மரணமற்ற வாழ்வு
ஆம். இப்போது அது தான் பெரும்பணக்காரர்களின் தேடலாக இருக்கிறது. அதை விடவும் கவர்ச்சிகரமான இன்னுமொன்று, என்றென்றைக்கும் இளமை.
அதற்கு எதிரியாகப் பார்க்கப்படுவது என்னவென்று நினைக்கிறீர்கள்? நம் உடல் தான். ஆம். இதற்கு எத்தனை தீனி போடவேண்டி இருக்கிறது? முனுக்கென்றால் ஜலதோஷன் தலைவலி, வயிற்று வலி..அதுவும் இல்லையென்றால் நோய்க் கிருமிகள். இப்படி ஒவ்வொரு நாளும் மிகப்பெரும் செலவும், மெனக்கெடலும் தேடைப்படுகிறது இந்த உடலைப் பாதுகாக்க, பராமரிக்க.
இந்தத் தொழில் நுட்பத்தை whole brain emulation என்கிறார்கள். 1945ம் ஆண்டுக்குள் இந்தத் தொழில் நுட்பம் பரவலான பயன்பாட்டிற்கு வந்துவிடுமாம்.
ஆனால், இதில் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. ஒரு சிறிய எலியின் ஒரு க்யூமிக் அளவுள்ள மூளையை வெட்டி எடுத்து அதனுள் சென்று சேரும் தகவல்களை கணிப்பொறியில் சேமிக்க முயன்றிருக்கிறார்கள். அந்த அத்தனையூண்டு மூளைத்துணுக்கில் சுமார் ஒரு லட்சம் நியூரான்களும் அவைகளால் சேகரிக்கப்படும் நினைவுகள் சுமார் 2 மில்லியன் கிகாபைட்டுகள் என்றும் தெரியவந்திருக்கிறது. ஒரு சிறிய எலியின் மூளையின் இந்த விதமாக கணிணிப்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஆனால், சிக்கலே இனிமேல் தான்.
ஒரு மனித மூளை முழுக்கவே சுமார் 2000 exabyte அளவிலான தகவல்களைச் சேமிக்க வல்லது. புரியவில்லை தானே?
ஒரு ஒப்பீட்டிற்குச் சொல்லவேண்டுமானால், நாம் தினந்தோறும் அணுகும் கூகுளின் மொத்த மெமரி 15 exabyte தானாம். கூகுள் தன்னிடம் உள்ள பல பணக்கார வாடிக்கையாளர்களுக்கு அவர்தம் நினைவுகளைச் சேகரிக்க உதவியிருக்கிறதாம்.
அவ்விதம் சேகரித்து சேர்த்து வைக்க ஆகும் செலவு ஒரு மாதத்திற்கு ஒரு மூளைக்கு சுமார் பத்து பில்லியன்கள். கேட்கவே தலைசுற்றுகிறது. இல்லையா? ஆனால் இந்தத் தொழில் நுட்பத்தின் சாதகங்கள் வியக்க வைக்கின்றன. இப்படி ஒரு உடலே இல்லாமல், வெறும் பிரஞை/மனத்தை நம்மால் ஒரு cloud storageல் சேமிக்க முடிந்தால்? அந்த மனம் ஆட்கொள்ள ஒரு இயந்திர உடல் தந்துவிட்டால்? என்றென்றைக்கும் இளமை சாத்தியம் தானே? மரணமற்ற வாழ்வும் சாத்தியம் தானே? அதுமட்டுமா? ஒளியின் வேகத்தில் பிரபஞ்சத்தின் எந்த மூலைக்கும் பயணித்துவிடலாம். எந்த கிரகத்திலும் குடியேறலாம். இல்லையா?
இதையெல்லாம் தெரிந்துகொண்ட பிறகு, கொஞ்சம் சீக்கிரம் பிறந்துவிட்டோமே என்று தோன்றாமல் இல்லைதான்.