என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday 26 June 2022

கதம்பம் சிறுகதைப் போட்டி 2022 - 'எப்போதும் பெண்' சிறுகதைக்கு பரிசு

நட்புகளுக்கு,


வலஞ்சுழி நடத்திய கதம்பம் சிறுகதைப் போட்டியில் எனது 'எப்போதும் பெண்' சிறுகதை பரிசுக்குரிய சிறுகதையாகத் தேர்வாகியிருக்கிறது. எனது சிறுகதையைத் தெரிவு செய்த வலஞ்சுழி தேர்வுக்குழுவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மிகக்குறைந்த நட்புகளின் ஆதரவே இச்சிறுகதைக்கு இருந்ததால் தேர்வாகும் என்ற நம்பிக்கையே இல்லாமல் இருந்தது. இத்தனை குறைந்த பின்னூட்டங்களுடன் பரிசுக்குரிய எட்டு சிறுகதைகளில் ஒன்றாகத் தேர்வாகியிருப்பது குறித்து மகிழ்ச்சி.

(பி.கு.: போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகளிலேயே மிகக்குறைந்த ஆதரவும், விருப்பக்குறிகளும், பின்னூட்டங்களும் பெற்ற சிறுகதைகளுள் என்னுடையதும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது).

ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றிகள்.

பரிசு பெற்ற சிறுகதையை வாசிக்க பின்வரும் சுட்டியை சொடுக்கவும்.


சிறுகதையை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ராம்பிரசாத்




பிரதியெடுக்காதே சிறுகதைகள் - வாசகர் விமர்சனங்கள்


பிரதியெடுக்காதே - சிறுகதை https://www.vasagasalai.com/pirathiyedukathe-ram-prasath-sirukathai/





Thursday 16 June 2022

வாசகசாலையின் 50வது இதழில் 'பிரதியெடுக்காதே' அறிபுனைச் சிறுகதை

வாசகசாலையின் 50வது இதழுக்கென வாசகசாலை தினேஷ் சிறுகதை கேட்டபோது கைவசம் ஆறு சிறுகதைகள் இருந்தபோதிலும் எல்லாவற்றையும் பிரிதொரு காரியத்திற்காய் இருத்தி வைத்திருந்தேன். இதற்குள் தேதி 10 ஆகிவிட்டது. இந்த சிறப்பிதழுக்கென 2 நாளில் அவசர அவசரமாக எழுதியதுதான் 'பிரதியெடுக்காதே' சிறுகதை. இதுவும் ஒரு அறிபுனைச் சிறுகதையே.

வாசகசாலையின் 50வது இதழுக்கென எனது சிறுகதையைத் தெரிவு செய்த வாசகசாலை ஆசிரியர் குழுவுக்கும், அவசர அவசரமாக எழுதியதால், கடைசி நேர செப்பனிடல்களுக்கு இசைந்த, இடமளித்த தினேஷுக்கும் என் பிரத்தியேக நன்றிகள்.
'பிரதியெடுக்காதே' சிறுகதையை வாசகசாலை இதழில் வாசிக்க பின் வரும் சுட்டியை சொடுக்கவும்.
சிறுகதையை வாசித்துவிட்டு கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளுமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.




Thursday 9 June 2022

வதுவை - நாவல் விமர்சனம் - Ramkumar

வதுவை - நாவல் விமர்சனம் - Ramkumar 


❤️🙏வதுவை இனிதே முடிந்தது..கிருஷ்ணா தனுஜா இணைந்தனர். ரம்யாவின் காதல் / சலனப்படம்/ மரணம் எதற்கு!!? பெண்களை வஞ்சிப்பவர்களும் உலகில் உண்டு என்பதை உணர்த்தவா... 16 அத்..க்ருஷ்ணா நிறைய பக்கங்களில் மனதை மனங்களை அலச / படம்பிடிக்க/ வர்ணிக்க / தத்துவயியலை பேச வரும் போதே ஒன்று புரிந்துவிடுகிறது.. மணமகன் க்ருஷ்ணாதான் ... மணமகள் யார்? புத்தகம் முழுதும் உரையாடல்கள். 🙏மார்வாரி சமூக வீடுகளுக்கு சென்றால்!.... ஆணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் / கூட்டு குடும்பம் / வீட்டில் குறைந்தபட்சம் 12 பேர் / அதற்குமேல் வாடி வாய்ப்பு/ சமையல் பணிகளை / வீடு பராமரிப்பை பெண்கள் இணைந்து செய்வர் ..சொல்ல வந்தது என்னவென்றால்   வளவள சளசள என்று பெண்கள் பேசிக் கொண்டேயிருப்பர். இவர்களைப் போல எந்த சமூகமும் இப்படி பேசுவதில்லை ..குடும்ப அழுத்த / மன நலப் ப்ரச்சனைகளுக்கு அதிகம் பேசாமலிருப்பதே (உரையாடல்) காரணம். அர்ஜுன் அனைவரிடமும் அதிகமாக பேசுகிறார் / விவாதிக்கிறார். மணம் ஆவதற்கு முந்தய / பிந்தய நிலைகளை சரளமான விரிவான உரையாடல் மூலம் அலசி காயப்போட்டிருக்கிறீர்கள்.// / கதையை எழுதும் போது!!............................. திரைப்பட இயக்குநர் முதலில் கதை   பின் நண்பர்கள் / உ...இயக்குநர்கள் புடை சூழ விவாதம் (STORY discusion) இதன் மூலம் திரைக்கதை ... இத அடிப்படையாய் வைத்து யார் யார் நடிகர்கள்/ பின் வசனம். / காட்சி அமைப்பு/ இதற்கு தேவையான Tools என GRP உரையாடல் மூலம் ..சினிமா. உங்கள் கனத மாந்தர்களுக்கு லேப்டாப் மூலம் சிந்தித்துக் கொண்டே " Type "  செய்யும் பழக்கமா   அல்லது பணிகளில் இயங்கி கொண்டே / படுக்கையில்  / நாற்காலியில் கண்மூடிஅமர்ந்து பாத்திர படைப்பு/உரையாடல்களை Visuvalaise. செய்து / குறிப்புகள் எடுத்து ..பின் நிதானமாக கொஞ்சம் கொஞ்சமாக யோசித்து எழுதுவீர்களா!! பிகாஸ் ஏகப்பட்ட மனிதர்கள்/ அவர்களின் எண்ணங்கள் / செயல்கள்/ அணிந்திருக்கும் உடைகள் / உணவு/அவர் தம் பணிகள் / நினைவு வைத்து  பேச்சுகளை தொகுப்பது சாதாரண விடயமில்லை. அதாகப் ... தனியாக வா / குரூப் டிஸ்கஷனா/ இருவரா  எப்படி உரையாடல்களை பலவித காரணிகளோடு இணைக்கிறீர்கள்..நன்று/ நன்றி / அற்புதம் / அருமை... ❤️🙏🙏🙏🙏🙏




Monday 6 June 2022

பொறுப்புத்துறப்பு

 பொறுப்புத்துறப்பு

***************************
பொதுவாக என் ஆக்கங்களை 'புரியவில்லை', 'இரண்டு தடவைகளுக்கும் மேலாக படிக்க வேண்டி இருக்கிறது' என்று சொல்லி கடந்து செல்பவர்கள் தான் பெரும்பாலும். இந்தப் பின்னணியில், என் வார்த்தைகளைத் தங்களுக்குத் தோன்றிய வகையில் புரிந்துகொண்டு, நான் சொல்லாததைச் சொன்னதாகச் பரப்புபவர்களின் வார்த்தைகள், என் வார்த்தைகளாகாது என்பதை இந்தப் பதிவின் மூலம் இணைய நண்பர்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.
என்னுடனான நேரடி விவாதங்களிலும், என் வார்த்தைகளில் உங்களுக்கு ஏதேனும் பாதகமாகப் பட்டால்,
'இதைத்தான் குறிக்கிறீர்களா?' என்று துவங்கி என் வார்த்தைகளில் உங்களுக்கு என்ன புரிந்தது என்பதை ஒருமுறை கேட்டுக்கொண்டு, ஊர்ஜிதம் செய்தால் மட்டுமே நீங்கள் என் நண்பர், என் நலன் விரும்பி.
நான் நல்ல நண்பர்களையே வரவேற்க விரும்புகிறேன். புரிதல்களுக்கு நன்றிகள்... 🙏🙏🙏
பி.கு.: நான் இடைத்தரகர் வைத்துக்கொள்வதில்லை. என்னிடம் ஏதேனும் கேட்க வேண்டுமாயின் நேரடியாக என்னிடமே கேட்கவும்...