வாவ் சிக்னல் - தமிழக அரசின் சிறந்த சிறுகதை நூலுக்கான விருது (2020) பெறுகிறது
*******************************************************
எனது 'வாவ் சிக்னல்' விஞ்ஞானச் சிறுகதைத் தொகுதி நூல், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் 2020ம் வருடத்திற்கான சிறந்த சிறுகதை நூலாகத் தேர்வாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாநில அரசு விருதாளர்களின் பட்டியலில் இணையச்செய்ததில் மாநில அரசுக்கும், தேர்வுக்குழுவுக்கும், இந்த இயற்கைக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
விருதுக்கென எனது நூல் அனுப்பப்பட்டதே எனக்குத் தெரியாது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். விருதுக்கென என் நூலை அனுப்பி வைத்ததற்கு ஒரு பதிப்பாளரின் கடமை உணர்வுடன் அனுப்பி வைத்த பதிப்பாளர் ஜின்னா அவர்களுக்கு எனது பிரத்தியேக நன்றிகள்.