என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday, 11 April 2026

மெட் செயலி - குறுநாவல் - அத்தியாயம் - 8

 அத்தியாயம் - 8

 

 

ரவி கதவு திறந்த பெண்ணை அலேக்காகக் தூக்கி, படுக்கையறைக்குள் நுழைந்து, படுக்கையில் தொப்பென்று வீசினான். ஜீன்ஸ் பாண்ட், டிசர்ட் அணிந்தவளை அந்தப் பஞ்சு மெத்தை தண்ணீரில் விழுந்த டென்னிஸ் பந்தை மூன்று முறை தூக்கிப் போடுவது போல் தூக்கிப்போட்டு பிடித்துக்கொண்டது.

 

சட்டை பொத்தான்களை விடுவித்துவிட்டு படுக்கையில் கிடந்தவளின் மீது பாய்ந்தான் ரவி.

 

'இங்கே அமுக்கு' (Press Here) என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட டிசர்ட்டை அவளின் கூந்தல் வழியாக உயர்த்திக் கழற்றினான். அந்த டிசர்டில் எழுதப்பட்டதைச் செய்ய உரிமை இருப்பவன் கண்டுகொள்வதே இல்லை. உரிமை இல்லாதவர்கள் ஏக்கமுடன் பார்ப்பதோடு நின்றுகொள்கிறார்கள்; கள்ள உரிமை பெற்றவர்கள் அதை வாசிப்பது கூட இல்லை. இந்த டிசர்ட் வாசகங்கள் ஏன் எப்போதும் இப்படி அர்த்தமற்றவைகளாகவே இருக்கின்றன என்று தோன்றியது அவளுக்கு.

 

அரை மணி நேரம்  நீடித்த முயக்கத்தின் முடிவில் ரவி அவளுக்கு பக்கவாட்டில் சரிந்தான். சோர்ந்தான்.

 

"உன் பொண்டாட்டி பேர் என்ன சொன்ன?" என்றாள் அவள்.

 

"எதுக்கு கேக்குற பவித்ரா?" என்றான் ரவி.

 

"சொல்லேன்"

 

"மதுவந்தி"

 

"பொய்"

 

"என்னடீ சொல்ற?"

 

"பொய் தானே. உன் பொண்டாட்டி பேரு அஞ்சலி. என்கிட்ட பொய் சொல்லியிருக்க. அதை மறைக்கத்தான் எப்பப் பாத்தாலும் ஃபேஸ்புக்ல மரம், செடி, பூன்னு போட்டோ போட்டுட்டு இருக்க. கேட்டா ஃபோட்டோகிராபின்னு சொல்ற?"

 

"இதெல்லாம் உனக்கு எப்படி?"

 

"ஆம்பளைங்க வேணும்னா, பொண்டாட்டி ஃபோட்டோ போடாம இருக்கலாம். பொம்பளைக்கு அப்படி இல்லை. குடும்பம் தான் அவளுக்கு எல்லாமே. இன்னிக்கு தான் அஞ்சலியை மறுபடி என் வாழ்க்கையில வந்தா. ஆறேழு வருஷம் முன்னாடி அவளும் நானும் ஒண்ணா வேலை பாத்திருக்கோம். சமீபமா அவ எனக்கு கால் பண்ணினா. அவளோட நம்பரை வாட்ஸாப்புல சேவ் பண்ணினப்போ தான் தெரிஞ்சது நீதான் அவ புருஷன்னு"

 

"ரியலி"

 

"எஸ்"

 

"அவ எப்படி? உன்னை மாதிரியா?"

 

"என்னை மாதிரியான்னா?"

 

"அதான்..கொஞ்சம் லிபரல் மைண்டடா? ஃப்ரீயா பழகிட்டு?"

 

"என்னைப்பத்தி என்ன நினைச்ச?"

 

"நா ஒண்ணும் நினைக்கலை. ஆனா, என்னையும் உன் புருஷனையும் தவிர உன் வாழ்க்கையில வேற ஆண்கள் இருக்காங்கன்னு தெரியும்."

 

ரவி வெளிப்படையாகச் சொல்லியிறாவிட்டாலும் மறைமுகமாக இதைத்தான் சொல்கிறான் என்று அவள் நினைத்ததன் பேரில் அவன் கன்னத்தில் பளார் என்று அறைய வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஆனால் அறையவில்லை.

 

ரவியை ஏறிட்டுப் பார்த்தாள் பவித்ரா. பளாரென்று அறைதல் ஒரு நாளோடு போய்விடும். ரவியை தினமும் ஒவ்வொரு நொடியும் அறைய வேண்டும் போலிருந்தது பவித்ராவுக்கு. 

 

"ஆமா, அஞ்சலிக்கு அப்போ ஒரு லவ்வர் இருந்தான். அதெல்லாம் பழைய கதை." என்பதோடு நிறுத்திக்கொண்டாள்.

 

ரவி ஏதும் பேசவில்லை.

 

"என்ன மெளனமாயிட்ட?" என்றாள் பவித்ரா.

 

"எனக்குத் தெரியும்.. அஞ்சலி அழகு. அவளுக்கு நிச்சயமா ஆண் நண்பர்கள் இல்லாம இருந்திருக்காது. பொண்டாட்டி தான் எல்லாம்ன்னு இருந்திருந்தா எனக்கு பெருத்த ஏமாற்றமா இருந்திருக்கும். இல்ல?. நல்ல வேளை,  நான் அப்படி இல்லை" என்றுவிட்டு, ஆடைகளேதுமற்ற அவளை இறுக அணைத்து, அவளது மார்புகளுக்குள் முகம் புதைத்துக்கொண்டான் ரவி.

 

பவித்ரா சிந்தனையில் ஆழ்ந்தாள்.

 

பெண், தன் அழகுக்காகவும், அவயங்களுக்காகவும், வனப்புக்காகவும் எல்லாக்காலத்திலும் வேட்டையாடப்பட்டிருக்கிறாள்; ஆண், தன் திறனுக்காகவும், அறிவுக்காகவும், ஆற்றலுக்காகவும் வேட்டையாடப்பட்டதுபோல.

சராசரிகள் நிரம்பியிருக்கும் தளத்தில், சராசரிக்கும் அதிகமான ஆண் இருட்டடிக்கப்படுவான். கள்ள மெளனம் காட்டப்படுவான். புறக்கணிக்கப்படுவான். எதற்கு? வாய்ப்புக்களை சராசரிகள் பெறுவதற்கு.

 

ஆனால், சராசரிகளின் படி நிலைகளில் சராசரிக்கும் அதிகமான ஆண், ஒரு படி மேலே நிற்கிறான் என்று தானே பொருள். சராசரிக்கும் அதிகமான ஆண் ஏற்கப்பட்டால் தானே, சராசரிக்கும் அதிகமான ஆண் அதிக வாய்ப்பளிக்கப்பட்டால் தானே, அதற்கு அடுத்த தலைமுறையின் குறைந்தபட்சம் என்பது முந்தைய தலைமுறையின் அதிகபட்சமாக இருக்க முடியும்? இப்படித்தானே ஆற்றலின் உச்சத்தை மனித குலம் காண முடியும்?

 

அப்படியானால், சராசரிகள் வாய்ப்பைப் பெறக்கூடாதா என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்காமல் இல்லை.  நான் இதுகுறித்து முன்பேயே கூறிவிட்டேன்: இப்பிரபஞ்சத்தில் எந்த ஒன்றுக்கும் ஆழ்ந்த அர்த்தங்களைப் பிரபஞ்சம் கொண்டிருக்கிறது. அவரவர் அந்தந்த அர்த்தங்களுடன் நின்றுகொள்வதே பிரபஞ்ச அர்த்தங்களை, இந்த இயற்கையை மதிக்கும், மரியாதை செலுத்தும் முறை என்பது என் வாதம்.

 

அந்த முறை பெரும்பாலும் எப்படி இருக்காதென்றால், ஆரோக்கியமானவனுக்கு என்னவெல்லாம் நிகழுமோ அதுவெல்லாம் தனக்கும் நிகழ்ந்திடவேண்டும் என்று ஒரு ஊனமுற்றவர் எதிர்பார்க்கத்துவங்குவதாக இருக்காது. அப்படியே எதிர்பார்த்தாலும், ஒரு சமூகம், கண்மூடித்தனமாக, சீராயாமல் அதனை அப்படியே ஏற்று பிரபஞ்சமே கற்பிக்காத அர்த்தங்களை, கற்பித்துக்கொள்வதாக இருக்காது.