என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday, 18 January 2022

"Delete" appears in MadSwirl

"Delete" appears in MadSwirl..


I thank the editorial board for offering mine a home...




Thursday, 13 January 2022

இருவாட்சி இலக்கிய துறைமுகம், பொங்கல் சிறப்பு வெளியீடு - 13ல் எனது 'மொழித்திறன்' கட்டுரை

இருவாட்சி இலக்கிய துறைமுகம், பொங்கல் சிறப்பு வெளியீடு - 13ல் எனது 'மொழித்திறன்' கட்டுரை வெளியாகிறது.

லா.ச.ரா.சப்தரிஷி | ஏ.ஏ.ஹெச்.கே.கோரி | காலத்துகள் | செல்வராஜ் ஜெகதீசன் உள்ளிட்ட
இன்னும் பல எழுத்தாளர்களுடன் இந்த இதழின் பக்கங்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.
இவ்விதழில் கட்டுரை எழுத அழைத்த எழுத்தாளர் திரு. எஸ்.சங்கர நாராயணன் அவர்களுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.



Monday, 3 January 2022

மாணவ முன்னேற்றத்திட்டம் நிகழ்வு - 14

 இரண்டு மணி நேரம் கடந்ததே தெரியவில்லை. எவ்விதத் தயாரிப்பும் இன்றி பால்யம் சார்ந்து, நிறைய பேசினேன். மாணவிகள் ஆர்வமுடன் கேள்வி கேட்டார்கள். ஒரு இனிமையான நிகழ்வாக நடந்தேறி மனதுக்கு நிறைவாக இருந்தது நிகழ்வு.


நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்த திரு.ரவி சொக்கலிங்கம் அவர்களுக்கு எனது நன்றிகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Saturday, 1 January 2022

மாணவ முன்னேற்ற திட்டம் - 2022

 சுமார் பத்தொன்பது பள்ளிகளின் மாணவர்களுடனான இந்த நிகழ்வு 2022 புத்தாண்டின் முதல் இணைய நிகழ்வாக அமைவதில் பெருமகிழ்ச்சி.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராகப் பங்குபெற அழைத்த S2S நிறுவனர் திரு.ரவி சொக்கலிங்கம் அவர்களுக்கும், நிகழ்வை சாத்தியப்படுத்தும் ஊடக நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.




Saturday, 18 December 2021

க்ளப்ஹவுஸ் நிகழ்வு

மிக அதிகம் பேர் குழுமும் இடங்களில் பெரும்பாலும் சமரசங்களால் முன்வைக்க வேண்டிய வாதங்களை முன்வைக்க சாத்தியமற்றுப் போய்விடும். இதனாலேயே கூட்டங்கள் என்றால் எதுவும் பேசாமல், வெறுமனே ஓர் ஓரமாக நின்று பார்வையாளராக இருந்துவிட்டு நகர்ந்துவிடுவது உண்டு.
இந்த நிகழ்வில் 3-5 பேர் மட்டுமே எதிர்பார்த்தேன். மூன்று பேருடன் நிகழ்வு இனிதே நடந்தது. எவ்வித சமரசங்களும் இல்லாமல் பேச முடிந்தது. நிகழ்வுக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றிகள். அடுத்தடுத்த நிகழ்வில் தொடர்ந்து சந்திப்போம்.
May be an image of 4 people and text that says 'Leave quietly தமிழ் சிறு கதைகள் குறித்து 4 4 here now Insights Replays off ADD TOPICS Ram Mani Others in the room Kamaraj Hema'

Tuesday, 14 December 2021

💕💕 காதல் சோலை - 12 💕💕

 💕💕 காதல் சோலை  - 12 💕💕




நீ தந்திரக்காரி தான்..

உன்னைக் குறித்த கவிதைகளை

எங்களை வைத்தே

எழுதிக்கொள்கிறாய்....



உன்னை

எத்தனை வாசித்தாலும்

முதல் பக்கத்தைக் கூட

தாண்ட முடிவதில்லை....



உன்னால் 

எல்லோருக்கும் வரும் காதல்

யாராலும்

உனக்கு வருவது போல்

தெரியவில்லை.....



உன்னை வரச்சொன்னாலும்

வரமாட்டாய்...

நீ தரும் காதல்

போகச் சொன்னாலும்

போக மாட்டேன் என்கிறது...



எல்லோருக்கும் எட்டும்

உயரத்தில் நீ  நின்றாலும்

உன் அழகு

ஏணி வைத்தாலும்

எட்ட மாட்டேன் என்கிறது....



 - ராம்பிரசாத்

Sunday, 5 December 2021

வாவ் சிக்னல் - விஞ்ஞானச்சிறுகதைகள் தொகுப்பு 11வது நூல் வெளியீடு

 வாவ் சிக்னல் - விஞ்ஞானச்சிறுகதைகள் தொகுப்பு நூல் வெளியீடு வரும் சனிக்கிழமை அன்று சென்னையில் நடைபெற உள்ளது. இது என் 11வது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பிருக்கும் நண்பர்கள் பங்கு பெறலாம்.
எனது நூலை வெளியிட்டு ஊக்குவிக்கும் படைப்பு பதிப்பகத்தாருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.






Thursday, 25 November 2021

BILINGUAL

BILINGUAL
**************


பல்வேறு ஆங்கில இணைய இதழ்களில் வெளியாகும் என் ஆங்கிலச் சிறுகதைகளை முக நூலில் பகிர்கையிலெல்லாம் பின்னூட்டங்களையும் விருப்பக்குறிகளையும் அவதானிப்பதுண்டு... பெரும்பாலும் ஏதும் இருக்காது அல்லது மிக மிக சொற்பமாகவே இருக்கும்... நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் அறிவார்கள் Bilingual ஆக இருப்பதன் முக்கியத்துவம் குறித்த விவாதங்களுக்கு அவ்வப்போது நான் முயற்சிப்பதையும், எதிர் தரப்பிலிருந்து எவ்வித ஆதரவும் இன்றிப் போவதை உணர்ந்து அந்த முயல்வைக் கைவிடுவதையும்... அந்த நெருங்கிய நட்பு வட்டத்திலும் கூட என் தமிழ் நூல்களையே கேட்டு வாங்கியிருக்கிறார்கள்.. ஆங்கிலப் பகிர்வுகளுக்கு பெரிதாக பின்னூட்டங்களோ, வாத விவாதங்களோ கூட இருக்காது...

சரி.. தமிழ் சமூகம் பிற மொழி ஆக்கங்களை வரவேற்பதில்லை போலும் என்று நானாக நினைத்துக்கொண்டு அமைந்துவிடுவதுண்டு...

நேற்று அமெரிக்க தமிழ் எழுத்தாளர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்வு ஓரு இணைய சந்திப்பாக நடந்தேறியது...
அதில் 'தமிழ் எழுத்தாளர்கள் Bilingual ஆக இருக்க முயற்சிக்க வேண்டும்' என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கேட்டுக்கொண்டார்...

ஆச்சர்யமாக இருந்தது... 2012ல் நான் செய்யத்துவங்கியதன் முக்கியத்துவம் சுமார் பத்தாண்டுகள் கழித்து இப்போது 2022ன் துவக்கத்தில் தமிழ் எழுத்துச் சமூகத்தில் பரவலாக உணரப்பட்டிருப்பதும், பேசப்படத்துவங்கியிருப்பதும்...

முதன் முதலாக என் ஆங்கில சிறுகதை, கவிதைகளை வெளியிட்டு ஊக்குவித்தது Static Movement என்ற சிற்றிதழ்...Chris Barthelme என்பவர் அதன் எடிட்டராக இருந்தார்.. இது நடந்தது 2012ல்.. துரதிருஷ்டவசமாக 2014 வாக்கில் அந்த சிற்றிதழ் நிறுத்தப்பட்டதால் இப்போது அதன் தடயங்கள் இல்லை... அதிர்ஷ்டவசமாக, வெளியீட்டின் போது எடுக்கப்பட்ட screenshot ஐ வலைப்பூவிலிருந்து எடுக்க முடிந்தது...




எனது ஆங்கில முயற்சிகளுக்கு இடமளித்து ஊக்குவித்த இதழ்களில் இப்போதும் வெளியாகிக்கொண்டிருப்பது Texas லிருந்து வெளியாகும் Madswirl. இந்த இதழ் இன்னமும் வெளியாகிக்கொண்டிருப்பது மகிழ்ச்சி. முதல் ஆக்கம் வெளியான 2012க்கான சுட்டியும் எடுக்க முடிவது அதிர்ஷ்டவசம்.