I thank the editorial board of Literary Yard for offering mine a home.
https://literaryyard.com/2021/08/15/serpent/
பலநூறு புத்தகங்களை வாசித்த தேர்ந்த இலக்கியவாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதியும் இல்லை.. மற்றவர் கருத்தை ஆராய்ந்து, அழகியல் குறை கண்டு எதிர்க்குரல் பதிவுசெய்யும் விமர்சகரும் இல்லை. எழுத்தின் மீது தீராக்காதல். எழுத வேண்டும். புத்திசாலித்தனமாக எழுத வேண்டும். எழுதுவது யாருக்கேனும், எதற்கேனும் பயன்பட வேண்டும். இவ்வளவே நோக்கம். - ராம்பிரசாத் SFWA Member
I thank the editorial board of Literary Yard for offering mine a home.
https://literaryyard.com/2021/08/15/serpent/
I thank the editorial board of Readomania for offering mine a home...
*** THINKERS OF LIKE WAVELENGTH THINK ALIKE....***
***ஒரே அலைவரிசை கொண்ட மனிதர்களின் சிந்தனைகளும் ஒரே விதமாகத்தான் இருக்கும்....***
2021 ல் வெளியான 'நவரசா' anthology seriesல் முதலாவதாக இயக்குனர் மணிரத்னம் எழுதிய குறும்படமான 'எதிரி'ல் வரும் Climax வசனம்...
"....அவரு உதவி செய்யலைன்னா கூட கொஞ்சம் நம்பிக்கை கொடுத்திருக்கலாம்... சரி, நம்பிக்கை கொடுக்கலை.. உங்க அண்ணன் தற்கொலை செஞ்சிக்காம இருந்திருக்கலாம்... அதுக்காக என் புருஷனைத் தேடி எங்க வீட்டுக்கு வராம இருந்திருக்கலாம்... அவரு தப்பா தப்பா அப்படி பேசாம இருந்திருக்கலாம்... தப்பா பேசியிருந்தாலும் நீ கொஞ்சம் பொறுத்திருக்கலாம்... ஏதோ ஒரு சின்ன சண்டைக்காக பத்து வருஷமா என் புருஷங்கிட்ட பேசாம இருந்திருக்கேன்... என் புருஷனை நான் தான் கொன்னேன்...அந்த ரூம்ல சத்தம் கேட்ட உடனே நான் உள்ள வந்திருக்கலாம்.. உங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசியிருக்கலாம்... இதெல்லாம் தடுத்து நிறுத்தியிருக்கலாம்... இப்படி நான் செய்யவேண்டியது எதுவுமே செய்யாம இருக்கும்போது .. நான் என்ன உன்ன மன்னிக்கிறது, தண்டிக்கிறது... "
இப்போது பின் வருவது, 2018ல் வெளியான 'ஏஞ்சலின் மற்றும் சிலர்' நாவலில் வரும் ஒரு பகுதி
💕💕 காதல் சோலை - 8 💕💕
அமெரிக்காவில் நடக்கும் புத்தகக் கண்காட்சி இது.
சரவணபவன் அண்ணாச்சி, வைரமுத்து விவகாரங்கள் நமக்கு சொல்வது என்ன?...
There are better things to do... இதைத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது...
2008ல் லண்டனில் இறங்கியபோது தமிழ் நாட்டை நினைவூட்டியது சரவண பவன்... 2014ல் அமெரிக்கா வந்தால் இங்கும் அதே சரவண பவன்... சம காலத்தில், நம்மூர் உணவகம் அமெரிக்கா, ஐரோப்பா என்று விரிந்தது ஒரு மாபெரும் சாதனை... சானலுக்குச் சானல் தாவி பேட்டி கொடுக்க வேண்டியவர் சரவண பவன் அண்ணாச்சி.. கூடா நட்புகளால் புகழ் மங்கி கோர்ட் கேஸ் என்று அலைந்து அலைந்தே மரணித்தார். இந்த அலைச்சலில் தொழில் முனைவோருக்கான அற்புதமான பல ஆலோசனைகள் அந்தப் பேட்டிகள் வாயிலாக தமிழர்களுக்கு கிடைக்காமல் போனது.
நான் வைரமுத்து ஆதரவாளனும் இல்லை, எதிர்பாளனும் இல்லை.. ஆயினும், வைரமுத்து விவகாரத்தில் உண்மை எது என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. ஒரு பெண் ட்விட்டரில் அதுவும் பல ஆண்டுகள் கழித்து குற்றம் சாட்டிவிட்டார் என்பதற்காக அதை நம்புவதற்கில்லை.. எதையும், யாரையும், தகுந்த நிரூபணங்கள், தரவுகள் இல்லாமல் நம்ப முடியாத காலகட்டத்தில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்... இப்படித்தான் ராம் குமார் என்றொரு பையனை குற்றம் சாட்டினார்கள்... ஸ்வாதி கேஸ் சந்திக்காத பெண்ணியவாதிகளின் எதிர்ப்பே இல்லை எனலாம்.. ஒட்டுமொத்த பெண்ணியவாதிகளும் கொந்தளித்தார்கள்... ஆனால், ராம் குமார் மரணம் இனி எப்போதைக்குமான conspiracy. இதை யாரும் மறுக்க இயலாது..
ஆக, எதுவும் நிரூபனமாகாதவரை யாரையும் குற்றவாளியாக்க முடியாது, கூடாது என்பது என் வாதம்.. DOT.
இந்த பின்னணியில், ஆண்களுக்கு சில வார்த்தைகள்...
There are better things to do guys.
உங்கள் தினசரி நேரச்செலவினங்களில் தன்னிறைவு அடைந்ததன் பலனாகப் போதுமான பொருளாதார சுதந்திரம் பெற்றுவிட்டீர்கள் எனில், there are better things to do.. செய்வதற்கு எத்தனையோ நல்ல காரியங்கள் இருக்கின்றன... உதாரணமாக, gym, நடனம், பல மொழிகள் கற்பது, இசை கற்பது இப்படி...ஹோட்டல் நிர்மானித்து சாதனை செய்துவிட்டீர்களெனில், மொழிகள் கற்கலாம்... பல நாடுகளில் வாணிபத்தை விரிவாக்க உதவும்... பாடலாசிரியராக வென்றுவீட்டீர்களெனில், இசை கற்கலாம்.. இசைக்கேற்ப பாடல் என்று வேறொரு தளத்தில் பல்துறை வித்தகராக உதவும்...
GYM உடலின் இந்திரியங்களை சேமிக்கவும், சரியான வழியில் பயன்படுத்தவும், உடல் ரீதியிலான ஆற்றலின் உச்சபட்ச சாத்தியங்களை explore செய்யவும் உதவும். அது தரும் ஆனந்தமும், தன்னம்பிக்கையும் பேரின்பத்தைச் சேர்ந்தது.. சிற்றின்பங்களால் எக்காலமும் தர இயலாதது என்பது என் வாதம்...
நம்பிக்கையான உறவுகள் இனி வாய்க்காது என்ற நம்பிக்கையின்மையை விதைப்பது என் நோக்கமல்ல... ஆனால், நல்ல நம்பிக்கையான உறவுகள் அமைவது வரம் மட்டுமல்ல, அரிதான நிகழ்வும் கூட.. அதையும் மீறி, உங்களுக்கு அப்படியான நம்பிக்கையான உறவு எளிதாக வாய்த்துவிட்டதென்று தோன்றினால் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து பாருங்கள்... ஒருவேளை, அதுகாறும் உங்கள் கண்களில் படாத ஒன்று உங்களுக்குப் படலாம்... உங்கள் நம்பிக்கை அவநம்பிக்கையாக தெரியத்துவங்கலாம்... ஒரே ஒரு மறுபரிசீலனையைச் செய்யத் தவறி வாழ் நாள் புதைகுழிக்குள் விழாதீர்கள் என்பது என் பரிந்துரை...
எல்லாவற்றையும் விட ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.. அது, எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை... நல்ல குடும்பம் வாய்த்தவர்களுக்கு நல்ல ஊதியம் தரும் வேலை வாய்க்காது.. இரண்டும் வாய்ப்பவர்களுக்கு அதை அனுபவிக்க நல்ல உடல் ஆரோக்கியம் வாய்க்காது.. கையில் நயா பைசா இருக்காது.. ஆனால், நாங்கு குழந்தைகள் இருக்கும்... வங்கியில் லட்சக்கணக்கில் சேமிப்பு இருக்கும்... திருமணமாகி இருபதாண்டுகள் கழித்தும் பிள்ளை இருக்காது...
இப்படி எல்லோருக்கும் எல்லாமும் வாய்ப்பதில்லை.. எல்லாமும் குறையாக இருந்தால் எதிலாவது நிறைவாக இருக்கும்.. எல்லாமும் நிறைவாக இருந்தால், எதிலாவது குறை இருக்கும்... இது தான் நிதர்சனமும் கூட.. இந்தப் பிரபஞ்சமே இப்படித்தான் இயங்குகிறது என்னும் போது, அதற்கேற்ப நம்மை, நம் புரிதல்களை, இயக்கங்களை தகவமைத்துக்கொள்வது நம் வாழ்வை எளிதாக்கும்.. இல்லையெனில் சிக்கல் தான்...
உறவுகளை உருவாக்க நேரமெடுத்துக்கொள்ளுங்கள்... இந்தக் காலத்தில் பொருண்மை லாபங்களுக்காக உருவாக்கப்படும் synthetic உறவுகளே அதிகம்... எல்லாவற்றிலும் ஒரு லாபத்தைக் கோருபவர்கள் நச்சுக்கு சமானம்.. ' நீ எனக்கு இதைச் செய், பதிலுக்கு நான் உனக்கு அதைச் செய்கிறேன்.. இரண்டு பக்கமும் லாபம்' என்பது தான் நச்சு உறவுகளுக்கான அடிப்படை மதிப்பீடு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
இதை எளிதாக உணரலாம்.. நீங்கள் அறத்தின் வழி நடப்பவராக, உங்களுக்குள் தன்னிறைவு அடைந்தவராக, கூடிய மட்டும் பிற எவரிடமும் எதற்கும் அண்டி இருப்பவராக இல்லாமல் இருந்து பாருங்கள்.. உங்களின் நட்பை நாடியோ, அண்மையை நாடியோ எவரும் வர மாட்டார்கள்... ஏனெனில், அவர்களின் தேவைக்கு நீங்கள் இருப்பதில்லை.. உங்களால் அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை... இதுதான் இன்றைய உலகம்... ஆக, லாப- நஷ்டக்கணக்கைப் பார்த்தே இன்றைய நட்புகள் உருவாகின்றன... இவனால் எனக்கென்ன ஆதாயம் என்கிற கணக்கு தான் இங்கு மிஞ்சுகிறது. இப்படி உருவாகும் நட்பு எண்ணம் ஈடேறாமால் போகையில் தெருவில் நிறுத்துவதில் ஆச்சர்யமில்லை தான்...
உண்மையில், மிகவும் நுணுக்கமாகப் பார்த்தீர்களானால், இது போன்ற உறவுகள் ஒரு trap போல் செயல்படுவதை அவதானிக்கலாம்.. இவர்கள் தாங்கள் முன்னேற வழியில்லை எனில் உங்களையும் முன்னேற விட மாட்டார்கள்.. அதை மீறி நீங்கள் அவர்களைக் கடந்து போகையில், தங்களை அதனில் திணித்துக்கொள்ள முயல்வார்கள்... அப்படி நடக்க வாய்ப்பில்லாதபோது, அதற்கு அசட்டுத்தனமான அர்த்தங்கள் கற்பித்துக்கொள்வார்கள். எதிர்மறை எண்ணங்கள் பரவக் காரணமாவார்கள்...
இந்த எதிர்பார்ப்பில் யார் அண்டி வந்தாலும், புறக்கணிக்கப் பழகிக்கொள்ளுங்கள்... . நல்ல உறவுகள் உருவாகக் கால அவகாசம் கோரும்.. புரிதல்கள் தேவைப்படும்... நம் அசலான நலம் விரும்பிகள், முச்சந்தியில் நிறுத்தி வேடிக்கை பார்க்கமாட்டார்கள்... நம்மை நமக்காக ஏற்றுக்கொள்வார்கள்... இருந்தால் அப்படி ஒரு உறவில் இருக்க வேண்டும்.. இல்லையென்றால் தனித்து இருத்தலே சாலச் சிறப்பு....
26.05.2021 தேதியிட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழில் சொல்வனம் பகுதியில் 'பழி பாவம்' என்ற தலைப்பிலான கவிதை வெளியாகியிருக்கிறது.
வாவ் சிக்னல் தொகுப்பின் மீது கல்லூரி மாணவி ஆராய்ச்சிக்கட்டுரை
நம்மூரில், வாசிப்பு என்றால் பாடப் புத்தகங்களோடு நின்றுவிட வேண்டும் என்பது தான் பல குடும்பங்களில் எதிர்பார்ப்பு. இதற்காகக் குடும்ப அமைப்புகளைக் குறை சொல்வதற்கில்லை. சமீபத்தில் ஒரு வாசகி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது "குடும்பக் கதைகள், செக்ஸ், சினிமா பொருளாதாரம் ... தான் அதிகம் மக்கள் எழுதுறாங்க, வாசிக்கிறாங்க" என்றார். இந்தப் பின்னணியில் பதிப்பகங்களே கூட அறிவியல் புனைவுகள், கணிதப் புனைவுகள் என்றால் பதிப்பிக்க அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. 'யார் சார் வாங்குவா?" என்று பதில் வரும்.
இதன் பின்விளைவு என்னவென்றால், தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் பரிச்சயம் இருப்பதில்லை, அறிவியல் மாணவர்கள் தமிழில் இயங்குவதில்லை. இரண்டும் ரயில் தண்டவாளங்கள் போல ஒட்டாமல் பயணிக்கின்றன. தமிழில் அறிவியல் புனைவுகள் சுத்தமான தமிழில் எழுதப்பட இயலாமல் போனதன் மிக முக்கியமான காரணம் இதுவாகத்தான் இருக்க முடியும்.
இந்தப் பின்னணியில் தமிழ்ச் சமூகம் அறிவியல் நூல்களை, கணிதப் புனைவுகளை வாசித்துப் பழக வேண்டும் என்று குரல் எழுப்பினால், "ஏன் பாஸ், உங்க புக்கை யாரும் படிக்கலைன்னு வருத்தமா?" என்று பதில் வருகிறது. சமூக இயக்கத்தை ஒரு சமூக நலன் கருதி, ஒரு தொலை நோக்குடன் ஒரு வாதத்தை முன்வைத்தால், இதே தமிழ் சமூகம், அதையே ஒரு பவுன்சராக்கி கேள்வி எழுப்புபவனை வாயை மூடிக்கொள்ள நிர்பந்திப்பதை, தமிழ்ச் சமூகமாகப் பார்த்து புரிந்துகொண்டால் தான் உண்டு. போகட்டும்..
'வந்தாரை வாழ வைக்கும்' தமிழகமென்று நாம் தான் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்... 'வந்தவரை மட்டும் தான் வாழவைப்பார்கள்' போல.
தமிழ் - நவீன அறிவியல் என்கிற இந்த இணைப்பை யாரேனும் சாத்தியப்படுத்துகிறார்களா என்று கவனித்துக்கொண்டே இருந்தேன்.
விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் (மகளிர்) கல்லூரி தமிழ்த்துறையில் 'வாவ் சிக்னல்' சிறுகதைத் தொகுப்பை ஆராய்ச்சிக்கென எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரியவரும் முதல் முயற்சி இது என்பது தான் சற்று நெருடலாக இருக்கிறது. இந்த விஷயத்தில் நான் அறியாமையில் இருப்பதாக யாரேனும் நிரூபித்தால் சந்தோஷம் தான்.
மற்றபடி, என் நூல் ஒன்று ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதற்காக இதைச் சொல்லவில்லை. உண்மையில், தமிழ் மாணவராக இருந்தால் அறிவியல் குறிப்புகள் எழுதவும், அறிவியல் மாணவராக இருந்தால் தமிழில் எழுதிடவும் ஒரு பாடமாக, குறைத்தபட்சம் ஒரு ப்ராஜக்ட் போன்று நடத்திக்கொள்ள எல்லா கல்லூரிகளும் முன் வரவேண்டும் என்பது என் பரிந்துரை.
அதற்கு முதல் கட்டமாகவே தமிழ் மாணவராக இருந்தால் அறிவியல் குறிப்புகள் எழுதவும், அறிவியல் மாணவராக இருந்தால் நவீன அறிவியலை தமிழில் எழுதிடவும் ஒரு பாடமாக அமைய வேண்டும். இந்தப் புரிதலை 'விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் (மகளிர்) கல்லூரி தமிழ்த்துறை' சாத்தியப்படுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அதற்குக் , கல்லூரியின் துறை சார் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த பாராட்டுக்களும், பங்குபெறும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களும்.
முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் தன் கைப்பட எழுதியிருக்கும் குறிப்பை இங்கே பகிர்வது பொறுத்தமாக இருக்குமென்று எண்ணுகிறேன். பல பக்கங்கள் அடங்கிய குறிப்பில் ஒன்றிரண்டு பக்கங்களை மட்டுமே பகிர்கிறேன்.
Semi-Pro & Pro Sales