என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday 27 January 2024

Alpha male என்பவன் யார்?

 Alpha male என்பவன் யார்?



Alpha male யார் என்ற விவாதம் இணையத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்குத் தோன்றுவதைப் பதிகிறேன்.


1. யாருக்கு வெற்றியாளனாக ஆக, அடுத்தவர் முதுகில் குத்துவது, பொய் சொல்வது, ஆட்டத்தைக் கலைப்பது, அடுத்தவனுக்கான வாய்ப்பை வலிந்து தடுப்பது  போன்றவைகள் தேவைப்படாதோ அவர் ஆல்ஃபா ஆண்.


2. ஆல்ஃபா ஆணை நேர்மையான வழிகளில் வீழ்த்துவது கடினம். வீழ்த்தினாலும், எழுந்துவிடுவான். வீழ்த்த முயல்பவர்கள் தான் சோர்ந்துபோவார்கள்.


3. ஆல்ஃபா ஆணின் பாதைகளை, பயணங்களை எல்லோராலும் மேற்கொள்ள இயலாது அல்லது மேற்கொள்வது கடினம். அவனது பாதைகள், பயணங்கள் மிகவும் தனித்துவமாக இருக்கும்.


4. ஆல்ஃபா ஆண்களின் திறன்களை, அது வெளியே தெரிந்தால் 'அத்திறன் நம்மிடமிருந்தும் எதிர்பார்க்கப்படும், அது சாத்தியமில்லை' என்ற insecurity காரணமாக, வெளியே தெரிய விடாமல், கண்டும் காணாதது போல், தெரிந்தும் தெரியாதது போல், உணர்ந்தும் உணராதது போல் மற்றவர்கள் நடிப்பார்கள். இருக்கும் இடத்தில், எல்லாத் திறன்களும் இருந்தாலும் மற்றவர்களின் பொறாமைகளால், insecurityகளால், குறைத்து மதிப்பிடப்பட்டு நடத்த்ப்படுவார் ஆல்ஃபா ஆண்.


பல சமயங்களில் இது 'உச்சு..ஐயோ பாவம்' என்று சொல்ல வைக்கும். ஆனால் சம்பந்தப்பட்ட ஆல்ஃபா ஆண்கள் எனக்கென்ன என்பது போல் இருப்பார்கள். ஏனெனில் அவர்களின் நோக்கமே வேறு. வெளியிலிருந்து பார்க்க, ஆல்ஃபா ஆண் மற்றவர்களின் மதிப்பீடுகளை மதிக்காமல் போவதாக இது காட்சி தரும். 'திமிரு தானே' என்று சொல்லவைக்கும்.


ஆல்ஃபா ஆண்கள் இப்படித்தான் அடுத்தவர்களின் மதிப்பீடுகளை மதிக்காதவராகத் , திமிராகத் திரிபவராகத் தோற்றம் தருவார். காரணம் ஒன்று தான். 'He is just focussed on his business, playing a different game'. அவ்வளவுதான். உண்மையில் மற்றவர்கள் தான் இவரை திமிர் பிடித்தவராகப் பார்ப்பார்கள். இவருக்கு அந்த மற்றவர்கள் யார் என்று கூட தெரியாது.


5.அ ஆல்ஃபா ஆண் சாத்தியப்படுத்தும் பலவற்றை, மற்றவர்களால் கனவு மட்டும் தான் காண முடியும். மற்றவர்களின் பிழைப்புக்கு அவைகள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். அதை பாலன்ஸ் செய்ய, அந்த மற்றவர்கள் ஆல்ஃபா ஆண்கள் குறித்து அவதூறு சொல்லி, எளிய குறைகளை பூதாகாரப்படுத்தி name tampering வேலைகளில் ஈடுபடுவார்கள். இதனால், ஒரு ஆல்ஃபா ஆண் எந்த சமூக இடத்திலும் அதிகமான criticism களுக்கு ஆளாவான். ஆனால் ஆல்ஃபா ஆண்களின் செயல்பாடுகள் அந்த நெருக்கடிகளையும் மீறி வெற்றியடையும். சிலருக்கு இந்த வெற்றிக்கு அவர்கள் பங்குபெறும் தளங்களுக்கு ஏற்ப கால தாமதம் ஏற்படலாம். ஆனால் இறுதியில் வெற்றியடைந்துவிடுவார்கள்.  


இந்தப் புள்ளியில் ஆல்ஃபா ஆண்கள் குறித்து மற்றவர்கள் உருவாக்கும் இது போன்ற அச்சுறுத்தல்களால் விலகிச்செல்வது பெண்களாகத்தான் இருக்கும். ஆனால், பிற்பாடு இதே பெண்கள் நடப்பதைப் புரிந்துகொண்டு அதே ஆல்ஃபா ஆண்களைத் தான் நாடுவார்கள். இப்படி யாரெல்லாம் நாடப்படுகிறார்களோ அவர்களெல்லாம் ஆல்ஃபா ஆண்களே.


5.ஆ. மேற்சொன்ன மற்றவர்களால் செய்யப்படும் name tamperingஆல் தனித்து விடப்படும் ஆல்ஃபா ஆண்கள் பெரும்பாலும் தனித்து தான் இயங்குவார்கள். ஆனால் அவ்விதம் தனிமைப்படுத்தப்படுவதால் அவர்கள் கெட்டுப்போக மாட்டார்கள்.  நேர்மாறாக, அந்தத் தனிமையையும் வெற்றிப் பாதைகளாக மாற்றுவார்கள் ஆல்ஃபா ஆண்கள்.


தனிமைப்படுத்தப்பட்டும் கெட்டுப்போகாமல் வெற்றியடைகிறான் என்றால் அவன் ஒரு ஆல்ஃபா ஆண்.


தட் 'கண்ணா, பன்னிங்கதான் கூட்டமா வரும்.. சிங்கம் சிங்கிலா தான் வரும்'  மொமென்ட் ஆல்ஃபா ஆண்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும்.


6. எல்லா ஆல்ஃபா ஆண்களுக்கும் பெண்களின் அருகாமை எப்போதும் இருக்கும். ரகசியமாகவோ வெளிப்படையாகவோ.


7. ஆல்ஃபா ஆண்களுக்கு பிறப்பிலேயே புத்தி கூர்மை, நினைவாற்றல், critical thinking என்று எல்லாமும் இருக்கும். இதன் பொருள் என்னவென்றால், குழப்பம் என்பது அவர்களுக்கு எப்போதுமே தற்காலிகம் தான். இந்த தற்காலிக கால கட்டத்தில் அவரை அண்டிய மனிதர்களுக்கு, அந்த தற்காலிகத்தன்மை காரணமாக, அந்த ஆல்ஃபா ஆண் மாறிவிட்டது போல் தோன்றும். 'முன்னெல்லாம் நீ இப்படி இல்லை' என்கிற வாக்கியங்கள் இப்படித்தான் இவர்களைச் சுற்றி எழும். இத்ற்குக் காரணம், அவர் குழம்பியிருந்த தற்காலிக காலகட்டத்தில் உருவான உறவுகளே. அதனால் தானோ என்னவோ ஆல்ஃபா ஆண்கள் உறவுகளைப் புதுப்பிப்பதில் சுணக்கம் காட்ட மாட்டார்கள். மற்றவர்கள் பார்வைக்கு அது ஸ்திரி லோலனாகவோ அல்லது வெகு ஜன சமூகத்தின் மதிப்பீடுகளை மதிக்காதவராகவோ தெரிவதில் ஆச்சர்யமில்லை. கேள்வி: புத்தி கூர்மை , நினைவாற்றல் Critical thinking கொண்ட அந்த ஒருவர் தவிர்ந்த ஏனைய எல்லோர்க்கும் சாதகமான முறையில் அது ஏன் இருக்கிறது, அப்படியென்றால் அது ஒரு planned orchestration என்பதுதான். ஆனால் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டால், ஆல்ஃபா ஆணின் வளர்ச்சியை எப்படி மட்டுப்படுத்துவது? ஆதலால் இந்த கேள்வியைக் கேட்க யாரும் இருக்கமாட்டார்கள். இதற்குப் பல பெயர்கள் 'துரோகம்', 'ஜெயிக்கிற குதிரை என்று தெரிந்து வளைத்துப் போடுதல்', 'அப்படி வளைத்து போட முயன்று தோற்ற வெறுப்பைக் குழி வெட்டுவதில் காட்டுதல்'. உண்மையில், இவைகள் தான் மிருக நடத்தைகள். ஆனால், ஆல்ஃபா ஆணை animal என்றாக்கி வைத்திருக்கிறோம் என்பதுதான் முரண் நகை..


8. ஆல்ஃபா ஆண்கள் செய்யும் பலவற்றை, மற்றவர்களால் செய்ய முடியாது. பிரச்சனை என்னவென்றால், இந்த phenomenonஐ தரிசிக்க ஒரு பார்வை தேவைப்படுகிறது.  உதாரணமாக ஒரு லட்சம் முதலீட்டை ஒரே வருடத்தில் ஒருவர் ஒரு கோடி ஆக்கியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதே நேரம், ஒரு கோடி கடன் இருந்த ஒருவர் கடனையெல்லாம்  அதே ஒரு வருடத்தில் அடைத்துவிட்டு என்பது லட்சம் உருவாக்கியிருப்பார். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு ஒரு கோடி உருவாக்கியவர் தான் வெற்றியாளர் என்ற தோற்றம் தரும். உண்மையில், ஆல்ஃபா ஆண், ஒருகோடியே என்பது லட்சம் உருவாக்கியிருப்பார். அது வெளியிலேயே தெரியாது..  நம்மில் பலர் ஆல்ஃபா ஆண்களைக் காணத்தவறுவதும் இப்படித்தான்.  (பாஸ், அதெப்படி ஒரு கோடி.. ஒரே வருடத்தில் ஹிஹி... என்பவர்களுக்கு... உதாரணம் சொல்லி விளக்கவே சொன்னேன்.. உதாரணமாகவே கருதவும்..)..


மற்றபடி Animal திரைப்படத்தில் காட்டப்படுவது மிதமிஞ்சிய சைக்கோத்தனம் என்பது தான் எனது வாதமும் கூட. நாம் அது போன்ற திரைப்படங்களைப் புறக்கணிப்பது நல்லது. அது போன்ற திரைப்படங்கள், ஆல்ஃபா ஆண் குறித்த அசலான மதிப்பீடுகளை குழப்ப மட்டுமே உதவுகின்றன. தெளிவுபடுத்த இப்படி பதிவுகளெல்லாம் போட வேண்டி இருக்கிறது.


 நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விழைவதெல்லாம் இதைத்தான்.

1. ஆல்ஃபா ஆண்கள் இருக்கிறார்கள். ஆல்ஃபா ஆண் phenomenon உண்மையே.

2.  உங்களை insecured ஆக வைப்பது அவர்களின் வாழ்வியல் நோக்கமெல்லாம் இல்லை. 

3. ஆல்ஃபா ஆண்கள் பெண்களை மதிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில், அடிப்படையில் எல்லா ஆல்ஃபா ஆண்களும் big thinkers. சமூகத்தைக் கட்டமைப்பதில் பெண்களின் பங்கு என்ன என்பது அவர்களுக்குத் துள்ளியமாகத் தெரியும். அது தெரிந்தவர்கள் பெண் இனத்தை மதிப்பாகப் பார்க்கவே வாய்ப்பதிகம். 

4 ஆல்ஃபா ஆண்களை உருவாக்குவது சாட்சாத்  நீங்கள் தான். உங்களுக்கு அவர்கள் இருக்கக்கூடாதென்றால், அவர்கள் மீதான  உங்கள் அணுகுமுறையை நீங்கள் மாற்ற வேண்டும். பிரச்சனை என்னவென்றால், அது  உங்களால் முடியாது. இயற்கையின் சூட்சுமம் அதுதான்.