என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday, 17 March 2020

என் தாய் தமிழே....

தமிழே அமுதே!!!


என் தாய்
தமிழே....
மருத்துவம் காணும் முன்னே
முதல் மாத்திரை கண்டவள் நீ..
பிரபஞ்சக்கரும்பொருளின்
ஓசையிலுருக்கொண்டவள் நீ...
இசைக்கோர்வையாகவே
தரணியெங்கும் தவழ்பவள் நீ...
தசைச்சீர்த்தளையடிதொடையென
உறுப்புகள் கொண்டவள் நீ....
தண்பூ,  நறும்பூவென
நித்தமும் பூப்பவள் நீ...
உறுப்புகளும் பூக்களுமென முதல்
  வேளாண் மனித கலப்பினம் சொன்னவள் நீ...


நீயே உனக்குள் ஓர் அறிபுனை,
விருப்பமுடன் சம்மதிக்கிறேன் வந்தாட்கொள் எனை....


தேர்த்துகளும், பூரியமும்
நின் விட்டத்தைத் சொல்லும்...
இவ்விரண்டையும் தேடியந்திரம் மட்டுமறிவது
நாம் விட்டதைச் சொல்லும்....


பையென்னும் மாறிலி உலகுக்கு...
எங்களுக்கோ அது என்றோ வெறும் சக்கரக்கணக்கு...
வரிசைமாற்றச்சேர்க்கை உலகுக்கு...
நின் உயிர்மெய் எங்களுக்கு...
பொருளறவிம்பம் தொகுக்க ஈரடி போதுமுனக்கு...
கற்று கரையேற ஆயுள் வேண்டுமெனக்கு....


எழுத்தெண்ணிக்கையிலொரு அரை பகாவெண் நீ...
அர்த்தங்களில் கரை கொள்ளா கடல் நீ...
இசையின் மரபணு நீ...
அம்மரபணுவின் இரு இழைகளிலும் நீ....
ஒலிப்பியலில் ஒலிப்பவள் நீ...
ஒலிப்பியல்வழி ஞான ஒளி தருபவள் நீ....