நாமறிந்ததிலேயே மிகப்பெரிய காலாக்ஸி, IC 1101 தானாம். அதன் விட்டத்தைப் புரிந்துகொள்ளவே இந்தப் புகைப்படம். நமது காலாக்ஸி அதன் அருகில் ஒரு சிறிய கறை போல் தெரியவதைப் பாருங்கள்.
இத்தோ பெரிய காலாக்ஸியில் எங்கேனும் நிச்சயம் அதிஉயர் வேற்றுகிரக வாசிகள் இருக்கலாம் தான். ஆனால், பிரச்சனை வேறு.
இந்தப் பெரிய காலாக்ஸி சுமார் பில்லியன் கணக்கிலான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. அங்கிருந்து ஒரு ஏலியன் நம் காலாக்ஸிக்குப் பயணப்பட்டு வருவதாக எடுத்துக்கொண்டாலும் அதிக பட்சம் ஒளியின் வேகத்தில் தான் பயணப்பட்டு வரவேண்டும். அப்படியே வந்தாலும் அதற்கு பில்லியன் ஆண்டுகள் ஆகும். அதற்குள் நமது சூரியன், இப்போதிருக்கும் Mintaka, Alnitak,Alnilam போல் சூப்பர் ஜெயன்டாக ஆகிவிடும். அப்படி அது ஆகும் பட்சத்தில் அது, மார்ஸ், ஜூபிடர் வரையிலான கிரகங்களை விழுங்கிவிட்டிருக்கும். அப்போது சூரியனுக்கு மிக அருகாமை கிரகம், வாயு கிரகமான சனிக்கிரகமாகவும் ஆகிவிடலாம்.
பார்த்தீர்களா? உண்மையில் நம்மையும் வேற்று கிரகவாசிகளையும் பிரிப்பது தூரம் அல்ல. காலம் தான். தொழில் நுட்பம் இணைக்கலாம் என்று யாருக்கேனும் தோன்றலாம். இன்னமும் பறக்கும் கார்கள் கூட வரவில்லை. அதற்குள் பூமி இருமத்துவங்கிவிட்டது. பறக்கும் கார் வரையெல்லாம் தாங்கும் என்றா நினைக்கிறீர்கள்?