'பிழைகளின் முகம்' 2011ல் கணையாழியில் வெளியானது.
அதைவிடவும் வேறொன்றைச் சொல்ல வேண்டும்.
என் கவிதைக்கான அங்கீகாரத்தைத் தந்திருக்கிறார்கள் 'மஞ்சப்பை' என்பவரும், புதியபூமி வலைப்பூ உரிமையாளரும். ஆனால் நான் இன்று தான் தற்செயலாக இதை கவனித்தேன். என் பெயரை நீக்கிவிட எவ்வளவு நேரம் ஆகும்? ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை.
அறிவு சார் தளத்தில் வேண்டும் மட்டும் எழுத்தாளனின் எழுத்தைக் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் 'இலவசமா கிடைச்சா படிக்கிறேன்' என்பவர்கள் தான் அதிகம். படித்துவிட்டு ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் கடந்து போய்க் கொண்டே இருப்பார்கள்.
சினிமாவுக்குப் போனால் பாப்கார்னுக்கு ஐந்நூறு செலவழிக்கும் நம்மவர்களுக்கு, ஒரு புத்தகத்துக்கு நூறு ரூபாய் அளிப்பதில் சுணக்கம் வந்துவிடும். எது எதற்கோ வெட்டியாய் செலவு செய்வார்கள். ஆனால், எழுத்தாளனின் உழைப்பு , இலவசமாய்க் கிடைத்துவிட வேண்டும் இவர்களுக்கு.
அறிவுசார் உழைப்பை இலவசமாகத் துய்க்கிறோம். குறைந்தபட்சம், நாலு நல்ல வார்த்தைகளாவது பகிரலாம் என்றெல்லாம் யோசனையே வராது. படித்தவர்கள் கூட்டம் தான் இதை அதிகம் செய்கிறது என்பதுதான் வேதனை. இழவு வீட்டில் கூட பிணமாக இருக்க வேண்டும் என்றொரு நல்ல எண்ணம் கொண்டவர்கள் இவர்கள்.
போகட்டும். Karma is a bitch.
தான் ரசித்ததை நேர்மையாக பகிர்ந்ததுடன், ஆக்கத்தின் ஆசிரியருக்கு உரிய அங்கீகாரத்தையும் அளிக்கும் 'மஞ்சப்பை' மற்றும் புதியபூமி ஆகியோரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
@புதியபூமி
@மஞ்சப்பை...
நன்றிகள் நண்பர்களே...