என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday, 27 March 2024

ஜெரூசலேம் பொறியியல் கல்லூரி - சென்னை

 


வருடம் 1998.

அண்ணா பல்கலைக்கழகத்தில் DOTE single window system முறையில், கல்லூரி தேர்வு செய்ய வேண்டும். என் முறை வந்தபோது எந்தக் கல்லூரியைத் தெரிவு செய்வது என்று குழப்பம். 

பல கல்லூரிகளின் இணையப்பக்கத்தைத் தேடி முன்னாள் மாணவர்களின் சாதனைகள், placement தரவுகள் தான் அடிப்படை. அதை வைத்துத்தான் கல்லூரியின் தரம் குறித்து ஒரு அனுமானத்திற்கு வரவேண்டி இருக்கும். எல்லோருக்குமே தெரிந்த நடைமுறை இதுதான்.


மயிலாடுதுறை AVC

சென்னையில் ஜெரூசலேம்

இவ்விரண்டு தான் 1998ல் எனக்கு இருந்ததிலேயே சிறந்த ஆப்ஷன்கள். மயிலாடுதுறை AVC ஓகே தான். ஆனால், சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு இடம் பெயர்ந்து ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டி இருந்தது.

சென்னையில் ஜெரூசலேத்தில் அந்த இடமாற்றம் பிரச்சனை இல்லை. ஆனால், 1995ல் திறக்கப்பட்ட கல்லூரி. முதல் batch மாணவர்களே இன்னும் வெளியே வந்திருக்கவில்லை. இருப்பினும் ஜெரூசலேம் கல்லூரியைத் தேர்வு செய்தது, அது சென்னையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகத்தான். 

இன்று அதே கல்லூரியின் முன்னாள் மாணவர்களில் Distinguished Alumni பட்டியலில் கல்லூரியின் தரம் குறித்து சான்றளிக்கும் இடத்தில் இருப்பது பெருமகிழ்ச்சி. 

(படத்தைப் பார்த்துவிட்டு, பொறியியல் படித்து விட்டு இலக்கியம் பக்கம் ஒதுங்கிவிட்டான் என்று நினைக்கவேண்டாம். கல்லூரி முடித்த ஆண்டிலிருந்து இன்றுவரை கணிணி மென்பொருள் துறையில் WIPRO, TCS, CSC, CAPGEMINI போன்ற  நிறுவனங்களுக்காய் இன்றளவும் பணியில் இருந்துகொண்டே தான் எழுத்து வாழ்வும் பயணிக்கிறது என்பதைக் கூறிக்கொண்டு....)

 ஆம். உண்மையிலேயே அனாயாசமான கல்லூரி தான். மாணவர்களின் நலனின் உண்மையான அக்கறை கொண்ட ஆசிரியர்கள், மற்றும் நிர்வாகம். தைரியமாகச் சேர்ந்து படிக்கலாம்.




Tuesday, 26 March 2024

Horror - Lightning - QuailBell Magazine

How often do writers end up becoming movie makers? When they do, it's inspiring.

Christian Stoddard, who was the then founding editor of Quail Bell Magazine (which seems still running), has become that inspiring one. "Sirena's Gallery" is her work as a feature film available for watching in Tubi.

Our roads last crossed with my unreal " Lightning " in 2015. I am glad someone I knew and have worked with has made it with a gentle nod - "Yes, it is possible."

http://www.quailbellmagazine.com/the-unreal/fiction-lightning

I wish her good luck!!




 

Saturday, 23 March 2024

'தோப்பு' தொகுதியில் எனது 'போர்' சிறுகதைக்கு வந்த மின்னஞ்சல்

 'தோப்பு' தொகுதியில் எனது 'போர்' சிறுகதைக்கு வந்த மின்னஞ்சல்....வாசகருக்கு நன்றிகளும், அன்பும்....






Tuesday, 19 March 2024

அரூ அறிவியல் சிறுகதைகளின் தொகுப்பு நூல்

அரூ அறிவியல் சிறுகதைகளின் தொகுப்பு நூல் எழுத்துப் பிரசுரம் வாயிலாக வெளியாகியிருக்கிறது. எனது 'தழுவு கருவி' சிறுகதை இடம்பெறும் இது நான் பங்குபெறும் ஏழாவது தொகுப்பு நூல் ஆகும்.

சிறுகதை நூலைப் பெற பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்:

https://www.zerodegreepublishing.com/products/aroo-ariviyal-sirukathaigal-4-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%82-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4


Aroo's fourth Science Fiction and fantasy anthology, which includes my short story 'Thazhuvu Karuvi,' is out now through Ezhuthu Prasuram. 

Click the link below to secure your copies.

https://www.zerodegreepublishing.com/products/aroo-ariviyal-sirukathaigal-4-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%82-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4




Wednesday, 6 March 2024

சரோஜாதேவி புத்தகம் - பின்னூட்டங்கள்

சமீபத்திய சிறுகதைகளுக்கு வந்த பின்னூட்டங்கள்!..

Reviews/Feedback on recent short stories...

சொல்வனம்

https://solvanam.com/2024/02/11/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/

இச்சிறுகதையின் ஒலி வடிவத்தை Saraswathi Thiagarajan  அவர்கள் தன் இனிமையான குரலில் பதிந்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். அவரது குரலில் சிறுகதையைக் கேட்க பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்: 

https://www.youtube.com/watch?v=utch_UDt5Yw