எதிர்வரும் 2026 புத்தகக் கண்காட்சியில் எனது அறிவியல் புனைவு மற்றும் கணிதப் புனைவு நூல்கள் கிடைக்குமிடம்:
படைப்பு பதிப்பகம் ஸ்டால்: 561
8 ஜனவரி முதல் 21 ஜனவரி வரை, YMCA மைதானம், நந்தனம், சென்னை.
1. வாவ் சிக்னல் - விஞ்ஞானச் சிறுகதைகள்
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த சிறுகதை நூல் - 2020 விருது பெற்ற முதல் அறிவியல் புனைவுச் சிறுகதை நூல்.
2. மரபணுக்கள் - விஞ்ஞானச் சிறுகதைகள்
மரபணுக்களை மையமாக வைத்துப் புனையப்பட்ட பத்து விஞ்ஞானச்சிறுகதைகள் தொகுதி.
2.அ. 'தழுவு கருவி' - அரூ அறிவியல் புனைவுச் சிறுகதைப் போட்டியில் தேர்வான சிறுகதை.
2.ஆ. 'எப்போதும் பெண்' - கொலுசு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை.
2.இ. 'கண்ணாடிச் சுவர்' - குவிகம் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை.
2.ஈ. 'பிரதியெடுக்காதே' - இச்சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Mismatch' வார்த்தைக்கு எட்டு அமெரிக்க செண்ட் வீதம் விற்பனை ஆகி, அமெரிக்காவின் புகழ்பெற்ற Science Fiction and Fantasy writer's Associationல் இணை உறுப்பினர் அந்தஸ்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.
2.உ. 'சோஃபி' - இச்சிறுகதை எழுத்தாளர் திரு.சங்கர நாராயணன் தொகுத்த 'மாசறு பொன்' தொகுதியில் இடம்பெற்றது. இதன் மற்றோரு வர்ஷனான, சோஃபியா ஜீரோ டிகிரி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
3. தீசஸின் கப்பல் - சிறார் விஞ்ஞானச் சிறுகதைகள்
'பூனையற்ற புன்னகை' சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Sensed Presence', Allegory Science Fiction, Fantasy, Horror Magazineல், 'Honorable Mention' அங்கீகாரம் தரப்பட்டிருக்கிறது.
4. கம்ப்யூட்டா - சிறார் கணிதச் சிறுகதைகள்
Banach-Tarski Paradox, Infinite Monkey Theorm, Thompson's Lamp Paradox முதலான சுமார் அரை டஜனுக்கும் மேலான கணிதக் கோட்பாடுகள் மற்றும் தேற்றங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுதி நூல். இந்திய மொழிகளிலேயே இருக்கும் முதல் கணிதச் சிறுகதைத் தொகுதி நூல் தமிழில் உள்ள இந்த நூல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
4.அ. Infinite Monkey Theoremல் அமைந்த 'கூடை மனிதன்' சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'The Bucket Man', L.Ron Hubbard Writer's of the Future Contestல், 'Honorable Mention' அங்கீகாரம் தரப்பட்டிருக்கிறது.
4.ஆ. தொகுப்பின் முதல் சிறுகதையான, Logarithm அடிப்படையிலான 'மடக்கை' சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அறிவியல் புனைவிதழான AntipodeanSF ல் April 2026ல் வெளியாகத்தேர்வாகியிருக்கிறது.





