என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday 30 August 2020

உங்கள் எண் என்ன? - நாவல் விமர்சனம் - முத்து

உங்கள் எண் என்ன? - நாவல் விமர்சனம் - முத்து 


தமிழின் முதல் கணித நாவல் என்பதுதான் புத்தகத்தை முதலில் வாசிக்க தூண்டிய விஷயம். ராம் எனக்கு Science Fiction கதைகள் மூலமாக ஏற்கனவே அறிமுகமாகி இருந்தார். அவர் கதைகளில் இருக்கும் தேர்ந்த கதாபாத்திரங்கள், சுவரஸ்யமான கோட்பாடுகள் எப்போதுமே ரசிக்க வைப்பவை. 'உங்கள் எண் என்ன?' ஒரு ஆழமான, அடிப்படை உறவுசார் கோட்பாட்டை கணித முறையில் எடுத்து கொண்டு அதன் அடிப்படையில் உறவுகளை, அது எப்படி அமைய வேண்டும் என்பதை, எப்படி மாற்றி யோசிக்க வேண்டும் என்பதை, மாற்றம் எது என்பதை எல்லாம் விவாதிக்கின்றது. மாற்று சிந்தனையின் ஒரு நல்ல விஷயம். அது ஒரு தீர யோசித்து அமைக்கபட்ட கோட்பாடினை கொண்டு வளரும் போது, மேலும் சிந்தனை விரிவாக்கதுக்கு உதவுகிறது. இந்த நாவலிலும் அதுதான் நிகழ்கிறது. நிறைய நாவல் இலக்கணங்களை தகர்த்து போகும் எழுத்தும் அமைப்பும் வலுவூட்டுகின்றன. ஒரு புதிய வாசிப்பு அனுபவம் தேவை எனும் போது இந்த புத்தகம் பரிந்துரை செய்யலாம்.