என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday, 11 October 2026

கம்ப்யூட்டா - ராம் பிரசாத் - சிறுகதை தொகுப்பு - பக்கங்கள் 116

 Boje Bhojan

#RM 258
ஆண்டு விழா _ 2025 : சிறுகதை தொகுப்பு
கம்ப்யூட்டா - ராம் பிரசாத் - சிறுகதை தொகுப்பு - பக்கங்கள் 116
புத்தகம் பற்றி :
மொத்தம் 9 தலைப்புகளும் 116 பக்கங்களும் கொண்ட இந்த புத்தகம் ஒரு கணிதம் சார்ந்த சிறுகதைகளின் தொகுப்பு. அது என்ன கணித அறிவியல் கதை பொதுவாக அறிவியல் சிறுகதை என்பது சுஜாதா முதல் இன்று பல எழுத்தாளர்கள் எழுதி கொண்டு இருக்கும் ஒன்று ஆனால் இது அதில் இருந்து வேறு பட்டு நிற்க காரணம் கணித சூத்திரங்கள் (formula) கொண்டு ஒரு கதை படைக்க பட்டு இருக்கிறது என்பதே .பொதுவாக maths is the universal language என்று ஒரு கூற்று உண்டு அப்படி பட்ட சிக்கலான கணிதத்தை வைத்து கதை சொல்லி இருக்கிறார் ஆசிரியர் அதற்கே அவருக்கு பாராட்டுக்கள் சொல்ல வேண்டும்.மேலும் தமிழில் கணிதத்தை மையமாக கொண்டு கதைகள் எழுத படுவது இது தான் முதல் தடவை என்று நினைக்கிறேன். சரி புத்தகம் பற்றி பார்ப்போம் முதல் கதை மடக்கை என்னும் கதை மடக்கை இதன் அர்த்தம் ஆங்கிலத்தில் logaritham ஆகும் logarthim பயன்படுத்தி ஒரு கதை எழுத முடியும் என்று சொன்னால் உண்மையில் நம்ப முடிகிறதா நம்பித்தான் ஆக வேண்டும் அப்படி ஒரு கதையை எழுதி இருக்கிறார் ஆசிரியர். அடுத்த தலைப்பு கண்காட்சி இந்த கதையில் விலை மதிப்பு இல்ல ஒரு வைரம் கண்காட்சியில் இருந்து திருட பட்டது திருடியது இவர் தான் என்று கண்டுபிடித்த பிறகும் திருடன் இவர் கிடையாது வேறு ஒரு ஆள் என கதை செல்கிறது கடைசியாக கதையில் ஒரு திருப்பம் வரும் போது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். இது போல் கைஸர் தடுப்பூசி ,நிகழ்தகவு , கூடை மனிதன் , முதல்வன் போன்ற கதைகளும் கணிதத்தை அடிப்படை கொண்டு எழுத பட்ட கதை கடைசி கதை பரிசியமற்ற மாறிலி என்று கதை அதில் ஒரு சூத்திரம் infinte monkey theorem உண்மையில் அந்த சூத்திரம் என்றால் என்ன அதற்கு கதைக்கும் என்ன சம்பந்தம் என்பதை படிக்கும் போது மிகவும் அருமையாக இருக்கும். மேலும் புத்தகத்தை பொறுத்த வரை கணித சமன்பாடுகள் கொண்டு உருவான கதைகள் அதனால் ஒன்றுக்கு இரண்டு முறை படிக்கும் போது தான் புரிந்து கொள்ள முடியும் ஆனால் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்