இன்றைய நாளை "தினம் தினம் எதிர்பாராத திருப்பங்களுடன்..." என்று சொல்லி முடிக்கிறார் பிக் பாஸ்.
முதல் வாரத்தில் பட்டிமன்றம் டாஸ்கில் பெண்கள் அணி சார்பில் ஜெயித்தது முத்து.
இரண்டாம் வாரத்தில் பஸ்ஸர் டாஸ்கில் பெண்கள் அணி சார்பில் ஜெயித்தது தீபக். ஆண்கள் பஸ்ஸரை அடிக்கப் பாய்ந்த வேகத்தைப் பார்த்தால், ஆண்கள் மட்டுமே பங்கு பெறும் போட்டி போல் தோன்றாமல் இல்லை.
இந்த வாரத்தில் உணவுக்கான டாஸ்கில் பெண்கள் அணி சார்பில் ஜெயித்தது ஜெஃப்ரீ. ஜெஃப்ரீ மட்டும் ஜெயிக்கவில்லை என்றால் பெண்கள் அணிக்கு அந்த இரண்டாயிரம் கூட கிடைத்திருக்காது. இதை சவுன்ட் என்கிற செளந்தர்யா, ரஞ்சித்திடம் சொல்லவே செய்துவிட்டார். ஜெஃப்ரீ மட்டும் ஜெயித்திருக்காவிட்டால் சோத்துக்கு சிங்கிதான் என்று...
அடுத்தடுத்த வாரங்களில், பெரும்பான்மையான டாஸ்குகளில் பெண்கள் அணி சார்பில் வென்று தருபவர் ஆணாகத்தான் இருப்பார் என்பதை முன்தீர்மானமாகச் சொல்லிவிடமுடியும்.
இப்படி ஜல்லி அடிக்கும் பிக் பாஸில் ஒரே ஆறுதல், வார இறுதிகளில் வரும் விஜய் சேதுபதி தான். டி20க்கு தோனி விளையாடுவது போல் ஒவ்வொரு பாலையும் சிக்ஸருக்கு விரட்டுகிறார். சிலது ஸ்டேடியத்துக்கு வெளியேயே சென்றும் விடுகிறது.
இதில் என்ன எதிர்பாராத திருப்பங்களுடன்...... தினம் தினம் எதிர்பார்த்த திருப்பங்களுடன் தொடர்கிறது பிக் பாஸ்... ஆண்களா? பெண்களா? என்ற தலைப்புக்கும், டாஸ்க்குகள் நடக்கும் விதத்திற்கும் தொடர்பில்லாமல் எங்கோ எதுவோ துருத்திக்கொண்டே இருக்கிறது.
எனக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் தோணுதா? யாராவது சொல்லுங்க ப்ளீச்...