பட்டாவளி - பாஸ்டன் பாலா - சொல்வனம் 300
பட்டாவளி
சமீபத்திய தமிழ் எழுத்தாளர்கள் யார்? இப்போதைய காலகட்டத்தில் அவசியம் வாசிக்க வேண்டிய புனைவுகள் என்ன? முக்கிய பதிப்பகங்களில் எந்த நாவல்கள் விமர்சகரின் கவனத்தைக் கோருகின்றன? யுவன் சந்திரசேகர், சாரு நிவேதிதா, அ. முத்துலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன், பா. ராகவன். ஜெயமோகன், இரா. முருகன், அ. முத்துலிங்கம், பாவண்ணன், மாலன் போன்றோர் 2000களில் இணையத்தையும் அச்சையும் கோலோச்சினார்கள். அவர்களைப் போன்றோர் உயிர் எழுத்து, காலச்சுவடு, உயிர்மை, உன்னதம், சொல் புதிது, கல்குதிரை, கலைமகள், கதிர் போன்ற அச்சு இதழ்களிலும் அவரவர் வலையகம் மூலமாகவும் அனுதினமும் கட்டுரையும் கதையும் வெளியிட்டார்கள். இன்றைய இயல், விளக்கு, ஞானபீடம், சாகித்திய அகடெமி, விஷ்ணுபுரம் விருது என்று கவனிப்புகளை அடுத்த தலைமுறையில் எவர் அள்ளப் போகிறார்கள்?
முகவணை
இந்த இதழைத் துவக்கும்போது ஓரிரண்டு பட்டியல்களைக் கொண்டு தயாரித்திருக்க வேண்டும்.
- (கவனிக்கப்படாத) சமீபத்திய எழுத்தாளர்கள் பட்டியல்
- (அறியப்பெற்ற) சமீபத்திய எழுத்தாளர்கள் பட்டியல்
- மேலேயுள்ள இரு பட்டியலில் உள்ளவர்களை அறிமுகம் செய்யக் கூடிய விமர்சகர்கள்
- முக்கிய பதிப்பகங்கள் – 2000த்துக்குப் பிறகு எழுந்து வரும் எழுத்தாளர்களை எவர் வெளியிடுகிறார்கள்?
- சமீபத்திய சிறுகதைத் தொகுப்புகள்
- சமீபத்திய நாவல் நூல்கள்
- இளைஞர்களுக்கான விருதுகளின் பட்டியல்
- விருதுகளைப் பெற்றவர்கள்
- குங்குமம், விகடன் போன்ற வணிக இதழ்களில் முத்திரை சிறுகதை எழுதியவர்கள்
- காலச்சுவடு, கல்குதிரை போன்ற இலக்கிய இதழ்களில் கதை எழுதியவர்கள்
- இணைய வலையகங்களில் தொடர்ச்சியாக புனைவை அளிப்பவர்கள்
இப்போதும் ஒன்றும் தாமதமாகவில்லை. கைவசம் அவர்களைத் தொகுத்துக் கொண்டால், இந்த இதழில் எவரெவரைத் தவற விட்டோமோ, அவர்களை வரும் வெளியீடுகளில் கவனிக்கலாம். வரும் வாரங்களில் வாசிக்க எடுத்து வைக்கலாம். குறைந்த பட்சம் மற்றவர்களையாவது படிக்குமாறு தூண்டலாம்.இதுதான் இந்த பட்டியல் பதிவின் குறிக்கோள்
விருதுகள்
விருதுகள் எவ்வளவு இருக்கின்றன? சமீபத்திய ஆண்டுகளில் எவர் அவற்றைப் பெற்றனர்? பு.பி. பேரை வைத்தே மூன்று வெவ்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன (நன்றி: தமிழ் விக்கி)
- KRG நாகப்பன் ராஜம்மாள் விருது
- அக்கராயன் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் சாதனைப் பெண்மணி விருது
- அசோகமித்திரன் விருது
- அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை விருது
- அமரர் ஜோதிவிநாயகம் நினைவு பரிசு
- அமுதன் அடிகள் விருது
- அவள் விகடனின் இலக்கிய விருது
- அன்றில் வளர் தமிழ் சிறுகதையாளர் விருது
- ஆனந்த விகடன் வைர விழா சிறப்புச் சிறுகதை விருது
- ஆனந்தாஸ் எம்.பி கலை இலக்கிய விருது
- இலக்கிய சிந்தனை விருது (சிறுகதை)
- இலக்கியச் சிந்தனை சிறந்த நாவலுக்கான விருது
- இலக்கியப்பேராளுமை விருது
- இலக்கியவீதி – அன்னம் விருது
- இலங்கை – முரசொலி பத்திரிகையின் முதல் பரிசு
- இலங்கை தேசிய சாகித்திய மண்டல விருது மற்றும் யாழ் இலக்கியப் பேரவையின் விருது
- இளைஞர் ஆண்டு நாவல் போட்டி
- உலகத் தமிழ் பண்பாட்டு மைய விருது
- எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு நினைவு விருது
- எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது
- என்.சி.பி.எச். வழங்கும் தொகுதிக்கான விருது
- எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் வழங்கும் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது
- ஏலாதி அறக்கட்டளை இலக்கிய விருது
- கண்டாவளைப் பிரதேச சபையின் கலாசாரப் பிரிவின் “ஒளிச் சுடர்” விருது
- கதா அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருது
- கலைஞர் பொற்கிழி விருது
- கவிஞர் தேவமகள் அறக்கட்டளை விருது
- கவிஞர் வைரமுத்து விருது
- களரி அறக்கட்டளை வழங்கும் கு. அழகிரிசாமி நினைவு விருது.
- கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் விருது
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் புனைவு விருது.
- கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது
- காசியூர் ரங்கம்மாள் விருது
- கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் “இலக்கியமணி” பட்டமும் தங்கப் பதக்கமும்
- கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது
- குமுதம் வெள்ளி விழா கதைப்போட்டி
- கொழும்பு கலை இலக்கிய கழகத்தின் விருது
- கொழும்பு சுதந்திர இலக்கிய அமைப்பின் விருது மற்றும் யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு
- கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் ‘ரங்கம்மாள் நினைவு விருது
- சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளியின் ‘படைப்பூக்கத் தமிழ் விருது
- சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது
- சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது –
- சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்ட குறுநாவல் போட்டி
- சிறுகதைத் தொகுப்பிற்காக: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க ‘புதுமைப்பித்தன் நினைவு விருது’
- சிற்பி அறக்கட்டளை விருது
- சிற்பி இலக்கிய விருது
- சுஜாதா விருது
- சுஜாதா-உயிர்மை அறக்கட்டளையின் சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான விருது
- செயந்தன் நினைவு கவிதை விருது
- சென்னை இலக்கிய திருவிழாவின் சிறந்த எழுத்தாளர் விருது
- சென்னை இலக்கிய வீதி வழங்கும் அன்னம் விருது
- சென்னை ரோட்டரி சங்க விருது
- சேலம் தமிழ்ச் சங்கம் விருது.
- சௌமா இலக்கிய விருது
- ஞானியின் கோலம் அறக்கட்டளையின் ‘அசோகமித்திரன்’ விருது
- டிஸ்கவரி புக் பேலஸ் வழங்கும் பிரபஞ்சன் நினைவு விருது
- தஞ்சாவூர் நெருஞ்சி இலக்கிய வட்டத்தின் க நா சு விருது
- தஞ்சை பிரகாஷ் கவிதை விருது
- தமிழக அரசின் கலைமாமணி விருது
- தமிழக அரசின் சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான விருது
- தமிழக அரசின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது
- தமிழக அரசின் சிறந்த நாவல் விருது
- தமிழக அரசு எழுத்தாளர் விருது (திருவள்ளுவர் தினம் – பொங்கல் பண்டிகையை ஒட்டி)
- தமிழ் முஸ்லிம் திண்ணை வழங்கும் தோப்பில் முகமது மீரான் நினைவு விருது
- தமிழ் வித்தகர் விருது
- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் புதுக்கவிதை நூலிற்கான பரிசு
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநில விருது
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கும் சிறந்த நாவல் விருது
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மாநில விருது
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கும் செல்வன் கார்க்கி விருது
- தி இந்து குழுமத்தின் லிட் ஃபார் லைஃப் (lit for life) விருது
- தி க சி இயற்றமிழ் விருது
- தி. ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டி
- திருச்சி எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேசன் பள்ளி வழங்கும் தமிழ் விருது
- திருப்பூர் கலை இலக்கியப் பேரவை விருது
- திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
- திருப்பூர் மத்திய அரிமா சங்கம் வழங்கும் சக்தி விருது
- திருமதி. செளந்தரா கைலாசம் அறக்கட்டளை விருது
- தேனீ இலக்கியக் கழகம் வழங்கும் ‘கவிச்செம்மல்’ பட்டம்
- நியூஜெர்ஸி தமிழ்சங்க விருது
- நெய்வேலி புத்தகக் கண்காட்சி வழங்கும் சிறந்த எழுத்தாளர் விருது
- நெல்லை இலக்கிய வட்டம் வழங்கும் ’எழுத்துலகச் சிற்பி’ பட்டம்
- படைப்பு இலக்கிய விருது
- பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய விருது
- பாவலர் முத்துசுவாமி விருது
- புதுச்சேரி அரசின் சிறந்த நாவலுக்கான விருது
- பெரியார் விருது
- மத்திய அரசின் பரிசு
- மலைச் சொல் விருது
- மா அரங்கநாதன் விருது
- யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு
- யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் ஒன்றியம் தனது வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு இலக்கியப் பணிக்கான கௌரவிப்பு
- ரோட்டரி கிங்க்ஸ் ஆப் தஞ்சாவூர் சாதனை இளைஞர் விருது
- லில்லி தேவசிகாமணி விருது
- வடக்கு – கிழக்கு மாகாண சபையின் சிறந்த நூல் பரிசு
- வடக்கு கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் விருது
- வடக்கு மாகாண சபையின் சிறந்த நூல் பரிசு
- வடசென்னை தமிழ்ச்சங்கம் இலக்கிய விருது
- வரலாற்றுப் புத்தகத்திற்கான ‘தெற்கு எழுத்தாளர் இயக்க விருது’
- வல்லினம் விருது
- வள்ளுவ பண்பாட்டு மைய விருது
- வாழ்நாள் சாதனைக்காக விளக்கு இலக்கிய அமைப்பு வழங்கும் புதுமைப்பித்தன் விருது
- விகடன் விருது (ஆண்டுதோறும் – வருட இறுதியில்)
- விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கவிஞர் மீரா விருது
- விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது
- வீரகேசரி – யாழ் இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய கனக.செந்திநாதன் நினைவுப் போட்டி
இவற்றில் பெரும்பாலானவை தமிழகத்தை முன்வைத்தே வழங்கப்படுபவை. ஈழத் தமிழர்களையும் இலங்கை வாழ் எழுத்தாளர்களின் முக்கியப்படுத்தல்களையும் தனியே பார்க்க வேண்டும்; தேட வேண்டும். இதில் திண்ணை, சொல்வனம், குவிகம், காலம், குருகு, சுவடு, அகழ், அடவி, அழிசி, தன்னறம், பதாகை, தமிழினி போன்ற இணைய இதழ்களின் (மேலும்: List of Online Tamil Magazines and How to Write for them | 10 Hot) அடையாளம் என பரிசோ, போட்டியோ, விருதோ, பட்டமோ, கௌரவங்களோ தராதது சோகமா? இயலாமையா? கும்பலோடு கோவிந்தா போடாத அடையாளத் தனித்துவமா? ‘நானும் ரௌடிதான்’ என்னும் இலக்கிய கௌரவத்தை இழக்கும் பரிதாபமா?இவை முகாந்திரம். இந்தக் கேள்விகளுக்கு எளிமையான விடை கிடையாது. நாம் சொல்லும் ஆருடங்கள் பலிக்காமல் போகலாம். என் பரிந்துரைகள் உங்களைக் கவராமல் போகலாம். அதை விட அந்த நூல்களும் புதினங்களும் படைப்புகளும் ருசிக்காமல் போகலாம்.
புதிய முகங்கள் – சமீபத்திய எழுத்தாளர்கள்
சமீபத்தில் எழுதத் துவங்கியவர்களில் அதிகம் கவனிப்பைப் பெறாதவர்களில் துவங்குவோம்.
அதிகம கவனம் பெறாத சிறுகதை எழுத்தாளர்களும் நாவல் புனைவாளர்களும் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் கடந்த ஐந்தாண்டுகளுக்குள் எழுதத் துவங்கியவர்கள். இவர்களில் சிலர் ரொம்ப காலமாக எழுதுபவர்கள். ஃபேஸ்புக், டிவிட்டர் எக்ஸ், டிக் டாக், இன்ஸ்டாகிராம், பிண்டெரெஸ்ட் என்று சமூக ஊடகங்களில் சர்ச்சையும் நண்பர்களும் அதிகம் இல்லாமல் சற்றே அமைதியாக உருவாக்கும் படைப்பாளிகளின் பட்டியல்.
- ‘பரிவை’ சே.குமார்
- அகராதி
- அசோக்ராஜ்
- அண்டனூர் சுரா
- அருண் பாண்டியன்
- அனுராதா ஆனந்த்
- ஆ.ஆனந்தன்
- ஆகாசமூர்த்தி
- ஆதித்ய ஸ்ரீநிவாஸ்
- ஆமினா முஹம்மத்
- ஆர். சேவியர் ராஜதுரை
- ஆர்.நித்யா ஹரி
- ஆவுடை
- ஆவுடையப்பன் சங்கரன்
- ஆழிவண்ணன்
- ஆனந்தி ராமகிருஷ்ணன்
- இ. ஹேமபிரபா
- இதயா ஏசுராஜ்
- இமாம் அத்னான்
- இரா. சேவியர் ராஜதுரை
- இரா. தங்கப்பாண்டியன்
- இராதா கிருஷ்ணன்
- இலட்சுமண பிரகாசம்
- இளங்கோவன் முத்தையா
- இளங்கோவன் ஜி.பி.
- ஈப்போ ஸ்ரீ
- உக்குவளை அக்ரம்
- உத்தமன் ராஜா
- எஸ். திவாகர்
- எஸ்ஸார்சி
- ஏ. ஆர். முருகேசன்
- க.சி.அம்பிகாவர்ஷினி
- க.மூர்த்தி
- கணேசகுமாரன்
- கணேஷ் ராகவன்
- கணேஷ் ராம்
- கண்.சதாசிவம்
- கயல்
- கரன் கார்க்கி
- கனகா பாலன்
- கனி விஜய்
- கனிமொழி.ஜி
- காயத்ரி.ஒய்
- கார்த்திக் பிரகாசம்
- கார்த்திக் ஸ்ரீநிவாஸ்
- காளீஸ்வரன்
- கிருத்திகா கணேஷ்
- கிருஷ்ண ப்ரசாத்
- கு. ஜெயபிரகாஷ்
- குமரகுரு
- கே.உமாபதி
- கே.எஸ்.சுதாகர்
- கோ. சுனில்ஜோகி
- கோமதி ராஜன்
- ச.கோ. பிரவீன் ராஜ்
- ச.வி.சங்கர்
- சக.முத்துக்கண்ணன்
- சங்கர்
- சங்கர் சதா
- சந்தீப்குமார்
- சந்தோஷ் மாதேவன்
- சந்தோஷ் ராகுல்
- சரத்
- சாது பட்டு
- சாந்தி மாரியப்பன்
- சாரதி
- சி.வீ.காயத்ரி
- சிசுக்கு
- சிதம்பரம்
- சிவகுமார் முத்தய்யா
- சீராளன் ஜெயந்தன்
- சுந்தரண்யா
- சுப்புராஜ்
- சுரேஷ் பரதன்
- சுஜித் லெனின்
- செல்வசாமியன்
- சேகர் சக்திவேல்
- சேவியர் ராஜதுரை
- சொல் உடையார்
- சோ.சுப்புராஜ்
- த.அரவிந்தன்
- தயாஜி
- தர்மு பிரசாத்
- தனசேகர் ஏசுபாதம்
- தன்ராஜ் மணி
- தாமரை பாரதி
- தாரிகை
- தினேஷ் பாண்டியன்
- தீபா நாகராணி
- தீபா ஸ்ரீதரன்
- தீனதயாளன்
- துரை. அறிவழகன்
- தெரிசை சிவா
- தேவசீமா
- தேவராஜ்
- தேவிலிங்கம்
- நந்தாகுமாரன்
- நவநீதன் சுந்தர்ராஜன்
- நறுமுகை தேவி
- நா. ஞானபாரதி
- நா.சிவராஜ்
- நித்ய சைதன்யா
- நித்வி
- நிவேதினி நாகராஜன்
- ப. சுடலைமணி
- பா. கண்மணி
- பா. ரமேஷ்
- பா. ராஜா
- பாலமுருகன் நெல்லை
- பிந்துசாரா
- பிரசாத் சுந்தர்
- பிரசாத் மனோ
- பிரசாத் ரங்கசாமி
- பிரசாந்த் வே.
- பிரதீப் சிவபெருமான்
- பிரதீப் நீலகண்டன்
- பிரபு தர்மராஜ்
- பிரியா கிருஷ்ணன்
- பிருந்தா இளங்கோவன்
- புகழின் செல்வன்
- போதி
- ப்ரசாந்த் கார்த்திக்
- ப்ரவீன் ராஜ்
- மகாராஜா காமாட்சி
- மகேஷ்குமார் செல்வராஜ்
- மஞ்சுநாத்
- மணிமாலா மதியழகன்
- மனோஜ்
- மன்னர்மன்னன் குமரன்
- மாதவன் பழனியப்பன்
- மால்கம்
- மாறன். மா
- மிதுன் கௌசிக்
- முகம்மது ரியாஸ்
- முத்தழகு கவியரசன்
- முத்துராசா குமார்
- மோனிகா மாறன்
- மோஹன் ஹரிஹரன்
- ரக்ஷன் கிருத்திக்
- ரமேஷ் கண்ணன்
- ரமேஷ் ரக்சன்
- ரவிச்சந்திரன் அரவிந்தன்
- ராஜா சிவகுமார்
- ராஜேஷ் ராதாகிருஷ்ணன்
- ரெ.விஜயலெட்சுமி
- ரெஜி இசக்கியப்பன்
- ரேவதி ரவிகாந்த்
- லட்சுமிஹர்
- லதா ரகுநாதன்
- லிவி
- வசந்தி முனீஸ்
- வளவன்
- வாசுதேவன் அருணாசலம்
- வாணி ஆனந்த்
- வாஸ்தோ
- விக்டர் ப்ரின்ஸ்
- விக்னேஷ்
- வில்லரசன்
- விஜயநாகசெ
- விஜயராணி மீனாட்சி
- விஜய் சுந்தர் வேலன்
- விஜய் வேல்துரை
- ஜனநேசன்
- ஜாபாலன்
- ஜார்ஜ் ஜோசப்
- ஜி. கார்ல் மார்க்ஸ்
- ஜீ. கணேஷ்
- ஜெகநாத் நடராஜன்
- ஜெகன்மித்ரா
- ஜெயந்தி
- ஜெயன் கோபாலகிருஷ்ணன்
- ஜே.மஞ்சுளாதேவி
- ஜேக்கப் மேஷாக்
- ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
- ஶ்ரீராம் விஸ்வநாதன்
- ஷரத்
- ஹரிஷ் குணசேகரன்
- ஹரீஷ் கணபதி
- ஹேமா
- ஹேமி கிருஷ்
சமீபத்திய விகடன் படைப்பாளிகள்
ஆனந்த விகடனுக்கென்று ஒரு சிறப்பு உண்டு. அதில் வரும் சிறுகதைகளும் எழுத்தாளர்களும் பரவலாகப் பலரைச் சென்றடைந்து நெடுங்காலமாக இலக்கிய வானில் ஜொலித்த காலம் ஒன்றுண்டு. இப்போதைய காலகட்டத்தில் அது திரைக்கதைக்கும் சினிமாவுக்குமான வாயிலாகிப் போனாலும் இன்னும் அதில் யார் எழுதுகிறார்கள், எப்படிப்பட்ட படைப்புகளைக் கொணர்கிறார்கள் என்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதையொட்டி விகடன் சிறுகதையாசியர்களின் பட்டியல்:
- அய்யப்பன் மகாராஜன்
- அரவிந்தன்
- ஆர். ஸ்ரீனிவாசன்
- இமையாள்
- எஸ்.பர்வின் பானு
- எஸ்.வி.வேணுகோபாலன்
- க.அம்சப்ரியா
- கணேசகுமாரன்
- கவிதைக்காரன் இளங்கோ
- கவிப்பித்தன்
- கு.இலக்கியன்
- கே.பி.சிவகுமார்
- சசி
- சிவகுமார் முத்தய்யா
- துரை.அறிவழகன்
- நர்சிம்
- நூருத்தீன்
- பாலைவன லாந்தர்
- பிரபாகரன் சண்முகநாதன்
- பிறைமதி குப்புசாமி
- புலியூர் முருகேசன்
- ம . காமுத்துரை
- மாத்தளை சோமு
- ரமணன்.கோ
- ராஜேஷ் வைரபாண்டியன்
- விஜி முருகநாதன்
- ஸ்ரீதர் பாரதி
- ஹாசிப் கான்
இதே போல் குங்குமம் இதழில் எழுதியவர்கள், காலச்சுவடு போன்ற சிற்றிதழ்கள், பிற சிறுபத்திரிகைகளில் எழுதியவர்களையும் பட்டியலிடலாம்.
பரவலாக எழுதி கவனிப்பைப் பெற்ற படைப்பாளிகள்
அடுத்ததாக வாசிக்க வேண்டிய படைப்பாளிகளின் பட்டியல் பரிந்துரைகள்.
இவர்களில் பெரும்பாலானோர் பல காலமாக எழுதுபவர்கள். பல விருதுகளை அள்ளியவர்கள். பத்திரிகை நடத்துபவர்கள். பல நூல்களை வெளியிட்டவர்கள். இணையத்தில் அறியப் பெற்றவர்கள். சாரு நிவேதிதா, ஜெயமோகன் போன்ற மோதிரக்கையால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.
- அ. ரெங்கசாமி
- அ.கரீம்
- அகரமுதல்வன்
- அகரன்
- அமர்நாத்
- அமல்ராஜ் பிரான்சிஸ்
- அமுதா ஆர்த்தி
- அரவிந்தன்
- அராத்து
- அரிசங்கர்
- அருணா சிற்றரசு
- அருள்செல்வன்
- அனார்
- அனோஜன் பாலகிருஷ்ணன்
- அஜிதன்
- ஆசி கந்தராஜா
- ஆதவன் தீட்சண்யா
- ஆத்மார்த்தி
- ஆர்.அபிலாஷ்
- இடலாக்குடி அசன்
- இந்திரா ராஜமாணிக்கம்
- இராகவன் ச.
- இராயகிரி சங்கர்
- இலட்சுமி சரவணகுமார்
- இளங்கோ
- உதயசங்கர்
- உமாஜி
- எம். எம். நௌஷாத்
- எம். தவசி
- எம். ரிஷான் ஷெரீப்
- எம்.எம். நௌஷாத்
- எம்.எம்.தீன்
- எம்.கே.குமார்
- எம்.கே.மணி
- எம்.ஜி.கன்னியப்பன்
- எல்.ஜே வயலட்
- என். ஸ்ரீராம்
- எஸ்.சுரேஷ்
- ஏ. ஆர்.முருகன்
- ஏக்நாத்
- ஏஜே.டானியல்
- ஐ.கிருத்திகா
- க.கலாமோகன்
- க.ராஜீவ் காந்தி
- கணேஷ் வெங்கட்ராமன்
- கமலதேவி
- கலைச்செல்வி
- கறுப்பி சுமதி
- கனகராஜ் பாலசுப்பிரமணியம்
- கா. ரபீக் ராஜா
- கா.சிவா
- காந்தி முருகன்
- கார்த்திக் பாலசுப்ரமணியன்
- கார்த்திக் புகழேந்தி
- காலத்துகள்
- காளிப்ரஸாத்
- கிரிதரன் ரா.
- குணா கந்தசாமி
- குமாரநந்தன்
- கே.என். செந்தில்
- கே.பாலமுருகன்
- கே.ஜே.அசோக்குமார்
- கோ.சுனில்ஜோகி
- கோ.புண்ணியவான்
- கோவர்த்தனன் மணியன் ம.
- ச.துரை
- சக்கரவர்த்தி
- சந்தோஷ் கொளஞ்சி
- சப்னாஸ் ஹாசிம்
- சரவணன் சந்திரன்
- சர்வோத்தமன் சடகோபன்
- சாந்தன்
- சாம்ராஜ்
- சி.எம்.முத்து
- சி.சரவணகார்த்திகேயன்
- சித்தாந்தன்
- சித்துராஜ் பொன்ராஜ்
- சித்ரன்
- சியாம்
- சிவசங்கர் எஸ்.ஜே
- சிவநேசன் ந.
- சிவபிரசாத்
- சிவா கிருஷ்ணமூர்த்தி
- சிவானந்தம் நீலகண்டன்
- சிவேந்திரன்
- சிறில் அலெக்ஸ்
- சுகா
- சுசித்ரா
- சுரேந்திரகுமார்
- சுரேஷ் பிரதீப்
- சுனீல் கிருஷ்ணன்
- சுஷீல்குமார்
- செந்தில் ராம்
- செந்தில் ஜெகன்நாதன்
- செந்தில்குமார். எஸ்.
- செந்தில்குமார். ரா.
- செந்தூரன் ஈஸ்வரநாதன்
- செல்வேந்திரன்
- சேனன்
- டி.அருள் எழிலன்
- தமயந்தி
- தருணாதித்தன்
- தனா
- தாமிரா
- தீபு ஹரி
- தெய்வீகன் ப.
- தேஜூசிவன்
- நஞ்சுண்டன்
- நட்சத்திரன் செவ்விந்தியன்
- நம்பி கிருஷ்ணன் (நகுல்வசன்)
- நவீன் ம.
- நாகரத்தினம் கிருஷ்ணா
- நாச்சியாள் சுகந்தி
- நாராயணி கண்ணகி
- நிரூபா
- நீலாவணை இந்திரா
- நெற்கொழுதாசன்
- நொயல் நடேசன்
- பத்மகுமாரி
- பா. அ. ஜயகரன்
- பா.திருச்செந்தாழை
- பாலகுமார் விஜயராமன்
- பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
- பாலா கருப்பசாமி
- பாலாஜி பிருத்விராஜ்
- பாஸ்கர் ஆறுமுகம்
- பிரகாஷ் சங்கரன்
- பிரவின் குமார்
- பெருந்தேவி
- பொன்முகலி
- பொன் விமலா
- போகன் சங்கர்
- ம. காமுத்துரை
- மயிலன் சின்னப்பன்
- மலர்மன்னன் அன்பழகன்
- மலர்வதி
- மலேசியா ஸ்ரீகாந்தன்
- மானசீகன்
- மித்ரா அழகுவேல்
- மு. குலசேகரன்
- மு.ஆனந்தன்
- ராம் தங்கம்
- ராம்பிரசாத்
- ராஜ சுந்தரராஜன்
- ராஜகோபாலன் ஜா.
- ராஜேஷ் வைரபாண்டியன்
- லலிதா ராம்
- லால்குடி என். உலகநாதன்
- லாவண்யா சுந்தரராஜன்
- லெ.ரா.வைரவன்
- லோகேஷ் ரகுராமன்
- வளன்
- வி. அமலா ஸ்டேன்லி
- வித்யா அருண்
- விலாசினி
- விஜய ராவணன்
- விஸ்வநாதன் மகாலிங்கம்
- விஷால் ராஜா
- வீரபாண்டியன்
- வெண்பா கீதாயன்
- வேதா
- றஷ்மி
- ஜ. காவ்யா
- ஜா.தீபா
- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்
- ஜீவ கரிகாலன்
- ஜே.பி. சாணக்யா
- ஜேகே
- ஸிந்துஜா
- ஸ்ரீதர் நாராயணன்
- ஸ்வர்ணா
- ஷாராஜ்
- ஷான் கருப்பசாமி
- ஹரன் பிரசன்னா
சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருதுகள்
அதே போல் கடந்த பத்தாண்டுகளில் சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்களின் ஆசிரியர்கள் – மு. ராஜேந்திரன், அம்பை, இமையம், சோ. தர்மன், எஸ். ராமகிருஷ்ணன், இன்குலாப், வண்ணதாசன், ஆ. மாதவன், பூமணி, ஜோ டி குரூஸ், எல்லோருமே கிட்டத்தட்ட 2000களிலேயே கவனிக்கப் பெற்றவர்கள். எனவே, இளம் எழுத்தாளர்களில் கவிதையைத் தவிர்த்து பரிசு பெற்றவர்களின் பட்டியல்:
ஆண்டு | நூலாசிரியர் | நூல் | நூலின் தன்மை |
2011 | எம். தவசி | சேவல்கட்டு | நாவல் |
2012 | மலர்வதி | தோப்புக்காரி | நாவல் |
2014 | ஆர்.அபிலாஷ் | கால்கள் | நாவல் |
2015 | வீரபாண்டியன் | பருக்கை | நாவல் |
2016 | இலட்சுமி சரவணன் குமார் | கானகன் | நாவல் |
2018 | சுனில் கிருஷ்ணன் | அம்பு படுக்கை | சிறுகதைகள் |
2021 | கார்த்திக் பாலசுப்பிரமணியன் | நட்சத்திரவாசிகள் | நாவல் |
2023 | ராம் தங்கம் | திருக்கார்த்தியல் | சிறுகதைகள் |
சமீபத்தில் விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்:[1]
கணடா தமிழ் இலக்கியத் தோட்டம்–புனைவு விருது
அ. முத்துலிங்கம் இருப்பதாலோ… என்னவோ! கனடா இயல் விருது வழங்கும்போது அதனுடன் கொடுக்கப்படும் விருதுகள் காத்திரமாக முக்கியமானதாக இருக்கின்றன. அவ்வாறு வழங்கப்படும் புனைவிற்கான கௌரவத்தில் எவர் இடம் பெறுகிறார்கள்?
ஆண்டு | விருது பெற்றவர் | நூல் |
2012 | கண்மணி குணசேகரன் | அஞ்சலை |
2013 | கீரனூர் ஜாகீர் ராஜா | ஜின்னாவின் டைரி |
2014 | தேவகாந்தன் | கனவுச்சிறை |
2015 | ஷோபாசக்தி | கண்டி வீரன் |
2016 | சயந்தன் | ஆதிரை |
2017 | தமிழ்மகன் | வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் |
2018 | தீபச்செல்வன் | நடுகல் |
2020 | பா. கண்மணி | இடபம் |
2021 | பா. அ. ஐயகரன் | பா.அ. ஜயகரன் கதைகள் |
2022 | வேல்முருகன் இளங்கோ | மன்னார் பொழுதுகள் |
கதைத்தொகுப்புகள், நாவல்கள், நெடுங்கதைகள், புனைவுகள் – பட்டியல்
கடைசியாக – என்னுடைய விழைவுப் பட்டியல். எந்த நூல்களை வாங்க நினைக்கிறேன்? வாங்கி வைத்திருந்தாலும் வாசிக்க எடுக்கப் போகிறேன்?
புத்தகப் பரிந்துரைகளை இந்த முறை தர இயலவில்லை. இவ்வளவு நல்ல எழுத்துகள், சுவாரசியமான படைப்புகள், காத்திரமான ஆக்கங்கள் என்று மலைக்க வைக்குமளவு சமீபத்திய இலக்கியகர்த்தாக்கள் தீவிரமாக இயங்குகிறார்கள். அவர்களுக்குள் இந்த நூறு புத்தகங்களை வாங்கிப் படியுங்கள் என்று சொல்வதற்கு நிறைய வாசிப்பு தேவை. சரவணன் மாணிக்கவாசகம் மாதிரி பரவலாகத் தொடர்ந்து அனைத்து புனைவுகளையும் வாசிப்பவர்களின் உதவியும் தேவை. அதை இந்த ஆண்டு இறுதிக்குள்ளாவது முடிக்க வேண்டும். பார்ப்போம்.
உரிமை துறப்புகள்
- கவனிப்பு கிடைக்கப் பெற்றவர்கள், கவனிப்பு கிடைக்கப் பெறாதவர்கள் என்று பகுத்தது என் தேர்வு. நான் அறிந்த வரையில் பரவலாக வாசகர்களைப் பெற்றவர்களை – கவனிப்பு கிடைக்கப் பெற்றவர்கள் பட்டியலில் போட்டு இருக்கிறேன்.
- ஒருவரின் எழுத்துகள் இரண்டு மூன்று தளங்களிலாவது தேர்வு செய்யப்பட்டு வெளியாகி இருந்தால் அவரை கவனிப்பு கிடைக்கப் பெற்றவர்கள் பட்டியலில் சேர்த்து விட்டேன்.
- இவற்றில் எந்தப் பெயர்கள் பல முறை ஒரே பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன என்பதை சுட்டவும் – திருத்திக் கொள்கிறேன்
- எந்தப் பெயர்கள் பலமுறை ஓரிரண்டு பட்டியல்களில் இடம் பெற்றிருக்கின்றன என்பதையும் சொல்லவும்
- எழுத்தாளர்களின் பெயர் குழப்பத்தினாலோ, முதலெழுத்தை மாற்றிப் போட்டதாலோ, புனைப்பெயரினாலோ பலமுறை திரும்பத் திரும்ப வந்தவர்களைச் சொல்லவும்
- தவறுதலாக சிங்கள எழுத்தாளரோ, வேற்றுமொழி எழுத்தாளரோ இடம் பெற்றிருக்கலாம் – சுட்டவும். திருத்துகிறேன்
- எழுபதுகள், எண்பதுகள், 90களிலேயே பிரகாசிக்க ஆரம்பித்துவிட்டவர்களை தவறுதலாக எங்காவது சேர்த்திருக்கலாம். சொல்லவும். பிழைகளைக் களைகிறேன்
- முக்கியமாக எந்தப் பெயர்களைத் தவற விட்டிருக்கிறேன்? எந்த எழுத்தாளர்களை அடையாளம் காணாமல் இருக்கிறேன்? அவற்றைப் பகிரவும் – சேர்க்கிறேன்.
உசாத்துணை
- இலக்கியச் சிந்தனை – சிறந்த சிறுகதைகள் : மாதுமை (viruba.com)
- செவ்வியல் – பழம் தின்று கொட்டை போட்ட படைப்பாளிகள் யார்? – சுபமங்களா சிறுகதைகள் – Tamil Wiki
- Authors – Adavi Shop | Aadhi Pathippagam
- சிறுகதையில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது? | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
- சிறுகதை Books – Adavi Shop | Aadhi Pathippagam
- படைப்பாளிகள் | அரூ (aroo.space)
- பனுவல் – புத்தகங்கள் – சிறுகதைகள் (panuval.com)
- சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்களின் பட்டியல்
- Category:நாவலாசிரியர்கள் – Tamil Wiki
- Category:சிறுகதையாசிரியர்கள் – Tamil Wiki
- சமர்ப்பிக்கப்பட்ட சிறுகதை (padaippu.com)
- நாவல் போட்டிகள் – Saravanan Manickavasagam.
- நேர்காணல்கள் – கனலி (kanali.in)
- தமிழ் சிறுகதைகள் | Tamil Sirukathaigal | Tamil Short Stories | விகடன் சிறுகதைகள் (vikatan.com)
- படி | Snap Judgment (snapjudge.blog)
- சிறுகதை Archives – தமிழினி (tamizhini.in)
- சிறுகதைகள் Archives – வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு (vasagasalai.com)
- சிறுகதை – சொல்வனம் | இதழ் 299 |23 ஜூலை 2023 (solvanam.com)
- புதிய கதைகள்- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
- புதிய வாசல் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
- புதியவர்களின் கதைகள் – பார்வைகளும் விமர்சனங்களும்[ பின்னூட்ட வசதியுடன்] | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
- சிறுகதை – சுவடு (suvadu.in)
- சிறுகதை – வல்லினம் (vallinam.com.my)
- சிறுகதைகள் – கனலி (kanali.in)
- சிறுகதை Archives – யாவரும்.காம் (yaavarum.com)
- காலச்சுவடு பதிப்பகம் | Kalachuvadu Publications
- சிறுகதைகள் Archives – Page 32 of 39 – வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு (vasagasalai.com)
- ஒரு திறந்த மடல் | பதிவுகள் (bearblog.dev)