வருடம் 1998.
அண்ணா பல்கலைக்கழகத்தில் DOTE single window system முறையில், கல்லூரி தேர்வு செய்ய வேண்டும். என் முறை வந்தபோது எந்தக் கல்லூரியைத் தெரிவு செய்வது என்று குழப்பம்.
பல கல்லூரிகளின் இணையப்பக்கத்தைத் தேடி முன்னாள் மாணவர்களின் சாதனைகள், placement தரவுகள் தான் அடிப்படை. அதை வைத்துத்தான் கல்லூரியின் தரம் குறித்து ஒரு அனுமானத்திற்கு வரவேண்டி இருக்கும். எல்லோருக்குமே தெரிந்த நடைமுறை இதுதான்.
மயிலாடுதுறை AVC
சென்னையில் ஜெரூசலேம்
இவ்விரண்டு தான் 1998ல் எனக்கு இருந்ததிலேயே சிறந்த ஆப்ஷன்கள். மயிலாடுதுறை AVC ஓகே தான். ஆனால், சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு இடம் பெயர்ந்து ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டி இருந்தது.
சென்னையில் ஜெரூசலேத்தில் அந்த இடமாற்றம் பிரச்சனை இல்லை. ஆனால், 1995ல் திறக்கப்பட்ட கல்லூரி. முதல் batch மாணவர்களே இன்னும் வெளியே வந்திருக்கவில்லை. இருப்பினும் ஜெரூசலேம் கல்லூரியைத் தேர்வு செய்தது, அது சென்னையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகத்தான்.
இன்று அதே கல்லூரியின் முன்னாள் மாணவர்களில் Distinguished Alumni பட்டியலில் கல்லூரியின் தரம் குறித்து சான்றளிக்கும் இடத்தில் இருப்பது பெருமகிழ்ச்சி.
(படத்தைப் பார்த்துவிட்டு, பொறியியல் படித்து விட்டு இலக்கியம் பக்கம் ஒதுங்கிவிட்டான் என்று நினைக்கவேண்டாம். கல்லூரி முடித்த ஆண்டிலிருந்து இன்றுவரை கணிணி மென்பொருள் துறையில் WIPRO, TCS, CSC, CAPGEMINI போன்ற நிறுவனங்களுக்காய் இன்றளவும் பணியில் இருந்துகொண்டே தான் எழுத்து வாழ்வும் பயணிக்கிறது என்பதைக் கூறிக்கொண்டு....)
ஆம். உண்மையிலேயே அனாயாசமான கல்லூரி தான். மாணவர்களின் நலனின் உண்மையான அக்கறை கொண்ட ஆசிரியர்கள், மற்றும் நிர்வாகம். தைரியமாகச் சேர்ந்து படிக்கலாம்.