என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை


குமுதம் (27.02.2013) இதழில் எனது சிறுகதை

கடந்த‌ 27 பிப்ருவரி 2013ம் தேதியிட்ட‌ குமுதம் இதழில் எனது சிறுகதை ஒன்று வெளியாகியிருந்தது குறித்து பணி நிமித்தம் ஹாங்காங்கில் இருந்தபோது தான் தகவல் கிடைத்தது. வெளி நாட்டில் இருந்தமையால் குறிப்பிட்ட அந்த இதழை சேகரிக்க வாய்ப்பின்றி தேடிக்கொண்டே இருந்தேன்.

ஈகரை இணைய தளம் மூலம் நண்பராக அறிமுகமான முத்து முகமது இணைய தளம் மூலமாகவே குமுதம் இதழின் மின் பிரதியிலிருந்து குறிப்பிட்ட அந்த சிறுகதையின் பிரதியை தந்து உதவியிருக்கிறார்.

'கண்ணாடி நெஞ்சம்' என்ற தலைப்பிலான எனது அந்தச் சிறுகதையின் பிரதி இங்கே.. பக்கம் 58ல் துவங்கி, பக்கம் 64 வரை வெளியாகியிருக்கிறது...



நண்பர் முத்து முகமதுவிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். எனது சிறுகதையினை தேர்ந்தெடுத்து வெளியிட்ட குமுதம் இதழின் ஆசிரியர் குழுவுக்கும், தேர்வுக்குழுவுக்கும் மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.