விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் (மகளிர்) கல்லூரி
விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் (மகளிர்) கல்லூரி திருச்செங்கோட்டில் அமைந்திருக்கிறது.
சுமார் 23000 மாணவிகள் வெவ்வேறு படிப்புகளை எடுத்துப் படிக்கிறார்கள். நான் பேசிய வரையில், கல்லூரியில் மாணவிகளுக்கான அத்தனை சுய முன்னேற்றப் பயிற்சிகளையும் கல்லூரி நிர்வாகமே வழங்குகிறது. தவிர எழுத்து பழக விரும்பும் மாணவிகளை ஊக்குவிக்க, கல்லூரிக்கென அச்சிதழ்கள் கொண்டு வருவதிலும் கல்லூரி நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது.
என்னைக் கேட்டால், இந்தச் செயல்பாடுகளுக்கெனவே இந்தக் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என்பேன். வேலை வாய்ப்பு குதிரைக்கொம்பாகிக்கொண்டிருக்கிற இக்காலத்தில் மாணவிகள் சுயமாகவே சொந்தக்காலில் நிற்க ஏது செய்யும் அத்தனையையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் கல்லூரி கிடைப்பது மாணவிகளுக்கு வரம். மாணவிகள் மீதான ஆசிரியப்பெருந்தகைகளின் அக்கறை குறிப்பிடத்தக்கது.
விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் (மகளிர்) கல்லூரியில் 'அறிவியல் தமிழின் அவசியம்' என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறேன். இணைய வழிப் பன்னாட்டு கருத்தரங்கமாக நிகழ இருக்கும் இந்த நிகழ்வு வரும் 17ம் திகதி நடைபெற உள்ளது.
வாய்ப்புள்ள நண்பர்களைக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இணைய வழியின் முகவரி விரைவில் பகிரப்படும்.