வீனஸ் கிரகத்திலிருந்து காற்றை பூமிக்கு வரவழைக்க முயற்சிகள் எடுக்கத்துவங்கியிருக்கிறது சீனா.
பூமியிலும் காற்று மாசடைகிறது. தொடர்ந்து மாசடைந்து கொண்டே போனால் ஒரு கட்டத்துக்கு மேல், பூமி வீனஸ் கிரகம் போல் ஆகிவிடும். வீனஸ் கிரகத்தில் என்ன பிரச்சனை? வீனஸ் கிரகத்தை ஒரு அடர்த்தியான கார்பன் டைஆக்ஸைடு படிமம் மூடியிருக்கிறது. இதனால் ஊடுறுவும் ஒளி கிரகத்தை விட்டு வெளியேற விடாமல், கிரகத்தின் காற்று மண்டலம் தடுக்கையில், அது கிரகத்தின் வெப்ப நிலையை அதிகரிக்கச்செய்கிறது. இதனால் வீனஸ் கிரகத்தில் எப்போதும் சல்ஃப்யூரிக் ஆசிட் மழை தான்.
பூமிக்கும் அந்த நிலை வரலாம். எது, பூமியை, வீனஸ் கிரகம் ஆக விடாமல் தடுக்கும் புள்ளி என்பதைத் தெரிந்துகொள்ளவும், வீனஸ் கிரகத்தின் காற்று மண்டலத்தை ஆராயும் வீனஸ் கிரகத்துக்கு களன் ஒன்றை அனுப்ப முடிவு செய்திருக்கிறது சீனா.
கேட்கவே பகீரென்று இருக்கிறதல்லவா? கேள்வி என்னவென்றால் செவ்வாய் கிரகத்தில் உலவும் சீனாவின் Zhurong போல இது இருக்காது. வீனஸின் காற்று மண்டலம் ஆசிட் மழை , புயல் வீசக்கூடியது. எந்தக் களனை அனுப்பினாலும் அதனைப் பொசுக்கிவிடும் தன்மை அந்தக் காற்று மண்டலத்துக்கு இருக்கிறது. ஆசிட் மழையில் பொசுங்கிவிடாமல், ஆராய்ச்சிக்குத் தேவையான மாதிரிகளைக் களன் சேமித்துவிட்டு பூமிக்குத் திரும்ப வேண்டும்.
இந்த சவால்களை ஏற்கவும், செய்து முடிக்கவும் சீனாவுக்குத் திறமை இருக்கிறது என்று தான் நம்புகிறேன். ஒரு நாள் சீனா இதனைச் செய்து முடிக்கும். மனித இனத்தின் கவனமின்மை, பொறுப்பின்மை ஆகியவற்றை இந்தப் புண்ணிய பூமி இன்னும் எத்தனை காலம் தான் பொறுக்கும் என்பதற்கு திட்டவட்டமான எண்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள நானும் ஆவலாகத்தான் இருக்கிறேன்.