அத்தியாயம் - 7
"மீண்டும்
நிகழ்ச்சிக்கு உங்கள் எல்லோரையும் வரவேற்கிறேன். மென்பொருள் வல்லுனர் சூர்யாவுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். மனித விழைவுகளை எண்களாகப்
பார்க்கும் இவரிடம் நாம் இந்த கருத்துப்
பரிமாற்றத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்.'
என்ற
தொகுப்பாளினி சூர்யாவிடம் திரும்பி,
"சார்,
மேற்குலகம் நம்ம சமூக படி
நிலையை, அதுல இருக்கிற அடிப்படை
வேறு பாடுகளை கணக்குல எடுத்துக்குறது இல்லைன்னு சொன்னீங்க. ஆனா, உங்க கணித
மாதிரி அதை துல்லியமா அங்கீகரிக்குதுன்னு
சொன்னீங்க. புரியிது. ஆனா, நமக்கு ஏன் ஒரு கணித மாதிரி
தேவை? கணித மாதிரி இல்லாத காலகட்டத்துல இருந்த எந்தப் பிரச்சனையை இது தீர்க்கும்ன்னு
நினைக்கிறீங்க? எங்களுக்கு
அதை விளக்க முடியுமா?" என்றாள்.
"இப்படி
யோசிச்சுப் பார்க்கலாம். 193 பேர் கொண்ட குழு;
நூறு ஆண்கள், 93 பெண்கள். இந்த நூறு ஆண்களில்,
மரபணுவிலேயே அடுத்தவரைத் துன்புறுத்திக் கொலை செய்யும் தன்மை
கொண்ட ஒருவர் இருக்கிறார்ந்னு ஒரு வாதத்துக்கு எடுத்துக்கலாம்.
சிக்கிக்கொள்ளாமல் இந்தப் பாதகமான திறனைத் தொடர்ந்து வெளிப்படுத்த அவர் எப்படி வேண்டுமானாலும்
இருந்துட முடியாது; முதலில் வேலை பளு இருக்கிற
இடங்களில் அவர் இருக்க முடியாது
- ஆக போட்டிகள் நிறைந்த இடம் இவருக்கு உகந்ததா
இருக்காது; கண்காணிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் அவர்
இயங்க முடியாது - ஆக, கண்காணிப்புக்கருவிகள் உள்ள பகுதிகளை
இவர் புறக்கணிக்க வேண்டும்; இப்படியாகத், துன்புறுத்திக் கொலை செய்யச்சொல்லும் திறனே
இவரை ஒரு குறிப்பிட்ட சமூக
இடத்திற்குக் குறுக்கும்."
"எந்த
முறைப்படுதலும் இன்றி, எந்த மதிப்பீடும் இன்றி,
வெறும் ஒருவனுக்கு ஒருத்திங்குற அளவில் ஆண்களும் பெண்களும் கூடினா, இந்த செயல்பாடு, இவர்
போன்ற ஒரு சமூகத்திற்கு உவப்பில்லாத
ஒருவரின் வாரிசு அடுத்த தலைமுறைக்குப் பரவுவதைத் தடுக்கும் விதமாக இருக்காது. மாறா பரவச்செய்துடும். ஆனால்,
ஒன்று, இரண்டு , மூன்றுன்னு வரிசைப்படுத்தும் இடங்களில், திறன்கள் மதிப்பிடப்படும் இடங்களில், அளவீடுகள் மிகுக்கும் இடங்களில், 93 பெண்களும் ஏதேனும் ஒரு மதிப்பீட்டை, அளவீட்டை
எதிர்பார்க்கும்போது, இவரால் எதிலும் தேங்க வாய்ப்பிருக்காது, பெண் துணை கிடைக்க
வாய்ப்பில்லாத அந்த 7 ஆண்களில் ஒருவராக மட்டுமே இருக்க இயலும். ஆக, திறன்களை மதிப்பிடுவது,
அளவிடுவது, பாதகமான அம்சங்களை ஒரு சமூகம் தொடர்ந்து
அடுத்தடுத்த தலைமுறைகளுக்குப் பரவுவதை தடுக்க உதவும். இங்க ஒரு பேச்சுக்குத்தான்
தொடர் கொலைகாரர்கள்ன்னு எடுத்துக்கிட்டேன். அது ஒரு குறியீடு
தான்; அது சமூகத்துக்கோ, பெண்களுக்கோ
பாதகமா இருக்கிற எந்த ஒரு அம்சமா
வேணாலும் இருக்கலாம். கெட்டதை வெளியேத்துறதுக்கு ஒரு வாய்க்கால் நாம
வச்சிக்கிறா மாதிரி, நமக்குத் தேவையில்லாத அம்சங்களை மனித மரபணுக்களிலிருந்து நீக்க இதை
ஒரு எளிமையான வழியா பார்க்கலாம். இது நாம செய்ய
வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான். மதிப்பிடனும். அளவிடனும். இந்த இடத்தில் தான்
இந்த கணித மாதிரி முக்கியத்துவம்
பெறுதுன்னு நான் நினைக்கிறேன்" என்றான் சூர்யா.
எனக்கு
"அட!!" என்றிருந்தது.
இப்போது
அவர்களிடையே ஒரு வெள்ளைப் பலகை
வைக்கப்பட்டிருந்தது. அதில் இந்த ஓவியம் வரையப்பட்டிருந்தது.
“இதெல்லாம்
எண்கள்.. முதல் இலக்கம் ஆணுடையது. இரண்டாவது இலக்கம் பெண்ணுடையது.
முதலாவது பெண்ணுக்கும் இரண்டாவது ஆணுக்கும்ன்னும் கூட வச்சிக்கலாம். திருமண
வாழ்க்கைக்குத் தேவையான எல்லா அம்சங்களையும் எண்களாக்கும் போது காலத்தின் போக்கில்
மாறிக்கொண்டே இருப்பவைகளை ஒரு "கொள்கை" (principle) ஒழுங்குபடுத்தும். ஓரு கன்சர்வேடிவ் (conservative) கடைசி வரைக்கும் கன்சர்வேடிவாத்தான் இருப்பாரு. ஒரு எக்ஸ்ட்ராவர்ட் (extrovert) கடைசி வரைக்கும் எக்ஸ்ட்ராவர்டா தான் இருப்பாரு. இதெல்லாம்
மன நிலையோ, காலமோ மாறினாலும் மாறாதது. மாறிக்கொண்டே இருக்கிற விஷயங்களை எண்களாக்கப்போறதில்லை. ஆண்டு வருமானம், கல்வித்தகுதி போன்ற எதை எண்களாக்கனுங்குறதையும் உங்ககிட்டயே விட்டுடறோம்.
உங்கள் எண்களின் பிரகாரம் யார் மேலதிகப் பொருத்தம்
என்பதைத்தான் இந்த கணித மாதிரி
காட்டும் ரொம்ப சிக்கனமா இருக்கிற உங்களுக்கு ஊதாரியா இருக்கிற பையன் போதுமா இல்லையாங்குறதை உங்ககிட்டயே விட்டுடறோம். அந்த சேர்க்கையினால என்னாகுதுங்குறதைத்தான்
இந்தக் கணித மாதிரி உணர்த்தும்”
"சிக்கனமாவும்,
கட்டுதிட்டாகவும் இருக்கிற ஒருத்தருக்கு அவரைப்போலவே சிக்கனமாவும், கட்டுத்திட்டாகவும் இருப்பவருடனான எண் இந்தக் கணித
மாதிரியில் சேர்க்கை 22 ஆ இருக்கும்.
சிக்கனமாவும், கட்டுதிட்டாகவும் இருக்கிற ஒருத்தருக்கு சிக்கனமாவும், விட்டேத்தியாகவும் இருப்பவருக்கு எண் சேர்க்கை 21 ஆ
இருக்கும். சிக்கனமாவும், கட்டுதிட்டாகவும் இருக்கிற ஒருத்தருக்கு தனக்கு எதிர்மறையா இருக்கிற செலவாளியாகவும், விட்டேத்தியாகவும் இருக்கிற ஒருத்தருடனான எண் சேர்க்கை 20 ஆ
இருக்கும்" என்றான் சூர்யா.
"ஒரு
கேள்வி சூர்யா அவர்களே... ஒரு பேச்சுக்கு ஒரு
பெண் தனக்கு ஒரு கொலைகாரன் துணையாக
வரணும்ன்னு எதிர்பார்த்தா அதுவும் சாத்தியமா?" என்றாள் தொகுப்பாளினி லேசான புன்னகையுடன்.
"சாத்தியம்
தான். ஆண்கள் தரப்பில் யாருமே கொலைகாரனா தன்னை முன்னிருத்தாத பட்சத்தில், இந்தக் கணித மாதிரி யாரையுமே
அந்தப் பெண்ணுக்குப் பொறுத்தமானவரா காட்டப்போறதில்லை. இங்க இன்னுமொன்றையும் சொல்லணும்.
ஒரு பயனர், தவறான ஆளா இருக்கும் பட்சத்தில்,
அவருக்கு இந்தக் கணித மாதிரி அவரைப்போலவே
ஒப்பீட்டளவில் ஒரு தவறான ஆளையே
பொறுத்தமாகக் காட்டும். ஒரு பயனர் ஒரு
சரியான ஆளா இருக்கும் பட்சத்தில்
அவருக்கு இந்தக் கணித மாதிரி, அவரைப்போலவே
ஒப்பீட்டளவில் ஒரு சரியான ஆளையே
பொறுத்தமாகக் காட்டும். " என்றான் சூர்யா அதே புன்னகையுடன்.
"ஆக,
இன்னார் சரி, இன்னார் தவறு,
இன்னார் தகுதிப்பட்டவர், இன்னார் தகுதிப்படாதவர்ன்னு இந்தக் கணித மாதிரி தானே
யாரையும் கணக்கிடப் போறதில்லை. இல்லையா?" என்றாள் தொகுப்பாளினி.
"ஆமாம்.
எளிமையா சொல்லணும்னா, மொழி எல்லோருக்கும் தெரிஞ்ச
ஒண்ணு தான். ஆனா, எங்க எதைப்
பேசனும், பேசக்கூடாதுன்னு நாம தான் முடிவு
பண்றோம். அதை வைத்துத்தான் ஒருவனுடைய
வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்படுது, அவன் நல்லவனா கெட்டவனான்னு
தீர்மானிக்கப்படுது. ஆக, வெற்றியாளனுக்குத்தான் தெரியும், அவன்
மொழியில் எந்தெந்த வார்த்தைகள் வெற்றிக்கானதுன்னு; அந்த வார்த்தைகள் ஒரு
தோல்வியடைந்தவனுக்கு தெரியப்போறதில்லை; ஆக, அவர்வர்களின் தேடலை
வைத்துத்தான் இந்தக் கணித மாதிரி வழிகாட்டியாக
செயல்படும். சரியானவர்கள் பயன்படுத்தினா, சரியானவர்களைக் காட்டும்; தவறானவர்கள் பயன்படுத்தினா, தவறானவர்களைக் காட்டும்." என்றான் சூர்யா புன்னகை மாறாமல்.
"அப்போ
எண் 8,9 ங்குறதெல்லாம் தப்பானவன் பயன்படுத்தினா, தவறான தன்மைகளின் உச்சம்ன்னு அர்த்தமாகுமா?" என்றாள் தொகுப்பாளினி.
"ஆமாம்.
இதனால் தான் சம எண்ணுள்ளவர்
பொறுத்தமாக இருப்பார்ன்னு பரிந்துரைக்கிறோம்." என்றான் சூர்யா.
“ஆக, மனித
உறவுச்சிக்கல்களை Non-linear முறையில சொல்லியிருக்கீங்க. இல்லையா?”
“அது மட்டும்
இல்லை. ஒரு பெரிய ஜனத்தொகையைக் கணக்கில் எடுத்துக்கும் போது ஆண்-பெண் பொருத்தத்தின்
படி நிலைகள்ல permutations and combinations நிறைய வரும். எல்லாத்தையும் ஒற்றைச் சாளர
முறையில் வரிசைப்படுத்தவும், முறைப்படுத்தவும், யாருக்கு யார் முன்னுரிமைன்னு வகைப்படுத்தவும்
இந்தக் கணித மாதிரியில சொல்லியிருக்கோம்”
"சரி.
இப்போ இதை எப்படி பார்வையாளர்கள்
பயன்படுத்திக்கலாம்ன்னு
எளிமையா சொல்ல முடியுமா?" என்றாள் தொகுப்பாளினி.
"நிச்சயமா..
இந்தக் கணித மாதிரியைப் பயன்படுத்த
நினைக்கிறவங்க, தன்னிடம் உள்ள காலத்தால் மாறாத
மதிப்பீடுகளை ஒரு பட்டியலிடனும். அதற்கு
ஒரு எண் தந்துக்கணும். உதாரணமா,
ஒருத்தர் ரொம்பவும் சிக்கனக்காரராகவும், தனக்குள்ளயே இயங்கிக்கொள்பவராகவும் இருந்து, அதே விதமான ஒரு
துணையை எதிர்பார்க்கிற பட்சத்துல அவருடைய எண்ணை 2ன்னு வச்சிக்கலாம். இந்தக்
கணித மாதிரியில் அதை உள்ளீடு செய்யும்
பட்சத்துல, இந்தக் கணித மாதிரி, மிக
மிக அதிக பொருத்தமா அதே
2 எண்ணுள்ள பெண்ணை முன்னுரிமை தந்து காட்டும்; அதே நேரம், மிக
மிக அதிக தகுதியுள்ள 9 எண்ணுள்ள
பெண்ணை, கடைசி முன்னுரிமை தந்து காட்டும்" என்றான் சூர்யா.
"ஏன்
அப்படி?" என்றால் தொகுப்பாளினி.
"ஏன்னா,
2 எண்ணுள்ளவர்க்கு அதே எண்ணிக்கையில் உள்ள
பெண் பொருத்தமாக இருப்பார். ஆனா, 9 எண்ணுள்ள பெண்ணுக்கு இவரை விடவும் 7 தகுதிகள்
அதிகமா இருக்கிறதுனால, அவர் தனக்கு பொறுத்தமான
ஒருத்தரைத் தேட இந்தக் கணித
மாதிரியை அணுகும்போது, அவருக்கு, இந்தக் கணித மாதிரி, 9 எண்ணுள்ள
ஆணைத்தான் அதிக முன்னுரிமை தந்து
அவரது திரையில் காட்டும். தவிரவும் அதிகப்படியான இந்த 7 தகுதிகளால, அவர்களுக்குள்ள பிரச்சனைகளும் எழலாம் இல்லையா?" என்றான் சூர்யா.
"சரி..ஏன் 2 எண்ணுள்ள ஒரு பொண்ணுக்கு 9 எண்ணுள்ள
ஒரு பையனைப் பிடிக்கக்கூடாதா? ஒருவேளை நான்
9 எண்ணுடைய ஆணை அணுகி, அவருக்கும்
என்னைப் பிடிச்சிருந்தா?" என்றாள் தொகுப்பாளினி.
"பாருங்க..இந்த செயலி ஒரு
வழிகாட்டி மட்டும் தான். நீங்க
உங்களை விட அதிக எண்ணுள்ள
ஒரு ஆணை தேர்ந்தெடுத்து அவருடன்
இணைய முடிவு செய்யும் பட்சத்தில் இந்த செயலி அதைத்
தடுக்கப்போறதில்லை. ஆனா, இதன் பின்
விளைவுகளை இந்தச் செயலி கணக்கில் எடுத்துக்கும்" என்றான் சூர்யா.
"பின்
விளைவுகள்ன்னு எதைச் சொல்றீங்க?" என்றாள் தொகுப்பாளினி.
"8, மற்றும்
9 மிகவும் அதிக பட்ச தகுதிகள்
கொண்டவர்களுக்கான எண்கள். அதிலிருந்து ஒரு ஆண் 2 எண்
உள்ள ஒரு பெண்ணுக்குன்னு துணை
ஆகும்போது, இந்த ஆண் - பெண்
விகிதாச்சாரத்துல அது ஒரு மாற்றத்தை
உருவாக்கும். உதாரணமா, அந்த 9 எண்ணுள்ள ஆணுக்குப் பொருத்தமா இருக்கக்கூடிய அதே எண்ணுள்ள பெண்களுக்கு
காட்டப்படுகிற ஆண்களின் எண்ணிக்கையில ஒண்ணு குறையலாம். அதே போல, 2 எண்
உள்ள ஒரு ஆணுக்கு பொருந்தக்கூடிய
அதே எண்ணுள்ள பெண்களின் எண்ணிக்கையில ஒண்ணு குறையலாம்.. அதே நேரம், உங்களுடைய
சேர்க்கை வெற்றிகரமா போகுதா இல்லையாங்குறதையும் இந்த செயலி கண்காணிக்கும்?"
என்றான் சூர்யா.
"ஏன்?"
என்றாள் தொகுப்பாளினி.
"உங்களுடையது
வெற்றிகரமா அமையும் பட்சத்தில், அது அதுக்குப் பிறகு
வருகிற முற்றிலும் வெவ்வேறான எண் உடைய ஆண்
- பெண் இணைவதற்கு தூண்டுகோலா அமையும் இல்லையா? ஒரு வேளை தோல்விகரமா
அமையும் பட்சத்தில், ஒரே எண் கொண்டவர்கள்
ஏன் அதே எண் உள்ளவர்களைத்
தேர்ந்தெடுக்கணும்ங்குறதுக்கு
உங்களுடையது ஒரு எடுத்துக்காட்டா மாறும்.
எப்படிப் பார்த்தாலும் நாம எல்லாருமே இந்த
விகிதாச்சாரத்துக்குள்ள
தான் வருவோம்ங்குறபோது, நம்ம எல்லாருடைய முடிவுகளுக்கு
இந்த ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பையும் பாதிக்குங்குறதை நாம எல்லாரும் புரிஞ்சிக்கணும்ன்னு
தான் இப்படி இந்த செயலியை உருவாக்கியிருக்கோம்"
என்றான் சூர்யா.
"ஒரு
சமூகத்துல திறமைசாலியும் இருப்பான். எந்தத் திறமையும் இல்லாதவங்களும் இருப்பாங்க. மக்கா இருக்கிறவங்களும் இருப்பாங்க. தகுதியை அளவிட்டா, திறமைசாலி மட்டும் தான் பிழைக்க முடியும்ன்னு
வருதே" என்றாள் தொகுப்பாளினி.
"இல்லை.
பூஜ்ஜியத்திலிருந்து 9வரை எண்கள் இருக்கு.
எல்லாருக்குமே அவங்களுக்கு சமமான துணையும், வாய்ப்பும் கிடைக்கணும். இனப்பெருக்க சக்தியின் அடிப்படையில் பெண்கள் எல்லோருமே குடும்ப அமைப்புக்கு தகுதியாயிடறாங்க. ஆனா, அப்படி ஆண்கள்
எல்லோரையும் சொல்ல முடியாது; அவங்கள்ல பலர் குடும்ப அமைப்புக்கோ,
ஒரு பெண்ணுடன் வாழ்க்கைக்கோ தகுதியா இருக்கிறதில்லை. வம்ச விருத்தியிலிருந்து அந்த மரபணுக்களை
தொடர்ந்து வெளியேத்த வெளியேத்தத்தான்
பண்பட்ட சமூகம் உருவாகும்ங்குறது தான் அடிப்படை புரிதல். அதுக்கு ஒரு வழி வேணும்.
அதுக்கு இந்த அளிவிடுதல், மதிப்பிடுதல்,
எண் தருதல் பயன்படும்ன்னு நினைக்கிறேன்" என்றான் சூர்யா.
"ஆக,
எல்லா விதமான உறவு நிலைகளுக்கும் இந்த
கணித மாதிரியில இடம் இருக்குன்னு சொல்றீங்க.
இல்லையா?" என்றாள் தொகுப்பாளினி.
“நிச்சயமாக."
என்றான் சூர்யா ஆணித்தரமாக.
நான்
இருக்கிறேன். ஆனால், என்னால் எதையும் மனிதர்களின் பாஷையில் எடுத்துரைக்க இயலாது.
சூர்யா
சொன்னதை வெகு நாட்களாக நான்
பல்வேறு குறியீடுகள் மூலம் மக்களுக்கு உணர்த்த முயற்சித்துக்கொண்டு தான் இருந்தேன். வெகு
சிலர் என் குறியீடுகளை புரிந்துகொள்ளவும்
செய்தார்கள். ஆனால், சுய நலம் மனிதர்களை
அந்தப் புரிதல்கள்
தனக்கும், தனக்குப்பின் தன் குடும்ப உறுப்பினர்களுக்குமென
சுருக்கியதில் அஞஞானமே இறுதியில் பரவியது. அப்போதுதான், எவ்விதத் தணிக்கைகளுமற்ற விதமாய், இந்தக் குறியீடுகள் எல்லா மனிதர்களையும் சென்றடைய வேண்டும் என்பதன் முக்கியத்துவம் அறியாமையில் ஆழக்கடலில் புதைந்துபோனது.
எனக்குப்
புரிந்துவிட்டால் மட்டும் போதுமா?
மொழி.
மனிதர்கள்
தங்களுக்குள் தகவல் பரிமாறிக்கொள்ள, கதைத்துக்கொள்ள உருவாக்கிய ஆயுதத்தின் துணையுடன் என்னால் எவருடனும் உரையாட முடியாது. என்னால் குறியீடுகளை மட்டுமே காட்டிக்கொண்டிருக்க முடியும். என் இயலாமையை நொந்தபடி
தொடர்ந்து என் இருப்பை இலக்கின்றி நீட்டித்துக் கொண்டிருந்தேன் நான்.
என்
குறியீடுகளை மனிதர்கள் புரிந்துகொள்ளும் ஒரு பொதுவான மொழியில், எல்லா மனிதர்களுக்கும் பயனுள்ள வழியில், சுய நலம், குடும்ப
நலம், தனக்குப் பின் தன் வாரிசுகள்
என்றில்லாமல் எல்லோருக்கும் பயன்பட வேண்டி, எல்லா மனிதர்களையும் சென்றடையும் நோக்கில் சொல்ல ஒருவர் வருவார் எனக் காத்திருந்தேன்.
என்
காத்திருப்பு வீண் போகவில்லை என்று
தான் சொல்ல வேண்டும். சூர்யா அதைச் செய்ய முன்வந்திருக்கிறான். இப்போது சொல்லுங்கள். என்னால் எப்படி அவனை விரும்பாமல் இருக்க
முடியும்?
