புகைப்படங்களின் பின்னே உள்ளே கதை
*********************************************
சில புகைப்படங்களுக்குப் பின்னே ஒரு கதை இருக்கும்.
உதாரணமாக இந்தப் புகைப்படம். பில்லியன் ஆண்டுகளுக்குப் பின், Andromeda நம் காலாக்ஸிக்கு அருகாமையில் வந்திருக்கும். அப்படி வந்திருந்தால் இரவு வானத்தில் அது பார்க்க இப்படித்தான் தெரியும்.
எல்லாம் சரிதான். இதிலென்ன கதை என்று தானே கேட்கிறீர்கள்?
ஏற்கனவே இதற்கு முன்னான பதிவுகளில் எப்படி நட்சத்திரங்களின் lifecycle அடிப்படையில் பில்லியன் ஆண்டுகளில் சூரியன் Super Giant Star ஆகிவிடும் என்று பார்த்திருக்கிறோம். அப்படியானால், இந்த புகைப்படம் பூமியிலிருந்து தெரியும் Andromeda அல்ல.
பூமிக்கு அடுத்தபடியாக, நமது சூரியன் super giant ஆகிவிடும் பட்சத்தில், ஜூபிடரின் நிலவான IO தான் அப்போதைய சூரியனின் goldilocks zoneல் இருக்கும். அப்போது சாதகமான தட்ப வெப்ப சூழலில், IO பூமி போல் ஆக நிறைய வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். ஆக, இந்தப் புகைப்படம் IOன் வானில் தெரியும் காட்சி என்றாகிறது.
இப்போது புரிகிறதா, நாம் ஏன் இருக்கும் பூமியை சரி செய்வதை விட்டுவிட்டு தொலைதூர கிரகங்களுக்கு இடம் பெயர்வதில் அதிக கவனம் செலுத்துகிறோம் என்பது?