48வது சென்னைப் புத்தகக் கண்காட்சி நந்தனத்தில் உள்ள Y.M.C.A உடற்கல்வியியல் கல்லூரியில் டிசம்பர் 27 துவங்கி 12 ஜனவரி 2025 வரை நடைபெற உள்ளதாக பபாசி அறிவித்துள்ளது.
படைப்பு பதிப்பக வெளியீடாக விற்பனையில் இருக்கும் எனது நூல்களின் பட்டியல் பின்வருமாறு:
1. "வாவ் சிக்னல்" விஞ்ஞானச் சிறுகதைத் தொகுப்பு(2020)
2. "மரபணுக்கள்" விஞ்ஞானச் சிறுகதைத் தொகுப்பு(2024)
3. "தீசஸின் கப்பல்" சிறார்/இளையோர் விஞ்ஞானச் சிறுகதைத் தொகுப்பு(2024)
இவற்றில் "வாவ் சிக்னல்" நூல், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த சிறுகதை நூல் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. "மரபணுக்கள்", "தீசஸின் கப்பல்" ஆகிய இரண்டு நூல்களும் நடப்பாண்டில் வெளியாகும் எனது விஞ்ஞானச் சிறுகதை நூல்கள் ஆகும்.
நாளைய உலகம் அறிவியல் உலகமாகப் பரிணமிக்க என்னாலான சிறு முயற்சிகள் இந்த நூல்கள். அதே நோக்கத்திற்காய் இந்த நூல்களுக்குத் தங்கள் நல்லாதரவை நல்குமாறு இணைய நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
பிரதிகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:
ஜின்னா (பதிப்பாளர் - படைப்பு பதிப்பகம்)
Phone: 7338897788/7338847788
படைப்பு நூல் நிலையம்
எண் 3, தரைத்தளம், அஜந்தா டவர்ஸ்,
கார்ப்பரேஷன் காலனி தெரு, கோடம்பாக்கம்
சென்னை - 600024.
ஸ்டால் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.