என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday 18 November 2023

Yarkovsky Effect

Yarkovsky Effect


பென்னு ஒரு குறுங்கோள். NEO பட்டியலில் இருக்கிறது. டைனோசார்கள் அழிவுக்குக் காரணமான ஒரு அழிவை ஏற்படுத்திவிடக்கூடியது இந்த பென்னு. ஆனால், இப்போதைக்கு ஆபத்தில்லை என்று உலக நாடுகள் அறிவித்திருக்கின்றன. 


அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்; இது குறித்துப் பகடி செய்து ஒரு படம் எடுத்திருந்தார்கள். படத்தின் பெயர் 'Don't Look Up'. டிகாப்ரியோ, ஜெனீஃபர் லாரன்ஸ் நடித்த படம். முடிந்தால் பாருங்கள்; அரசாங்கங்களின் கள்ள மெளனத்திற்கு அர்த்தம் புரியும்.


Yarkovsky Effect பற்றிச் சொல்ல வேண்டும். இது என்னவென்றால், எந்தக் குறுங்கோளும் விண்வெளியில் தன் போக்கில் தன்னையே சுற்றக்கூடியது. சூரிய ஒளியின் வெப்பம் அதன் மீது படுகையில், வேதியியல் மாற்றங்களால் , சிறிய அளவில் ஆற்றல் வெளிப்படுகிறது. இந்த ஆற்றல், குறுங்கோளின் சுழற்சியால் உந்து விசையாக மாறுகிறது.  இந்தக் குறுங்கோள் 2182ம் வருடம் பூமி மீதே மோதலாம் என்கிறார்கள். 


இத்தனை காலம் ஏன் இந்த ஆபத்து இல்லை? திடீரென எப்படி இது முளைத்தது என்காதீர்கள்?

Yarkovsky effectஆல், இந்தக் குறுங்கோலின் சுற்றுப்பாதை ஆண்டுக்கு 934 அடி மாற்றம் காண்கிறது என்று கணக்கிட்டிருக்கிறார்கள்; பூமியை அழிக்கும் அளவுக்கு பூமிக்கு அருகாமையில் வர அந்தக் குறுங்கோளுக்கு இத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கிறது என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த விசையால், இத்தனை தசாப்தங்களாய் பூமிக்கு அருகாமையில் தொடாமல் கடந்து சென்று கொண்டிருக்கும் இப்படியான எத்தனை குறுங்கோள்கள் பாதை மாற இருக்கின்றனவோ தெரியவில்லை.  

உங்களை பயமுறுத்த இதைச் சொல்லவில்லை. Choose your priorities என்று சொல்வது மட்டுமே இந்தப் பதிவின் நோக்கம். நாம் வாழும் இந்த பூமி, நமது நிலம், நம் வீடு, அது அமைந்திருக்கும் தெரு, நமதென்று நாம் நினைக்கும் அத்தனையும் ஒரே நொடியில் மூட்டைப் பூச்சி  நசுக்கப்படுவது போல் நசுக்கப்படலாம். 


பூமிக்கிரகம் இதுகாறும் ஐந்து பேரழிவுகளைச் சந்தித்திருக்கிறது. ஆறாவதுக்கு மிக அருகாமையில் மனித இனம் இப்போது இருப்பதாக எண்ணம் முளைத்தபிறகு தான் அவசர அவசரமாக வேறு கிரகங்களில் வாழ முடியுமா என்று தேடத்துவங்கியிருக்கிறார்கள். Von Braun எழுதிய 1953 Mars Project ன் ஆரூடம் பலிக்கிறதா பார்க்கலாம்.


அப்படி ஒன்று கிடைக்கும் பட்சத்தில், பிழைக்கப்போவது உலகின் பெரும்பணக்காரர்கள் மட்டுமே.  எப்படி என்பதை 'Don't look up' காட்சிகளாக நகைச்சுவையாகச் சொல்லும். ஆக, பிழைக்கப்போவது நீங்களோ நானோ அல்ல.  


பூமிக்கிரகத்தின் ஐந்து பேரழிவுகளின் போதும், பேரழிவுக்கு முன் 'பேரழிவு வரப்போகிறது' என்பதை அப்போது பூமியில் வாழ்ந்த உயிர்கள் முன்னுணர சாத்தியமிருக்கவில்லை. அந்த வகையில், மனித இனம் அதிர்ஷ்டசாலி இனம் என்று தான் சொல்லத்தோன்றுகிறது. ஆனால், அந்த அதிர்ஷ்டமிருந்தும் நாம் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால், இருப்பதிலேயே மடத்தனமான இனம் இதே மனித இனமாகத்தான் இருக்கும். இல்லையா? Now that we know what is in store, wrap up things quickly. 


ஏற்கனவே சொன்னது போல, கல்லூரியின் கடைசி நாளில் பிடித்தவன், பிடிக்காதன் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் எல்லோரின் மேலும் ஒரு அன்பு வரும்.... அதுதான் நமக்குத் தேவை...  I mean, அந்த மனநிலை வாய்க்குமென்றால், அந்த உண்மையைப் பகிர்ந்தால் தான் என்ன என்பதே என் வாதம் ...