என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

26.10.2016 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை

26.10.2016 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை


26.10.2016 தேதியிட்ட இந்த வார இதழுடன் ஆனந்த விகடன் தனது 90 ஆண்டு கால பயணத்தை பூர்த்தி செய்கிறது. சின்ன வயதில் ஆனந்த விகடனுடன், அம்புலி மாமா , சிறுவர் மலர் ஏதோ பாடபுத்தகம் போல் படித்திருக்கிறேன். எழுத்தாளர்கள் சுஜாதா, பாலகுமாரனை அறிமுகம் செய்தது ஆனந்த விகடனே. பிற்பாடு குங்குமம், குமுதம் என்று விரிந்தது. இந்த பத்திரிக்கைகளை தொடர்ந்து படித்ததே நான் இப்போது எழுதும் ஆக்கங்களுக்கான அடித்தளம் என்று சொல்லலாம்.
பலரிடமிருந்து ஒரு கேள்வியை அதிகம் எதிர்கொண்டிருக்கிறேன். "எழுத்துக்கு எது மொட்டிவேஷன்?" என்று.

ஆனந்த‌ விகடன், குமுதம், குங்குமம் இதழ்களை என்னையும் அறியாமல் ஒரு ஏகலைவனாக எட்ட நின்று வாசித்தே கற்றிருக்கிறேன் என்று சொல்லலாம். நான் சிறுவயதில் பார்த்து படித்து வளர்ந்த பத்திரிக்கை தனது 90 வது வயதை 360 பக்கங்களுடன் கொண்டாடும் இதழில் எனது கவிதையும் வெளியாகியிருப்பது பேருவகை அளிக்கிறது.

கவிஞர்கள் மனுஷ்யப்புத்திரன், பழனிபாரதி கவிதைகளுடன் எனது "சீசர் போல்" கவிதையும் வெளியாகியிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

பத்திரிக்கை கையில் கிடைக்கப்பெற்ற நண்பர்கள் யாரேனும் கவிதை வெளியான பக்கத்தை பிரதியெடுத்து அனுப்ப இயலுமா?

ஆனந்த விகடன் 90 வயதை பூர்த்தி செய்யும் சிறப்பிதழில் மனுஷ்யப்புத்திரன், பழனி பாரதி கவிதைகளுடன் எனது கவிதையையும் தேர்ந்தெடுத்து வெளியிட்ட ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.