என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday, 24 February 2021

அசாதாரணம்

 தமிழில், "உங்கள் எண் என்ன? - நாவல்", "வாவ் சிக்னல் - விஞ்ஞானச் சிறுகதைகள்", (மெட் செயலி - இன்னும் நூலாகவில்லை)

ஆங்கிலத்தில், "Those Faulty Journeys-Novel", "Met App-Novel"
இந்த ஐந்து நூல்களுமே நான் எழுதியவைகளுள் மிகவும் குறிப்பிடத்தகுந்த நூல்கள். நான் எழுதியவை என்பதற்காக இதைச் சொல்லவில்லை. உண்மையிலேயே இன்னும் 40-50 ஆண்டுகள் கழித்து எடுத்துப் பார்த்தாலும் கூட அக்காலத்திற்கும் பொறுத்தமான நூல்களாக இவைகள் இருக்கும் என்றே கணிக்கிறேன். நூல்கள் இவ்விதம் அமைவது அசாதாரணம்.
வாய்ப்புள்ள நண்பர்கள் பிரதிகள் இருக்கும் போதே பயன்படுத்திக்கொள்ளலாம்.
உங்கள் எண் என்ன - நாவல் - காவ்யா பதிப்பகம்
வாவ் சிக்னல் - படைப்பு பதிப்பகம்-Stall#F19
Those Faulty Journeys - Emerald Publishers
Met App - Emerald Publishers

Tuesday, 23 February 2021

44வது சென்னைப் புத்தகக்கண்காட்சி - 2021

44வது சென்னைப் புத்தகக்கண்காட்சி - 2021

************************************************

44வது சென்னைப் புத்தகக்கண்காட்சி நந்தனம் YMCA மைதானத்தில்  நாளை துவங்கி மார்ச் 9 திகதி வரை நிகழ இருக்கிறது. 

இந்த வருடத்துக்கான எனது பங்களிப்பு 'வாவ் சிக்னல் விஞ்ஞானச்சிறுகதைகள்' தொகுப்பு தான். படைப்பு பதிப்பகத்தின் வாயிலாக வெளியாகியிருக்கிறது. புத்தகக்கண்காட்சியில் படைப்பு பதிப்பகத்தின் ஸ்டால் எண்: F19.

'கணித மற்றும் விஞ்ஞானப்புனைவுகளே எழுதுறீங்க. ஒரு மாற்றமா, சமூகக் கதைகள் எழுதலாமே" என்று ஆலோசனை தருகிறார்கள்  நண்பர்கள். 

எழுதக்கூடாது என்றில்லை. சமூகத்திற்கு நான் சொல்ல நினைத்ததையெல்லாம் சேர்த்துத்தான் பெருமொத்தமாக "உங்கள் எண் என்ன?" நாவலில் எழுதியாகிவிட்டது. 

எதை எழுத நினைத்தாலும் 'இதை கணித நாவலில் ஏற்கனவே சொல்லியாகிவிட்டது' என்ற எண்ணமே வலுக்கிறது. இதற்கு மேல் புதிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது. ஆகவே இந்த ஆலோசனைகளை வைத்து சம்பந்தப்பட்டவரை,  மீள்வாசிப்பு செய்கையில், மாற்று அணுகுமுறைகளைக் கைகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

உங்கள் பதினோரு நூல்களில் எதிலிருந்து நான் வாசிக்கத் துவங்கலாம் என்று உங்களில் யாருக்கேனும் கேள்வி இருப்பின் பின்வரும் வரிசையைப் பரிந்துரைக்கிறேன்.


தமிழில்:

உங்கள் எண் என்ன? - நாவல் - காவ்யா பதிப்பகம்

வாவ் சிக்னல் - படைப்பு பதிப்பகம் - ஸ்டால்#F19


ஆங்கிலத்தில்:

Those Faulty Journeys - Emerald Publishers

Met App - Emerald Publishers


மற்றபடி என் நூல்களின் வரிசை பின் வருமாறு

காவ்யா பதிப்பகம்

*******************

ஒப்பனைகள் கலைவதற்கே (2014) 

உங்கள் எண் என்ன? (2016)

வரதட்சணா  (2018) 

ஏஞ்சலின் மற்றும் சிலர் (2019)

வதுவை(2019)


வாதினி பதிப்பகம்

*******************

இரண்டு விரல்கள் (2017)

அட்சயபாத்திரா (2017)


Emerald Publihers

*******************

Inexhaustible (2018) 

Those Faulty Journeys (2018)

Met App (2020)


படைப்பு பதிப்பகம்

*******************

வாவ் சிக்னல்  - விஞ்ஞானச்சிறுகதைகள்(2020)





Social - Literary Yard Magazine

 Literary Yard publishes one of my science fiction titled 'Social'.

I thank the editorial board of Literary Yard for choosing my prose for publishing in their magazine.
An excerpt from the fiction:
// Random guys on social networking apps have matched with me only to let me know how hideous I was. I have had to work harder at friendships with the opposite gender. I have struggled to keep people’s attention at parties. I found I was more easily ignored in professional situations, even when I’ve got something to say. I have had people explain to me how I can improve my skin and diets I should try. Ugliness was not the absence of beauty. But in people’s collective perception, ugly ones were stupid.//
Please click the below link to read the prose from the Magazine.




Wednesday, 17 February 2021

The Great Indian Kitchen - விமர்சனம்

The Great Indian Kitchen - விமர்சனம்



நீங்கள் விவசாயம் செய்யப் போகிறீர்கள். என்னென்ன வேண்டும்?


நிலம்.

ஆரோக்கியமான மண்.

நீர் வளம்.

சூரிய சக்தி.

பிறகு, விவசாயம் செய்ய செய்முறை இருக்கிறது. 

விவசாயம் யார் செய்வார்?

எல்லோரும் செய்வதில்லை. அதற்கென ஒரு சமூக, பொருளாதார இடம் இருக்கிறது. விவசாயத்தைத் தொழிலாக செய்யத்தெரிதல் இருக்கிறது. இப்படி நிறைய காரணங்கள் சொல்லலாம். ஆக ஒரு  மா நிலத்தில் மொத்த மக்கள் தொகை 8 கோடி எனில் எட்டு கோடி ஜனமும் விவசாயம் செய்வதற்கில்லை.




விவசாயம் செய்ய முன்வருபவர்களிலேயே கூட, அவர்களின் அணுகுமுறையை வைத்து வர்க்கங்கள் இருக்கிறது. லாப நோக்கோடு வருபவர், விவசாயத்தை கடவுளாக வரித்தவர், வேறு வக்கின்றி செய்பவர், கூலிக்கு வந்தவர் என்று.

இதையெல்லாம் தாண்டி, விவசாயத்தை வெற்றிகரமானதாக, ஆரோக்கியத்திலும், தரத்திலும் சிறிதும் குறைவின்றி மேற்கொண்டு லாபம் ஈட்ட வேண்டுமென்றால், இது அத்தனையும், அதனதன் துல்லியத்தில் நிகழவேண்டும். 

சரி, எல்லா நேரமும் எல்லாமும் துல்லியமாக யாருக்குத்தான் நடக்கிறது, கிடைக்கிறது. ஆக, இவற்றில் ஆங்காங்கே குறைகள் இருக்கலாம். ஒன்றில் சரியான அளவில் நிலம் இல்லாமல் இருக்கலாம்.

மற்றொன்றில் மண் வளம் குன்றி இருக்கலாம்.

இன்னொன்றில் நீர் வளம் இல்லாமல் இருக்கலாம்.

இன்னுமொன்றில், சூரிய ஒளியே இல்லாமல் இருக்கலாம்

இந்த இல்லாமைகளுக்கேற்ப, விவசாயத்தின் விளைவாக உற்பத்தி செய்யப்படும் தானியத்தின் தரம் பாதிக்கப்படும். 

வாழ்க்கை என்பது அந்த தானிய உற்பத்தி தான். அதற்கு தரம் வேண்டுமானால், மேற்சொன்ன எல்லாமும் அதனதன் துல்லியத்தில் அமைய வேண்டும்.

  • சில இடங்களில் நிலம் குன்றியிருந்தாலும், சத்துள்ள விதை உற்பத்தியை இருமடங்காக்கி,  நிலத்தின் குறையை சமன் செய்துவிடலாம்.
  • சில இடங்களில் மண் வளம் குன்றியிருந்தாலும், விவசாயியின் புத்திசாலித்தனத்தால், மண்ணுக்கேற்ற தானியம் உற்பத்தியில் இறங்கி, குறையைச் சமன் செய்துவிடலாம். 
  • சில இடங்களில் நீர் வளம் குன்றியிருந்தாலும், நீர் அதிகம் தேவைப்படாத  தாவரங்கள், மரங்கள் வளர்த்து சமன் செய்யலாம்.

வாழ்க்கையைப் பொருத்த மட்டில் சமன் செய்வதுதான் இலக்கு. ஏனெனில், எல்லாமும் துல்லியமாக, மிகச்சரியாக, அப்பழுக்கின்றி யாருக்கும் அமைந்துவிடுவதில்லை.  இதுதான் நிதர்சனமும் கூட. இதற்கு உங்கள் சமூக, பொருளாதார இடமும், உங்கள் தேர்வுகளும், நிராகரிப்புகளுமே பெரும்பான்மை காரணங்கள். ஆக, எல்லாமே உங்கள் சூழல்களுக்கும், அதற்கு உங்கள் எதிர்வினைகளுக்குமே உதயமாகிறது.

உங்களிடம் நீர் இல்லை என்றால் அதிகம் நீர் கோராத ஒன்றை தெரிவு செய்து விவசாயத்தில் இறங்குவது உங்கள் புத்திசாலித்தனத்தையும், மதி நுட்பத்தையும் காட்டுவதாக அமையும். பிறருக்கு நீங்கள் முன்னுதாரணமாக இருப்பீர்கள்.  

உங்களால் எது முடியும், எது முடியாது, மண் வளம் என்ன, நீர் வளம் என்ன  என்பதையே தெரிந்துகொள்ளாமல், கண்ணைக் கட்டிக்கொண்டு மண்ணில் கால்வைத்தால், அடுத்தவர்க்கு நீங்கள் பாடமாக மட்டும் தான் ஆவீர்கள்.

அடுத்தவர்க்கு உங்கள் வாழ்க்கையை பாடமாக்கிக்கொள்வதும், அல்லது முன்மாதிரி ஆக்கிக்கொள்வதும் உங்கள் புத்திசாலித்தனத்திலும், அணுகுமுறையிலும், முதிர்ச்சியிலும் இருக்கிறது. நீங்கள் யார் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 

மற்றபடி, முன்மாதிரிகளைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு,  The Great Indian Kitchen  பெரிதாக ஈர்க்காது. 

Tuesday, 16 February 2021

kubool

 அன்பு நண்பர்களுக்கு,

உங்களில் பலருக்கும் என்னிடம் கேட்க கேள்விகள் மிகப்பல இருக்கின்றன என்று அறிகிறேன். சிலர் என்னிடம் கேள்வி கேட்கவெனவே ஒரு fake id உருவாக்குகிறீர்கள். அது அந்த ஐடிக்களைப் பார்த்தாலே தெரிகிறது.

உண்மையில், கேள்விகள் கேட்பதும், பதில் தேடுவதும் எனக்கும் பிடித்தமான செயல்பாடு தான். ஆகவே உங்கள் கேள்விகளை, சந்தேகமே இல்லாமல் வரவேற்கிறேன்.

கேள்வி கேட்பதற்கு தன்னை வெளிப்படுத்திக்கொள்ள தயக்கம் இருப்பவர்களுக்கெனவே kubool பயன்படுத்தலாம் என்றிருக்கிறேன். (இதற்கு முன் சரஹா இருந்தது. ஆனாலும், மேற்சொன்னவாறு fake id மூலமாகவே கேள்விகளையே எதிர்கொண்டிருந்தேன். Ananymous messaging platformகள் குறித்து பலருக்கும் தெரியாமல் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது)

Ananymous ஆக இருக்க விரும்புபவர்களுக்கு kubool ஒரு வரப்பிரசாதமே. பயன்படுத்திக்கொள்ளவும்.
குபூலில் எனக்கு கேள்விகளை அனுப்ப,

முடிந்தவரை பதிலளிக்க முயற்சிக்கிறேன்.
நட்புடன்,
ராம்ப்ரசாத்

Sunday, 14 February 2021

அறிவுசார் தளமும், மக்களின் சிந்தனாமுறையும்

 'பிழைகளின் முகம்' 2011ல் கணையாழியில் வெளியானது. 

அதைவிடவும் வேறொன்றைச் சொல்ல வேண்டும். 

என் கவிதைக்கான அங்கீகாரத்தைத் தந்திருக்கிறார்கள் 'மஞ்சப்பை' என்பவரும், புதியபூமி வலைப்பூ உரிமையாளரும். ஆனால் நான் இன்று தான் தற்செயலாக இதை கவனித்தேன். என் பெயரை நீக்கிவிட எவ்வளவு நேரம் ஆகும்? ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. 

அறிவு சார் தளத்தில் வேண்டும் மட்டும் எழுத்தாளனின் எழுத்தைக் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் 'இலவசமா கிடைச்சா படிக்கிறேன்' என்பவர்கள் தான் அதிகம். படித்துவிட்டு ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் கடந்து போய்க் கொண்டே இருப்பார்கள்.

சினிமாவுக்குப் போனால் பாப்கார்னுக்கு ஐந்நூறு செலவழிக்கும் நம்மவர்களுக்கு, ஒரு புத்தகத்துக்கு நூறு ரூபாய் அளிப்பதில் சுணக்கம் வந்துவிடும். எது எதற்கோ வெட்டியாய் செலவு செய்வார்கள். ஆனால், எழுத்தாளனின் உழைப்பு , இலவசமாய்க் கிடைத்துவிட வேண்டும் இவர்களுக்கு. 

அறிவுசார் உழைப்பை இலவசமாகத் துய்க்கிறோம். குறைந்தபட்சம், நாலு நல்ல வார்த்தைகளாவது பகிரலாம் என்றெல்லாம் யோசனையே வராது. படித்தவர்கள் கூட்டம் தான் இதை அதிகம் செய்கிறது என்பதுதான் வேதனை. இழவு வீட்டில் கூட பிணமாக இருக்க வேண்டும் என்றொரு நல்ல எண்ணம் கொண்டவர்கள் இவர்கள். 

போகட்டும். Karma is a bitch. 

தான் ரசித்ததை நேர்மையாக பகிர்ந்ததுடன், ஆக்கத்தின் ஆசிரியருக்கு உரிய அங்கீகாரத்தையும் அளிக்கும் 'மஞ்சப்பை' மற்றும் புதியபூமி ஆகியோரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. 

@புதியபூமி

@மஞ்சப்பை... 

நன்றிகள் நண்பர்களே...





Friday, 12 February 2021

சேஷம் - சிறுகதை - வாசகசாலை

வாசகசாலையின் இந்த வார இதழில் 'சேஷம்' என்ற என் சிறுகதை வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதையைத் தேர்வு செய்து வெளியிட்ட வாசகசாலை ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

இதழில் சிறுகதையை வாசிக்க பின் வரும் சுட்டியை சொடுக்கவும்:

https://www.vasagasalai.com/sesham-short-story-ramprasath/

Thursday, 11 February 2021

💕 காதல் சோலை - 7 💕

 💕 காதல் சோலை - 7 💕


💕
நீ க‌ட‌ந்து செல்கையில் இத‌ய‌ம் அதிர்வ‌து
புதிதில்லையே என்று
அன்றொருநாள் தரை அதிர்ந்ததில் சும்மா
இருந்துவிட்டேன்...
இனிமேல் அப்படி நடந்தால் நீயாவது
சொல்லிவிட்டு போ நில நடுக்கம் என்று...

💕
உன்னைக்
கரை ஒதுங்கிய மீன்
என்று நினைத்து
வாரியெடுத்துக் கடலில் சேர்த்திடவே
வந்து வந்து போகின்றன
அலைகள்...

💕
உன்னைப் பார்க்கும் வரை,
உன் வீட்டில்
ஆளுயர வண்ணத்துப்பூச்சி
இருப்பதாக எல்லோரும் சொன்னபோது
நான் நம்பவில்லை தான்...

💕
நீ பண்டிகைகள் கொண்டாடுகையில்
ஊரெங்கும்
உன்னைத்தான் கொண்டாடுகிறார்கள்...

💕
காதல் நோயை
எனக்குப் பரப்பி
உயிரியல் போரை
முதன் முதலில் துவக்கியது
நீ தான்...

💕
உன் வீட்டில்
வாஸ்து சரியில்லை...
வாசலில்
இருக்கவேண்டிய பூந்தோட்டம்
உன்னறைக்குள் இருக்கிறது...

- ராம்பிரசாத்