Monday, 18 May 2015
Wednesday, 6 May 2015
Sunday, 3 May 2015
கிஷ்ணா – ( சிறுகதை ) / ராம்ப்ரசாத்
கிஷ்ணா – ( சிறுகதை ) / ராம்ப்ரசாத்
May. 02
அவனை எல்லாரும் அப்படித்தான் அழைப்பார்கள்.
அப்போது எனக்கு பதினாறு வயது இருக்கலாம். சைதாப்பேட்டையில் , பிள்ளையார் கோயில் தெருவில் வாடகைக்கு குடியிருந்தோம். நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன்.
வீட்டு உரிமையாளர் பேரன் பேத்தி பார்த்தவர். மாடியில் இருந்துகொண்டு, கீழ் வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். எங்கள் வீட்டையும் சேர்த்து அங்கே ஆறு போர்ஷன்கள் அவருடையதாய் இருந்தது. அவர் வேலைக்கென்று போய் நான் பார்த்தது இல்லை. அவருக்கு இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணமாகி, மூத்தவனுக்கு ஒரு ஆண் பிள்ளையும், இளையவனுக்கு ஒரு பெண் பிள்ளையும் இருந்தது. அவருக்கு ஒரு தம்பி உண்டு. அரசியலில் இருக்கிறார் என்று அக்கம்பக்கத்தில் சொல்வார்கள். அப்போதைய திமுக பிரமுகர் ஒருவருடன் இணைந்து கொண்டு ஆங்காங்கே தென்படுவார். தேர்தல் நேரத்தில் அந்த பிரமுகர் வீடுவீடாக ஓட்டு சேகரிக்க வருகையில், அவரும் அவர் மனைவியும் வாசல் வரை வந்து ஆரத்தி எடுப்பார்கள். மற்றபடி அவர் உண்மையில் அரசியலில் என்னவாக இருந்தார் என்பது நான் உள்பட யாருக்கும் விளங்கியதில்லை. எங்கள் ஆறு போர்ஷனுக்கு பின்புறம் எட்டு போர்ஷன்கள் அவருக்கு சொந்தமாய் இருந்தன. அவைகளை அவரும் வாடகைக்கு விட்டிருந்தார்.
நாங்கள் அங்கே குடியேறியபோது, எங்கள் யாருக்கும் கிஷ்ணா, யார் என்பது தெரியாது. இன்னும் சொல்லப்போனால், குடிவந்த சில வருஷங்களில் கூட எங்களுக்கு தெரியவரவில்லை. அவனை நாங்கள் எல்லோருமே , ஒருமித்த கருத்துடன், பைத்தியம் என்று தான் நினைத்திருந்தோம்
அந்தளவிற்கு கிஷ்ணாவின் தோற்றமே பயமுறுத்தும்.
ஐந்தடியில் ஒல்லியான தேகம். உடலெல்லாம் முடி. சவரம் செய்து நாளான முகம். செம்பட்டையும் வெள்ளையுமாய் தலை முடி. எப்போதுமே மயங்கிச் செருகும் கண்கள். கிழிந்த நைந்த அழுக்கேறிய சட்டை. கிழிந்த இடத்திலெல்லாம் கையாலேயே அனுபவமின்றி, முறையான தையல் அறிவு இன்றி ஒட்டுப்போட்டிருப்பதை பார்க்கும்போதெல்லாம், அந்த வேலையைச் அவனே தான் செய்திருக்கிறான் என்பதை என்னைப்போலவே , பார்க்க நேர்ந்த அனைவரும் நினைத்தனர் என்று எனக்கு தெரிந்திருந்தது. எப்போதும் ஒரு விதமான சாராய நெடி. நடக்கையிலேயே தள்ளாட்டம் கண்கூடாகத் தெரியும். பல சமயங்களில் கட்டியிருக்கும் அழுக்கடைந்த வெள்ளை வேட்டி எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடலாம் என்கிற தோரணையில், தாயின் முந்தானையை பிடித்துக்கொண்டே நடக்கும் பிள்ளை போல, அவனது இடுப்பை பலகீனமாக கவ்வி தவழும். அவ்வப்போது தனக்குத் தானே பேசிக்கொள்வான். எப்போதுமே குடித்திருப்பதால், ஒரு விதமாக குழறி குழறியே அவன் பேச்சு இருக்கும். அந்த மொழி யாருக்குமே புரியாது.
தெருமுனையில் உள்ள போர் பைப் அருகில் குடித்துவிட்டு விழுந்து கிடப்பான். ஏதாவது ஒரு தெரு நாய் அவன் கால்களின் மீது தலை வைத்து படுத்துக்கிடக்கும். பிற்பாடு அவனாகவே எழுந்து, தள்ளாடியபடியே நடந்து எங்கள் வீட்டு மாடி வராந்தையில் வந்து அமர்ந்துகொள்வான். அவனுடன் தெரு நாய்களும் வராந்தை வரை வரும். தெரு நாய்கள் அவனை தொடர்ந்து வருவதாலேயே, குடித்தனக்காரர்கள் அவனை ஏசுவார்கள். நாய்களை விரட்டுவார்கள். பகல் நேரங்களில் தான் இப்படி. இரவுகளில் மாடியில் நாய்கள் அவ்வப்போது ஊளையிடும் சத்தம் கேட்கும்.
கிஷ்ணாவுடன் இருக்கும் நாய்கள் என்று நாங்கள் நினைத்துக்கொள்வோம். நாய்கள் இருப்பதால், திருடர்கள் பயம் இருக்காது என்பதால், அதை யாரும் பெரிதாக ஏதும் சொல்வதில்லை. அவைகளுக்கு அவன் உணவோ, வேறு ஏதேனும் பராமரிப்போ செய்யாதபோதிலும் அந்த நாய்கள் அவனையே எப்படி ஒட்டிக் கிடக்கின்றன என்பது குறித்து நாங்கள் அவ்வப்போது பேசுகையில் வியந்திருக்கிறோம்..இன்னும் சொல்லப்போனால், பல வீடுகளில் இந்த தெரு நாய்களின் பாதுகாப்பிற்கெனவே, கிருஷ்ணாவை அவர்கள் வீட்டில் தங்க வைக்க கூட உத்தேசித்தார்கள். மழை பெய்யும் இரவுகளில் மாடிக்கு செல்ல நேர்ந்த இரண்டொரு தினங்களில் அவன் வராந்தையிலேயே குளிரில் நனைந்தபடி அரை மயக்கமாக கிடப்பதை கவனித்திருக்கிறேன். அவன் எங்கே குளிக்கிறான், காலைக் கடன்களை எவ்வாறு கழிக்கிறான் என்பது பற்றியெல்லாம், தெரு பையன்களுக்குள் பேசுகையில், கேள்விகளாக எல்லோருமே கேட்டிருக்கிறோமே ஒழிய எவருக்கும் பதில் தெரிந்திருக்கவில்லை.
நானெல்லாம் தி. நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிக்கு போக காலை ஏழறைக்கெல்லாம் சாப்பாடு கட்டிக்கொண்டு வாசலுக்கு வருகையிலேயே தள்ளாடியபடியே கடந்து போவான் கிஷ்ணா. ‘காலையிலேயே மப்பா’ என்று அக்கம்பக்கத்தில் சலிப்பார்கள். அப்படியான தருணங்களில், அப்பா, வாசல் வரை வந்துவிட்ட என்னை மீண்டும் உள்ளே போகச் சொல்லி, ஒரு டம்ப்ளரில் தண்ணீர் கொடுத்து பருகச் சொல்லிவிட்டு மீண்டும் போகச் சொல்லுவார். இது போல் எத்தனையோ முறை நடந்திருக்கிறது. முதலில் அப்படி நடக்கும்போதெல்லாம் , ஜாடை மாடையாக அவன் காது பட சொல்லி, அதற்கு பெரிதாக அவனிடமிருந்து பலன் ஏதும் இல்லாமல் போகவே, முகத்துக்கு நேராக திட்டியும் இருக்கிறார்கள் என் அப்பா உள்பட அக்கம்பக்கத்தில்.
‘கண்ணுக்கு லட்சணமா, ஒரு ஒழுங்குமுறையோட, கட்டுக்கோப்பா, இங்க இத்தனை குடும்பங்கள் வாழ்ந்துக்கிட்டு இருக்குற இடத்துல, அபசகுனம் மாதிரி தினம் தினம் இவனால எவ்ளோ தடங்கள்?’ என்று சொல்லாத குடும்பங்களே இல்லை எனலாம். இன்னும் பல குடும்பங்கள் என்னென்னவெல்லாமோ சொல்லி திட்டினாலும், எல்லோருமே பொதுவில் ‘ஒழுங்குமுறையோட, கட்டுக்கோப்பா’ என்கிற வார்த்தைகளை பயன்படுத்தியதை நான் கவனத்தில் கொண்டிருந்தேன். அந்த நேரத்திலெல்லாம் அவன் முகம் அரை மயக்கத்திலேயே இருக்க, நாளடைவில், அப்படியெல்லாம் சொல்வதையும் விட்டுவிட்டார்கள்.
இத்தனை இருந்தும் பெரிதாக அவன் மீது எந்த குறையும், எவரும் சொல்லவில்லை. தெருவில் இருக்கும் பெண் பிள்ளைகளிடம் சில பையன்கள் வம்பிழுத்ததாக பேச்சு வந்து, இரண்டு குடும்பங்களும் நடுத்தெருவில் சண்டை போட்டுக்கொண்ட போது, கிஷ்ணா மீது அப்படி ஒரு குற்றச்சாட்டு அதுவரை வந்ததில்லை என்பது குறித்து எல்லாருமே வியப்புடன் தான் பேசிக்கொண்டார்கள். அக்கம்பக்கத்தில் பைப் அடைத்துக்கொண்டால், அவனைத்தான் கூப்பிடுவார்கள். அவன் ஒன்றும் கை தேர்ந்த ப்ளம்பர் இல்லை. ஆனால், இப்படி கூப்பிடும் வீட்டுக்கெல்லாம் போய் சொன்ன வேலையைச் செய்து, கொஞ்சம் வேலை தெரிந்திருந்தபடியாலும், இவனை விட்டால் சாக்கடையில் கைவிட, வேறு ஆள் இல்லை என்பதாலும் எல்லோரும் இவனையே கூப்பிடுவார்கள். வேலை முடிந்ததும் கொஞ்சம் பணம் தருவார்கள். அந்த பணத்தில் தான் அன்றிரவு அவனுக்கு சாராயம் என்பது எல்லோருக்கும் தெரியும். கரன்ட் போய்விட்டாலோ, காத்தாடி எவர் வீட்டுக் கொடியிலாவது சிக்கிக் கொண்டாலொ, எவர் வீட்டுக்கேனும் மாவரைக்கவேண்டுமென்றாலோ, எவர் விட்டிலேனும் ஸ்விட்ச் பாக்ஸ் வேலை செய்யவில்லை என்றாலோ, வீடு காலி செய்யவேண்டுமென்றாலொ, எல்லோரும் கூப்பிடுவது கிஷ்ணாவைத்தான். எந்த வேலையையும் தனக்கு தெரியாது என்று அவன் சொன்னதே இல்லை. வேலைக்கேற்ப பணம். பணத்திற்கேற்ப சாராயம். இதுதான் கிஷ்ணா.
ஒரு முறை, நாங்கள் எல்லோரும் ஒன்று கூடி மொட்டை மாடியில் காத்தாடி விடக் கிளம்பினோம். தெருவின் மாஞ்சா வல்லுனன் கோபாலு வஜ்ரம், ஆல மர வேர், கலர் பவுடர், முட்டை . சோடா மாவு, பாட்டில் துண்டுகள், நாயின் கக்கா முதலானவற்றை சேர்த்து காய்ச்சி மாஞ்சா தயார் செய்தான். லோட்டாய் சுற்றி, சூஸ்திரம் போட்டு, வால் கட்டி காத்தாடியை பறக்க விட்டோம். உயர உயர பறந்த காத்தாடி நடுவானில் எங்களுடனான தொடர்பை இழந்து, தன் போக்கில் பறக்க, கிஷ்ணா நான்கு வீட்டின் மொட்டை மாடிகளை தாண்டி, ஓடிச்சென்று காத்தாடியின் அறுந்த நுனியை பற்றியதில் அவன் விரல்களில் மாஞ்சா கிழித்து ரத்தம் வந்தது.
எங்களுக்கு காத்தாடி கிடைத்த மகிழ்ச்சியில், காற்றின் பிரிதொரு திசையை பயன்படுத்திக்கொள்ள, வேறு நாண்பனின் வீட்டு மாடியில் முயற்சி செய்ய கிளம்பிவிட்டோம். பிற்பாடு இந்த நிகழ்வை மறந்தும் விட்டோம். நான்கு நாட்களுக்கு பிறகு, அவன் வராந்தையில் வாந்தியெடுத்து அதன் மீதே படுத்துக்கிடக்கையில் தான், எதேச்சையாக அந்தப் பக்கம் போக நேர்ந்த நான் கவனித்தேன், அவன் விரல்களில் இருந்த வெட்டுக்காயத்தில் ரத்தம் உறைந்து வடுவாகியிருந்தது. அதைப் பார்த்ததிலிருந்து, அவன் மீது எனக்கு ஏதோ இனம் புரியாத கரிசனம் தோன்றியது. எல்லோரும் அவனை கேலி செய்ய நான் மட்டும் மெளனமாக அவன் மீது பரிதாபம் கொண்ட நாட்கள் அவை.
அவனுக்கு வந்ததைச் செய்வான். ப்ளம்பிங், மின்சார இணைப்பு தருவது, சரிபார்ப்பது என்று அவன் செய்யும் வேலைகளுக்கு, அவனளவிற்கு வேலை தெரிந்த வேறொருவர் எனில், கேட்கப்படும் கூலியில் எளிதாக இரண்டு பேர் குடும்பம் நடத்தலாம் என்று அக்கம்பக்கத்தில் பேச்சுக்கள் உலவின. ஆயினும் அவன் அதிகம் கேட்பதில்லை. கொடுப்பதை வாங்கிக்கொள்வான். கிடைக்கிற கூலியில் சாராயம் குடிப்பான். கூலி இல்லையெனில் சுருண்டு படுத்துக்கொள்வான். அடித்துப் பிடுங்கியதாகவோ, இரைந்து கேட்டதாகவோ எங்கும் அவனைக் குறித்து பேச்சு இருக்கவில்லை. தெருவில் எல்லோருக்கும் உதவியாய் இருந்தான். பிரதிபலன் எதிர்பார்த்து எதையும் செய்து நான் பார்த்ததாக நினைவில் இல்லை. சும்மா கொடுத்து அவன் வாங்கியும் நான் பார்த்ததில்லை. பண்டிகைக்கு பலகாரங்கள் தந்தால் சிரித்துக்கொண்டே வாங்கிக் கொள்வான். அவற்றையும் பல சமயங்களில் தெரு நாய்களுக்கு தின்னக் கொடுத்துவிட்டு அவைகள் உண்பதை வேடிக்கை பார்த்தபடி அவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
அந்த வீட்டுக்கு குடி வந்து மூன்று வருடங்கள் இருக்கும். இந்த மூன்று வருடங்களில், அவன் எங்கு வேலையாக சுற்றினாலும் பொழுது சாய்ந்தால், எங்கள் வீட்டு மாடியில் வராந்தையிலேயே துணி விரித்து படுத்துக்கொள்வதை பார்த்துவிட்டு, அவனுக்கும் எங்கள் வீட்டு ஓனருக்கும் ஏதோ இருக்கிறது என்று ஒருவாறு நாங்கள் புரிந்துகொண்டோம்.
விடுமுறை நாட்களில், அக்கம்பக்கத்து சிறுவர்களுடன் அம்ர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் கிஷ்ணா பற்றி பேச்சு வருகையிலெல்லாம், அவன் எங்கே தங்குகிறான், அவன் வீடு எது, மனைவி குடும்பம் எல்லாம் இருக்கிறதா, அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றெல்லாம் பலவாறாக பேசிக்கொள்ளும் போது தான், எங்கள் வீட்டு ஓனரின் தம்பியின் பிள்ளைகள் பள்ளிக்கு மதிய உணவு தர அவன் போய் வரத்துவங்கியிருப்பது, அதே பள்ளியில் படிக்கும் தெரு பிள்ளைகள் சொல்லி தெரியவந்தது. அந்த தெருவில் வசிக்கும் இன்ன பிற குடும்பங்களை விட எங்கள் வீட்டு உரிமையாளர் குடும்பத்துக்கும் அவனுக்குமான கூடுதல் ஒட்டுதல் கொஞ்சம் அதிகப்படியாக இருக்கவே அதிலிருந்து, கிஷ்ணாவுக்கும் எங்கள் வீட்டு உரிமையாளருக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கிறது என்பதாக அவன் யார் என்பது குறித்த தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருப்பெறத் துவங்கின.
அந்தப் பிள்ளைகள் வாயை, அதே பள்ளியில் பயிலும் எங்கள் தெரு நண்பர்கள் கிண்டியதில், கிஷ்ணா, என்பவன், எங்கள் வீட்டு உரிமையாளருக்கும், அவரது தம்பிக்கும்,உடன் பிறந்த இளைய தம்பி என்கிற உண்மை தெரியவந்தபோது நாங்கள் அதிர்ந்தே போனோம். சொந்த தம்பி. ஒரே வயிற்று பிள்ளைகள். முதல் இருவரும் இத்தனை வசதியாய் இருக்கையில், மூன்றாமவன் மட்டும் ஏன் இப்படி? என்று தெருவே பேசியது. எட்டும் ஆறும் பதினான்கு போர்ஷன்களில் ஒன்றே ஒன்றை கூட தம்பிக்கு விட்டுக்கொடுக்க மனம் இல்லாத கல் நெஞ்சு குறித்து வாடகைக்கு குடியிருக்கும் நாங்கள் அனைவருமே கூடி கூடிப் பேசிக்கொண்டோம். எங்கள் வீட்டு உரிமையாளரையும், பின்னால், எட்டு போர்ஷன்களுக்கு உரிமையாளராய் இருக்கிற, அவரது தம்பியையும் ‘பொழைக்கிறவன் பொழைக்கிறான்’ என்றார்கள்.
‘அந்த கிஷ்ணா, அவனோட அண்ணனுங்க மாதிரி ஒழுங்குமுறையோட இருந்திருக்க மாட்டான். ஒழுங்குடன் இருத்தல்ங்குறது என்ன சும்மாவா? அண்ணனுங்க ரெண்டு பேரும் என்னமா குடும்பத்தை பாத்துக்குறாங்க.. புள்ளைங்களை படிக்க வைக்கிறாங்க?! வாடகை தான் வருமானம்னாலும் குடும்பமா சேர்ந்து செலவு செஞ்சிக்குறாங்கல்லா?!’ என்று சில பெரியவர்கள் அங்கலாய்த்தார்கள்.
‘அட! யோசிச்சிருப்பாங்க. குளிருக்கு கால் மட்டும் வச்சிக்கிறேன்னு ஒட்டகம் சொல்லிச்சாமே. அந்த கதையா, போனாப்போகுதுன்னு பதினாலு போர்ஷன்ல ஒண்ணு குடுக்க போக, அவன் சோம்பேறி ஆயிடலாம். அல்லது, அதான் சாக்குன்னு சொத்து பிரச்சனை கிளப்பலாம்ன்னு யோசிச்சிருப்பாங்கல. இன்னிக்கு நவீன உலகத்துல எதுவும் நடக்கலாம்ப்பா’ நியாயம் பேசினார்கள் பலர். .ஆனால் எதுவும் பெரிதாக நடக்கவில்லை. கிஷ்ணா எப்போதும் போல், தெருவிற்கே எடுபிடியாகத்தான் இருந்தான். வராந்தை தான் அவனுக்கு வீடாக இருந்தது.
இதற்கிடையில், பத்தாவது பொதுத் தேர்வு துவங்கியது. அப்போதுதான் மெட்ரோ சானல் துவங்கியிருந்தார்கள். அதற்கு முன்பு வரை, தொலைக்காட்சி என்றால் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும், சனிக்கிழமை தூர்தர்ஷனில் ராஜேஷ் கண்ணா, ஷம்மி கபூர், நஸ்ருதின் ஷா , அமிதாப்பச்சன் நடித்த ஏதாவது ஹிந்தி படம், ஞாயிறு தமிழ்ப்படம். இவ்வளவுதான். மெட்ரோ சானல் வந்துவிட்ட பிறகு ஒவ்வொரு நாளும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை இரண்டு மணி நேரங்களுக்கு மட்டும் நிகழ்ச்சிகள். ப்ரியா என்றொரு தொகுப்பாளினி வாய் ஓயாமல் பேசினார். முக்காபுலா என்றொரு நிகழ்ச்சியில் பாபா சேகல் என்றொருவர் தொகுப்பாளராக அறிமுகமானார். ஜுனூன், அஜ்னபி என்றெல்லாம் ஹிந்தி நிகழ்ச்சிகளில், தூர்தர்ஷனால் பாலைவனமாக இருந்த தொலைக்காட்சிகள், மெட்ரோ வருகையால் நந்தவனமாகியது. குறிப்பாக ஜுனூன் சீரியலின் துவக்க பாடல், கிட்டத்தட்ட தேசிய கீதம் போல் எல்லா பள்ளிகளின் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றிருந்தது. ஹிந்தி தெரியாத பையன்கள் கூட அந்தப் பாடலை மனப்பாடமாக பாடினார்கள்.
மெட்ரோ புண்ணியத்தில் பின்மாலை பொழுதுகளில் வீட்டில் படிக்க முடியாத சூழல் உருவானது.. அக்கம்பக்கத்து வீடுகளில் மெட்ரோ நிகழ்ச்சிகளின் சத்தம் தாங்காமல், நான் மொட்டை மாடிக்கு படிக்க அனுப்பப்பட்டேன். மொட்டை மாடி வந்த பிறகு தான் தெரிந்தது அனேகம் பிள்ளைகள் மொட்டை மாடிக்கு அனுப்பப்பட்டிருந்தனர் என்று.
மொட்டை மாடிக்கு வழிவிடும் கதவுக்கு முன்னால், ஒரு சிறிய, இரண்டு சூட்கேஸ்கள் படுக்க வைத்தால் எத்தனை இடம் இடைக்குமோ அத்தனை இடத்தில் தட்டுமுட்டு சாமான்கள், பழைய டயர், ஸ்பேனர், துருபிடித்த அறிவாள், ஓடாத ஃபேன்கள் இரண்டு, சைக்கிள் ரிம், உடைந்த லாக், பிய்ந்து போன சோபா குஷன்கள், காலாவதியாகிப் போன ட்ரான்சிஸ்டர்கள், ரேடியோ, செய்தித்தாள்கள், திருமண அழைப்பிதழ்கள், காலி பாட்டில், எட்டு செங்கற்கள், மண் பானை, உருக்குலைந்த எவர்சில்வர் தட்டுகள் என பலதரப்பட்ட பொருட்களுக்கு மத்தியில் கொஞ்சம் சுத்தமான பெட்டி ஒன்றும் இருந்தது.
மொட்டை மாடியில், திறந்த வெளியில் நடந்தபடி படிக்கும் நான், கால் வலித்தாலோ அல்லது லேசாக தூரல் போட்டாலோ அங்கே கதவைத் திறந்து வைத்தபடி அமர்ந்து படிப்பது வழக்கம். அப்போதெல்லாம் சுற்றிலும் கலைந்து, தூசி படிந்து கிடக்கையில் அந்த பெட்டி மட்டும் ஓரளவு சுத்தமாக இருப்பது என் கண்களை உறுத்தும். உள்ளே என்ன இருக்கும் என்றெல்லாம் பலமுறை சிந்தனை செய்துவிட்டு, அடுத்தவர் பெட்டியை தொடுவானேன் என்று பல நாள், அந்த பெட்டியை திறந்து பார்ப்பதை ஒத்திப் போட்டிருக்கிறேன்.
இருந்தும் உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு.
கிஷ்ணா எங்கள் வீட்டு உரிமையாளரின் தம்பி என்கிற தகவல் தெரிந்துவிட்ட பிறகு, அந்த பெட்டி கிஷ்ணாவுடையதாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அவன் மணமானவனா, அவனுக்கு குடும்பம் இருக்கிறதா, பிள்ளைகள் இருக்கிறார்களா, சகோதரர்கள் வசதியாக இருக்க அவன் மட்டும் ஏன் இப்படி என்று எங்கள் எல்லோரிடமும் இருந்த விடை தெரியாத கேள்விக்கு, பதில் தேடும் ஆர்வம் மேலிட, ஒரு நாள், அதைத் திறந்தேன். உள்ளே சிகப்பில் ஒரு காட்டன் புடவை, ஒரு நைந்த லுங்கி, சட்டை, தீப்பெட்டி, ஒரு காகிதத்தில் மாயூரம் அடுத்த பேரளம் கிராமத்தில் ஒரு முகவரி, லெட்சுமி என்ற பெயரில் ஒரு ஜாதக குறிப்பு, சில வளையல்களுடன், ஒரு பெண்ணின் புகைப்படமும் இருந்தது. ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படம். அந்தப் பெண் புடவை அணிந்திருந்தாள். லேசான குண்டு. வட்ட முகம். உயரம் ஐந்தடிக்கும் சற்று குறைவு. கழுத்தில் ஒரே ஒரு செயின். காதில் கம்மல்.
பெட்டியை மூடிவைத்தேன்.
அந்தப் பெண் யாராக இருக்கும் என்று சிந்தனையில் அன்றைய பாடம் மனதில் ஏறவில்லை. ஒருவேளை மனைவியாக இருக்குமோ? அல்லது காதலியோ? அந்த பெண்ணை அக்கம் பக்கத்தில் பார்த்ததாக நினைவிருக்கவில்லை. அப்படியானால் அது யாராக இருக்குமென்று சிந்தனை போனது. வெகு நேரம் எப்படியெல்லாமோ யோசித்தும் ஒன்றும் பிடிபடவில்லை. இரவு மணி ஒன்பதரையாகிக் கொண்டிருந்தது. லேசாக பசித்தது. நான் கொண்டு வந்திருந்த புத்தகங்களை மடித்து கக்கத்தில் வைத்துக்கொண்டு எழுந்தேன். யோசனையுடனே மாடிப்படியிறங்கினேன். வீட்டு உரிமையாளரின், மூத்த மகனின், மனைவி நின்றிருந்தாள்.
‘பெட்டி திறந்து பாத்தியா?’ என்றாள்.
நான் ஏதும் பேசவில்லை. அமைதியாக அவளையே பார்த்தேன்.
‘அதுக்கு பாத்த பொண்ணு தான். அது ஒண்ணு தான் சம்பாதிப்பு ஏதும் இல்லைன்னாலும் , அவனை ஆசைப்பட்டு கட்டிகிறேன்னு சொல்லிச்சாம். கல்யாணத்துக்கு நிச்சயம் பண்ண, புடவை , வளையல் எல்லாம் வாங்கிட்டு போயிருக்கு. இது வேலையில இல்லைன்னு அவங்கப்பா பொண்ணு குடுக்கலை போல. கல்யாணம் நடக்கலை. அந்த பொண்ணு இந்நேரம் யாரையாவது கட்டி, புள்ள பெத்து அரை கிழமா கூட ஆயிருக்கும்.. இது என்னடான்னா அதோட ஃபோட்டோவை வச்சிக்கிட்டு அதோடவே வாழ்ந்துட்டு இருக்கு. ஆத்தா அப்பன் போய் சேந்தாச்சு, வீட்டு ஆம்பளைங்களுக்கு வேலை இல்லை. தம்பிகாரனுக்கு வேணும்னே ஊத்திக்குடுத்து பழக்கிவிட்டு,. கேக்க ஆளு இல்லை, தனிக்கட்டைன்னு ஒதுக்கிட்டாங்க இத. ‘
சலிப்பாக முடித்துவிட்டு, உள்ளே சென்றாள். ‘கேட்க ஆளு இல்லை..தனிக்கட்டைன்னு ஒதுக்கிட்டாங்க’ என்கிற அவளின் வார்த்தைகள் மனத்தின் அறைகளில் மோதி மோதி எதிரொலித்துக்கொண்டே இருந்தது எனக்கு.
வெளியே சாலையில், அடிபட்ட ஒரு எலியை நான்கைந்து காக்கைகள் கொத்த முயற்சித்துக் கொண்டிருந்தன. எலி உயிருடன் தான் இருந்தது. காக்கைகள் கொத்தாமல் இருந்தால், எலி தட்டுத்தடுமாறி பிழைத்துக் கொள்ளக் கூடியதாய் இருந்தது. ஆனாலும், சுற்றிலும் காக்கைகள் விடாமல், காயம் பட்ட இடத்திலேயே கொத்த, கொத்த எலியின் உடலில் ரத்தம் வழிந்து கொண்டிருப்பதையும், கொஞ்சம் கொஞ்சமாக எலியின் உடல் அசைவுகள் நிற்கத்துவங்கியிருப்பதையும் நான் வெறுமையுடன் பார்த்துக்கொண்டே நின்றிருந்தேன். அந்த நேரம், ‘பகிர்ந்து உண்ணும் காக்கை’ என்று முதுகில் எழுதப்பட்டு, ஆட்டோ ஒன்று கடந்து போனது.
பிற்காலத்தில், கிஷ்ணா என்கிற அந்த பைத்தியம் என் மனதில் விஸ்வரூபம் எடுத்து, வார்த்தைகளாக உடைந்து, சிதறி, மீண்டும் உயிர்த்தெழுந்து, ஒருங்கிணைந்து இதோ இந்த கதையாகி நிற்பான் என்று அப்போது எனக்கு தெரிந்திருக்க எந்த நியாயமும் இல்லைதான்.
#நன்றி
மலைகள் 73வது இதழ்(http://malaigal.com/?p=6642)
Tuesday, 27 January 2015
கதையும் நிஜமும் - 2
கதையும் நிஜமும் - 2
'போலீஸ் வந்துவிட்டால்' என்ற தலைப்பில் என் சிறுகதை ஜூலை 2010 ல் திண்ணையிலும், சிங்கப்பூரின் வல்லினத்திலும் வெளியானது. வல்லினத்தில் தேதி சரிபார்த்துக்கொள்ளுங்கள்.(http://www.vallinam.com.my/issue20/story1.html)
http://ramprasathkavithaigal.blogspot.in/2010/07/blog-post_06.html
இரண்டரை வருடங்களுக்குப் பிறகு, 15.04.2013 தேதியிட்ட தினத்தந்தி நாளிதழில் பக்கம் 11ல் 'கொல்கத்தாவில் அரங்கேறும் கொடுமை' என்ற தலைப்பில் வெளியான பெட்டிச் செய்தியின் பிரதி இங்கே.
மீதியை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.
இதனால், சொல்லிக்கொள்ள விழைவது யாதெனில்,
1. இந்தக் கதையை கொல்கத்தா விபசார பெண்கள், காவல்துறையினர் வாசித்திருந்தால், இப்படியும் குற்றங்கள் நிகழலாம் என்கிற கோணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கலாம்.
ஆக, ஒரு சமூகம் ஏன் புத்தகங்களை நாட வேண்டும், புத்தக வாசிப்பு ஒரு சமூகத்தில் என்ன விதமான மாற்றங்களை கொண்டுவரும், புத்தக வாசிப்பினால் ஒரு சமூகம் அடையும் நண்மைகள் என்ன என்பதற்கு இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணம் ஆகிறது.
Monday, 26 January 2015
கதையும் நிஜமும்
பொதுவாக நிஜத்தில் நடப்பதை கதையாக எழுதுவார்கள். மிகச்சில கற்பனைக் கதைகள், பிற்காலத்தில் நிஜத்திலேயே நடக்கும்.
உங்களில் பலர் நடிகர் பிரசன்னா, சேரன் நடித்த முரண் திரைப்படம் பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு அதன் கதை தெரியும் என்று நினைக்கிறேன்.
பின்வருவது நான் 2009ன் முடிவில் எழுதி, 10 ஜனவரி 2010ல் கீற்று என்றொரு இணைய இதழில் வெளியான எனது கதை.
10 Jan 2010 ல் வெளியானது எனது இந்தக் கதை. இணைய இதழில் தேதியை சரிபார்த்துக்கொள்ளவும்
30 Sep 2011 ல் வெளியானது முரண் திரைப்படம்.
மீதியை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்....
Monday, 15 December 2014
Friday, 21 November 2014
Tuesday, 18 November 2014
மலைகள் 62 வது இதழில் எனது கவிதைகள்
மலைகள் 62 வது இதழில் வெளியான எனது கவிதைகள்
http://malaigal.com/?p=5945
குடும்பம் – கவிதை
ஓங்கி உயர்ந்த ஓர் கட்டிடம்
அதைக் காட்டிக் காட்டியே
வைக்கிறீர்கள் ஒவ்வொரு செங்கல்லையும்
ஒன்றன் மீது ஒன்றாக
கட்டமைப்பாம்
நீள்சதுர கல்லுக்குள்
மூச்சுத் திணறுகிறது
அது பற்றி கவலையில்லை உங்களுக்கு
ஓரங்களில் பிசிறு வேண்டாம்
ஒழுங்காம்
சிதைக்கிறீர்கள் என் மேனியை
சத்தம் வரக் கூடாதாம்
வாயில் திணிக்கிறீர்கள் பிசினை
உடைந்துபோனால் தூக்கியெறிவீர்கள்
உடையவும் கூடாது
சேரவும், பிரியவும் வகுத்து வைத்திருக்கிறீர்கள்
அதற்கு
உச்சியிலிருந்து விழுந்து
செத்துப் போகலாம்
வேண்டாம் வேண்டாம்
காலால் மிதித்து இன்னுமொன்று செய்துவிடுவீர்கள்
விசிறியின் முதுகுக் கத்தியும், உப்பு நீரும்
யார் யாரோ பரிசளித்த
சிகப்பு நிற தடித்த சொற்கள்
என் அறையெங்கும்
இரைந்து கிடக்கின்றன
வாசல் கதவைத் திறந்தால்
குவிந்த உதடுகளின் மத்தியில்
மேலண்ணத்துடன் ரகசியமாய் சுகிக்கிறது நா
நீயே தேர்ந்தெடுத்த விசிறியின்
முதுகில் கூரான கத்தி
நீ வீசுகிறாய்
ரத்தம் வெடிக்கிறது
உன் பக்கம்
உப்பு கரிக்கும் நீர்…
பட்டை தீட்டப்படும் மக்கிய சொற்கள் – கவிதை
பட்டை தீட்டுகிறாய்
ரம்பம் கொண்டு
சிகப்பு நிறத்தில் சிதறுகின்றன
சூடான உன் மக்கிய சொற்கள்
இதோ அறுக்க இருக்கிறேன்
உனக்கும் எனக்குமான
ஒரே ஒரு விளிம்பை
இனி உன் மக்கிய சொற்களின்
நாற்றம்
உனது மட்டுமே…
பறத்தலும் வானமும் – கவிதை
உனது வானத்தை வளைக்க
ஏன் இத்தனை பிரயத்தனப்படுகிறாய்?
எல்லா பறவைகளும்
வளைந்த வானில் தான் பறக்கின்றன
Sunday, 16 November 2014
Interstellar திரைப்படம் - விமர்சனம்
Interstellar திரைப்படம் - விமர்சனம்
பேரண்டம் முப்பரிமாணங்களை கொண்டது. அதனோடு, காலம் நான்காவது பரிமாணமாகிறது. இதை ஸ்பேஸ்டைம் (Spacetime) என்கிறார்கள். இதை ஒரு அலையாக கொண்டோமானால், பேரண்டத்தில் ஈர்ப்பு விசை கொண்ட ஒவ்வொரு வஸ்துவினது ஈர்ப்பு விசையிலும் , அதனருகில் வர நேரும் பிரிதொரு வஸ்துவினால், ஈர்ப்பு விசை அலையில் வேறுபாடு உருவாகும். எளிமையாக சொல்ல வேண்டுமானால், ஒரு நீச்சல் குளத்தில் யாரேனும் கால் வைத்தாலோ, அல்லது சிறியதாக இலையொன்று விழுந்தாலோ, ஒரு அலை உருவாகும் அல்லவா. அது போல் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
திரைப்படம், ஒரு விவசாயி ஆகிவிட்ட ஒரு விண்வெளி ஓடத்தின் ஓட்டுனர், கூப்பரின் வீட்டிலிருந்து துவங்குகிறது. கூப்பர் தனது மாமனார், மகன், மகள் மர்ஃபியுடன் அந்த வீட்டில் வாழ்கிறான். மர்ஃபி தனது அறையில் பேய்கள் இருப்பதாக நம்புகிறாள். அதனால் பயப்படும் அவள், எப்போதும் தனது தந்தையின் அருகாமையை விரும்புகிறாள்.
ஒரு நாள் மிகப்பெரிய புயல் வீசுகிறது. அப்போது , மர்ஃபியின் அறையில் உள்ள மார்ஸ் கோட் இயந்திரத்தில் ஒரு ஈர்ப்பு அலை பதிவாகிறது. மர்ஃபீ அது பேயோ என்று ஐயம் கொள்கிறாள். அவளது ஐயத்தை நீக்கும் பொருட்டு, அதை கூப்பர் அவதானிக்கிறான். நிலப்பரப்பில் அது எங்கிருக்கிறது என்று தேடச்செல்கிறான். அவனுக்கு தெரியாமல், மர்ஃபி அவனுடைய காரில் ஏறிக்கொள்கிறாள். இருவரும் ஒரு மறைவிடத்தை அடைகிறார்கள்.
அங்கே ரகசியமாக இயங்கும் நாஸா குழுவை சந்திக்கிறார்கள். அவர்களின் தலைவர் ப்ராண்ட். அவர்கள் 'எங்கள் கோஆர்டினேட் உங்களுக்கு எப்படி கிடைத்தது?' என்று கேள்வியில் துருவத்துவங்குகிறார்கள்.
பூமி அழியப்போவதாக அவர்கள் நம்புகிறார்கள். அண்ட வெளியில், ஏதேனும் உயிரினங்கள் அழியும் முன் பிழைத்துக்கொள்ளவென, ஏலியன்கள் ஒரு வார்ம் ஹோலை உருவாக்கியுள்ளதாகவும், வார்ம்ஹோலின் அந்தப் பக்கம் மனிதர்கள் குடியேறத் தகுந்தவாறு மூன்று கிரகங்கள் மில்லர், எட்மண்ட் , மேன் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், அவைகளுக்கு சென்று சேரவென என்டூரண்ஸ் என்கிற விண்வெளி ஓடத்தை தயார் செய்திருப்பதாகவும் கூப்பர் சொல்லப்படுகிறான். பிற்பாடு, கூப்பரின் விண்வெளி ஓட ஓட்டுனர் அனுபவம் குறித்து அறிந்து, அவனையே ஓட்டுனராக வேலைக்கு எடுக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் ஆலிஸ் இன் வொன்டர்லேண்ட் (Alice in Wonderland) என்றொரு புத்தகம். அதை வாசித்தவர்களுக்கு பூனையற்ற புன்னகை என்றால் என்ன என்று தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு, ஐன்ஸ்டைன், தன்னுடைய ஸ்பெஷல் தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி பற்றி சொல்கையில் இன்னுமொன்றையும் சொல்கிறார். அண்டம் வளைந்து இருக்கிறது என்று.
அதன் படி, அண்டத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு, மில்லியன் கணக்கான மைல்கள், விண்வெளி களத்தில் பயணித்து அடையவேண்டும். அண்டமோ, குதிரையின் சேனை போல் (Saddle Shapped) வளைந்து இருக்கிறது. இப்போது உள்ளங்கையை குறுக்கி, வாழைப்பழத்தை சைகையில் காண்பிப்பது போல் செய்யுங்கள். பேரண்டம் இப்படி வளைந்து இருக்கிறது என்று கற்பனை செய்யுங்கள். இப்போது அண்டத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு குறுக்கால் ஒரு குறுக்கவழி வெட்டினால் எப்படி இருக்கும்? மில்லியன் கணக்கான மைல்கள் பறக்க வேண்டியதில்லை. உட்னேயே போய் விடலாம் அல்லவா? அப்படி ஒரு குறுக்கு வழி தான் வார்ம் ஹோல் என்பது.
கூப்பர், பிராண்டின் மகளான பயாலஜிஸ்ட் அமேலிய, ரொமிலி, புவியியல் ஆய்வாளர் டாயில் மற்றும் இரண்டு ரோபாட்களுடன் பயணப்படுகிறான்.
வார்ம் ஹோல் தாண்டுகிறான்.
முதலில் மில்லர் கிரகத்திற்கு செல்கிறார்கள். அங்கே தரையிரங்குகிறார்கள். அந்தக் கிரகம் பெரும்பாலும் நீரால் நிரம்பி இருக்கிறது. மேலும் அது, வார்ம் ஹோலுக்கு மிக அருகாமையில் இருப்பதால், வார்ம் ஹோலின் ஈர்ப்பு விசையால், மிக மிக உயரமான அலைகள் உருவாகும் இயல்பினுடையதாக இருக்கிறது. மேலும் , இந்தக் கிரகத்தில் ஒரு மணி நேரம் என்பது, பூமியில் ஏழு வருடங்களுக்கு சமமாகிறது. இது மனிதர்கள் குடியேற உகந்ததல்ல என்று தீர்மானிக்கிறார்கள். அவர்கள் கிளம்ப எத்தனிக்கையில் ஒரு பெரிய அலை வந்து தாக்குகிறது. அமேலிய மில்லர் கிரகத்தின் கூடுதல் தகவல்களை பெறுவதற்கு முன் , அந்த பெரிய அலையால், டாயில் உயிரிழக்கிறான்.
அமேலியாவும், கூப்பரும் விண்கலம் திரும்புகிறார்கள்.
அந்த பெரிய அலை, விண்வெளி ஓடத்தை கிளப்புவதில் கால தாமதம் செய்கிறது. அந்த தாமதத்தில் பூமியில் 23 வருடங்கள் கடந்துவிடுகின்றன.
அங்கே பூமியில் கூப்பரின் மகள் மர்ஃபி, நாஸாவில் ஆராய்ச்சியாளர் ஆகிறாள். அவள் அவ்வப்போது கூப்பரிடம் வீடியோவில் பேசுகிறாள். மகள், மணி நேரங்களில், கண் முன்னே வளர்ந்து பெரியவளாவதை காண்கிறான் கூப்பர். அழுகிறான்.
அப்போது நாஸா ஆய்வு நிலையத்தில் ப்ராஜெக்ட் தலைவர், பிராண்ட் சாகும் தருவாயில் இருக்கிறார். அவர், கூப்பர் வார்ம் ஹோல் தாண்டி அனுப்பப்பட்டிருப்பதன் உண்மையான காரணத்தை சொல்கிறார்.
ஒரு பொருளின் தின்மை உட்பட, ஈர்ப்பு விசையை தீர்மானிக்கும் இலக்கங்கள் எந்த இடத்தில் எல்லையற்றதாக போய்விடுகிறதோ, அந்த இடத்தை சிங்குலாரிட்டி(Singularity) என்கிறார்கள். விண்வெளி ஓடங்களை நிறுத்தி வைக்கும் ஸ்பேஸ் ஸ்டேஷன்களை எவ்வாறு ஈர்ப்பு விசை நகர்த்துகிறது என்கிற ஆராய்ச்சியில், இந்த சிங்குலாரிட்டி தடைக்கல்லாகிறது. அதாவது, வார்ம் ஹோலின் இந்த இடத்தில் இலக்கங்கள் எல்லையற்றதாக ஆகிவிடுவதால், ஈர்ப்பு விசையானது ஸ்பேஸ் ஸ்டேஷன்களை எவ்வாறு நகர்த்துகிறது என்பதை கண்டுபிடிக்க இயலாமல் போய்விடுகிறது. அதற்கு வார்ஹோலின் அந்தப்பக்கமிருந்து கூடுதல் தகவல்கள் தேவைப்படுகின்றன.
அதற்கு, வார்ம்ஹோலின் அந்த பக்கம் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களான மில்லர், எட்மன்ட்ஸ் , மேன் ஆகியவற்றிலிருந்து தகவல்கள் பெற ஆஸ்ட்ரோனாட்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
கூப்பர் விண்வெளி ஓடத்தை வார்ம்ஹோல் மூலமாக அந்த மூன்று கிரகங்களுக்கு செலுத்தி, மனிதர்கள் வாழத் தகுதியான கிரகம் எது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதே கூப்பரிடம் கொடுக்கப்படும் வேலை.
இதற்குள் விண்வெளி களத்தில் எரிபொருள் குறைந்து விடுகிறது, மீதமுள்ள எரிபொருளால் மீதமுள்ள இரண்டு கிரகங்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ஆதலால் ஏதாவது ஒரு கிரகம் மட்டும் செல்லலாம் என்று முடிவு செய்யப்படுகிறது. அமேலியா , பூமிக்கு திரும்பிச் செல்லும் எண்ணம் இல்லையெனில், அதில் எரிபொருள் சேமிக்கலாம். அதைகொண்டு எட்மன்ட், மேன் இரு கிரகங்களுக்கும் செல்லலாம் என்கிறாள். பலத்த வாக்குவாதங்களுக்கு பிறகு, மேன் கிரகத்தில் ஏற்கனவே அனுப்பப்பட்ட ஆஸ்ட்ரோனாட் மேன், இன்னமும் அங்கேயே இருப்பதாகவும், அந்த கிரகம் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியான ஒன்று தான் என்றும் மேன் அடித்துச் சொல்வதால் அங்கேயே செல்லலாம் என்று முடிவு செய்யப்படுகிறது.
இதற்கிடையில், சாகும் தருவாயில் இருக்கும் பிராண்ட், பூமியைத் தவிர மனிதகுலத்திற்கு வேறு கதியில்லை என்று முடிவு செய்து, ப்ளான் பியை அமல்படுத்தலாம் என்கிறார். ப்ளான் பி என்னவென்றால், குளிரில் பதப்படுத்தப்பட்ட மனித இனத்தின் எம்ப்ரையோ. பூமியில் மனித இனம் அழிந்த பின் இந்த எம்ப்ரையோக்களால், மனித இனம் மீண்டும் உயிர்த்து எழும் என்பதே ப்ளான் பி.
கூப்பர் , அமேலியா, ரொமிலி மூவரும் மேன் கிரகத்திற்கு வருகையில் அங்கே கிரகம் மனித வாழ்விற்கு தகுதியில்லாத ஒன்றாக இருக்கிறது. உண்மையைச் சொன்னால் தன்னை மீண்டும் பூமிக்கு திருப்பிக் கூட்டிப்போக யாரும் வரமாட்டார்கள் என்பதால், மேன், தவறான தகவல்கள் அனுப்பி, கூப்பரை மேன் கிரகத்திற்கு வரவழைத்திருக்கும் உண்மை பிற்பாடு தான் புரிகிறது.
தப்பிக்க எண்ணி, மேன், கூப்பரை அடித்து வீழ்த்திவிட்டு, அவனது களத்தில் என்டூரண்ஸை அடைந்து , அதன் மூலமாக எட்மண்ட் கிரகம் சென்று அங்கே ப்ளான் பியை அமல்படுத்த முனைகிறான். ஸ்பேஸ் ஸ்டேஷன் வருகிறான். அமேலியா, தன்னுடைய களத்தில் கூப்பரை காப்பாற்றி ஸ்பேஸ் ஸ்டேஷன் வருகிறார்கள். அங்கே தவறாக களத்தை, ஸ்டேஷனோடு இணைத்ததால், அழுத்தம் அதிகமாகி வெடித்து மேன் சாகிறான். விண்வெளி ஸ்டேஷன் சேதமடைகிறது.
ஆயினும் கூப்பர் தன்னுடைய திறமையால் சேதமடைந்த விண்வெளி ஸ்டேஷனோடு தன்னுடைய களத்தை ஒட்ட வைக்கிறான். கூப்பரும், ஒரு ரோபாட்டும், வார்ம் ஹோலின் முனையில் தோன்றும் சிங்குலாரிட்டியை அளவிட, கூடுதல் தகவலுக்காக வார்ம் ஹோலின் முனையில் இறங்குகிறார்கள். அங்கே, முன்பே பார்த்த அண்டவெளியின் மூன்று, பரிமாணங்களுடன், நான்காவதாக காலம் என்கிற பரிமாணமும், அதையும் தாண்டி வேறு சில பரிமாணங்களும் எதிர்கால மனித இனம் உருவாக்கி வைத்திருப்பதை கூப்பர் அவதானிக்கிறான்.
அமேலியா எட்மண்ட் கிரகம் செல்கிறாள். அந்த கூடுதல் பரிமாணங்கள், கூப்பரை மர்ஃபியின் குழந்தைப்பருவ காலத்திற்கு கூட்டிப்போகிறது.
அங்கே, அந்த கூடுதல் பரிமாணங்கள் மூலமாக வரும் கூப்பர் தான் , அதுகாரும் தான் தெரிந்து கொண்டதை மர்ஃபிக்கு தெரியப்படுத்த முயன்றதும், அதை அவள் பேய் என பயந்ததும் தெரிய வருகிறது. கூப்பர் தான் வார்ம் ஹோலில் ரோபாட்டின் உதவியுடன் சேகரித்த கூடுதல் தகவல்களை மார்ஸ் கோட் மூலமாக மர்ஃபிக்கு தெரியப்படுத்த, மர்ஃபி, பிராண்டின் ஆராய்ச்சியை முழுமை செய்கிறாள்.
பிற்பாடு, கூப்பர், தன்னுடைய 124 வது வயதில் சாடர்ன் கிரகத்தின் அருகில் கண்டுபிடிக்கப்படுகிறான்.
இளமையுடன் கூப்பர், வயதாகி கிழவியாகிவிட்ட தன்னுடைய மகளை மருத்துவமனையில் சந்திக்கிற காட்சி, காலப்பயணத்தை கவித்துவமாக சொல்கிறது.
பேரண்டம் Hyperbolic geometry யில் வருகிறது.
முழுக்க முழுக்க Hyperbolic geometry யில் வரும் அண்ட வெளிப்பயணத்தின் போது, ஒரு களத்தின் உள்ளே இடம் குறையும். ஏனெனில் Hyperbolic geometry யில் ஒரு முக்கோணத்தின் உள்பக்க பாகைகளை கூட்டினால் அது 180 பாகைக்கும் குறைவாக இருக்கும். இதைக் குறிக்கும் வசனங்கள் எதையேனும் எங்கேனும் ஓரத்திலேனும் வைத்திருக்கலாம். அல்லது காட்சியாகவாவது காட்டியிருக்கலாம். நான் பார்த்த பிரிண்டில் கட் செய்யப்பட்டிருக்கிறதா தெரியவில்லை. நண்பர்கள் யாரேனும் கேட்டிருந்தால் தெரிவிக்கவும்.
வார்ம் ஹோல்களை வெறும் கண்களால் பார்க்க முடியாது. வார்ம் ஹோல்களைப் பார்க்க டாப்லர் கண்ணாடிகள் வேண்டும். வார்ம் ஹோல்களுக்கு அருகில், மிதமிஞ்சிய ஈர்ப்பு விசை இருப்பதால், அதனருகே வரும் எல்லாவற்றையும் வார்ம் ஹோல் விழுங்கிவிடும். ஒளியைக்கூட.
ஒரு பொருள் கண்களுக்கோ, காமிரா கண்களுக்கோ தெரிய வேண்டுமெனில், அந்த பொருளில் ஒளி பட்டு திரும்பி கண்களில் விழ வேண்டுமல்லவா. அந்த ஒளியே விழுங்கப்பட்டுவிட்டால்? நம் கண்களுக்கு எதுவும் புலப்படாதல்லவா?அவ்வாறு விழுங்கப்படுகையில், நிறமாலை உருவாகும். விழுங்கப்படுவதை யாராலும் பார்க்க முடியாதெனினும், நிறங்களில் உள்ள வேறுபாடுகளை டாப்லர் கண்ணாடிகள் மூலமாக பார்க்கலாம். இதை டாப்லர் எஃபக்ட் என்பார்கள். படத்தில் இந்த வார்த்தையையும் எங்கேயும் கேட்கவில்லை. இதுவும், நான் பார்த்த பிரிண்டில் கட் செய்யப்பட்டிருக்கிறதா தெரியவில்லை. நண்பர்கள் யாரேனும் கேட்டிருந்தால் தெரிவிக்கவும்.
கூப்பர் திரும்பி வருகையில், வார்ம் ஹோல் வாயிலில் சிங்குலாரிட்டியை அளவிட இறங்கிவிடுகிறான். அப்படி இறங்கும் அவன் தான் மர்ஃபியின் குழந்தைப்பிராயத்தில் வந்து, ஈர்ப்பு அலை குறித்த தகவல்களை மார்ஸ் கோட்ஸ் மூலமாக மர்ஃபிக்கு அளிக்கிறான். மர்ஃபி மூலமாக கூப்பருக்கு தெரிந்து அவன் நாஸாவின் ரகசிய இடத்தை அடைகிறான். ஆக நாஸாவின் ரகசிய இடத்தை கூப்பர் அடைய கூப்பர் தான் காரணமாகிறான். 'எங்களுடன் இணைகிறாயா?' என்று பிராண்ட் தான் கூப்பரை கேட்கிறார். கூப்பர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது கதையில் ஓட்டையாகவே இருக்கிறது. கூப்பர் மில்லர் கிரக பயணத்தில் இருக்கையில், பூமியில் வளர்ந்துவிடும் தன் மகள் மர்ஃபியின் அழுகையை, புலம்பலை கேட்டு தானும் அழுவதாகக் காட்டுகிறார்கள். கூப்பர், வார்ம் ஹோல் வாயிலில் விழுந்து தன் மகள் மர்ஃபியின் குழந்தைப்பருவத்திற்கே காலத்தை பின் நோக்கி பயனித்து வருகையில், மிக எளிதாக, வேறு எவருக்கேனும் , நாசாவின் ரகசிய இடத்தை அடையும் கோ ஆர்டினேட்டுகளை தந்து, தான் தப்பித்திருக்கலாம். தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை கூப்பர் தானே தவற விட்டுவிட்டு ஏன் பிற்பாடு புலம்ப வேண்டும் ?
நாசா என்றுவிட்டு, பிராண்ட் கூப்பருக்கு காட்டும் இடம், ஏதோ, வீட்டின் பின்னால் கார் நிறுத்தும் கராஜ் போல காட்டப்பட்டிருக்கிறது.
124 வயதில் கூப்பர் சாட்டர்னில் கண்டுபிடிக்கப்படுகிறான். கூப்பர் நாசாவின் ரகசிய இடத்தை அடைகையில் அவனின் மகள் வயது 10. கூப்பருக்கு 18 வயதில் மணமாகியது என்று கொண்டால் கூட, 28 வயதில் நாசாவின் பிராண்டை சந்தித்ததாக கொள்ளலாம். பதின்மூன்றரை மணி நேரத்தில், மில்லர் கிரகம் சென்று, அத்தனை பேசி, பெரிய அலையில் தடுமாறி, பின் இத்தியாதி இத்தியாதி செய்து, இறுதியில் வார்ம் ஹோலில் விழுகிறான் என்பது கொஞ்சம் நம்பும் படியாக இல்லை.
இத்தனை லாஜிக்குகளை புறந்தள்ளிவிட்டு Doppler effect, Great Grand Time, Hyperbolic Geometry, Gravitational Wave, Morse codes, Wormholes , Time travel, Saddle Space என்பன போன்ற அரை டஜனுக்கு அதிகமாக கோட்பாடுகளை தெரிந்துகொண்டு படத்தை பார்த்தால், நிச்சயம் படம் பிடிக்கும்.

Thursday, 13 November 2014
காதல் சோலை
காதல் சோலை
பங்களூர் தக்காளி
உன் கன்னத்தில் முளைப்பது
என்ன தாவரவியல்?...
உன் கன்னத்தில் முளைப்பது
என்ன தாவரவியல்?...
பூவிதழ்களே
உன் கன்னங்களாகியிருப்பது
என்ன மரபணுவியல்?...
உன் கன்னங்களாகியிருப்பது
என்ன மரபணுவியல்?...
உன் அழகான கன்னத்தில்
வழுக்கி விழுகிறது என் காதல் மனம்...
வழுக்கி விழுகிறது என் காதல் மனம்...
உனக்கு
பஞ்சுப்பொதிகளே கன்னங்களாய்...
பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்குள்
காதல்தீ பற்றிக்கொண்டது...
பஞ்சுப்பொதிகளே கன்னங்களாய்...
பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்குள்
காதல்தீ பற்றிக்கொண்டது...
உன் வழுக்கும் கன்னங்களில்
இன்னுமொருமுறை
உதிக்கிறது சூரியன்...
இன்னுமொருமுறை
உதிக்கிறது சூரியன்...
உன் கன்னத்தில்
கற்றை முடி விழுந்தால்,
என் இதயத்தில்
பலத்த இடி இடிக்கிறது.
கற்றை முடி விழுந்தால்,
என் இதயத்தில்
பலத்த இடி இடிக்கிறது.
Subscribe to:
Posts (Atom)