என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Thursday, 15 February 2024

வாவ் சிக்னல் - தமிழக அரசு விருதை செய்தித்துறை அமைச்சர் திரு மு.பெ சாமிநாதன் அவர்களிடமிருந்து என் தந்தை பெற்றுக்கொண்டார்.

 12 பிப்ருவரி அதிகாலை என் அப்பா அனுப்பிய குறுஞ்செய்தியில் தான் எனது நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் 2020ம் வருடத்திற்கான சிறந்த சிறுகதை நூலுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதே தெரிய வந்தது. 14ம் நாள் மாலை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வந்து விருதைப் பெற்றுக்கொள்ளும்படி என் தந்தைக்கு அலைபேசியில் தகவல் சொல்லியிருக்கிறார்கள். விருதை நேரில் சென்று பெற்றுக்கொள்ள விருப்பம் இருந்தாலும் இத்தனை குறுகிய கால இடைவெளியில் விமானப் பயணத்திற்கு நேரமே இல்லை என்பதால் அப்பா-அம்மாவையே எனக்கு பதிலாக விருது வாங்கிக்கொள்ள அனுப்பி வைக்க வேண்டியதாகிவிட்டது. கொஞ்சம் முன்னமேயே தெரிவித்திருக்கலாம் என்று தோன்றாமல் இல்லை தான். விருதை நேரில் பெற பெருவிருப்பம் இருந்தும் இயலாமல் போவது இது இரண்டாவது முறை: முதலாவது 2022க்கான ஜீரோ டிகிரி இலக்கிய விருது.

என் 'வாவ் சிக்னல்' நூலுக்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் 2020ம் வருடத்திற்கான சிறந்த சிறுகதை நூலுக்கான விருதை செய்தித்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் திரு மு.பெ சாமிநாதன் அவர்களிடமிருந்து என் தந்தை என் சார்பில் பெற்றுக்கொண்டார்.
வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்...



Tuesday, 13 February 2024

வாவ் சிக்னல் - தமிழக அரசின் சிறந்த சிறுகதை நூலுக்கான விருது (2020) பெறுகிறது

 வாவ் சிக்னல் - தமிழக அரசின் சிறந்த சிறுகதை நூலுக்கான விருது (2020) பெறுகிறது

*******************************************************
எனது 'வாவ் சிக்னல்' விஞ்ஞானச் சிறுகதைத் தொகுதி நூல், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் 2020ம் வருடத்திற்கான சிறந்த சிறுகதை நூலாகத் தேர்வாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது இந்த அறிபுனைச் சிறுகதைத் தொகுதிக்கு மாநில அரசின் விருது கிடைத்திருப்பது மட்டட்ட மகிழ்ச்சியையும், மென்மேலும் தீவிரமாக இயங்க உத்வேகத்தையும் தருகிறது.
மாநில அரசு விருதாளர்களின் பட்டியலில் இணையச்செய்ததில் மாநில அரசுக்கும், தேர்வுக்குழுவுக்கும், இந்த இயற்கைக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். 🙏🙏🙏
விருதுக்கென எனது நூல் அனுப்பப்பட்டதே எனக்குத் தெரியாது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். விருதுக்கென என் நூலை அனுப்பி வைத்ததற்கு ஒரு பதிப்பாளரின் கடமை உணர்வுடன் அனுப்பி வைத்த பதிப்பாளர் ஜின்னா அவர்களுக்கு எனது பிரத்தியேக நன்றிகள்.🙏🙏🙏
All reactions:
Kamaraj M Radhakrishnan, Rajesh Vairapandian and 16 others

Sunday, 11 February 2024

சரோஜாதேவி புத்தகம் - அறிபுனைச் சிறுகதை - சொல்வனம்

 சொல்வனம் 312வது இதழில் எனது அறிபுனைச் சிறுகதை 'சரோஜாதேவி புத்தகம்' வெளியாகியிருக்கிறது.

சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு நன்றிகள்...
சிறுகதையை சொல்வனம் இதழில் வாசிக்க, பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.







Thursday, 1 February 2024

அட்சயபாத்திரம் - சிறுகதை - வாசகசாலை

 வாசகசாலையின் இந்த வார இதழில் எனது சிறுகதை 'அட்சயபாத்திரம்' வெளியாகியிருக்கிறது. 

எனது சிறுகதையைத் தெரிவு செய்து வெளியிட்ட வாசகசாலை இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

சிறுகதையை வாசகசாலை இதழில் வாசிக்க, பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.

https://vasagasalai.com/atchayapathiram-sirukathai-ram-prasath-vasagasalai-88/

சிறுகதையை வாசித்துவிட்டுக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.




Monday, 29 January 2024

Searching for God - Metastellar - Science Fiction, Fantasy and Speculative Fiction Magazine

My story "Searching for God" has been published in MetaStellar. It was first published in SCIence FIction Shorts.

As literary science fiction, "Searching for God" cites evidence for the quintessential question: who created us? - a fundamental question about Gods and Creation in general.

Want to see an alternative theory to Prometheus or Alien Covenant? 

Check out the story in the following link:

https://www.metastellar.com/fiction/searching-for-god/

MetaStellar is an online publication focusing on science fiction, fantasy, and speculative fiction.







 

Saturday, 27 January 2024

Alpha male என்பவன் யார்?

 Alpha male என்பவன் யார்?



Alpha male யார் என்ற விவாதம் இணையத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்குத் தோன்றுவதைப் பதிகிறேன்.


1. யாருக்கு வெற்றியாளனாக ஆக, அடுத்தவர் முதுகில் குத்துவது, பொய் சொல்வது, ஆட்டத்தைக் கலைப்பது, அடுத்தவனுக்கான வாய்ப்பை வலிந்து தடுப்பது  போன்றவைகள் தேவைப்படாதோ அவர் ஆல்ஃபா ஆண்.


2. ஆல்ஃபா ஆணை நேர்மையான வழிகளில் வீழ்த்துவது கடினம். வீழ்த்தினாலும், எழுந்துவிடுவான். வீழ்த்த முயல்பவர்கள் தான் சோர்ந்துபோவார்கள்.


3. ஆல்ஃபா ஆணின் பாதைகளை, பயணங்களை எல்லோராலும் மேற்கொள்ள இயலாது அல்லது மேற்கொள்வது கடினம். அவனது பாதைகள், பயணங்கள் மிகவும் தனித்துவமாக இருக்கும்.


4. ஆல்ஃபா ஆண்களின் திறன்களை, அது வெளியே தெரிந்தால் 'அத்திறன் நம்மிடமிருந்தும் எதிர்பார்க்கப்படும், அது சாத்தியமில்லை' என்ற insecurity காரணமாக, வெளியே தெரிய விடாமல், கண்டும் காணாதது போல், தெரிந்தும் தெரியாதது போல், உணர்ந்தும் உணராதது போல் மற்றவர்கள் நடிப்பார்கள். இருக்கும் இடத்தில், எல்லாத் திறன்களும் இருந்தாலும் மற்றவர்களின் பொறாமைகளால், insecurityகளால், குறைத்து மதிப்பிடப்பட்டு நடத்த்ப்படுவார் ஆல்ஃபா ஆண்.


பல சமயங்களில் இது 'உச்சு..ஐயோ பாவம்' என்று சொல்ல வைக்கும். ஆனால் சம்பந்தப்பட்ட ஆல்ஃபா ஆண்கள் எனக்கென்ன என்பது போல் இருப்பார்கள். ஏனெனில் அவர்களின் நோக்கமே வேறு. வெளியிலிருந்து பார்க்க, ஆல்ஃபா ஆண் மற்றவர்களின் மதிப்பீடுகளை மதிக்காமல் போவதாக இது காட்சி தரும். 'திமிரு தானே' என்று சொல்லவைக்கும்.


ஆல்ஃபா ஆண்கள் இப்படித்தான் அடுத்தவர்களின் மதிப்பீடுகளை மதிக்காதவராகத் , திமிராகத் திரிபவராகத் தோற்றம் தருவார். காரணம் ஒன்று தான். 'He is just focussed on his business, playing a different game'. அவ்வளவுதான். உண்மையில் மற்றவர்கள் தான் இவரை திமிர் பிடித்தவராகப் பார்ப்பார்கள். இவருக்கு அந்த மற்றவர்கள் யார் என்று கூட தெரியாது.


5.அ ஆல்ஃபா ஆண் சாத்தியப்படுத்தும் பலவற்றை, மற்றவர்களால் கனவு மட்டும் தான் காண முடியும். மற்றவர்களின் பிழைப்புக்கு அவைகள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். அதை பாலன்ஸ் செய்ய, அந்த மற்றவர்கள் ஆல்ஃபா ஆண்கள் குறித்து அவதூறு சொல்லி, எளிய குறைகளை பூதாகாரப்படுத்தி name tampering வேலைகளில் ஈடுபடுவார்கள். இதனால், ஒரு ஆல்ஃபா ஆண் எந்த சமூக இடத்திலும் அதிகமான criticism களுக்கு ஆளாவான். ஆனால் ஆல்ஃபா ஆண்களின் செயல்பாடுகள் அந்த நெருக்கடிகளையும் மீறி வெற்றியடையும். சிலருக்கு இந்த வெற்றிக்கு அவர்கள் பங்குபெறும் தளங்களுக்கு ஏற்ப கால தாமதம் ஏற்படலாம். ஆனால் இறுதியில் வெற்றியடைந்துவிடுவார்கள்.  


இந்தப் புள்ளியில் ஆல்ஃபா ஆண்கள் குறித்து மற்றவர்கள் உருவாக்கும் இது போன்ற அச்சுறுத்தல்களால் விலகிச்செல்வது பெண்களாகத்தான் இருக்கும். ஆனால், பிற்பாடு இதே பெண்கள் நடப்பதைப் புரிந்துகொண்டு அதே ஆல்ஃபா ஆண்களைத் தான் நாடுவார்கள். இப்படி யாரெல்லாம் நாடப்படுகிறார்களோ அவர்களெல்லாம் ஆல்ஃபா ஆண்களே.


5.ஆ. மேற்சொன்ன மற்றவர்களால் செய்யப்படும் name tamperingஆல் தனித்து விடப்படும் ஆல்ஃபா ஆண்கள் பெரும்பாலும் தனித்து தான் இயங்குவார்கள். ஆனால் அவ்விதம் தனிமைப்படுத்தப்படுவதால் அவர்கள் கெட்டுப்போக மாட்டார்கள்.  நேர்மாறாக, அந்தத் தனிமையையும் வெற்றிப் பாதைகளாக மாற்றுவார்கள் ஆல்ஃபா ஆண்கள்.


தனிமைப்படுத்தப்பட்டும் கெட்டுப்போகாமல் வெற்றியடைகிறான் என்றால் அவன் ஒரு ஆல்ஃபா ஆண்.


தட் 'கண்ணா, பன்னிங்கதான் கூட்டமா வரும்.. சிங்கம் சிங்கிலா தான் வரும்'  மொமென்ட் ஆல்ஃபா ஆண்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும்.


6. எல்லா ஆல்ஃபா ஆண்களுக்கும் பெண்களின் அருகாமை எப்போதும் இருக்கும். ரகசியமாகவோ வெளிப்படையாகவோ.


7. ஆல்ஃபா ஆண்களுக்கு பிறப்பிலேயே புத்தி கூர்மை, நினைவாற்றல், critical thinking என்று எல்லாமும் இருக்கும். இதன் பொருள் என்னவென்றால், குழப்பம் என்பது அவர்களுக்கு எப்போதுமே தற்காலிகம் தான். இந்த தற்காலிக கால கட்டத்தில் அவரை அண்டிய மனிதர்களுக்கு, அந்த தற்காலிகத்தன்மை காரணமாக, அந்த ஆல்ஃபா ஆண் மாறிவிட்டது போல் தோன்றும். 'முன்னெல்லாம் நீ இப்படி இல்லை' என்கிற வாக்கியங்கள் இப்படித்தான் இவர்களைச் சுற்றி எழும். இத்ற்குக் காரணம், அவர் குழம்பியிருந்த தற்காலிக காலகட்டத்தில் உருவான உறவுகளே. அதனால் தானோ என்னவோ ஆல்ஃபா ஆண்கள் உறவுகளைப் புதுப்பிப்பதில் சுணக்கம் காட்ட மாட்டார்கள். மற்றவர்கள் பார்வைக்கு அது ஸ்திரி லோலனாகவோ அல்லது வெகு ஜன சமூகத்தின் மதிப்பீடுகளை மதிக்காதவராகவோ தெரிவதில் ஆச்சர்யமில்லை. கேள்வி: புத்தி கூர்மை , நினைவாற்றல் Critical thinking கொண்ட அந்த ஒருவர் தவிர்ந்த ஏனைய எல்லோர்க்கும் சாதகமான முறையில் அது ஏன் இருக்கிறது, அப்படியென்றால் அது ஒரு planned orchestration என்பதுதான். ஆனால் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டால், ஆல்ஃபா ஆணின் வளர்ச்சியை எப்படி மட்டுப்படுத்துவது? ஆதலால் இந்த கேள்வியைக் கேட்க யாரும் இருக்கமாட்டார்கள். இதற்குப் பல பெயர்கள் 'துரோகம்', 'ஜெயிக்கிற குதிரை என்று தெரிந்து வளைத்துப் போடுதல்', 'அப்படி வளைத்து போட முயன்று தோற்ற வெறுப்பைக் குழி வெட்டுவதில் காட்டுதல்'. உண்மையில், இவைகள் தான் மிருக நடத்தைகள். ஆனால், ஆல்ஃபா ஆணை animal என்றாக்கி வைத்திருக்கிறோம் என்பதுதான் முரண் நகை..


8. ஆல்ஃபா ஆண்கள் செய்யும் பலவற்றை, மற்றவர்களால் செய்ய முடியாது. பிரச்சனை என்னவென்றால், இந்த phenomenonஐ தரிசிக்க ஒரு பார்வை தேவைப்படுகிறது.  உதாரணமாக ஒரு லட்சம் முதலீட்டை ஒரே வருடத்தில் ஒருவர் ஒரு கோடி ஆக்கியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதே நேரம், ஒரு கோடி கடன் இருந்த ஒருவர் கடனையெல்லாம்  அதே ஒரு வருடத்தில் அடைத்துவிட்டு என்பது லட்சம் உருவாக்கியிருப்பார். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு ஒரு கோடி உருவாக்கியவர் தான் வெற்றியாளர் என்ற தோற்றம் தரும். உண்மையில், ஆல்ஃபா ஆண், ஒருகோடியே என்பது லட்சம் உருவாக்கியிருப்பார். அது வெளியிலேயே தெரியாது..  நம்மில் பலர் ஆல்ஃபா ஆண்களைக் காணத்தவறுவதும் இப்படித்தான்.  (பாஸ், அதெப்படி ஒரு கோடி.. ஒரே வருடத்தில் ஹிஹி... என்பவர்களுக்கு... உதாரணம் சொல்லி விளக்கவே சொன்னேன்.. உதாரணமாகவே கருதவும்..)..


மற்றபடி Animal திரைப்படத்தில் காட்டப்படுவது மிதமிஞ்சிய சைக்கோத்தனம் என்பது தான் எனது வாதமும் கூட. நாம் அது போன்ற திரைப்படங்களைப் புறக்கணிப்பது நல்லது. அது போன்ற திரைப்படங்கள், ஆல்ஃபா ஆண் குறித்த அசலான மதிப்பீடுகளை குழப்ப மட்டுமே உதவுகின்றன. தெளிவுபடுத்த இப்படி பதிவுகளெல்லாம் போட வேண்டி இருக்கிறது.


 நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விழைவதெல்லாம் இதைத்தான்.

1. ஆல்ஃபா ஆண்கள் இருக்கிறார்கள். ஆல்ஃபா ஆண் phenomenon உண்மையே.

2.  உங்களை insecured ஆக வைப்பது அவர்களின் வாழ்வியல் நோக்கமெல்லாம் இல்லை. 

3. ஆல்ஃபா ஆண்கள் பெண்களை மதிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில், அடிப்படையில் எல்லா ஆல்ஃபா ஆண்களும் big thinkers. சமூகத்தைக் கட்டமைப்பதில் பெண்களின் பங்கு என்ன என்பது அவர்களுக்குத் துள்ளியமாகத் தெரியும். அது தெரிந்தவர்கள் பெண் இனத்தை மதிப்பாகப் பார்க்கவே வாய்ப்பதிகம். 

4 ஆல்ஃபா ஆண்களை உருவாக்குவது சாட்சாத்  நீங்கள் தான். உங்களுக்கு அவர்கள் இருக்கக்கூடாதென்றால், அவர்கள் மீதான  உங்கள் அணுகுமுறையை நீங்கள் மாற்ற வேண்டும். பிரச்சனை என்னவென்றால், அது  உங்களால் முடியாது. இயற்கையின் சூட்சுமம் அதுதான்.

Monday, 1 January 2024

'தோப்பு' சிறுகதைத் தொகுதி - காலாக்ஸி பதிப்பகம்

நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024. 


கேலாக்ஸி பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் தேர்வான சிறுகதைகள் தொகுப்பு நூலாக எதிர்வரும் புத்தகக் கண்காட்சியில் வெளியாக இருக்கிறது.  நூலின் பெயர் 'தோப்பு'. எதிர்வரும் புத்தகக் கண்காட்சியில் கேலாக்ஸி பதிப்பக ஸ்டாலில் கிடைக்கும். நூலின் அட்டையை இணைத்திருக்கிறேன். நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

இத்தொகுப்பில் எனது சிறுகதையான 'போர்' சிறுகதையும் இடம்பெற்றிருக்கிறது. இச்சிறுகதைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், மிக முக்கியமான, அழுத்தமான சிறுகதையாக இச்சிறுகதையை நான் கருதுகிறேன் - நான் எழுதியது என்பதால் அல்ல, இலக்கியம் குறித்து எனக்கு இருக்கும் பிடிமானத்தின் அடிப்படையில் சிறுகதையின் உள்ளடக்கத்தை வைத்துத்தான். 

குறும்படங்களுக்கு சிறுகதைகள் கேட்டு அவ்வப்போது உள்பெட்டியில் அணுகுபவர்களுக்கு: அதற்கு இந்தச் சிறுகதை கச்சிதமாய்ப் பொருந்தும். அதிபுனைவு என்பதால் யோசிக்க வேண்டியதில்லை. இச்சிறுகதையைக் குறும்படமாகவோ அல்லது நாடக வடிவிலோ உருவாக்க யாரேனும் முன்வரின் உதவத் தயாராக இருக்கிறேன்.







Sunday, 31 December 2023

Blanets

 Blanets


பாஸ். அது Planets, Blanets அல்ல என்று யாரேனும் திருத்த முயற்சிக்கக் கூடும்.. 

ஆம். நீங்கள் சரியாகத்தான் வாசித்திருக்கிறீர்கள். முதல் எழுத்து 'P' அல்ல, 'B' தான். 

பொதுவாக சூரியனைச் சுற்றி உருவாகும் கிரகங்களை Planets என்போம். சூரியனின் இடத்தில் சூரியனுக்கு பதிலாக ஒரு கருந்துளை Blackhole இருப்பின்,  அப்படிப் பட்ட கருந்துளைகளைச் சுற்றியும் ஒரு பாதுகாப்பான இடத்தில் கிரகங்கள் அமையப்பெறலாமாம். அப்படி அமைந்தால் அது Blanet ஆகிறதாம். இது போன்ற கிரகங்களில் வளி மண்டலம் இருக்கலாம், உயிர்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிறது நவீன அறிவியல். இப்படி ஒரு Blanet எங்கிருக்கிறது என்று கேட்போருக்கு? 

Blanets எல்லாம் hypothetical தானாம். அதாவது, இவைகள் இருப்பதைத் தியரியாக கணிக்க முடியும். இவ்வகைமையில் ஒன்றை மனித இனம் இதுகாறும் கண்டுபிடித்திடவில்லை. 

ஆயினும், நமக்கெல்லாம் புரிகிறார்போல் ஒன்றைச் சொல்ல வேண்டுமானால், க்ரிஸ்டோஃபர் நோலனின் Interstellar திரைப்படத்தில் Gargantua எனப்படும் கருந்துளையைச் சுற்றி வரும் 'மில்லர் கிரகம்' என்றழைக்கப்படும் நீர்க்கிரகம் இப்படி ஒரு Blanet தான். இந்த Blanetல் தரையிறங்கித்தான் இருபத்து சொச்சம் ஆண்டுகளைக் கழித்திருப்பார் கதை நாயகன், கூப்பர்.


Friday, 24 November 2023

கேலக்ஸி முதலாமாண்டு உலகளாவிய சிறுகதைப் போட்டி- 2023

 கேலக்ஸி முதலாமாண்டு உலகளாவிய சிறுகதைப் போட்டி- 2023ல் மொத்தம் 212  கதைகளில் சிறுகதைத் தொகுதி  நூலுக்கென தேர்வு செய்யப்பட்ட 18 சிறுகதைகளில் ஒன்றாக எனது 'போர்' சிறுகதையும் தேர்வாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  

எனது சிறுகதையைத் தேர்வு செய்த கேலக்ஸி சிறுகதைப்போட்டி நடுவர்களுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.   

எதிர்வரும் 2024 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இச்சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியிடப்படும்.


கேலக்ஸி முதலாமாண்டு உலகளாவிய சிறுகதைப் போட்டி- 2023 முடிவுகள்
அனைவருக்கும் வணக்கம்,
கேலக்ஸியின் முதலாமாண்டு சிறுகதைப் போட்டியின் முடிவுகளை உங்களுக்குத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
எங்களின் எதிர்பார்ப்பைக் கடந்து வந்து குவிந்த கதைகளில் 212 கதைகள் முதல் சுற்றுக்குத் தேர்வாகின. அதிலிருந்து நடுவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் 92 கதைகள் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வாகின. அதன்பின் 25 கதைகள் மூன்றாம் சுற்றுக்குத் தேர்வாகின. நிறைவுச் சுற்றுக்கு 18 கதைகள் என்றிருந்த நிலையில், எல்லாக் கதைகளும் போட்டி போட்டுக் கொண்டு மதிப்பீட்டில் முன்னும் பின்னுமாய் நிற்க, 25 கதைகளையும் முதன்மை நடுவருக்கு அனுப்பிக் கொடுத்தோம். அவரும் தனது பணிகளுக்கு இடையே, துலாக்கோல் கொண்டு தேடி, மிகச் சிறந்த பதினெட்டுக் கதைகளைத் தேர்வு செய்து, அதிலிருந்து சிறந்த 5 கதைகளைப் பரிசுக்குரிய கதைகளாகத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி.
இந்தப் போட்டிக்கான மொத்தப் பரிசுத்தொகையான ரூ.12000-த்தை தமிழ் மீது கொண்ட காதலாலும், புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நல் எண்ணத்தாலும் கல்லிடைக்குறிச்சி, தேசியக் கல்வி அறக்கட்டளை நிறுவனர், தமிழ்ப் பற்றாளர், முனைவர் ஆ. முகமது முகைதீன் அவர்கள் வழங்கியுள்ளார்கள் என்பதை மகிழ்வுடனும் நன்றியுடனும் கேலக்ஸி குழுமம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறது.
போட்டி முடிவுகள் :
முதல் பரிசுக்கதை : அமிர்தத்துளி - விஜிரவி, ஈரோடு
இரண்டாம் பரிசுக்கதை : பூரணம் - காயத்ரி.ஒய், சென்னை
மூன்றாம் பரிசுக்கதை : காலங்கள் மாறும் - அனந்த் ரவி, பெரும்பாக்கம்
சிறப்புப் பரிசுக் கதைகள்
1. : மனித யானை - ஆர். இராஜசேகரன், சென்னை
2. : சாதாரணன் சிவா - படிப்பகத்தான், கடியப்பட்டணம்
சிறுகதைத் தொகுப்புக்குத் தேர்வான மற்ற கதைகள்:
6. பாவமும் பரிகாரமும் - எம்.சங்கர், சென்னை.
7. எல்லோரும் கொண்டாடுவோம் - கல்பனா சன்யாசி, சென்னை.
8. சக்தியின் வடிவம் - எஸ். அர்ஜூன் சிவகாமிநாதன், சென்னை.
9. வடக்கிரு - மாலா மாதவன், சென்னை.
10. உனக்கும் கிழக்கு உண்டு - ப்ரஸன்னா வெங்கடேஷ், நவி மும்பை.
11. சபதம் - ஆர்.சுமதி, மஹாராஸ்டிரா.
12. ஹோம் மேக்கர் - தி.சுதா, ஸ்ரீரங்கம்.
13. சுயம் - ‘அலை ’ யுவராஜன், கல்பாக்கம்.
14. போர் - ராம்பிரசாத்
15. மீனாட்சி திருக்கல்யாணம் - மைதிலி கல்யாணி
16. நீங்கள் கேட்டவை - ஜெயசீலன் சாமுவேல் [ஜெ.சா]
17. அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் - பூபதி பெரியசாமி, புதுச்சேரி
18. இவள் வேற மாதிரி - ஜே. செல்லம் ஜெரினா, சென்னை
வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

போட்டி முடிவுகள் கலந்து கொண்ட 212 பேருக்கும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.