2017ல் "உங்கள் எண் என்ன?" நாவல் நூல் வெளியிடப்பட்டது. இது கணிதப் புனைவு நூல். கணிதத்தில் Custom mathematics என்றொரு பிரிவு உண்டு. நம் வசதிக்கு 'வேலை' செய்யும் ஒரு கணித மாதிரி, தொடர்ச்சியாக, சரியாக, வெற்றிகரமாக வேலை செய்தால் அதனைக் custom maths என்று சொல்வார்கள்.
எல்லோருக்கும் புரியும் படி சொல்ல வேண்டுமென்றால், 1990களில் பள்ளிப்படிப்பைப் படித்தவர்களுக்கு Clarks Table என்றொரு சங்கதி பரிச்சயமாகியிருக்கும். இது ஒரு எண்ணின் logarithm கண்டுபிடிக்க உதவும் ஒரு அட்டவணை. ஒவ்வொரு எண்ணையும் பகுதி பகுதியாகப் பிரித்தார் ஒவ்வொன்றும் ஒரு எண் வரும். அந்த எண்களையெல்லாம் கூட்டினால் கிடைக்கும் எண் தான் லாகரிதம். M.Clark வாழ்ந்த் 1678ன் காலகட்டத்தில் கால்குலேட்டர் இல்லை. அப்போது லாகரிதம் கண்டுபிடிக்க அவர் உருவாக்கியது தான் இந்த அட்டவணை அதாவது framework.
ஒரு custom mathematic framework எப்படி இருக்க வேண்டும்?
1. subject எதுவோ, அதன் சிக்கல்களை, பரிணாமங்களை, நிலைப்பாடுகளை மிகவும் எளிதாக 'பார்க்க' உதவ வேண்டும்.
2. விட்டேத்தியாக ஒன்றுக்கொன்று தொடர்பற்றதாக அல்லாமல், ஒன்றொடு ஒன்று இறுகப் பிண்ணிப்பிணைந்ததாக, ஒரு சமன்பாட்டுக்குள் அடங்குவதாக இருக்க வேண்டும்.
3. விளைவுகளை, தொடர்ச்சியாக, தோய்வே இன்றி நோக்கத்திற்கு வெற்றிகரமாகத் தொடர்ச்சியாக செயல்படவேண்டும்.
மேற்சொன்ன எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு கணித மாதிரியை நம்மால், நம் பயன்பாட்டுக்கென உருவாக்க முடிந்தால் அதனை custom mathematics என்று தைரியமாகச் சொல்லலாம். பயன்படுத்தவும் செய்யலாம்.
உதாரணமாக, உங்கள் ஊரில் ஆட்டுப்பண்ணை வைத்திருப்பவர் அவர் மனதுக்குள் ஒரு கணக்கு வைத்திருப்பார். இத்தனை ஆடுகள் இருந்தால், இத்தனை மேய்ச்சல், இத்தனை தீவணம், இன்னின்ன காலத்தில் இனப்பெருக்கம், இன்னின்ன காலத்தில் சந்தை, இன்னின்ன விலைக்கு விற்கலாம் என்பது போன்ற தகவல்கள். இதையெல்லாம் வைத்து அவர் தனக்குள் ஒரு framework உருவாக்கி வைத்திருப்பார். இந்தக் கணக்கில் எங்கேனும் பிசகு என்றால் சரி செய்ய என்ன தேவை என்பதெல்லாம் கூட வைத்திருப்பார். இதை 'தொழில் ரகசியம்' என்பார் இல்லையா? இப்படி ஒன்று முழுவதும் எண்களை வைத்து வெற்றிகரமாக இயங்கினால் அதை Custom mathematics எனலாம்.
இப்படி மனித உறவுகளுக்கென நான் உருவாக்கியதுதான் "உங்கள் எண் என்ன?".
"மெட் செயலி" அதன் அடுத்த கட்டம் அல்லது தொடர்ச்சி எனலாம். 2020களிலேயே இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து "Met App" என்ற பெயரில் எமரால்ட் பப்ளிஷர்ஸ் வாயிலாக வெளியிட்டேன். தமிழில், சினிமாவுக்கென கதை கேட்டு வந்த சிலரிடம் இக்கதையைத் தந்திருக்கிறேன். சிற்சில குறு நாவல் போட்டிகளுக்கு அனுப்பிய நினைவும் இருக்கிறது. ஒன்றும் நடக்கவில்லை. அதன் பிறகு தான் அறிவியல் புனைவுகள் எழுதத்துவங்கிவிட்டேன்.
நேற்று lik திரைப்படம் பார்த்தேன். ம்ஹும்... ஒன்றும் சொல்வதற்கில்லை.
"மெட் செயலி" குறு நாவலை வாசக நண்பர்கள் வாசிக்க இங்கே தருகிறேன்.
குறிப்பு:
நாவலை வாசிக்கும் முன் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கும் கணிதம் இப்படித்தான் வேலை செய்ய வேண்டுமா என்றால் இல்லை தான். பத்து எண்களுக்கும் நான் "கதையை முன்னகர்த்த" பத்து கூறுகளை எடுத்திருக்கிறேன். அது கதையை நகர்த்த மட்டுமே. அக்கூறுகளை, பயனாளர்கள் எப்படி வேண்டுமானாலும் தங்கள் வசதிக்கு அமைத்துக்கொள்ளலாம், அனுமானித்துக்கொள்ளலாம். அப்படி அமைத்தாலும் கணித மாதிரியின் மையம் வேலை செய்யும் தான்.
https://ramprasathkavithaigal.blogspot.com/2026/04/12.html
https://ramprasathkavithaigal.blogspot.com/2026/04/3.html
https://ramprasathkavithaigal.blogspot.com/2026/04/4.html
https://ramprasathkavithaigal.blogspot.com/2026/04/5.html
https://ramprasathkavithaigal.blogspot.com/2026/04/6.html
https://ramprasathkavithaigal.blogspot.com/2026/04/7.html
https://ramprasathkavithaigal.blogspot.com/2026/04/8.html
https://ramprasathkavithaigal.blogspot.com/2026/04/9.html
https://ramprasathkavithaigal.blogspot.com/2026/04/10.html
https://ramprasathkavithaigal.blogspot.com/2026/04/11.html
https://ramprasathkavithaigal.blogspot.com/2026/04/12_11.html
https://ramprasathkavithaigal.blogspot.com/2026/04/13.html

