கேள்விகள் - என் படைப்புகள் மீதான கேள்விகள் - 1
நம் நாவலை வாசித்துவிட்டு, நாவலில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை எந்த அசலான எண்ணத்தில் நாம் எழுதினோம் என்று யாராவது கண்டுபிடித்து சொல்ல மாட்டார்களா என்ற ஏக்கம் ஒவ்வொரு எழுத்தாளனுக்கு இருப்பதுதான்.
என் நாவல்களை வாசித்தவர்களிடமிருந்து சில கேள்விகளை தொடர்ச்சியாக எதிர்கொண்டிருக்கிறேன். அந்த கேள்விகளுக்கு ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பதிலளிப்பதைவிடவும் பொதுவில் பதிலளிக்கின், எல்லோருக்கும் பயணுள்ளதாக இருக்குமென்று சில தொடர் பதிவுகளில் அந்தக் கேள்விகளை எதிர்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
கேள்வி: "உங்க எல்லா நாவல்கள்ல வர்ற ஹீரோ ஏன் எப்பவும் ஒரே மாதிரி இருக்கான்?"
பதில் :
மற்ற நாவலாசிரியர்கள் உருவாக்கும் கதா நாயகர்களுக்கும், என் படைப்புக்களில் நான் உருவாக்கும் கதா நாயகர்களுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது.
மற்ற நாவல்களின் கதை மாந்தர்கள், இன்றைய சமூகத்து மனிதர்களை பிரதிபலிக்கிறவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டியதில்லை. இக்கதைகளில் ஒழுங்கீனம் என்பது எதார்த்தமாகிறது. social drinking & smoking அனுமதிக்கப்படுகிறது. அதன் பின் விளைவுகளை அறிவியல் கொண்டு சமாளிப்பது சமூக ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டிய கட்டாயங்களுடன் இந்த நாவல்கள் எழுதப்படுவதைப் பார்க்கலாம். இப்படி கட்டமைக்கப்படும் ஆண், சம காலத்தில் பெண்களுடன் ஒப்பீட்டளவில் சற்று முழுமை குன்றி இருக்கிறான். இதனால் தான் வரதட்சணை போன்ற சமூக பிரச்சனைகளுக்கு முன்வைக்கப்படும் தீர்வுகள் பெரும்பாலும் Stereotypical ஆக இந்த நாவல்களில் தோன்றுகின்றன.
என் கதைகளின் நாயகர்கள் இந்தப் பிரச்சனைகளை மிகவும் தெளிவாக உள்வாங்கியவர்களாக நான் கட்டமைக்கிறேன். ஆதலால் என் கதை மாந்தர்களை நான் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்களாக அதாவது கொஞ்சம் Advanced breeds ஆக என் படைப்புக்களில் முன்வைக்கிறேன்.
இதனாலேயே என் கதைகளின் நாயகர்கள் பெரும்பாலும் ஒரு futuristic society ஐ நம்புகிறவர்களாக இருக்கிறார்கள். இந்த எதிர்கால சமூகத்தில், ஒவ்வொருவரும் சமூக பிரச்சனைகளுக்கான தீர்வுகளை தங்களின் இயல்பு வாழ்க்கையிலேயே செயல்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக, உடற்பயிற்சி செய்தல் என்பது early diabetes, heart diseases, இளம் வயதிலேயே முதுமை அடைவது போன்றவைகளுக்கு தீர்வாகிறது. அதே போல் உணவக உணவுகளால் உருவாகும் குடல் பிரச்சனைகள், வயிற்றுப்போக்கு போன்றவைகளுக்கு தரமான உணவுகள் தீர்வாகிறது. செழுமையான மன வளத்துக்கு அதிகாலையிலேயே எழுதல், யோகா போன்றவைகள் தீர்வாகிறது. எப்போதும் கற்றுக்கொண்டே இருப்பது, நிச்சயமற்ற வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார மந்த நிலை போன்றவற்றுக்கு தீர்வாகிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இவ்விதமாக உருவாகும் கதா நாயகனின் பார்வையில் நான் சமூகப் பிரச்சனைகளை ஆராய்கிறேன் அல்லது ஆராய்வதாகக் காட்டுகிறேன். இந்த விதத்தில் எனக்கு வேறொரு புதிய திறப்பு கிடைக்கிறது. இந்தப் பார்வையே என் நாவல்களை தனித்துவமான நாவல்களாக மாற்றுகிறது என்பது என் அவதானம்.
ஏனெனில், இந்த விதமான கதா நாயகர்கள் futuristic society ஐ நம்புகிறவர்களாக இருக்கிறார்கள். இந்த futuristic society என்பது என் கணித நாவல் (உங்கள் எண் என்ன?) மூலம் விளக்கப்படும் ஒரு futuristic society தான். இது ஏனெனில், உங்கள் எண் என்ன நாவலில் பின் வரும் பண்புகள் தான் முன்னிருத்தப்படுகின்றன...
ஆக என் நாவல்களின் வரும் நாயகனுக்கு முக்கியமான மூன்று பண்புகள் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
1. சுய ஒழுக்கத்தை அதிகம் பேணுகிறான்.
1.அ. இதனாலேயே என் நாயகன் உடற்பயிற்சி செய்கிறான்.
1.ஆ. மது, புகை பழக்கம் இருப்பதில்லை.
1.இ. அதிகாலையிலேயே எழுகிறான்.
2. தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறான்.
3. அறம் சார்ந்த வாழ்க்கை வாழ தன்னளவில் பெருமுயற்சி செய்பவனாக இருக்கிறான்.