என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday, 18 June 2021

அமெரிக்காவில் நடக்கும் புத்தகக் கண்காட்சி

 அமெரிக்காவில் நடக்கும் புத்தகக் கண்காட்சி இது.

என்னுடைய தமிழ் நூல்கள் அனைத்தும் விற்பனைக்குக் கிடைக்கும். வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய நூல்கள் குறித்த ஒரு சிறு முன்னுரையை இங்கே தருகிறேன்.
#1. ஒப்பனைகள் கலைவதற்கே (2014): காவ்யா பதிப்பகம்
என்னுடைய முதல் நாவல் நூல். தேவியின் கண்மணி நாவலிதழில் 2013ல் வெளியானது. இதற்குப் பின்னால் வெளியான கணித நாவலுக்கான அடித்தளம் இந்த நாவலில் உரைந்திருக்கிறது. ஒரு சமூக நாவலை கணித நாவலாக விரிப்பது எங்ஙனம் என்பதை இந்த இரண்டு நூல்களை வைத்து வாசகர்கள் புரிந்துகொள்ளலாம். அந்த வகையில் இது ஒரு முக்கியமான முயல்வு.
#2. உங்கள் எண் என்ன?(2016) : காவ்யா பதிப்பகம்
தமிழில் Mathematical Fiction இல்லாத குறையை தீர்த்த முதல் நாவல் இது. இந்த நூல். அமெரிக்க கணிதவியலாளரின் கணித நாவல்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.
"மற்றவர்கள் போல், உறவுச்சிக்கல்கள் குறித்துப் பேசும் நாவல்களை நீங்கள் எழுதலாமே?" என்று தொடர்ந்து ஆலோசனை தரப்பட்டிருக்கிறேன். தனித்தனியாக பல நூறு சிறுகதைகளாக எழுதித் தீர்த்திருக்க வேண்டியதை ஒரே ஒரு நாவலில் பெருமொத்தமாகப் பேசிவிட்டதால், இனிமேல் புதிதாக எழுத வேறு ஒன்றும் இல்லை எனலாம்.
#3. இரண்டு விரல்கள் (2017) : வாதினி பதிப்பகம்
தகுதி உடைய வாழ்வனுபவம் தகுதியானவர்களிடம் சென்று சேர ஒரு குற்றத்தால் தான் முடியும் என்பது இக்காலகட்டத்தின் நிர்பந்தமாக இருக்கிறது. சமூகக் கருத்துக்களை Thriller பாணியில் எழுதுவது குறித்து இந்த நாவலில் முயன்றிருக்கிறேன்.
#4. அட்சயபாத்திரா (2017) : வாதினி பதிப்பகம்
வங்கிக்கொள்ளை குறித்து இதுகாறும் வெளியான எல்லா ஆக்கங்களிலும் சொல்லப்படாத புதுமையான வழிமுறை ஒன்றைப் பதிவு செய்யும் நாவல் இது.
#5. வரதட்சணா (2018): காவ்யா பதிப்பகம்
Matrimonial சார்ந்து நூல்கள் தமிழில் இல்லை. அந்தக் குறையைத் தீர்க்கும் முகமாக வரதட்சணையை எவ்விதம் அணுகலாம் என்பது குறித்து ஒரு மாற்றுப் பார்வையை முன்வைக்கும் நாவல் இது. ஆண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
#6. ஏஞ்சலின் மற்றும் சிலர் (2019): காவ்யா பதிப்பகம்
ஒரு குற்றத்தின் வடிவம் என்ன? குற்றவாளி என்பவன் யார்? நீங்கள் செய்ய வேண்டிய குற்றம் எது? தண்டனை என்னும் விடுதலை குறித்து உங்களுக்கு என்ன தெரியும்? இக்கேள்விகளுக்கான விடைகளை suspence பாணியில் சொல்ல முயன்றிருக்கிறேன்.
#7. வதுவை (2019) : காவ்யா பதிப்பகம்
Matrimonial சார்ந்து தமிழில் நாவல் நூல்கள் இல்லாத குறையைத் தீர்க்க எழுதப்பட்ட நாவல்.
#11. வாவ் சிக்னல் (2020) : படைப்பு பதிப்பகம்
வாசகசாலை, சொல்வனம், பதாகை, கனலி போன்ற தளங்களில் 2020ல் வெளியான அறிவியல் புனைவுச்சிறுகதைகளின் தொகுப்பே 'வாவ் சிக்னல்'.
இப்பதிவுடன் என்னுடைய எல்லா நூல்களின் முகப்பு அட்டையையும் இணைத்திருக்கிறேன்.