என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday, 13 March 2021

உங்கள் எண் என்ன? - நாவல் - விமர்சனம்

உங்கள் எண் என்ன? - நாவல் - விமர்சனம்


வணக்கம் ,,,. விதி வலியது.. விதியை மதியால் மாற்ற முடியாது..!! 

மாற்ற முடியும் எனும் விதி இருப்பவரால் மட்டுமே முடியும்.. 

இந்த வாசகங்களை மீறி ... விதி என்று ஒன்றுமில்லை.. வாழ்க்கைக்கு எது தேவையோ அத முன் கூட்டியே யோசித்து .. சிறப்புறச் செய்து கொண்டால் விதியின் மீது பழிபோட வேண்டாம்.. 

இன்று நேற்று நாளை என டைம் மெஷினை வைத்து தமிழ் படம் ஒன்று வந்தது. அதில் செய்த செயல் திருப்தி இல்லை என்றால்.. டைம் மெஷின் மூலம் பழய காலத்திற்கு ென்று அதே நிகழ்வை மாற்றி , அதன் மூலம் இப்போதய நிகழ்காலத்தை வளமாக .,,,,,, 

ஆனால் எழுத்தாளர் ராம் பிரசாத் அல்ஜீப்ரா பாணி,,, கணித எண்கள் மூலமும் .. சமண்பாடுகள் மூலமும்,,, செயல்களுக்கு .இணாதிசயங்களுக்கு ம்.. ஆண் பெண் என இருவருக்கும் ஒவ்வோர் எண் கொடுத்து,,, அதன் மூலம் ப்ரச்சனையை அலசி ஆராய்ந்து,,, புதிய கோணத்தில் புதிய பார்வையில்,, தர்க்கம் மற்றும் ஆதாரத்தின் ..மூலம் தீர்வுகள் சொல்கிறார்,, 

தவறுகள.. தவறு செய்பவர்களை மறப்போம்.. மன்னிப்போம் : என விடுவதவிட அவர்களை ஒதுக்கி புதிய மனிதர்களோடு புதிய பாதையில் செல்வது நலம் என்கிறார் .. ப்ரச்சனைகள யோசித்து தேவையான எண்கள் மூலம் வரிசைபடுத்தி ... தீர்வுகளை நெறிபடுத்தி .. வாழ்ந்தோமானால் அதுவே சிறப்பென்கிறார், 

இதனை செல்வம் கொலம்பஸ் என இருவர் மூலம் விவாதங்களாக நிகழ்த்தி,,, வர்ணனைகள் ஏதுமின்றி ..நாவலை திறம்பட எழுதியுள்ளார். கதையில் மொத்தம் மூன்று ஆண்கள் இரண்டு பெண்கள் .. அதிலும் இரண்டு ஆண்கள் மட்டுமே ப்ரச்சனைகளை தீர்வு களை விவாதிப்பர்.. புதிய கணித எண் (ஜோதிட.....எண் கணிதம் அல்ல) சமண்பாடுகள்,,,, மூலம் .முடிவுச் சங்கிலி என்ற விளக்கப்படங்களின் மூலம் .. தீர்வுகள் .,

அழகிய கதை.. குழப்பங்கள் ஏதுமின்றி விவாதங்கள்.. தர்க்கங்கள்..தீர்வுகள் ..தமிழின் முதல் மே தமேடிக்கல் FICTiON... விறுவிறுப்பு குறையாத .,, ஆர்வத்தை தூண்டும் எழுத்து ,,,அற்புத அருமையான நாவல் உங்கள் எண் என்ன?. எழுத்தாளர் ராம் பிரசாத்தின் புதிய முயற்சிக்கு மனமார்ந்த பாரட்டுகள்,,,,, நன்றி


Ramkumar/Bsnl Retd/Chennai.600 107..Ct.no.....9444950559...





'கதையாடல்' 52-ஆம் நிகழ்வு - சேஷம் - ராம்பிரசாத்

பனுவல் புத்தக விற்பனை நிலையத்துடன் #வாசகசாலை இணைந்து வழங்கும் 'கதையாடல்' 52-ஆம் நிகழ்வு நேரடி அரங்க நிகழ்வாக இன்று மாலை (13/03/21) நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிப்பு இதோ உங்கள் முன்னால்...!

பிப்ரவரி மாத அச்சு மற்றும் இணைய இதழ்களில் இருந்து இம்முறை உரையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ள கதைகள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:-
அச்சு இதழ்கள்:
காலச்சுவடு
சாட்டை - எம்.ரிஷான் ஷெரீப்
அந்திமழை
உத்தரவு - எம்.கோபாலகிருஷ்ணன்
இணைய இதழ்கள்:
சொல்வனம்
சௌவாலி - மஹாஸ்வேதா தேவி (தமிழில்: எம்.ஏ.சுசீலா): https://bit.ly/3erUggr
யாவரும்
உலகின் அழகிய துயரம் - ஜீவ கரிகாலன்: https://bit.ly/3lhTC6J
வாசகசாலை
சேஷம் - ராம்பிரசாத்: https://bit.ly/3cl9RvA
நண்பர்கள் அனைவரையும் இந்த நிகழ்வுக்கு #வாசகசாலை அன்புடன் வரவேற்கிறது. நன்றி. மகிழ்ச்சி..!
குறிப்பு:
(1) நிகழ்வில் சமூக இடைவெளி முழுமையாக கடைபிடிக்கப்படும்.
(2) முகக்கவசம் அணியாத நண்பர்கள் கண்டிப்பாக அரங்கினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.




Thursday, 11 March 2021

'கதையாடல்' 52-ஆம் நிகழ்வு - சேஷம் - ராம்பிரசாத்

பனுவல் புத்தக விற்பனை நிலையத்துடன் #வாசகசாலை இணைந்து வழங்கும் 'கதையாடல்' 52-ஆம் நிகழ்வு நேரடி அரங்க நிகழ்வாக வரும் சனிக்கிழமை மாலை (13/03/21) நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிப்பு இதோ உங்கள் முன்னால்...!

பிப்ரவரி மாத அச்சு மற்றும் இணைய இதழ்களில் இருந்து இம்முறை உரையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ள கதைகள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:-
அச்சு இதழ்கள்:
காலச்சுவடு
சாட்டை - எம்.ரிஷான் ஷெரீப்
அந்திமழை
உத்தரவு - எம்.கோபாலகிருஷ்ணன்
இணைய இதழ்கள்:
சொல்வனம்
சௌவாலி - மஹாஸ்வேதா தேவி (தமிழில்: எம்.ஏ.சுசீலா):
யாவரும்
உலகின் அழகிய துயரம் - ஜீவ கரிகாலன்:
வாசகசாலை
சேஷம் - ராம்பிரசாத்:
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேச விரும்புவோர், உடனடியாக கீழ்க்காணும் அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.
வாட்ஸப்:
கார்த்திகேயன் - 9942633833
அருண் - 9790443979
மாரி செல்வம் - 9600348630
நண்பர்கள் அனைவரையும் இந்த நிகழ்வுக்கு #வாசகசாலை அன்புடன் வரவேற்கிறது. நன்றி. மகிழ்ச்சி..!
குறிப்பு:
(1) நிகழ்வில் சமூக இடைவெளி முழுமையாக கடைபிடிக்கப்படும்.
(2) முகக்கவசம் அணியாத நண்பர்கள் கண்டிப்பாக அரங்கினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Friday, 5 March 2021

Fictions: Mathematical and Science Fictions

 Have got two Mathematical fictions (that are acknowledged by Alex Kasman, an American Mathematician and Researcher, from North Carolina), to my credit.

THOSE FAULTY JOURNEYS - 2017
MET APP - 2020
Should you want to know what kind of fiction can you expect from me, please go through some of my fiction published in national and international journals. If you like my work, you may consider utilizing the opportunity at the ongoing book festival in Chennai.
The books are available for purchase at Emerald Publishers.

முக்கியமான நூல்கள்

எல்லோருக்கும் வணக்கம்.

நடந்துகொண்டிருக்கும் 2021 புத்தக திருவிழாவை மனதில் கொண்டே இந்தப் பதிவு.
அறிவியல் புனைவுகள் வாசகர்களுக்காய் என் 'வாவ் சிக்னல் - விஞ்ஞானச்சிறுகதைகள் தொகுப்பு' படைப்பு பதிப்பகம் வாயிலாக வெளியாகியிருக்கிறது. இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் வாசகசாலை, பதாகை, கனலி, சொல்வனம் போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன.
"உங்கள் எண் என்ன? - நாவல்" தமிழின் முதல் கணித நாவல். கணித நாவல் வாசிக்க விரும்பும் வாசகர்களுக்காக அமேசான கிண்டிலில் இருக்கிறது. அமெரிக்க கணிதவியலாளரான Alex Kasman, இந்த நூலை அங்கீகரித்திருக்கிறார். (Those Faulty Journeys - இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு. இந்த நூலை Emarald Publishers வெளியிட்டிருக்கிறது)
"Met App" இன்னுமொரு கணித நாவல். இதுவும் கணித நாவலென அங்கீகரிக்கப்பட்டதே.
கணித நாவல்களின் கிண்டில் சுட்டிகளை இப்பதிவுடன் இணைத்திருக்கிறேன்.

உங்கள் எண் என்ன? - நாவல்

Met App

வாவ் சிக்னல் - விஞ்ஞானச்சிறுகதைகள் தொகுப்பு படைப்பு பதிப்பகத்தின் ஸ்டால் F19ல் கிடைக்கிறது.

வாசக நண்பர்களை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.










Wednesday, 24 February 2021

அசாதாரணம்

 தமிழில், "உங்கள் எண் என்ன? - நாவல்", "வாவ் சிக்னல் - விஞ்ஞானச் சிறுகதைகள்", (மெட் செயலி - இன்னும் நூலாகவில்லை)

ஆங்கிலத்தில், "Those Faulty Journeys-Novel", "Met App-Novel"
இந்த ஐந்து நூல்களுமே நான் எழுதியவைகளுள் மிகவும் குறிப்பிடத்தகுந்த நூல்கள். நான் எழுதியவை என்பதற்காக இதைச் சொல்லவில்லை. உண்மையிலேயே இன்னும் 40-50 ஆண்டுகள் கழித்து எடுத்துப் பார்த்தாலும் கூட அக்காலத்திற்கும் பொறுத்தமான நூல்களாக இவைகள் இருக்கும் என்றே கணிக்கிறேன். நூல்கள் இவ்விதம் அமைவது அசாதாரணம்.
வாய்ப்புள்ள நண்பர்கள் பிரதிகள் இருக்கும் போதே பயன்படுத்திக்கொள்ளலாம்.
உங்கள் எண் என்ன - நாவல் - காவ்யா பதிப்பகம்
வாவ் சிக்னல் - படைப்பு பதிப்பகம்-Stall#F19
Those Faulty Journeys - Emerald Publishers
Met App - Emerald Publishers

Tuesday, 23 February 2021

44வது சென்னைப் புத்தகக்கண்காட்சி - 2021

44வது சென்னைப் புத்தகக்கண்காட்சி - 2021

************************************************

44வது சென்னைப் புத்தகக்கண்காட்சி நந்தனம் YMCA மைதானத்தில்  நாளை துவங்கி மார்ச் 9 திகதி வரை நிகழ இருக்கிறது. 

இந்த வருடத்துக்கான எனது பங்களிப்பு 'வாவ் சிக்னல் விஞ்ஞானச்சிறுகதைகள்' தொகுப்பு தான். படைப்பு பதிப்பகத்தின் வாயிலாக வெளியாகியிருக்கிறது. புத்தகக்கண்காட்சியில் படைப்பு பதிப்பகத்தின் ஸ்டால் எண்: F19.

'கணித மற்றும் விஞ்ஞானப்புனைவுகளே எழுதுறீங்க. ஒரு மாற்றமா, சமூகக் கதைகள் எழுதலாமே" என்று ஆலோசனை தருகிறார்கள்  நண்பர்கள். 

எழுதக்கூடாது என்றில்லை. சமூகத்திற்கு நான் சொல்ல நினைத்ததையெல்லாம் சேர்த்துத்தான் பெருமொத்தமாக "உங்கள் எண் என்ன?" நாவலில் எழுதியாகிவிட்டது. 

எதை எழுத நினைத்தாலும் 'இதை கணித நாவலில் ஏற்கனவே சொல்லியாகிவிட்டது' என்ற எண்ணமே வலுக்கிறது. இதற்கு மேல் புதிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது. ஆகவே இந்த ஆலோசனைகளை வைத்து சம்பந்தப்பட்டவரை,  மீள்வாசிப்பு செய்கையில், மாற்று அணுகுமுறைகளைக் கைகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

உங்கள் பதினோரு நூல்களில் எதிலிருந்து நான் வாசிக்கத் துவங்கலாம் என்று உங்களில் யாருக்கேனும் கேள்வி இருப்பின் பின்வரும் வரிசையைப் பரிந்துரைக்கிறேன்.


தமிழில்:

உங்கள் எண் என்ன? - நாவல் - காவ்யா பதிப்பகம்

வாவ் சிக்னல் - படைப்பு பதிப்பகம் - ஸ்டால்#F19


ஆங்கிலத்தில்:

Those Faulty Journeys - Emerald Publishers

Met App - Emerald Publishers


மற்றபடி என் நூல்களின் வரிசை பின் வருமாறு

காவ்யா பதிப்பகம்

*******************

ஒப்பனைகள் கலைவதற்கே (2014) 

உங்கள் எண் என்ன? (2016)

வரதட்சணா  (2018) 

ஏஞ்சலின் மற்றும் சிலர் (2019)

வதுவை(2019)


வாதினி பதிப்பகம்

*******************

இரண்டு விரல்கள் (2017)

அட்சயபாத்திரா (2017)


Emerald Publihers

*******************

Inexhaustible (2018) 

Those Faulty Journeys (2018)

Met App (2020)


படைப்பு பதிப்பகம்

*******************

வாவ் சிக்னல்  - விஞ்ஞானச்சிறுகதைகள்(2020)





Social - Literary Yard Magazine

 Literary Yard publishes one of my science fiction titled 'Social'.

I thank the editorial board of Literary Yard for choosing my prose for publishing in their magazine.
An excerpt from the fiction:
// Random guys on social networking apps have matched with me only to let me know how hideous I was. I have had to work harder at friendships with the opposite gender. I have struggled to keep people’s attention at parties. I found I was more easily ignored in professional situations, even when I’ve got something to say. I have had people explain to me how I can improve my skin and diets I should try. Ugliness was not the absence of beauty. But in people’s collective perception, ugly ones were stupid.//
Please click the below link to read the prose from the Magazine.




Wednesday, 17 February 2021

The Great Indian Kitchen - விமர்சனம்

The Great Indian Kitchen - விமர்சனம்



நீங்கள் விவசாயம் செய்யப் போகிறீர்கள். என்னென்ன வேண்டும்?


நிலம்.

ஆரோக்கியமான மண்.

நீர் வளம்.

சூரிய சக்தி.

பிறகு, விவசாயம் செய்ய செய்முறை இருக்கிறது. 

விவசாயம் யார் செய்வார்?

எல்லோரும் செய்வதில்லை. அதற்கென ஒரு சமூக, பொருளாதார இடம் இருக்கிறது. விவசாயத்தைத் தொழிலாக செய்யத்தெரிதல் இருக்கிறது. இப்படி நிறைய காரணங்கள் சொல்லலாம். ஆக ஒரு  மா நிலத்தில் மொத்த மக்கள் தொகை 8 கோடி எனில் எட்டு கோடி ஜனமும் விவசாயம் செய்வதற்கில்லை.




விவசாயம் செய்ய முன்வருபவர்களிலேயே கூட, அவர்களின் அணுகுமுறையை வைத்து வர்க்கங்கள் இருக்கிறது. லாப நோக்கோடு வருபவர், விவசாயத்தை கடவுளாக வரித்தவர், வேறு வக்கின்றி செய்பவர், கூலிக்கு வந்தவர் என்று.

இதையெல்லாம் தாண்டி, விவசாயத்தை வெற்றிகரமானதாக, ஆரோக்கியத்திலும், தரத்திலும் சிறிதும் குறைவின்றி மேற்கொண்டு லாபம் ஈட்ட வேண்டுமென்றால், இது அத்தனையும், அதனதன் துல்லியத்தில் நிகழவேண்டும். 

சரி, எல்லா நேரமும் எல்லாமும் துல்லியமாக யாருக்குத்தான் நடக்கிறது, கிடைக்கிறது. ஆக, இவற்றில் ஆங்காங்கே குறைகள் இருக்கலாம். ஒன்றில் சரியான அளவில் நிலம் இல்லாமல் இருக்கலாம்.

மற்றொன்றில் மண் வளம் குன்றி இருக்கலாம்.

இன்னொன்றில் நீர் வளம் இல்லாமல் இருக்கலாம்.

இன்னுமொன்றில், சூரிய ஒளியே இல்லாமல் இருக்கலாம்

இந்த இல்லாமைகளுக்கேற்ப, விவசாயத்தின் விளைவாக உற்பத்தி செய்யப்படும் தானியத்தின் தரம் பாதிக்கப்படும். 

வாழ்க்கை என்பது அந்த தானிய உற்பத்தி தான். அதற்கு தரம் வேண்டுமானால், மேற்சொன்ன எல்லாமும் அதனதன் துல்லியத்தில் அமைய வேண்டும்.

  • சில இடங்களில் நிலம் குன்றியிருந்தாலும், சத்துள்ள விதை உற்பத்தியை இருமடங்காக்கி,  நிலத்தின் குறையை சமன் செய்துவிடலாம்.
  • சில இடங்களில் மண் வளம் குன்றியிருந்தாலும், விவசாயியின் புத்திசாலித்தனத்தால், மண்ணுக்கேற்ற தானியம் உற்பத்தியில் இறங்கி, குறையைச் சமன் செய்துவிடலாம். 
  • சில இடங்களில் நீர் வளம் குன்றியிருந்தாலும், நீர் அதிகம் தேவைப்படாத  தாவரங்கள், மரங்கள் வளர்த்து சமன் செய்யலாம்.

வாழ்க்கையைப் பொருத்த மட்டில் சமன் செய்வதுதான் இலக்கு. ஏனெனில், எல்லாமும் துல்லியமாக, மிகச்சரியாக, அப்பழுக்கின்றி யாருக்கும் அமைந்துவிடுவதில்லை.  இதுதான் நிதர்சனமும் கூட. இதற்கு உங்கள் சமூக, பொருளாதார இடமும், உங்கள் தேர்வுகளும், நிராகரிப்புகளுமே பெரும்பான்மை காரணங்கள். ஆக, எல்லாமே உங்கள் சூழல்களுக்கும், அதற்கு உங்கள் எதிர்வினைகளுக்குமே உதயமாகிறது.

உங்களிடம் நீர் இல்லை என்றால் அதிகம் நீர் கோராத ஒன்றை தெரிவு செய்து விவசாயத்தில் இறங்குவது உங்கள் புத்திசாலித்தனத்தையும், மதி நுட்பத்தையும் காட்டுவதாக அமையும். பிறருக்கு நீங்கள் முன்னுதாரணமாக இருப்பீர்கள்.  

உங்களால் எது முடியும், எது முடியாது, மண் வளம் என்ன, நீர் வளம் என்ன  என்பதையே தெரிந்துகொள்ளாமல், கண்ணைக் கட்டிக்கொண்டு மண்ணில் கால்வைத்தால், அடுத்தவர்க்கு நீங்கள் பாடமாக மட்டும் தான் ஆவீர்கள்.

அடுத்தவர்க்கு உங்கள் வாழ்க்கையை பாடமாக்கிக்கொள்வதும், அல்லது முன்மாதிரி ஆக்கிக்கொள்வதும் உங்கள் புத்திசாலித்தனத்திலும், அணுகுமுறையிலும், முதிர்ச்சியிலும் இருக்கிறது. நீங்கள் யார் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 

மற்றபடி, முன்மாதிரிகளைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு,  The Great Indian Kitchen  பெரிதாக ஈர்க்காது. 

Tuesday, 16 February 2021

kubool

 அன்பு நண்பர்களுக்கு,

உங்களில் பலருக்கும் என்னிடம் கேட்க கேள்விகள் மிகப்பல இருக்கின்றன என்று அறிகிறேன். சிலர் என்னிடம் கேள்வி கேட்கவெனவே ஒரு fake id உருவாக்குகிறீர்கள். அது அந்த ஐடிக்களைப் பார்த்தாலே தெரிகிறது.

உண்மையில், கேள்விகள் கேட்பதும், பதில் தேடுவதும் எனக்கும் பிடித்தமான செயல்பாடு தான். ஆகவே உங்கள் கேள்விகளை, சந்தேகமே இல்லாமல் வரவேற்கிறேன்.

கேள்வி கேட்பதற்கு தன்னை வெளிப்படுத்திக்கொள்ள தயக்கம் இருப்பவர்களுக்கெனவே kubool பயன்படுத்தலாம் என்றிருக்கிறேன். (இதற்கு முன் சரஹா இருந்தது. ஆனாலும், மேற்சொன்னவாறு fake id மூலமாகவே கேள்விகளையே எதிர்கொண்டிருந்தேன். Ananymous messaging platformகள் குறித்து பலருக்கும் தெரியாமல் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது)

Ananymous ஆக இருக்க விரும்புபவர்களுக்கு kubool ஒரு வரப்பிரசாதமே. பயன்படுத்திக்கொள்ளவும்.
குபூலில் எனக்கு கேள்விகளை அனுப்ப,

முடிந்தவரை பதிலளிக்க முயற்சிக்கிறேன்.
நட்புடன்,
ராம்ப்ரசாத்