என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Thursday 23 January 2020

தமிழ், தமிழர் புறக்கணிப்பும் தமிழர் எழுச்சியும்

தமிழ், தமிழர் புறக்கணிப்பும் தமிழர் எழுச்சியும்


காலேஜ் வயதில் ஹிக்கின்பாதம்ஸ் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில்  உள்ள புத்தக கடைகளுக்கு செல்கையில் ஆங்கில நாவல்கள் பகுதியில் வட இந்தியர்களின் பெயர்கள் மட்டுமே கண்ணில் படும்.

சேத்தன் பகத்
ஜும்பா லாகிரி
சல்மான் ருஷ்டி
அஷ்வின் சங்கி
குஷ்வந்த் சிங்

இப்படி.

புத்தகத்தை வாங்கி புரட்டினால், டெக்கான் ஹெரால்டு, நியூ யார்க்கர் என்று வெளி நாட்டு பத்திரிக்கைகளும், அமெரிக்க ஐரேப்பியர்களும் நூலை அங்கீகரித்து எழுதியிருப்பார்கள். அதிலும் சேத்தன் பகத் புத்தகங்களில் அமெரிக்கர்கள், பிரித்தானியர்கள் என்று பன்னாட்டு விமர்சன வரிகள் தென்படும்.

அப்போதெல்லாம் தமிழர்கள் எழுதிய ஆங்கில நூல்களை தேடியிருக்கிறேன். ஒன்றும் சிக்காது. அப்படியே சிக்கினாலும் ஒண்றிரண்டு தான். பெரும்பாலும் சுய முன்னேற்றம், சமையல், பணத்தை முதலீடு செய்ய நுறு வழிகள் போன்ற நூல்கள். அதற்கு அந்த  நூலின் ஆசிரியருக்கு வேண்டியவர்களே விமர்சனம் எழுதியிருப்பார்கள்.

இது எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது.

தமிழர்களால் இந்திய பிராந்திய அளவில் கோலோச்ச முடியாதா?
அதையும் தாண்டி சர்வதேச அங்கீகாரம் பெற முடியாதா?

அப்போதெல்லாம் கொஞ்சம் கிறுக்கிக்கொண்டிருந்தமையால், முடிவு செய்து கொண்டேன்.

பின்னாளில் எழுத்தென்று வளர்ந்தால் தமிழில் எழுதுவதோடு நின்றுவிடாமல்,

1. ஆங்கிலத்தில் நாவல் எழுதி அகில இந்திய அளவில் தமிழகத்திற்கு பிரதிநிதியாக நிற்க வேண்டும். தமிழர்களாலும் முடியும் என்று நிரூபிக்க வேண்டும்.
2. அமெரிக்காவில் அமெரிக்கர்களால் என் படைப்பை அடையாளப்படுத்த வேண்டும். சர்வ அங்கீகாரம் தமிழர்களாலும் பெற முடியும் என்று காட்ட வேண்டும்.

இந்த கனவுகள் இரண்டையுமே "உங்கள் எண் என்ன" நூல் நனவாக்கியது. தமிழின் முதல் கணித நாவல் என்பதால் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வைத்தேன்.

"உங்கள் எண் என்ன" தமிழின் முதல் கணித நாவல்.
Those Faulty Journeys அந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு. இரண்டையுமே நானே செய்தேன்.

இந்த  நாவல்கள் இப்போது Alex Kasman என்றழைக்கப்பட்டும் நார்த் கரோலினாவில் வசிக்கும் கணித பேராசிரியரால் கணித நாவல் தான் என்று அங்கீகரிக்கப்பட்டு அவரின் கணித நாவல்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இனி கணித நாவல்களின் பட்டியலில் தமிழகத்திற்கு எப்போதும் ஒரு பிரதிநிதித்துவம் இருக்கும். அது என் மூலமாக சாத்தியம் ஆகி இருக்கிறது என்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி.

என்னாலேயே இது முடிகிறதென்றால் நிச்சயமாக எல்லா தமிழர்களாலும் இது முடியும் என்றே நினைக்கிறேன்.

கொஞ்சகாலமாய் தமிழை, தமிழர்களை இந்திய அளவில் மட்டம் தட்டும் முயற்சிகள் அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் சர்வதேச தரத்தில் தமிழர்களாலும் இயங்கி, சர்வதேச கவனத்தை பெற முடியும் என்பதற்கு இந்த நூல்கள் அத்தாட்சி என்று நம்புகிறேன்.