அறிவியல் , கணிதப் புனைவுகளில் தமிழ் முன்னோடி
"உங்கள் எண் என்ன?" மற்றும் "Those Faulty Journeys" வெளியானபோதே, இவற்றின் மதிப்பு இப்போது தெரியாது, காலம் போகப் போகத் தெரியும் என்று சொல்லியிருந்தது, என் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்கள் அறிவார்கள்.
நாள் ஆக, ஆக மனித உறவுகளைக் கணித ரீதியில் துல்லியமாக கணிப்பதற்கான முயல்வுகள் உலகின் பல்வேறு மூலைகளிலும் தொடர்ந்து பலர் மேற்கொள்கிறார்கள். இதுதான் இப்போது ட்ரண்ட்.
ஆனால், தமிழில் இந்த ட்ரண்டையெல்லாம் எப்போதோ செய்துவிட்டோம்.
இந்த சுட்டியில், வெவ்வேறு வகையான காதல் உறவுகள் ஏன் தோல்வியில் முடிகின்றன, சில ஏன் வெற்றி அடைகின்றன என்பதை கணித அடிப்படையில், Game Theory மற்றும் AI பயன்படுத்தி காட்டியிருக்கிறார் Tuan Doan.
https://ai.gopubby.com/love-strategically-the-game-theory-of-modern-dating-fc320aed32eb
ஆனால், இதையெல்லாம் AI எல்லாம் வருவதற்கு முன்பே 2017ல் "உங்கள் எண் என்ன?" நூலில் எழுதிவிட்டேன்.
போதாததற்கு, இதே Game Theoryஐ, 2019ல் வெளியான, "உங்கள் எண் என்ன?" நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Those Faulty Journeys நூலில் எழுதியிருக்கிறேன். நூலிலிருந்து கணித பக்கங்களை இங்கே இணைத்திருக்கிறேன்.
அறிவியல் புனைவுகள், கணிதப் புனைவுகளில் தமிழ் முன்னோடியாக உள்ளது என்பதற்கு இதைக்காட்டிலும் உதாரணம் வேண்டுமா என்ன?
சில ஆரூடங்கள் பலிக்கையில், நம் vision பலிக்கையில் சந்தோஷமாக இருக்கிறது.
வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!




