21.09.2016 ஆனந்தவிகடனில் எனது கவிதை


21.09.2016 ஆனந்தவிகடனில் எனது கவிதை


ஆனந்த விகடன் இதழில் வெளியான கவிதைகளுக்கான ஊக்கத்தொகைக்கான பட்டியல் இன்று ஆனந்த விகடன் அலுவலகத்திலிருந்து வந்திருந்தது. அந்த பட்டியலை பார்த்த போதுதான் 21 செப்டம்பர் 2016 இதழில் எனது இரண்டு கவிதைகளை ஆனந்த விகடன் தேர்வு செய்து வெளியிட்டிருப்பது தெரிய வந்தது.

இந்த மின்னஞ்சல் மட்டும் வந்திருக்கவில்லையென்றால் எனக்கு நிச்சயமாக தெரியவந்திருக்காது. கவிதை வெளியான வாரத்தில் போய் கேட்டாலே ஆனந்த விகடன் புத்தகம் கடைகளில் கிடைக்காது. கவிஞ‌னுக்கு வெளியாகும் அவனுடைய‌ ஒவ்வொரு ஆக்கமும் ஒரு குழந்தை போலத்தானே. எழுதிய ஆக்கம் வெளியான பக்கத்தை நேரில் பார்ப்பதில் கிடைக்கும் பரவசமே அலாதி. இரண்டு கவிதைகள் ஒரே இதழில் வெளியாகியிருக்கின்றன. இரட்டிப்பு பரவசம். நண்பர்கள் யாரிடமேனும் 21 செப்டம்பர் 2016 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழ் இருப்பின் பிரதியெடுத்து அனுப்ப இயலுமா?

நன்றிகள்.

இப்போதைக்கு இணையத்தில் கிடைத்த பிரதி தான் கையிருப்பு

நட்புடன்,
ராம்ப்ரசாத்

No comments: