அவளுக்கு.

தாம்பாளத்தில் லால் கொடுத்த தங்க நகைகளை இட்டு நீர் ஊற்ற குழாயை திறக்க, உடைந்த குழாய் கட்டுப்பாடின்றி நீரை கொட்டத்துவங்க, வெண்ணிலாவின் சேலை நனைந்தது.
“கொழா லூசா இருக்குது” லாலில் குரல் உரத்து கேட்டது. அருகில் இருந்த பழைய துணியை இரண்டாக மடித்து உடைந்த குழாயில் வைத்து கட்ட, நீர் வரத்து பெருமளவு குறைந்தாலும், கொஞ்சமாக வந்து தரையை நனைத்தபடியே தான் இருந்தது. அந்த நீர் சோப்பில் தொடர்ந்து பட, சோப் சீக்கிரம் கரைந்து விடும் போலிருந்தது. அனேகம் நகைகள் இருந்தன. பெரும்பான்மை பழைய நகைகளாக இருந்தன. அக்கம்பக்கத்தினருடைய அடகு வைக்கப்பட்ட நகைகளாக இருக்குமென்று தோன்றியது.

“சோப்பு கரைஞ்சிட்டே போனா எப்படி எல்லாத்தையும் க்ளீன் பண்றதாம்?” வேலைக்காரி வெண்ணிலா கேட்டாள்.

“சம்பளம் அளந்து அளந்து தான் கொடுக்கிறது.. அதுக்கு வசதியாச்சும் செஞ்சு தரலாமில்ல” என்றாள்.

“என்னா வஸ்தி வேணும் உன்க்கு?” என்றார் நகை வியாபாரி தினக் லால்.

“சோப்பு இங்கனக்குள்ளயே வச்சிருந்தா தண்ணில நனைஞ்சு சீக்கிரம் கரைஞ்சிடுது.. ஒண்ணு நீங்க சோப்புக்கு தனியா காசு குடுங்க‌.. இல்லைன்னா சோப்பு நனையாத மாதிரி இடம் குடுங்க‌” என்றாள் வெண்ணிலா.

“க்ளீனிங்குக்கு மொத்தமா காசு குடுத்தூட்ச்சு.. இனிமே காசு நஹி.. வேலையை முடி” என்றார் லால் வாய்க்குள் பான் குதப்பியபடி.

வெண்ணிலா முறைத்தாள். லாலிடமிருந்து காசு பெயராது என்று தெரிந்துவிட்டிருந்தது. இத்தனை பெரிய நகைக்கடை வைத்திருக்கிறான். காசு என்று வந்தால் கஞ்சனாக இருக்கிறானே என்று தோன்றியது அவளுக்கு. ஒரு வேளை கஞ்சனாக இருக்கிறவனிடம் தான் காசு சேருமோ?  என்று ஒரு கணம் யோசனை வந்தது.  கடை ஆட்கள் பயன்படுத்த இருந்த‌ ஒரே ஒரு சின்ன பாத்ரூமில் எங்கும் நீராக இருந்ததால் சோப் நீரில் நனைந்து சீக்கிரம் கரைந்தது.

“தண்ணீல நனைஞ்சா ஒரு நகைக்கே நாலு சோப்பு கூட ஆவும்.. ” முனகியபடியே வெண்ணிலா கழுவிய நீரை வெளியில் கொட்டப்போகையில் சோப்பையும் நீர் படாமல் பாலித்தீன் கவரில் வைத்து எடுத்துப்போனாள். கொட்டும் இடம் ஒரு வாய்க்கால். சற்று தள்ளி இருந்தது. கொட்டிவிட்டு வர அரை மணி ஆகலாம். சின்ன கடைதான் என்பதால் கழுவ இடமே இருக்கவில்லை.

வெண்ணிலா சோப்பை கையோடு கொண்டு செல்வதை பார்த்துவிட்டு “இன்னா.. நீ சோப்பை எங்க எட்த்துட்டு போறே?” என்றார் லால்.

“உள்ளயே வச்சிந்தா தண்ணீல சீக்கிரம் கரையிது.. உன் கடை நகையெல்லாம் நான் கைக்காசு போட்டு சோப்பு வாங்கியா கழுவ முடியும்? நனையாம இருந்தாத்தான் நிறைய கழுவ முடியும்.. அதான் சோப்பை கையோட எடுத்துட்டு போறேன்.. சோப்பை வேணா நீயே வச்சிக்க… சோப்புக்கு காசு கொடு போதும்..” என்று சொல்லியவாறே சோப்பை லாலிடம் நீட்டினாள் வெண்ணிலா.

“ஆங்.. செய்..செய்..என்னா வேணா செய்… காசு நயா பைசா குட்க்க முடியாது” என்றார் லால் கண்டிப்புடன் அவளுக்கு புறமுதுகை காட்டியபடி.

வெண்ணிலாவுக்கு கோபம் வந்தது. இருந்தாலும் கை நீட்டி காசு வாங்கியாகிவிட்டது. வேலையை பாதியில் நிறுத்தினால் தனக்குத்தான் கெட்ட பெயர் வரும். அந்த கெட்ட பெயர் இனி வரக்கூடிய நான்கைந்து வேலைகளை மட்டுப்படுத்தலாம். அதனால் இறுதியில் நஷ்டம் தனக்குத்தான் என்று தோன்றி பேசாமல் சோப்பை கையிலெடுத்துக்கொண்டு வாய்க்காலை நோக்கி நடந்தாள். தாம்பாளம் முழுவதும் அழுக்கு நீர். அந்த நீரில் அவளது வியர்வைத்துளிகள் ஆங்காங்கே விழுந்தன. தனது முகத்தை அந்த அழுக்கு நீரில் ஒரு நிமிடம் பார்த்தாள். அவளது முகம் தெளிவில்லாமல் அங்குமிங்கும் ஆடியபடி இருந்தது. சற்று முன் கழுவிய நகைகள் பழைய மாடல். லாலின் மனைவியிடன் நல்ல புதிய ரக மாடல் நகைகளை பார்த்த நியாபகம் இருந்தது. லாலில் மனைவி எத்தனை அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்?

தனக்கும் லாலின் முதல் மகனுக்கும் ஒரே வயதுதான். நகையிலேயே குளிக்க வேண்டுமென்றால் லாலிற்கு மருமகளாக போக வேண்டும்.  அது நடக்குமா? வாய்க்கால் அருகே பணக்கார வீட்டு பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள். தாம்பாளத்தை வாய்க்காலில் கவிழ்க்கையில் தான் அழுக்கு நீரை வெளித்தள்ளும் தனது கரிய நிற கைகளை அவளே ஒருமுறை பார்த்துக்கொண்டாள். அவளின் கைகள் மீது சூரியனின் ஒளி விழுந்துகொண்டிருந்தது. தனது கரிய நிறம் அந்த சூரியனால் விளைவது என்று எண்ணிக்கொண்டாள். சற்று தள்ளி இருந்த முள் கம்பி வேலிக்கு அந்தப்பக்கம்  நூலகத்தின் ஓரம் மரத்தின் நிழல் விழுந்தது. அங்கே நின்றால், இதே கரிய நிற கைகள் கொஞ்சம் வெளுப்பாக தெரியலாமென்று தோன்றியது.

தன்னை யாரோ பார்ப்பது போலிருக்க அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். சூரியனின் பேரொளி அவள் முன்னே அந்த கம்பி வேலிக்கு அந்தப்பக்கம் விழுந்தது. அந்த பேரொளி விழுந்த இடத்தில் கம்பிகளை நறுக்கும் கட்டர் வெய்யிலில் கிடந்தது. அந்த கம்பி வேலி அவளை அந்த பேரொளியில் நிற்க விடாமல் தடுத்தது. அவளுக்கு தனது கைகளை பேரொளியில் வைத்துப்பார்க்க ஆசை வந்தது. அது ஒன்று தான் அவளை பலரும் விரும்பக்கூடிய இடத்தில் வைக்குமென்று அவளுக்கு தோன்றியது. அவள் கம்பி வேலியில் இந்தப்பக்கம் நின்று கைகளை நீட்டி தன்னுடலை கம்பிகள் சேதப்படுத்திவிடாதவாறு உடலை முறுவலித்து எக்கி அந்த கட்டரை எடுக்க முயன்றாள். முடியவில்லை. கம்பி வேலி ஒரே சீராக நேர் கோட்டில் இல்லாமல் சற்றே வளைந்து நெளிந்து நீண்டிருந்ததால், வேலியின் சில இடங்கள் கட்டருக்கு மிக அருகில் சென்றன. ஆனால் காற்றின் போக்கில் அந்த கம்பி வேலி தொடர்ந்து அசைந்து கொண்டும் இருந்தது. கம்பி வேலியின் சில இடங்களை குறித்து வைத்தால் காற்றின் போக்கில் அடைகள் அசைகையில் ஏதேனும் ஒரு தருணத்தில் கட்டரை எட்டிவிடலாம் போலத்தான் இருந்தது. இரண்டொரு கம்பிகளை கால் விரலிடுக்கில் நிறுத்த இன்னும் கொஞ்சமாய் முன்னே நகர முடிந்தது. அது கட்டரை ஓரளவு எட்ட வகை செய்தது. ஆனால் முழுமையாக அல்ல.
நேரமாகிக்கொண்டிருந்தது. லால் திட்டக்கூடும். நேரத்துக்கு காரியம் நடக்கவில்லை என்று ஏசக்கூடும். உடனே கடைக்கு திரும்ப வேண்டுமென்று தோன்றியது. கைகளில் நிறம் பேரொளி பட வேண்டும். பேரொளி பட‌ கம்பி வேலி கடக்க வேண்டும். கம்பி வேலி கடக்க கட்டர் தேவை. கட்டரை எட்ட கம்பி வேலியினூடே முயற்சித்த இடத்தை விரலால் கிறுக்கி குறித்தாள் அடுத்த முறையில் நேரத்தை சுருக்க.

பேரொளி பார்த்து பெருமூச்சுவிட்டுவிட்டு லாலின் கடை நோக்கி நடந்தாள். அவள் விரலால் குறித்த இடம் விளையாடிக்கொண்டிருந்த பணக்காரவீட்டு  பிள்ளைகள் சிறு நீர் கழித்ததில் அழிந்துபோனது.

பத்து பதினைந்து முறையாவது வெண்ணிலா வாசலுக்கும் உள் அறைக்குமாய், அடகு வைக்கப்பட்ட பழைய தங்க நகைகளை கழுவிய தண்ணீரை வெளியே ஊற்றிவிட்டு வந்தாள். ஒவ்வொருமுறையும் அவள் கிறுக்கி வைத்து குறிப்புகளை பணக்கார சிறுவர்களின் விளையாட்டு அழித்தது அவளை கட்டரை நெருங்க விடாமலே செய்தது. ஒரு முறை கூட அவளை நோக்கி நீண்ட அந்த பேரொளி கரங்களை அவள்  பற்றிக்கொள்ளவில்லை அல்லது பற்றிக்கொள்ள இயலவில்லை. பொறுத்துப்பொறுத்து பார்த்திருந்த பேரொளி அவளை கைவிட்டு கை நீட்டிய மனிதர்களை கவனிக்க போய்விட்டிருந்தது. வெண்ணிலா  மீண்டும் தனது வேலைக்கே திரும்பியது பேரொளியை உதாசீனப்படுத்தியது போன்றதானது.

இறுதியாய் வெளியில் சென்ற வெண்ணிலா வெகு நேரமாய் திரும்பி வராமல் போக, லால் பாத்ரூமை எட்டிப்பார்த்தார். வெண்ணிலா ஒரு தாம்பாளத்தில் நகைகளை சோப் நுரையில் விட்டிருந்தாள். சற்று குனிந்து பார்க்க அந்த நகைகளில் இரண்டை காணவில்லை.

வெண்ணிலா ஏன் சோப்புடன் வெளியே சென்றாள் என்று அப்போது புரிந்தது. கட்டரை எட்டிவிடும் கம்பி வேலிக்கு காத்திருக்கும் கால அவகாசம் அவளிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால்  சோப்புடன் வெளியே செல்ல அவளிடம் இருந்த துணிவு போதுமானதாக இருந்தது.

சோப்புக்குள் தங்க நகைகளை வைத்து வெண்ணிலா எடுத்துப்போய்விட்டதை தாமதமாக‌ அறிந்து “ஹே பகவான்!!” என்று அலறியபடியே  விழுந்தார் லால். தொலைவில் போலீஸ் வாகனத்தின் சைரன் ஒலி அவருக்கு கேட்டிருக்க நியாயமில்லை.

– ஸ்ரீராம்


@நன்றி
திண்ணை(http://puthu.thinnai.com/?p=33557)

கவிதைகள்

விழிப்பு - கவிதை

நம்மை சுற்றிலும்
வசந்தங்கள் தாம்...

ஆயினும்,
நமது தடித்த தோல்கள்தாம்
நம்மை சலனப்படுத்த‌
வசந்தங்களை அனுமதிப்பதில்லை...

 - ஸ்ரீராம்

**************************************

கறை - கவிதை


நெருப்பு...
மரக்கட்டையை எரித்த கதையை
சுவற்றின் மீதே
எழுதிச்செல்கிறது...

 - ஸ்ரீராம்
**************************************
தன்னியல்பு - கவிதை


நான்
நேராக வந்த பாதையை
யாரோ குனிந்தபடியே கடந்திருக்கிறார்கள்..
யாரோ ஓடி கடந்த பாதையை
நான் தவழ்ந்து கடந்திருக்கிறேன்...
அந்த யாரோவுக்கு என்னையும்
என்னை அந்த யாரோவுக்கும்
தெரியாத வரையில்
எல்லாமும்
தன்னியல்பில்...

  - ஸ்ரீராம்

****************************

வழி - கவிதை


எதுவோ ஒன்று
தடுக்கும் வரை
எல்லாமே வழிதான்
பார்வையற்றவனுக்கு...


 - ஸ்ரீராம்

********************************************

அடையாளம் - கவிதை


ஒவ்வொருமுறையும்
என்னை நான்
கண்டடையும்போதும்
இந்த உலகம்
'அது நீ இல்லை' என்கிறது...


  - ஸ்ரீராம்

@நன்றி
திண்ணை(http://puthu.thinnai.com/?p=33555)

Saturday, 22 October 2016

Planet - in MadSwirl

Planet

by Sam Rapth on October 21, 2016 :: 0 comments
our_placephoto (above) "Our Place" by Tyler Malone aka The Second Shooter
Researchers at the Extra-Terrestrial Intelligence Research Center were talking while looking at the wide screen showing numerous stars as dots, floating rocky planets and gaseous clusters.

“This one is located twenty light years away. The planet should be habitable with the right gravity and pressure as is revolves around its star very comfortably in the goldilocks zone”

“Does it have water?”

“It did long time ago, may be a million years. Look at the lines over there. Water had been flowing in there once.”

“I see. Could it have supported life? Like aliens?”

“Definitely. If there was water, there should have been life. Million years ago, but not now”

“Why?”

“Not sure. Maybe a meteor in the past millennia.”

“If it was a meteor, there should have been a crater on the surface. Nothing like that shows up in the picture.”

“Maybe the aliens must had exhausted all the water and oxygen and made the planet a raging hurricane of useless gases and acid rains.”

“I see. Let us send a probe and do some basic research on the surface. What are the coordinates for the planet?”

“Galaxy is Milky Way, located very close to Zodiac Star Cluster and is the third planet to its star.”

“Done. Give it a name now”

“Earth. It shall be called Earth.”
editors note:
We want to be echoes, we want everything to last or outlast us. But when nothing’s left, everything’s left to start over. – tyler malone

@Thanks MadSwirl http://madswirl.com/short-stories/2016/10/planet/
Monday, 10 October 2016

குங்குமம் (14-Oct-2016) இதழில் எனது கதை

ஆங்கிலத்தில் Quick Fiction என்பார்கள்.
தமிழ் சூழலில் Speculative Fiction களுக்கு பெரிய இடம் இல்லை எனும்போது ஆறு பக்கத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளில் ஒரு கதை எழுதி மேற்பார்வை செய்து முடிக்க ஒரு வாரம் ஆகிவிடுகிறது.. சுஜாதா காலகட்டம் என்றால் செய்து பார்க்கலாம்.. ஏனெனில் மெட்ரோ வந்திருக்கவில்லை..தூர்தர்ஷன் மட்டும் தான்.. ஆதலால் கதைகள் சுவாரஸ்யம் கூட்டின.. இப்போதெல்லாம் நான்கு பேரை இழுத்து வந்து படிக்க வைப்பதே பெரிய காரியமாக இருக்கிறது..

வெளியாகாத கதைகளை ஆங்கிலத்தில் மீண்டும் எழுதி ஆங்கில பத்திரிக்கைகளுக்கு அனுப்புவது வழக்கம்... .தமிழில் எழுதி தமிழிலேயே வெளியாகும் எனது கதைகளில் ஒன்று இது..

14 அக்டோபர் 2016 தேதியிட்ட இந்த வார குங்குமத்தில் வெளியாகியிருக்கும் எனது "புதுசு" ஒரு பக்க கதையின் பிரதி இங்கே.எனது ஆக்கத்தை தேர்வு செய்து வெளியிட்ட‌ குங்குமம் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகள்.

கவிதைகள்


சாமி சுத்தம் – கவிதை

கற்கள் மீதும்,
சுள்ளிகள் மீதும்
கால் வைத்து நடந்து
கோயிலுக்கு செல்லும் வழியே
தோளில் அமர்ந்திருந்த ஜானவிக்குட்டிக்கு
சாரதி ஆகியிருந்தேன்…
ஜானவிக்குட்டி கேட்கிறாள்
‘ஐய.. மாமா..
இந்த சாமி சுத்தமே இல்ல’…

  – ஸ்ரீராம்


*********************************
இடம் – கவிதை


மழை என நினைத்து
பனியை
அள்ளி அள்ளி பொழிந்துவிடும்
தேசத்தில்,
மார்புக்கச்சையையும்,
குறி மறைக்குமோர் துணியையும்
மட்டுமே
அணிந்த பெண்ணொருத்தி
என்னைப்பார்த்து
விகல்பமின்றி புன்னகைக்கிறாள்…
காமத்தின் இடத்தில்
தோழமையை
அள்ளி அள்ளி பொழிந்தது
அந்த புன்னகை ….
  – ஸ்ரீராம்


@நன்றி
திண்ணை(http://puthu.thinnai.com/?p=33373)

Thursday, 6 October 2016

குங்குமத்தில் எனது ஒரு பக்க கதை

14 அக்டோபர் 2016 தேதியிட்ட இந்த வார குங்குமத்தில் எனது ஒரு பக்க கதை 'புதுசு' வெளியாகியிருக்கிறது. நண்பர்கள் யாரேனும் இதழில் கதை வெளியாகியிருக்கும் பக்கத்தை பிரதியெடுத்து அனுப்ப இயலுமா?

Wednesday, 5 October 2016

ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை

28 செப்டம்பர் 2016 தேதியிட்ட இந்த  வார ஆனந்த விகடன் இதழில் கவிதைகளுக்கான "சொல்வனம்" பகுதியில் எனது "என்னைப்போலவே ஒருவன்" கவிதை வெளியாகியிருக்கிறது.  பணி நிமித்தம் அமேரிக்காவில் இருப்பதால் கவிதை வெளியான பக்கத்தின் பிரதி கிடைக்க வெகு தாமதமாகிவிட்டது.என் கவிதையை தேர்ந்தெடுத்து வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Monday, 3 October 2016

விலாசம் - சிறுகதை

விலாசம் - சிறுகதை

அவன் அந்த விலாசத்தை தேடினான். 11, முத்துக்கிருஷ்ணன் தெரு அசோக் நகர்.

அங்கு வந்து நின்றான். ஒன்றிரண்டு பேர் தவிர தெருவில் யாரும் இல்லை.

தேடினான். கொஞ்சம் தடுமாற வேண்டியிருந்தது. ஆனால், இறுதியாக மாட்டிக்கொண்டது. தனி வீடே தான்.

வீட்டு வாசலை வந்தடைந்தான். கதவு லேசாக திறந்திருந்தது.

வேறொரு சமயமானால், கதவைத்தட்டி, அனுமதி கேட்டு, கிடைக்கும்வரை வாசலில் காத்திருந்திருப்பான். ஆனால், அன்று….

திறந்திருந்த கதவினுள் நுழைந்து, உள்பக்கம் தாழிட்டான். வீட்டில் எங்கும் இருள். கண்ணாடி ஜன்னலிலிருந்து வெளிச்சம் பலகீனமாக நுழைந்து தரையில் விழுந்திருந்தது. அதன் கனவுகள் தூசிகளாய் இறங்கிக் கொண்டிருந்தன. மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தது. டிவி, அணைக்கப்பட்டிருந்தது. பிலிப்ஸ் மியூசிக் சிஸ்டம் இருந்தது. பெரிய அலமாறி. அதன் மேல், ஏகத்தும் புகைப்படங்கள், புத்தகங்கள், சின்னச்சின்னதாய் பீங்கான் பொம்மைகள், செயற்கை பூக்கள், புசுபுசு நாய் மற்றும் பூனை பொம்மைகள். உயர் ரக சோபா செட். அதன் மீதி விரிப்பு.

போட்டிருந்த செருப்பை கழட்டினான்.

‘யாராவது இருக்கீங்களா?’ என்று கேட்கலாமென்று தோன்றியது. ஆனால், கேட்கவில்லை.

‘எத்தனை நேரம் காத்திருப்பது!’

இரண்டு அடி தான் எடுத்து வைத்திருப்பான். யாரோ வரும் அரவம் கேட்டது. நின்றான். கவனித்தான். திரைச்சீலை தொங்கி மறைத்த அறைக்குள்ளிருந்து அவள் வந்தாள். நைட்டிதான் அணிந்திருந்தாள்.

கழுத்தில் அணிந்திருந்த மெல்லிய செயின் அந்த இருளிலும் தெரிந்தது. மார்பில் நல்ல பருமன். கேசம் சன்னமான ஒளியில், கண்ணாடி என மின்னியது.அவள் இவனைப் பார்த்ததும் லேசாக அதிர்ந்தாள். ஆனால், ஏதும் சொல்லவில்லை. எக்கி அவனுக்கு பின்னே கதவைப் பார்ப்பது அவனுக்கும் புரிந்தது. அப்படியே சிலையென நின்றாள்.
அவன் நெருங்கினான். அருகே வந்து நின்றான். கன்னத்தை கிள்ளினான். அவள் கண்களை மூடிக்கொண்டாள். அவனது கை, அவள் கன்னத்திலிருந்து சரிந்து கழுத்துக்கு வந்தது. அவள் கண்களை திறக்கவில்லை. அவன் கை மெல்ல மேலும் சரிந்து, மார்பின் மேல் வந்து நின்றது. அவள் கண்கள் திறக்கவில்லை.

அவன் அவளது நைட்டியின் ஜிப்பை பிடித்து கீழே இழுக்க, மெல்ல மார்பின் பிளவு தெரிந்தது.

அவள் கண்கள் திறந்தன. அவனை பார்த்தாள்.
‘உள்ளே போகலாம்’ என்றாள்.

அவன் அவளை, மார்பில் கைவைத்தபடியே தள்ள,  அப்படியே பின்னால் நடந்தாள். அவன் பின்னே, அந்த திரைச்சீலை சரிந்து விழுந்தது.

அரை மணி நேரம் கடந்த பின்னர், அவன் எழுந்தான்.

அவள் இன்னும் களைப்பாய் படுத்திருந்தாள். அவன் பாண்ட், சர்ட் அணிந்து பர்சிலிருந்து சில ஆயிரம் ரூபாய் தாள்களை உருவி அவளருகே படுக்கை மீது அவள் கண்களில் படுமாறு வைத்தபோது  தான் கவனித்தான்.அவளுடைய உடல் ஒரு முறை தூக்கிப்போட்டது. சற்றைக்கெல்லாம் அவள் வாயிலிருந்து நுரை வந்தது. அதன் பிறகு அவள் உடலில் எவ்வித சலனமும் இல்லை.

சுற்றிலும் பார்த்தான். படுக்கைக்கு அருகிலிருந்த மேஜையில், ஒரு கோப்பையில் கஷாயம் போல் ஏதோ இருந்தது. அவனுக்கு பயமாக இருந்தது. திரும்பி நடந்தான். கதவு திறந்தான்.

வெளியே வந்து கதவு சார்த்திவிட்டு சாலையில் இறங்கி நடந்தான். இரண்டு தெரு தள்ளியிருந்த ஒரு விளையாட்டு மைதானம் அருகே நிறுத்தியிருந்த தனது பைக்கிற்கு வந்தான்.

சட்டை பாக்கேட்டிலிருந்த அந்த துண்டுச் சீட்டை எடுத்தான்.
11, முத்துக்கிருஷ்ணன் தெரு அசோக் நகர்

என்றிருந்த காகிதத்தின் இடது ஓரம் லேசாக மடிந்திருந்ததை அப்போது தான் கவனித்தான். அதை லேசாக விரலால் நெகிழ்த்தினான்.
91, முத்துக்கிருஷ்ணன் தெரு அசோக் நகர்

என்று இருந்தது.

– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

@நன்றி
திண்ணை(http://puthu.thinnai.com/?p=33327)

திண்ணையில் கவிதைகள்


இருப்பிடம் – கவிதை


நான்
நான் தானா என்பதற்கு
சான்றிதழ்கள் கேட்கிறார்கள்,
வளர்ச்சியை அளவிடுகிறார்கள்,
ஏணியில் ஏறச்சொல்கிறார்கள்…
யாரேனும் சொல்லுங்கள்..
ஒரு மனிதன்
தனது பெயரால் மட்டுமே
அறியப்பட விரும்பினால்
அவன் எங்குதான் போகவேண்டும்?
– ராம்ப்ரசாத் சென்னை

அந்த கைப்பை – கவிதை


அன்றொரு நாள்
வீடு திரும்புகையில்
மல்லிச்சரத்தை
கூந்தலிலிருந்து
அவசரமாக‌ விடுவித்து
தனது கைப்பையில்
அவள் திணிக்கையில்
நான் கவனித்துவிட்டேன்…
அன்றிலிருந்து
ஒவ்வொரு நாளும்
நான் பார்க்கையிலெல்லாம்
குற்ற உணர்வு கொள்கிறது
அந்த கைப்பை…
– ராம்ப்ரசாத் சென்னை

அரங்கேற்றம் – கவிதை


பேருந்து பயணம்..
நான்..
சற்று தள்ளி அவள்..
வீசிய காற்றில் அவளின்
மேலாடை விலக‌
அவள்
சட்டென என்னைப் பார்த்தாள்…
நான்
வேறெங்கோ பார்த்தேன்…
எங்களுக்கு புரிந்துவிட்டது…
அத்தனை கச்சிதமாக…
அவள் ஒரு கவனச்சிதறலை அரங்கேற்றியதும்,
நான் ஒரு கண்ணியத்தை அரங்கேற்றியதும்..
– ராம்ப்ரசாத் சென்னை

நடிப்பு – கவிதை


அவள் என்னிடம்,
பேசுவாள்..
சிரிப்பாள்…
விளையாடுவாள்…
சீண்டுவாள்…
எப்போதும்போல…
ஒரு நாள்
ஒரு பெண்ணை
வசை பாடிய
என் கவிதையொன்றை
அவள் வாசிக்க நேரிட்டது…
அதிலிருந்து
அவள் என்னிடம்
பேசுவாள்..
சிரிப்பாள்…
விளையாடுவாள்…
சீண்டுவாள்…
அந்த ஒரு நாளுக்கு
முன்பிருந்தது போல‌…
– ராம்ப்ரசாத் சென்னைஆக்ரமிப்பு – கவிதை


எப்போதும் அவளை
பேரழகாகவே
பார்த்திருந்தேன்…
அன்றொரு நாள்
அவளை
கிட்டத்தில் பார்த்தேன்…
அவள்
முற்றிலும் எதிர்பாராத கணமொன்றில்
நிகழ்ந்திருந்தது
அந்த சந்திப்பு…
அப்போது தான்
குளித்திருந்தாள்…
முகப்பூச்சு இல்லை..
இமைகளில் மையில்லை…
உதட்டுச்சாயம் இல்லை…
புருவங்கள் செப்பனிடப்படவில்லை…
கூந்தல் தொகுக்கப்படவில்லை…
தன்னை
எவரும் அடையாளம் கண்டுவிடக்கூடாதென‌
அவள் உளமார‌
விரும்பிய கணங்களுள் ஒன்றை
நான்
ஆக்ரமிப்பேன் என்று
அவள் கனவிலும் நினைத்திருக்கமாட்டாள்…

@நன்றி
திண்ணை(http://puthu.thinnai.com/?p=33345)

Friday, 16 September 2016

ஆங்கில இதழ்

ஆங்கில இதழ் - Alephi


"இலக்கிய தரம்" என்பதின் மீது எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன.

கிராமம், அதுசார்ந்த வட்டார் வழக்கு, கிராம மனிதர்களையே விளிம்பு நிலை மனிதர்களாக பார்த்தல், அவர்களின் வாழ்க்கை, அதிலிருக்கும் சங்கடங்கள் தோல்விகள், அதன் பின்னே இருக்கும் காரணிகள் என்று தான் இலக்கியத்தை அனேகம் இலக்கிய பத்திரிக்கைகள் வகைப்படுத்துவதாக அவதானிக்கிறேன்.

எனக்கு இதில் உடன்பாடு இல்லை. இயற்பியல், வேதியியல் , கணக்கு பாடங்கள் வராத காரணத்தால் அவைகளை விட்டு ஒதுங்கி வெவ்வேறு துறைகளை தேர்ந்துவிட்டு பிற்பாடு தமிழில் எழுத முடிந்த காரணத்தாலும், சமூக இயக்கம் குறித்த குறை புரிதல்களை மட்டுமே வைத்துக்கொண்டு கூட்டம் சேர்த்து புத்தகம் வெளியிட்டு தன்னைத்தானே "இலக்கியவாதி" என்று பிரகடனப்படுத்திக்கொள்வது நிறைய நடக்கிறது. இந்த குழப்பத்தில் உண்மையிலேயே நன்கு சிந்தனை வளம் கொண்ட சிந்தனாவாதிகள் காணாம்ல் போய்விடுகிறார்கள் அல்லது மழுங்கடிக்கப்படுகிறார்கள்.

பதிப்பகங்களும் வியாபார நோக்கிலேயே செயல்படுகின்றன. விருதுகள் வழங்கி தவறானவர்கள் மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சுகின்றன. இது தவறான அணுகுமுறை என்பதை விளைவுகள் துல்லியமாக‌ காட்டுகின்றன. வெறும் முண்ணூறு பேர் கொண்ட குழுவாகத்தான் தமிழ்இலக்கியம் இயங்குறது. இலக்கியவாதி என்று சொல்லிக்கொள்பவனை கண்டால் எல்லோரும் தெறித்து ஓடுகிறார்கள். இலக்கியம் பேசும் பெண்ணையோ பையனையோ நம்பி பெண் தரவோ , பெண் எடுக்கவோ தயங்குகிறார்கள்.ஒருவர் கன்னத்தில் இன்னொருவர் அறைந்துகொள்கிறார்கள். செருப்பால் அடித்துக்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் தீவிர இலக்கிய வாதிகளின் செயல்பாடுகளை கவனித்தால், "இவனுக்கு மன நிலை பிறழ்வோ?" என்று சந்தேகிக்கும் வகைக்கு இருக்கிறது.

இயற்பியல், வேதியியல், கணிதம், சூத்திரங்கள், சமன்பாடுகள் புரிந்திருக்க வேண்டும் என்பது ஒரு தரமான இலக்கியவாதிக்கான இலக்கணமாக நான் பார்க்கிறேன். இதை எங்கு வந்து வேண்டுமானாலும் சொல்லத்தயார்.  இந்த எனது கூற்றை நான் எக்காலத்திலும் மாற்றிக்கொள்ளப்போவதில்லை.

தமிழில் தான் முதலில் எழுதிக்கொண்டிருந்தேன். உயிர்மையின் உயிரோசையில் Speculative Fiction கதைகள் தொடர்ந்து எழுதினேன். ஒருமுறை கவிஞர் மனுஷ்யபுத்திரனை அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது என்னிடம் "யாருமே சரியா எழுத மாட்டேங்குறாங்க" என்றார். அப்போது நான் தான் அவரது தளத்தில் கதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். நம்மளைத்தான் சொல்கிறார் என்று நினைத்துக்கொண்டேன். அப்போதே நினைத்தேன். அந்த இதழை நிறுத்திவிடுவார்கள் என்று.. சில மாதங்களிலேயே நிறுத்தி விட்டார்கள்..

ஒரு கட்டத்தில் Speculative Fiction தனமான எனது கதைகளுக்கு களம் இல்லாமல் இருந்தது. தமிழில் எழுதினால் மலினமான எழுத்தாளர் என்று முத்திரை குத்தி ஒதுக்கிவிடுவது நடக்கிறது. ஏனென்றால் மேற்சொன்ன காரணம் தான். குழு மனப்பான்மை. ஜாதீய உணர்வுகள். வேதியியல், கணிதம், இயற்பியல், சமன்பாடுகள், சூத்திரங்கள் அறவே வராமை.

பிறகு என் போன்ற‌ கதைகளை வெளியிட எந்த தளமும் இருக்கவில்லை என்பதால் அதையெல்லாம் ஆங்கிலத்தில் மீண்டும் எழுதி ஆங்கில பத்திரிக்கைகளுக்கு அனுப்பினேன்.. பல இதழ்களில் வந்தது..இப்போதும் வந்து கொண்டிருக்கிறது..

உன்னதம் கெளதம சித்தார்த்தன் ஆங்கில இலக்கியத்திற்கென ஒரு இணைய இதழ் துவங்கியிருக்கிறார்.

இணையத்தில் Alephi.com என்பது முகவரி.

நான் எழுதிய Baby என்ற தலைப்பிலான கதை வெளியாகி இருக்கிறது.

http://alephi.com/2016/09/06/baby/

வட இந்தியாவில் சில பத்திரிக்கைகள் இயங்கி வந்தன. இப்போதும் அவற்றுள் சில இயங்குகின்றன.  அமேரிக்காவில் சில இணைய இதழ்கள் இயங்குகின்றன. முகப்பை பார்த்தாலே முகத்தில் அறைந்தார் போல் இருக்கும். Alephi இதழின் தோற்றம் ரம்மியமாக இருக்கிறது.

ஆங்கில இதழ்களில் என்னுடன் எழுதிக்கொண்டிருந்த சிலரை இங்கும் பார்க்க முடிவது மகிழ்ச்சி.. இனி வரும் காலங்களில் மேலும் பார்க்க முடியும் என்றே நம்புகிறேன்.

இப்போதைக்கு என்வகையான‌ கதைகளுக்காக உள் நாட்டில் இயங்கும் இன்னுமொரு தளமாக Alephi.com  ஐ பார்க்கிறேன் எனலாம்.
எழுத்தாளர் கெளதம சித்தார்த்தனின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்களும் பேரன்பும்.

தளம் மென்மேலும் பெரிதாகி வளர வாழ்த்துகிறேன்.