S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் தொலைக்காட்சி இணைந்து வழங்கும் அரசுப்பள்ளி மாணவ வாசகத் திட்ட நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறேன். முன்னாள் அரசுப்பள்ளி மாணவர் என்கிற அளவில் இந்நாள் மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க முடியும் ஒவ்வொரு வாய்ப்பும் அர்த்தமுள்ளது.
புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியப் பிரச்சனையில் நடந்த முறைகேடுகள் அத்தனையும் படித்தவர்கள் நிறைந்த அரசு இயந்திரத்திற்கு தெரியாமலா நடந்திருக்கும்? IIT, IIM போன்ற கல்வி நிறுவனங்கள் இதுகாறும் சமூகத்துக்கு என்ன செய்திருக்கின்றன? இவற்றில் படித்த மாணவர்களால் சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கிறது?
இதுவெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு தான். இப்படி பல எடுத்துக்காட்டுகள் சொல்லலாம்.
மொத்தத்தில் கல்வியை உள்வாங்கும் நபர்கள் எங்கோ பிறழ்ந்து போகிறார்கள். அது தொடர்ச்சியாக, எவ்வித சுருதி பிசகுமின்றி நடக்கிறது. எப்பொழுதெல்லாம் மனிதம் மீது நம்பிக்கை பொய்க்கிறதோ, அப்போதெல்லாம் இள ரத்தங்கள் மீதுதான் பார்வையைத் திருப்ப வேண்டி இருக்கிறது. இதுவரை படித்தவர்கள் இப்படிச் செய்துவிட்டார்கள். இனி வருபவர்களாலாவது நன்மை நடக்க வேண்டும், மனித மணித்தியாலங்கள், மனித உழைப்பு சரியான திசையில் பயணிக்கவேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது.
பிறரை விடவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடம் உரையாட விரும்புவதன் பின்னணி இதுதான்.
நிகழ்வு நாள்: 04-09-2021, சனிக்கிழமை.
நிகழ்வை சாத்தியப்படுத்தும் திரு.ரவி சொக்கலிங்கம் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும். வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்துகொள்ளலாம்.