என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday 31 December 2023

Blanets

 Blanets


பாஸ். அது Planets, Blanets அல்ல என்று யாரேனும் திருத்த முயற்சிக்கக் கூடும்.. 

ஆம். நீங்கள் சரியாகத்தான் வாசித்திருக்கிறீர்கள். முதல் எழுத்து 'P' அல்ல, 'B' தான். 

பொதுவாக சூரியனைச் சுற்றி உருவாகும் கிரகங்களை Planets என்போம். சூரியனின் இடத்தில் சூரியனுக்கு பதிலாக ஒரு கருந்துளை Blackhole இருப்பின்,  அப்படிப் பட்ட கருந்துளைகளைச் சுற்றியும் ஒரு பாதுகாப்பான இடத்தில் கிரகங்கள் அமையப்பெறலாமாம். அப்படி அமைந்தால் அது Blanet ஆகிறதாம். இது போன்ற கிரகங்களில் வளி மண்டலம் இருக்கலாம், உயிர்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிறது நவீன அறிவியல். இப்படி ஒரு Blanet எங்கிருக்கிறது என்று கேட்போருக்கு? 

Blanets எல்லாம் hypothetical தானாம். அதாவது, இவைகள் இருப்பதைத் தியரியாக கணிக்க முடியும். இவ்வகைமையில் ஒன்றை மனித இனம் இதுகாறும் கண்டுபிடித்திடவில்லை. 

ஆயினும், நமக்கெல்லாம் புரிகிறார்போல் ஒன்றைச் சொல்ல வேண்டுமானால், க்ரிஸ்டோஃபர் நோலனின் Interstellar திரைப்படத்தில் Gargantua எனப்படும் கருந்துளையைச் சுற்றி வரும் 'மில்லர் கிரகம்' என்றழைக்கப்படும் நீர்க்கிரகம் இப்படி ஒரு Blanet தான். இந்த Blanetல் தரையிறங்கித்தான் இருபத்து சொச்சம் ஆண்டுகளைக் கழித்திருப்பார் கதை நாயகன், கூப்பர்.