என் கல்லூரி மாணவர்களிடையே பேச இருக்கிறேன்.
2002ல் முடித்த பொறியியல் படிப்பு. 23 வருடங்கள் ஆகிறது. பொறியியல் படிக்கும் வரை, துரதிருஷ்டவசமாக, நல்ல நட்புகள் வாய்க்கவில்லை. வாய்த்த நட்புகளிடமும் போதிய புரிதல் இல்லை. இப்போது, இலக்கியம் பரிச்சமாகிவிட்ட பிறகு, இப்போதிருக்கும் முதிர்ச்சியுடன் யோசித்துப் பார்த்தால், முற்றிலும் வேறொருத்தனாக, அந்தக் கூட்டத்திற்கு,அந்த வளாகத்திற்குப் பொருந்தாத தகுதிகள் கொண்ட ஒருத்தனாக அப்போதே இருந்திருக்கிறேன் என்பது புரிகிறது.
அவர்களுக்கு என்னைப் 'பார்க்க'த் தெரியவில்லை. அவர்களுக்கு புரியும் விதமாய் 'விளக்க' எனக்கும் தெரிந்திருக்கவில்லை. இப்படி பல இல்லைகளோடு துவங்கி முடிந்த கல்லூரி வாழ்வு அது.
என் அனுபவங்களில் அவர்களுக்கு பாடங்கள் இருக்கலாம். அதைத்தான் பகிரப் போகிறேன்.
இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கும், ஜெரூசலேம் பொறியியல் கல்லூரி ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.🙏🙏🙏

