8.7.2012 தேதியிட்ட சென்ற வார ராணி வாரந்திரியில் நான் எழுதிய "ஊர் உதடு" என்ற தலைப்பிலான கவிதை பக்கம் 15 ல் வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கவிதை வெளியான பக்கத்தின் பிரதி இங்கே. கவிதையை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் இடுமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
ஊர் உதடு
நின்றே சலித்த
மரமொன்று
சாய்ந்திருந்தது தன்
இயல்பில்...
நேற்று பெய்த மழையால்
இருக்கலாம் என
முணுமுணுக்கின்றன
சில உதடுகள்!
- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
என் கவிதையை வெளியிட்ட ராணி வார இதழுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.