💔💔 பிரேக் அப் கவிதைகள் 💔💔
உனக்கும் எனக்கும்
ஆயிரம் நண்பர்கள் இருந்தாலும்
நமக்கிடையில்
நீ
ஒரு முழு உலகமாக இருக்கையில்
நான் ஒரு
வெற்றிடமாகக் கூட இல்லை...
ஒரே ஒரு புன்னகை தான்
தேவைப்படுவதாக நினைக்கிறாய் நீ...
நமக்கிடையே நம்மை நிரந்தரமாய்
இருத்திக்கொள்ள...
- ராம்பிரசாத்
என்னை
கொஞ்சம் கொஞ்சமாக
சிறுகச்சிறுகத்தான்
அழிக்க நினைக்கிறாய் நீ...
நான் தான்
அதை உணர்ந்தது முதல்
மிக வேகமாக
அழிந்துகொண்டிருக்கிறேன்...
- ராம்பிரசாத்
உனது ஆகச்சிறந்த ஆயுதங்களுடன்
என்னை எதிர்கொள்ளும் உன்னை
நிராயுதபாணியாகத்தான்
எதிர்கொள்கிறேன் நான்...
பிணங்களை
எந்த ஆயுதத்தாலும்
வெல்ல முடியாது
என்பது நீ அறியாததா?...
- ராம்பிரசாத்
நானற்ற உன் நொடிகளை
தெரிந்துகொள்ள விரும்புகிறேன்..
எனக்குள் லேசாக தலைக்கனம்
எழுகிறபோதெல்லாம்...
- ராம்பிரசாத்
உன் மீதான
என் பிரியங்களை
எப்படியேனும் மலடாக்கிட
முயல்கிறேன்...
அவைகள் பல்கி பெறுகுவதில் தான்
எத்தனை சிரமங்கள் உனக்கு...
- ராம்பிரசாத்
ஒரே ஒரு துளி விஷம் தான்...
என் பால் ஆகோப்பையில் கலந்திட
உனக்கு எத்தனை நேரமாகும்?
அதை நான் அறிந்தே பருகிவிட
எனக்குத்தான் எத்தஆனை நேரமாகும்?
- ராம்பிரசாத்