இணைய நண்பர்களுக்கு,
வணக்கம்.
கொஞ்ச காலமாக இணையத்தில் சிறுகதைகள் வெளியிடவில்லை. வெளியிடத் தோன்றவில்லை. எழுதி எழுதி அப்படி அப்படியே வைத்துவிட்டேன். சில கதைகள் மரபணுக்கள் தொகுப்பிலும், வேறு சில தீசஸின் கப்பல் தொகுப்பிலும் சேர்ந்தன. இணையத்தில் வெளியிட ஏன் தோன்றவில்லை என்பதற்கு பல காரணங்கள்.
சமகாலத்தில், copycat முயற்சிகள் நடப்பதை நிறைய அவதானித்ததினால் கிடைத்த பெரும் மனச்சோர்வு காரணமாக இருக்கலாம். மனிதர்களின் கள்ள மெளனங்கள், சூழ்ச்சி முகங்கள் காணக் கிடைத்ததினால் அடைந்த சோர்வாக இருக்கலாம். இன்னதென்று விளக்கிச் சொல்லத் தெரியவில்லை. ஏதோவொரு, எதிர்மறை எண்ணம் ஆட்கொண்டு, இணையத்தில் வெளியிடுவதிலிருந்து தடுத்து வைத்திருந்தது.
"ஏன் சிறுகதைகள் இல்லை?" என்று நெருங்கிய நட்புகளின் கேள்விகளில் திணறியிருக்கிறேன்.
இப்போது அந்தச் சோர்வு மெல்ல மெல்ல நீங்கியிருக்கிறதா என்று தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. அல்லது, சோர்வுற்றிருந்ததில் சோர்வு வந்துவிட்டதா தெரியவில்லை. 2020ல் எந்த எண்ணத்தில் அறிவியல் புனைவுகள் எழுதி இணையத்தில் பகிர முன்வந்தேனோ அந்த மனநிலைப்பாடு இப்போது மீண்டிருக்கிறது எனலாம்.
இணையத்தில் மீண்டும் கைவசம் உள்ள சிறுகதைகளை வெளியிடலாம் என்றிருக்கிறேன்... எதுவரை? மீண்டும் சோர்வு வரும் வரை....




