என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday 21 April 2017

ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை


23-மார்ச்-2017 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான எனது கவிதைக்கு சன்மானத்தொகை எனது வங்கிக்கணக்கில் வரவு வைத்துவிட்டதாக ஆனந்த விகடன் அலுவலகத்திலிருந்து இன்று வந்த மின்னஞ்சலை பார்த்த பிறகு தான் 23 மார்ச் 2017 ல் எனது கவிதை வெளியாகியிருப்பதையே தெரிந்துகொள்கிறேன்.

எனது கவிதையை தேர்வு செய்து வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கவிதை வெளியான இதழின் பிரதி நண்பர்கள் யாரிடமேனும் இருந்தால் பகிர இயலுமா?

எதற்கு இந்த அலைச்சல்? பேசாமல் ஆனந்த விகடன் இணைய பிரதிக்கு சந்தா கட்டிவிடலாமே? நல்ல ஐடியா தான்.. ஆனால் ஒரு நாளின் பெரும்பாலான நேரங்கள் அலுவலக வேலை, எதையேனும் வாசிப்பது, எழுதுவது என்று கணிப்பொறி திரையிலேயே கழிகிறது.. நானெல்லாம் துண்டு சீட்டில் எதையேனும் கிறுக்கி வைத்தால் கூட எடுத்து படித்து விடுபவன். என்னிடம் ஆனந்த விகடனின் எல்லா இதழ்களும் கிடைத்தால்!!

ஓ மை காட்..

நினைத்து பார்க்கவே கொடூரமாக இருக்கிறது. இதை யோசித்தே இத்தனை நாளும் சந்தா கட்டாமல் இருந்தேன்.. சந்தா கட்டிவிட்டால் கண்டிப்பாக என்னை கட்டுப்படுத்தவே முடியாது.. ஆண்டின் அத்தனை இதழ்களையும் வரி விடாமல் வாசிப்பதோடு மீள் வாசிப்பு வேறு செய்து பார்த்துவிடுவேன்.. அது ஒரு மாபெறும் அக்சஷனுக்குள் என்னை தள்ளிவிடும் வாய்ப்பிருக்கிறது. Literarlly its a trap. எழுதுவதற்கான நேரம் குறைந்துவிடலாம்.

இது போன்ற சன்மானத்தொகைகள் ஆண்டு முடிவில் ஒரு புத்தகமாக உதவுகின்றன. அதுவும்  வாசகனை வாங்கச்செய்ய வேண்டிய கட்டாயம் இல்லாத புத்தகம். கடந்த மூன்று - நான்கு வருடங்களாக புத்தக வெளியீட்டில் எனது ஃபார்முலா இதுதான். இதனால் எனக்கும் நஷ்டமில்லை என்பதால் நண்பர்களுக்கோ, தெரிந்தவர்களுக்கோ வாசிக்க இலவசமாக தருவதில் எவ்வித தயக்கமும் இல்லை.

எனது கணித நாவலை அப்படித்தான் பலருக்கு தந்திருந்தேன்.. விமர்சனங்கள் ஏதும் பெரியதாக வெளியாகவில்லை. உள்ளடக்கம் தரமானதுதான். அதில் துரும்பளவு கூட சந்தேகமில்லை. இருப்பினும்..................................................

தமிழ் எழுத்துலகத்தின் இயங்குமுறை சற்று அல்ல, ரொம்பவே சிக்கலானது. அது யார் யாரையோ காணாமல் அடித்திருக்கிறது.. நானெல்லாம் எம்மாத்திரம்? அதனால் விட்டுவிடலாம்...

கைவசம் நிறைய சிறுகதைகள் இருக்கின்றன. கவிதைகள் இருக்கின்றன.. தொகுத்தால் நான்கைந்து தொகுப்பாவது தேறும். அத்தனைக்கும் இன்னும் பணம் சேரவில்லை. சேரும் வரை வெளியிடும் எண்ணமும் இல்லை. பணம் வாங்காமல் எந்த பதிப்பாளராவது புத்தகமாக்க முன்வந்தால் நான்கைந்து புத்தகங்கள் வெளியீடு காணும்..