பலநூறு புத்தகங்களை வாசித்த தேர்ந்த இலக்கியவாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதியும் இல்லை.. மற்றவர் கருத்தை ஆராய்ந்து, அழகியல் குறை கண்டு எதிர்க்குரல் பதிவுசெய்யும் விமர்சகரும் இல்லை.
எழுத்தின் மீது தீராக்காதல். எழுத வேண்டும். புத்திசாலித்தனமாக எழுத வேண்டும். எழுதுவது யாருக்கேனும், எதற்கேனும் பயன்பட வேண்டும். இவ்வளவே நோக்கம்.
- எழுத்தாளர் ராம்பிரசாத்
பாஸ். அது Planets, Blanets அல்ல என்று யாரேனும் திருத்த முயற்சிக்கக் கூடும்..
ஆம். நீங்கள் சரியாகத்தான் வாசித்திருக்கிறீர்கள். முதல் எழுத்து 'P' அல்ல, 'B' தான்.
பொதுவாக சூரியனைச் சுற்றி உருவாகும் கிரகங்களை Planets என்போம். சூரியனின் இடத்தில் சூரியனுக்கு பதிலாக ஒரு கருந்துளை Blackhole இருப்பின், அப்படிப் பட்ட கருந்துளைகளைச் சுற்றியும் ஒரு பாதுகாப்பான இடத்தில் கிரகங்கள் அமையப்பெறலாமாம். அப்படி அமைந்தால் அது Blanet ஆகிறதாம். இது போன்ற கிரகங்களில் வளி மண்டலம் இருக்கலாம், உயிர்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிறது நவீன அறிவியல். இப்படி ஒரு Blanet எங்கிருக்கிறது என்று கேட்போருக்கு?
Blanets எல்லாம் hypothetical தானாம். அதாவது, இவைகள் இருப்பதைத் தியரியாக கணிக்க முடியும். இவ்வகைமையில் ஒன்றை மனித இனம் இதுகாறும் கண்டுபிடித்திடவில்லை.
ஆயினும், நமக்கெல்லாம் புரிகிறார்போல் ஒன்றைச் சொல்ல வேண்டுமானால், க்ரிஸ்டோஃபர் நோலனின் Interstellar திரைப்படத்தில் Gargantua எனப்படும் கருந்துளையைச் சுற்றி வரும் 'மில்லர் கிரகம்' என்றழைக்கப்படும் நீர்க்கிரகம் இப்படி ஒரு Blanet தான். இந்த Blanetல் தரையிறங்கித்தான் இருபத்து சொச்சம் ஆண்டுகளைக் கழித்திருப்பார் கதை நாயகன், கூப்பர்.
கேலக்ஸி முதலாமாண்டு உலகளாவிய சிறுகதைப் போட்டி- 2023ல் மொத்தம் 212 கதைகளில் சிறுகதைத் தொகுதி நூலுக்கென தேர்வு செய்யப்பட்ட 18 சிறுகதைகளில் ஒன்றாக எனது 'போர்' சிறுகதையும் தேர்வாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது சிறுகதையைத் தேர்வு செய்த கேலக்ஸி சிறுகதைப்போட்டி நடுவர்களுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
எதிர்வரும் 2024 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இச்சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியிடப்படும்.
கேலக்ஸி முதலாமாண்டு உலகளாவிய சிறுகதைப் போட்டி- 2023 முடிவுகள்
அனைவருக்கும் வணக்கம்,
கேலக்ஸியின் முதலாமாண்டு சிறுகதைப் போட்டியின் முடிவுகளை உங்களுக்குத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
எங்களின் எதிர்பார்ப்பைக் கடந்து வந்து குவிந்த கதைகளில் 212 கதைகள் முதல் சுற்றுக்குத் தேர்வாகின. அதிலிருந்து நடுவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் 92 கதைகள் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வாகின. அதன்பின் 25 கதைகள் மூன்றாம் சுற்றுக்குத் தேர்வாகின. நிறைவுச் சுற்றுக்கு 18 கதைகள் என்றிருந்த நிலையில், எல்லாக் கதைகளும் போட்டி போட்டுக் கொண்டு மதிப்பீட்டில் முன்னும் பின்னுமாய் நிற்க, 25 கதைகளையும் முதன்மை நடுவருக்கு அனுப்பிக் கொடுத்தோம். அவரும் தனது பணிகளுக்கு இடையே, துலாக்கோல் கொண்டு தேடி, மிகச் சிறந்த பதினெட்டுக் கதைகளைத் தேர்வு செய்து, அதிலிருந்து சிறந்த 5 கதைகளைப் பரிசுக்குரிய கதைகளாகத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி.
இந்தப் போட்டிக்கான மொத்தப் பரிசுத்தொகையான ரூ.12000-த்தை தமிழ் மீது கொண்ட காதலாலும், புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நல் எண்ணத்தாலும் கல்லிடைக்குறிச்சி, தேசியக் கல்வி அறக்கட்டளை நிறுவனர், தமிழ்ப் பற்றாளர், முனைவர் ஆ. முகமது முகைதீன் அவர்கள் வழங்கியுள்ளார்கள் என்பதை மகிழ்வுடனும் நன்றியுடனும் கேலக்ஸி குழுமம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறது.
போட்டி முடிவுகள் :
முதல் பரிசுக்கதை : அமிர்தத்துளி - விஜிரவி, ஈரோடு
இரண்டாம் பரிசுக்கதை : பூரணம் - காயத்ரி.ஒய், சென்னை
மூன்றாம் பரிசுக்கதை : காலங்கள் மாறும் - அனந்த் ரவி, பெரும்பாக்கம்
சிறப்புப் பரிசுக் கதைகள்
1. : மனித யானை - ஆர். இராஜசேகரன், சென்னை
2. : சாதாரணன் சிவா - படிப்பகத்தான், கடியப்பட்டணம்
சிறுகதைத் தொகுப்புக்குத் தேர்வான மற்ற கதைகள்:
6. பாவமும் பரிகாரமும் - எம்.சங்கர், சென்னை.
7. எல்லோரும் கொண்டாடுவோம் - கல்பனா சன்யாசி, சென்னை.
8. சக்தியின் வடிவம் - எஸ். அர்ஜூன் சிவகாமிநாதன், சென்னை.
9. வடக்கிரு - மாலா மாதவன், சென்னை.
10. உனக்கும் கிழக்கு உண்டு - ப்ரஸன்னா வெங்கடேஷ், நவி மும்பை.
பென்னு ஒரு குறுங்கோள். NEO பட்டியலில் இருக்கிறது. டைனோசார்கள் அழிவுக்குக் காரணமான ஒரு அழிவை ஏற்படுத்திவிடக்கூடியது இந்த பென்னு. ஆனால், இப்போதைக்கு ஆபத்தில்லை என்று உலக நாடுகள் அறிவித்திருக்கின்றன.
அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்; இது குறித்துப் பகடி செய்து ஒரு படம் எடுத்திருந்தார்கள். படத்தின் பெயர் 'Don't Look Up'. டிகாப்ரியோ, ஜெனீஃபர் லாரன்ஸ் நடித்த படம். முடிந்தால் பாருங்கள்; அரசாங்கங்களின் கள்ள மெளனத்திற்கு அர்த்தம் புரியும்.
Yarkovsky Effect பற்றிச் சொல்ல வேண்டும். இது என்னவென்றால், எந்தக் குறுங்கோளும் விண்வெளியில் தன் போக்கில் தன்னையே சுற்றக்கூடியது. சூரிய ஒளியின் வெப்பம் அதன் மீது படுகையில், வேதியியல் மாற்றங்களால் , சிறிய அளவில் ஆற்றல் வெளிப்படுகிறது. இந்த ஆற்றல், குறுங்கோளின் சுழற்சியால் உந்து விசையாக மாறுகிறது. இந்தக் குறுங்கோள் 2182ம் வருடம் பூமி மீதே மோதலாம் என்கிறார்கள்.
இத்தனை காலம் ஏன் இந்த ஆபத்து இல்லை? திடீரென எப்படி இது முளைத்தது என்காதீர்கள்?
Yarkovsky effectஆல், இந்தக் குறுங்கோலின் சுற்றுப்பாதை ஆண்டுக்கு 934 அடி மாற்றம் காண்கிறது என்று கணக்கிட்டிருக்கிறார்கள்; பூமியை அழிக்கும் அளவுக்கு பூமிக்கு அருகாமையில் வர அந்தக் குறுங்கோளுக்கு இத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கிறது என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த விசையால், இத்தனை தசாப்தங்களாய் பூமிக்கு அருகாமையில் தொடாமல் கடந்து சென்று கொண்டிருக்கும் இப்படியான எத்தனை குறுங்கோள்கள் பாதை மாற இருக்கின்றனவோ தெரியவில்லை.
உங்களை பயமுறுத்த இதைச் சொல்லவில்லை. Choose your priorities என்று சொல்வது மட்டுமே இந்தப் பதிவின் நோக்கம். நாம் வாழும் இந்த பூமி, நமது நிலம், நம் வீடு, அது அமைந்திருக்கும் தெரு, நமதென்று நாம் நினைக்கும் அத்தனையும் ஒரே நொடியில் மூட்டைப் பூச்சி நசுக்கப்படுவது போல் நசுக்கப்படலாம்.
பூமிக்கிரகம் இதுகாறும் ஐந்து பேரழிவுகளைச் சந்தித்திருக்கிறது. ஆறாவதுக்கு மிக அருகாமையில் மனித இனம் இப்போது இருப்பதாக எண்ணம் முளைத்தபிறகு தான் அவசர அவசரமாக வேறு கிரகங்களில் வாழ முடியுமா என்று தேடத்துவங்கியிருக்கிறார்கள். Von Braun எழுதிய 1953 Mars Project ன் ஆரூடம் பலிக்கிறதா பார்க்கலாம்.
அப்படி ஒன்று கிடைக்கும் பட்சத்தில், பிழைக்கப்போவது உலகின் பெரும்பணக்காரர்கள் மட்டுமே. எப்படி என்பதை 'Don't look up' காட்சிகளாக நகைச்சுவையாகச் சொல்லும். ஆக, பிழைக்கப்போவது நீங்களோ நானோ அல்ல.
பூமிக்கிரகத்தின் ஐந்து பேரழிவுகளின் போதும், பேரழிவுக்கு முன் 'பேரழிவு வரப்போகிறது' என்பதை அப்போது பூமியில் வாழ்ந்த உயிர்கள் முன்னுணர சாத்தியமிருக்கவில்லை. அந்த வகையில், மனித இனம் அதிர்ஷ்டசாலி இனம் என்று தான் சொல்லத்தோன்றுகிறது. ஆனால், அந்த அதிர்ஷ்டமிருந்தும் நாம் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால், இருப்பதிலேயே மடத்தனமான இனம் இதே மனித இனமாகத்தான் இருக்கும். இல்லையா? Now that we know what is in store, wrap up things quickly.
ஏற்கனவே சொன்னது போல, கல்லூரியின் கடைசி நாளில் பிடித்தவன், பிடிக்காதன் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் எல்லோரின் மேலும் ஒரு அன்பு வரும்.... அதுதான் நமக்குத் தேவை... I mean, அந்த மனநிலை வாய்க்குமென்றால், அந்த உண்மையைப் பகிர்ந்தால் தான் என்ன என்பதே என் வாதம் ...
சமீபத்திய தமிழ் எழுத்தாளர்கள் யார்? இப்போதைய காலகட்டத்தில் அவசியம் வாசிக்க வேண்டிய புனைவுகள் என்ன? முக்கிய பதிப்பகங்களில் எந்த நாவல்கள் விமர்சகரின் கவனத்தைக் கோருகின்றன? யுவன் சந்திரசேகர், சாரு நிவேதிதா, அ. முத்துலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன், பா. ராகவன். ஜெயமோகன், இரா. முருகன், அ. முத்துலிங்கம், பாவண்ணன், மாலன் போன்றோர் 2000களில் இணையத்தையும் அச்சையும் கோலோச்சினார்கள். அவர்களைப் போன்றோர் உயிர் எழுத்து, காலச்சுவடு, உயிர்மை, உன்னதம், சொல் புதிது, கல்குதிரை, கலைமகள், கதிர் போன்ற அச்சு இதழ்களிலும் அவரவர் வலையகம் மூலமாகவும் அனுதினமும் கட்டுரையும் கதையும் வெளியிட்டார்கள். இன்றைய இயல், விளக்கு, ஞானபீடம், சாகித்திய அகடெமி, விஷ்ணுபுரம் விருது என்று கவனிப்புகளை அடுத்த தலைமுறையில் எவர் அள்ளப் போகிறார்கள்?
முகவணை
இந்த இதழைத் துவக்கும்போது ஓரிரண்டு பட்டியல்களைக் கொண்டு தயாரித்திருக்க வேண்டும்.
(கவனிக்கப்படாத) சமீபத்திய எழுத்தாளர்கள் பட்டியல்
(அறியப்பெற்ற) சமீபத்திய எழுத்தாளர்கள் பட்டியல்
மேலேயுள்ள இரு பட்டியலில் உள்ளவர்களை அறிமுகம் செய்யக் கூடிய விமர்சகர்கள்
முக்கிய பதிப்பகங்கள் – 2000த்துக்குப் பிறகு எழுந்து வரும் எழுத்தாளர்களை எவர் வெளியிடுகிறார்கள்?
சமீபத்திய சிறுகதைத் தொகுப்புகள்
சமீபத்திய நாவல் நூல்கள்
இளைஞர்களுக்கான விருதுகளின் பட்டியல்
விருதுகளைப் பெற்றவர்கள்
குங்குமம், விகடன் போன்ற வணிக இதழ்களில் முத்திரை சிறுகதை எழுதியவர்கள்
காலச்சுவடு, கல்குதிரை போன்ற இலக்கிய இதழ்களில் கதை எழுதியவர்கள்
இணைய வலையகங்களில் தொடர்ச்சியாக புனைவை அளிப்பவர்கள்
இப்போதும் ஒன்றும் தாமதமாகவில்லை. கைவசம் அவர்களைத் தொகுத்துக் கொண்டால், இந்த இதழில் எவரெவரைத் தவற விட்டோமோ, அவர்களை வரும் வெளியீடுகளில் கவனிக்கலாம். வரும் வாரங்களில் வாசிக்க எடுத்து வைக்கலாம். குறைந்த பட்சம் மற்றவர்களையாவது படிக்குமாறு தூண்டலாம்.இதுதான் இந்த பட்டியல் பதிவின் குறிக்கோள்
விருதுகள்
விருதுகள் எவ்வளவு இருக்கின்றன? சமீபத்திய ஆண்டுகளில் எவர் அவற்றைப் பெற்றனர்? பு.பி. பேரை வைத்தே மூன்று வெவ்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன (நன்றி: தமிழ் விக்கி)
KRG நாகப்பன் ராஜம்மாள் விருது
அக்கராயன் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் சாதனைப் பெண்மணி விருது
அசோகமித்திரன் விருது
அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை விருது
அமரர் ஜோதிவிநாயகம் நினைவு பரிசு
அமுதன் அடிகள் விருது
அவள் விகடனின் இலக்கிய விருது
அன்றில் வளர் தமிழ் சிறுகதையாளர் விருது
ஆனந்த விகடன் வைர விழா சிறப்புச் சிறுகதை விருது
ஆனந்தாஸ் எம்.பி கலை இலக்கிய விருது
இலக்கிய சிந்தனை விருது (சிறுகதை)
இலக்கியச் சிந்தனை சிறந்த நாவலுக்கான விருது
இலக்கியப்பேராளுமை விருது
இலக்கியவீதி – அன்னம் விருது
இலங்கை – முரசொலி பத்திரிகையின் முதல் பரிசு
இலங்கை தேசிய சாகித்திய மண்டல விருது மற்றும் யாழ் இலக்கியப் பேரவையின் விருது
இளைஞர் ஆண்டு நாவல் போட்டி
உலகத் தமிழ் பண்பாட்டு மைய விருது
எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு நினைவு விருது
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது
என்.சி.பி.எச். வழங்கும் தொகுதிக்கான விருது
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் வழங்கும் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது
ஏலாதி அறக்கட்டளை இலக்கிய விருது
கண்டாவளைப் பிரதேச சபையின் கலாசாரப் பிரிவின் “ஒளிச் சுடர்” விருது
கதா அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருது
கலைஞர் பொற்கிழி விருது
கவிஞர் தேவமகள் அறக்கட்டளை விருது
கவிஞர் வைரமுத்து விருது
களரி அறக்கட்டளை வழங்கும் கு. அழகிரிசாமி நினைவு விருது.
கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் விருது
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் புனைவு விருது.
கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது
காசியூர் ரங்கம்மாள் விருது
கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் “இலக்கியமணி” பட்டமும் தங்கப் பதக்கமும்
கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது
குமுதம் வெள்ளி விழா கதைப்போட்டி
கொழும்பு கலை இலக்கிய கழகத்தின் விருது
கொழும்பு சுதந்திர இலக்கிய அமைப்பின் விருது மற்றும் யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு
கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் ‘ரங்கம்மாள் நினைவு விருது
சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளியின் ‘படைப்பூக்கத் தமிழ் விருது
சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது
சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது –
சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்ட குறுநாவல் போட்டி
சிறுகதைத் தொகுப்பிற்காக: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க ‘புதுமைப்பித்தன் நினைவு விருது’
சிற்பி அறக்கட்டளை விருது
சிற்பி இலக்கிய விருது
சுஜாதா விருது
சுஜாதா-உயிர்மை அறக்கட்டளையின் சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான விருது
செயந்தன் நினைவு கவிதை விருது
சென்னை இலக்கிய திருவிழாவின் சிறந்த எழுத்தாளர் விருது
சென்னை இலக்கிய வீதி வழங்கும் அன்னம் விருது
சென்னை ரோட்டரி சங்க விருது
சேலம் தமிழ்ச் சங்கம் விருது.
சௌமா இலக்கிய விருது
ஞானியின் கோலம் அறக்கட்டளையின் ‘அசோகமித்திரன்’ விருது
டிஸ்கவரி புக் பேலஸ் வழங்கும் பிரபஞ்சன் நினைவு விருது
தஞ்சாவூர் நெருஞ்சி இலக்கிய வட்டத்தின் க நா சு விருது
தஞ்சை பிரகாஷ் கவிதை விருது
தமிழக அரசின் கலைமாமணி விருது
தமிழக அரசின் சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான விருது
தமிழக அரசின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது
தமிழக அரசின் சிறந்த நாவல் விருது
தமிழக அரசு எழுத்தாளர் விருது (திருவள்ளுவர்தினம்–பொங்கல்பண்டிகையைஒட்டி)
தமிழ் முஸ்லிம் திண்ணை வழங்கும் தோப்பில் முகமது மீரான் நினைவு விருது
தமிழ் வித்தகர் விருது
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் புதுக்கவிதை நூலிற்கான பரிசு
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநில விருது
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கும் சிறந்த நாவல் விருது
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மாநில விருது
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கும் செல்வன் கார்க்கி விருது
தி இந்து குழுமத்தின் லிட் ஃபார் லைஃப் (lit for life) விருது
தி க சி இயற்றமிழ் விருது
தி. ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டி
திருச்சி எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேசன் பள்ளி வழங்கும் தமிழ் விருது
திருப்பூர் கலை இலக்கியப் பேரவை விருது
திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
திருப்பூர் மத்திய அரிமா சங்கம் வழங்கும் சக்தி விருது
திருமதி. செளந்தரா கைலாசம் அறக்கட்டளை விருது
தேனீ இலக்கியக் கழகம் வழங்கும் ‘கவிச்செம்மல்’ பட்டம்
நியூஜெர்ஸி தமிழ்சங்க விருது
நெய்வேலி புத்தகக் கண்காட்சி வழங்கும் சிறந்த எழுத்தாளர் விருது
நெல்லை இலக்கிய வட்டம் வழங்கும் ’எழுத்துலகச் சிற்பி’ பட்டம்
படைப்பு இலக்கிய விருது
பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய விருது
பாவலர் முத்துசுவாமி விருது
புதுச்சேரி அரசின் சிறந்த நாவலுக்கான விருது
பெரியார் விருது
மத்திய அரசின் பரிசு
மலைச் சொல் விருது
மா அரங்கநாதன் விருது
யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் ஒன்றியம் தனது வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு இலக்கியப் பணிக்கான கௌரவிப்பு
ரோட்டரி கிங்க்ஸ் ஆப் தஞ்சாவூர் சாதனை இளைஞர் விருது
லில்லி தேவசிகாமணி விருது
வடக்கு – கிழக்கு மாகாண சபையின் சிறந்த நூல் பரிசு
வடக்கு கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் விருது
வடக்கு மாகாண சபையின் சிறந்த நூல் பரிசு
வடசென்னை தமிழ்ச்சங்கம் இலக்கிய விருது
வரலாற்றுப் புத்தகத்திற்கான ‘தெற்கு எழுத்தாளர் இயக்க விருது’
வல்லினம் விருது
வள்ளுவ பண்பாட்டு மைய விருது
வாழ்நாள் சாதனைக்காக விளக்கு இலக்கிய அமைப்பு வழங்கும் புதுமைப்பித்தன் விருது
விகடன் விருது (ஆண்டுதோறும்–வருடஇறுதியில்)
விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கவிஞர் மீரா விருது
விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது
வீரகேசரி – யாழ் இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய கனக.செந்திநாதன் நினைவுப் போட்டி
இவற்றில் பெரும்பாலானவை தமிழகத்தை முன்வைத்தே வழங்கப்படுபவை. ஈழத் தமிழர்களையும் இலங்கை வாழ் எழுத்தாளர்களின் முக்கியப்படுத்தல்களையும் தனியே பார்க்க வேண்டும்; தேட வேண்டும். இதில் திண்ணை, சொல்வனம், குவிகம், காலம், குருகு, சுவடு, அகழ், அடவி, அழிசி, தன்னறம், பதாகை, தமிழினி போன்ற இணைய இதழ்களின் (மேலும்: List of Online Tamil Magazines and How to Write for them | 10 Hot) அடையாளம் என பரிசோ, போட்டியோ, விருதோ, பட்டமோ, கௌரவங்களோ தராதது சோகமா? இயலாமையா? கும்பலோடு கோவிந்தா போடாத அடையாளத் தனித்துவமா? ‘நானும் ரௌடிதான்’ என்னும் இலக்கிய கௌரவத்தை இழக்கும் பரிதாபமா?இவை முகாந்திரம். இந்தக் கேள்விகளுக்கு எளிமையான விடை கிடையாது. நாம் சொல்லும் ஆருடங்கள் பலிக்காமல் போகலாம். என் பரிந்துரைகள் உங்களைக் கவராமல் போகலாம். அதை விட அந்த நூல்களும் புதினங்களும் படைப்புகளும் ருசிக்காமல் போகலாம்.
புதிய முகங்கள் – சமீபத்திய எழுத்தாளர்கள்
சமீபத்தில் எழுதத் துவங்கியவர்களில் அதிகம் கவனிப்பைப் பெறாதவர்களில் துவங்குவோம்.
அதிகம கவனம் பெறாத சிறுகதை எழுத்தாளர்களும் நாவல் புனைவாளர்களும் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் கடந்த ஐந்தாண்டுகளுக்குள் எழுதத் துவங்கியவர்கள். இவர்களில் சிலர் ரொம்ப காலமாக எழுதுபவர்கள். ஃபேஸ்புக், டிவிட்டர் எக்ஸ், டிக் டாக், இன்ஸ்டாகிராம், பிண்டெரெஸ்ட் என்று சமூக ஊடகங்களில் சர்ச்சையும் நண்பர்களும் அதிகம் இல்லாமல் சற்றே அமைதியாக உருவாக்கும் படைப்பாளிகளின் பட்டியல்.
‘பரிவை’ சே.குமார்
அகராதி
அசோக்ராஜ்
அண்டனூர் சுரா
அருண் பாண்டியன்
அனுராதா ஆனந்த்
ஆ.ஆனந்தன்
ஆகாசமூர்த்தி
ஆதித்ய ஸ்ரீநிவாஸ்
ஆமினா முஹம்மத்
ஆர். சேவியர் ராஜதுரை
ஆர்.நித்யா ஹரி
ஆவுடை
ஆவுடையப்பன் சங்கரன்
ஆழிவண்ணன்
ஆனந்தி ராமகிருஷ்ணன்
இ. ஹேமபிரபா
இதயா ஏசுராஜ்
இமாம் அத்னான்
இரா. சேவியர் ராஜதுரை
இரா. தங்கப்பாண்டியன்
இராதா கிருஷ்ணன்
இலட்சுமண பிரகாசம்
இளங்கோவன் முத்தையா
இளங்கோவன் ஜி.பி.
ஈப்போ ஸ்ரீ
உக்குவளை அக்ரம்
உத்தமன் ராஜா
எஸ். திவாகர்
எஸ்ஸார்சி
ஏ. ஆர். முருகேசன்
க.சி.அம்பிகாவர்ஷினி
க.மூர்த்தி
கணேசகுமாரன்
கணேஷ் ராகவன்
கணேஷ் ராம்
கண்.சதாசிவம்
கயல்
கரன் கார்க்கி
கனகா பாலன்
கனி விஜய்
கனிமொழி.ஜி
காயத்ரி.ஒய்
கார்த்திக் பிரகாசம்
கார்த்திக் ஸ்ரீநிவாஸ்
காளீஸ்வரன்
கிருத்திகா கணேஷ்
கிருஷ்ண ப்ரசாத்
கு. ஜெயபிரகாஷ்
குமரகுரு
கே.உமாபதி
கே.எஸ்.சுதாகர்
கோ. சுனில்ஜோகி
கோமதி ராஜன்
ச.கோ. பிரவீன் ராஜ்
ச.வி.சங்கர்
சக.முத்துக்கண்ணன்
சங்கர்
சங்கர் சதா
சந்தீப்குமார்
சந்தோஷ் மாதேவன்
சந்தோஷ் ராகுல்
சரத்
சாது பட்டு
சாந்தி மாரியப்பன்
சாரதி
சி.வீ.காயத்ரி
சிசுக்கு
சிதம்பரம்
சிவகுமார் முத்தய்யா
சீராளன் ஜெயந்தன்
சுந்தரண்யா
சுப்புராஜ்
சுரேஷ் பரதன்
சுஜித் லெனின்
செல்வசாமியன்
சேகர் சக்திவேல்
சேவியர் ராஜதுரை
சொல் உடையார்
சோ.சுப்புராஜ்
த.அரவிந்தன்
தயாஜி
தர்மு பிரசாத்
தனசேகர் ஏசுபாதம்
தன்ராஜ் மணி
தாமரை பாரதி
தாரிகை
தினேஷ் பாண்டியன்
தீபா நாகராணி
தீபா ஸ்ரீதரன்
தீனதயாளன்
துரை. அறிவழகன்
தெரிசை சிவா
தேவசீமா
தேவராஜ்
தேவிலிங்கம்
நந்தாகுமாரன்
நவநீதன் சுந்தர்ராஜன்
நறுமுகை தேவி
நா. ஞானபாரதி
நா.சிவராஜ்
நித்ய சைதன்யா
நித்வி
நிவேதினி நாகராஜன்
ப. சுடலைமணி
பா. கண்மணி
பா. ரமேஷ்
பா. ராஜா
பாலமுருகன் நெல்லை
பிந்துசாரா
பிரசாத் சுந்தர்
பிரசாத் மனோ
பிரசாத் ரங்கசாமி
பிரசாந்த் வே.
பிரதீப் சிவபெருமான்
பிரதீப் நீலகண்டன்
பிரபு தர்மராஜ்
பிரியா கிருஷ்ணன்
பிருந்தா இளங்கோவன்
புகழின் செல்வன்
போதி
ப்ரசாந்த் கார்த்திக்
ப்ரவீன் ராஜ்
மகாராஜா காமாட்சி
மகேஷ்குமார் செல்வராஜ்
மஞ்சுநாத்
மணிமாலா மதியழகன்
மனோஜ்
மன்னர்மன்னன் குமரன்
மாதவன் பழனியப்பன்
மால்கம்
மாறன். மா
மிதுன் கௌசிக்
முகம்மது ரியாஸ்
முத்தழகு கவியரசன்
முத்துராசா குமார்
மோனிகா மாறன்
மோஹன் ஹரிஹரன்
ரக்ஷன் கிருத்திக்
ரமேஷ் கண்ணன்
ரமேஷ் ரக்சன்
ரவிச்சந்திரன் அரவிந்தன்
ராஜா சிவகுமார்
ராஜேஷ் ராதாகிருஷ்ணன்
ரெ.விஜயலெட்சுமி
ரெஜி இசக்கியப்பன்
ரேவதி ரவிகாந்த்
லட்சுமிஹர்
லதா ரகுநாதன்
லிவி
வசந்தி முனீஸ்
வளவன்
வாசுதேவன் அருணாசலம்
வாணி ஆனந்த்
வாஸ்தோ
விக்டர் ப்ரின்ஸ்
விக்னேஷ்
வில்லரசன்
விஜயநாகசெ
விஜயராணி மீனாட்சி
விஜய் சுந்தர் வேலன்
விஜய் வேல்துரை
ஜனநேசன்
ஜாபாலன்
ஜார்ஜ் ஜோசப்
ஜி. கார்ல் மார்க்ஸ்
ஜீ. கணேஷ்
ஜெகநாத் நடராஜன்
ஜெகன்மித்ரா
ஜெயந்தி
ஜெயன் கோபாலகிருஷ்ணன்
ஜே.மஞ்சுளாதேவி
ஜேக்கப் மேஷாக்
ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
ஶ்ரீராம் விஸ்வநாதன்
ஷரத்
ஹரிஷ் குணசேகரன்
ஹரீஷ் கணபதி
ஹேமா
ஹேமி கிருஷ்
சமீபத்திய விகடன் படைப்பாளிகள்
ஆனந்த விகடனுக்கென்று ஒரு சிறப்பு உண்டு. அதில் வரும் சிறுகதைகளும் எழுத்தாளர்களும் பரவலாகப் பலரைச் சென்றடைந்து நெடுங்காலமாக இலக்கிய வானில் ஜொலித்த காலம் ஒன்றுண்டு. இப்போதைய காலகட்டத்தில் அது திரைக்கதைக்கும் சினிமாவுக்குமான வாயிலாகிப் போனாலும் இன்னும் அதில் யார் எழுதுகிறார்கள், எப்படிப்பட்ட படைப்புகளைக் கொணர்கிறார்கள் என்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதையொட்டி விகடன் சிறுகதையாசியர்களின் பட்டியல்:
அய்யப்பன் மகாராஜன்
அரவிந்தன்
ஆர். ஸ்ரீனிவாசன்
இமையாள்
எஸ்.பர்வின் பானு
எஸ்.வி.வேணுகோபாலன்
க.அம்சப்ரியா
கணேசகுமாரன்
கவிதைக்காரன் இளங்கோ
கவிப்பித்தன்
கு.இலக்கியன்
கே.பி.சிவகுமார்
சசி
சிவகுமார் முத்தய்யா
துரை.அறிவழகன்
நர்சிம்
நூருத்தீன்
பாலைவன லாந்தர்
பிரபாகரன் சண்முகநாதன்
பிறைமதி குப்புசாமி
புலியூர் முருகேசன்
ம . காமுத்துரை
மாத்தளை சோமு
ரமணன்.கோ
ராஜேஷ் வைரபாண்டியன்
விஜி முருகநாதன்
ஸ்ரீதர் பாரதி
ஹாசிப் கான்
இதே போல் குங்குமம் இதழில் எழுதியவர்கள், காலச்சுவடு போன்ற சிற்றிதழ்கள், பிற சிறுபத்திரிகைகளில் எழுதியவர்களையும் பட்டியலிடலாம்.
பரவலாக எழுதி கவனிப்பைப் பெற்ற படைப்பாளிகள்
அடுத்ததாக வாசிக்க வேண்டிய படைப்பாளிகளின் பட்டியல் பரிந்துரைகள்.
இவர்களில் பெரும்பாலானோர் பல காலமாக எழுதுபவர்கள். பல விருதுகளை அள்ளியவர்கள். பத்திரிகை நடத்துபவர்கள். பல நூல்களை வெளியிட்டவர்கள். இணையத்தில் அறியப் பெற்றவர்கள். சாரு நிவேதிதா, ஜெயமோகன் போன்ற மோதிரக்கையால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.
அ. முத்துலிங்கம் இருப்பதாலோ… என்னவோ! கனடா இயல் விருது வழங்கும்போது அதனுடன் கொடுக்கப்படும் விருதுகள் காத்திரமாக முக்கியமானதாக இருக்கின்றன. அவ்வாறு வழங்கப்படும் புனைவிற்கான கௌரவத்தில் எவர் இடம் பெறுகிறார்கள்?
ஆண்டு
விருதுபெற்றவர்
நூல்
2012
கண்மணி குணசேகரன்
அஞ்சலை
2013
கீரனூர் ஜாகீர் ராஜா
ஜின்னாவின் டைரி
2014
தேவகாந்தன்
கனவுச்சிறை
2015
ஷோபாசக்தி
கண்டி வீரன்
2016
சயந்தன்
ஆதிரை
2017
தமிழ்மகன்
வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்
2018
தீபச்செல்வன்
நடுகல்
2020
பா. கண்மணி
இடபம்
2021
பா. அ. ஐயகரன்
பா.அ. ஜயகரன் கதைகள்
2022
வேல்முருகன் இளங்கோ
மன்னார் பொழுதுகள்
கதைத்தொகுப்புகள், நாவல்கள், நெடுங்கதைகள், புனைவுகள் – பட்டியல்
கடைசியாக – என்னுடைய விழைவுப் பட்டியல். எந்த நூல்களை வாங்க நினைக்கிறேன்? வாங்கி வைத்திருந்தாலும் வாசிக்க எடுக்கப் போகிறேன்?
புத்தகப் பரிந்துரைகளை இந்த முறை தர இயலவில்லை. இவ்வளவு நல்ல எழுத்துகள், சுவாரசியமான படைப்புகள், காத்திரமான ஆக்கங்கள் என்று மலைக்க வைக்குமளவு சமீபத்திய இலக்கியகர்த்தாக்கள் தீவிரமாக இயங்குகிறார்கள். அவர்களுக்குள் இந்த நூறு புத்தகங்களை வாங்கிப் படியுங்கள் என்று சொல்வதற்கு நிறைய வாசிப்பு தேவை. சரவணன் மாணிக்கவாசகம் மாதிரி பரவலாகத் தொடர்ந்து அனைத்து புனைவுகளையும் வாசிப்பவர்களின் உதவியும் தேவை. அதை இந்த ஆண்டு இறுதிக்குள்ளாவது முடிக்க வேண்டும். பார்ப்போம்.
உரிமைதுறப்புகள்
கவனிப்பு கிடைக்கப் பெற்றவர்கள், கவனிப்பு கிடைக்கப் பெறாதவர்கள் என்று பகுத்தது என் தேர்வு. நான் அறிந்த வரையில் பரவலாக வாசகர்களைப் பெற்றவர்களை – கவனிப்பு கிடைக்கப் பெற்றவர்கள் பட்டியலில் போட்டு இருக்கிறேன்.
ஒருவரின் எழுத்துகள் இரண்டு மூன்று தளங்களிலாவது தேர்வு செய்யப்பட்டு வெளியாகி இருந்தால் அவரை கவனிப்பு கிடைக்கப் பெற்றவர்கள் பட்டியலில் சேர்த்து விட்டேன்.
இவற்றில் எந்தப் பெயர்கள் பல முறை ஒரே பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன என்பதை சுட்டவும் – திருத்திக் கொள்கிறேன்
எந்தப் பெயர்கள் பலமுறை ஓரிரண்டு பட்டியல்களில் இடம் பெற்றிருக்கின்றன என்பதையும் சொல்லவும்
எழுத்தாளர்களின் பெயர் குழப்பத்தினாலோ, முதலெழுத்தை மாற்றிப் போட்டதாலோ, புனைப்பெயரினாலோ பலமுறை திரும்பத் திரும்ப வந்தவர்களைச் சொல்லவும்
தவறுதலாக சிங்கள எழுத்தாளரோ, வேற்றுமொழி எழுத்தாளரோ இடம் பெற்றிருக்கலாம் – சுட்டவும். திருத்துகிறேன்
TamilNadu State Award Recipient (2020),
Zero Degree Award Recipient (2022),
Distinguished Alumni Award Recipient (2023),
Computer Engineer,
Science Fiction Writer