என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday 30 December 2020

2020 எப்படி இருந்தது?

2020 எப்படி இருந்தது?
2020 புத்தாண்டு பிறந்தபோது அது 'இப்படி' த்தான் இருக்கப்போகிறது என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க வாய்ப்பில்லை. கோரோனா வந்து உலகமே ஊரடங்கை எதிர்கொண்டது வரலாற்றுத் திருப்பம். 2020 முடிவுக்கு வரும் இந்தத் தினத்தில், இந்த வருடம் எப்படி இருந்தது என்றால், கலவையான எண்ணங்கள் சூழ்கின்றன.
இந்த வருடத்தில்
1. கோரோனாவுக்கு அஞ்சி work from home தந்துவிட்டார்கள். வீட்டிலேயே தான் பெரும்பான்மை நேரமும்.(ஆனால், அதற்கு மாற்றாக pay rate ல் சுமார் பதினைந்து விழுக்காடு கைவைத்துவிட்டார்கள்.) அது ஒரு சோகம்.
2. சுமார் இருபத்தி ஐந்து சிறுகதைகளுக்கு மேல், தமிழில் மட்டும் எழுதினேன். அனைத்தும் விஞஞானப்புனைவுகள். பலதரப்பட்ட பின்னூட்டங்கள் வந்தன. குறிப்பாக, கண்காட்சி, அதிர்ஷ்டம், அவன், கடவுளைத்தேடி, ஆவரேஜ், பேய், பொறி, பூமி, புதிய உலகம், காதல், போன்றவை குறிப்பிடத்தக்கனவாக அமைந்தன.
இவற்றில் சில கதைகளை முதலில் ஆங்கிலத்தில் எழுதி பிறகு தமிழில் மொழி பெயர்த்தும், சிலவற்றை தமிழில் எழுதி பிறகு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததினால், ஆங்கிலத்தில் சுமார் பதினைந்து சிறுகதைகள் கிட்டின.Literary Yard, Readomania, MadSwirl போன்ற தளங்களில் அவை வெளியாகின.
இச்சிறுகதைகளை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க உதவிய, பதாகை, வாசகசாலை, கனலி, சொல்வனம் போன்ற தளங்களுக்கும், Literary Yard, Readomania, Madswirl போன்ற தளங்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
3. 'அரசுப்பள்ளி மாணவ வாசகத் திட்டம்' வாயிலாக அரசுப்பள்ளி மாணவர்களுடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது மனதுக்கு நிறைவு தந்த ஒரு நிகழ்வாக அமைந்தது. இது எனது வெகு நாள் கனவு. ஒரு அரசுப்பள்ளியில் படித்த மாணவன் என்ற அடிப்படையில், இப்படி ஒன்றை என்றாவது ஒரு நாள் செய்ய வேண்டும் என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால், துபாய் ரவி அவர்கள் அந்த வாய்ப்பை, வெகு எளிதாக சாத்தியப்படுத்திவிட்டார். அதற்கு S2S அமைப்புக்கும் மற்றும் நிகில் கம்யூனிகேஷன்ஸுக்கும், Ravi Chokkalingam அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
4. 'கவிதை மட்டும்' வாட்ஸாப் குழுவின் கவிதைப் போட்டியில் நடுவராக இருந்து, பரிசுக்குரிய கவிதைகளைத் தேர்வு செய்தது ஒரு இனிய நிகழ்வாக அமைந்தது. ஒருவர் இத்தனை திரைப்படங்களில் வேலை பார்த்திருக்க முடியுமா என்று வியக்க வைத்தவர் திரு.ஏகாம்பவாணன் அவர்கள். இந்த நிகழ்வு திரை உலகில் மிகவும் அனுபவமிக்க ஒருவருடனான நட்பை சாத்தியப்படுத்த இந்த நிகழ்வு உதவியது எனலாம். வாய்ப்பளித்த திரு Ekambavanan Filmmaker அவர்களுக்கு இத்தருணத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.
5. 'அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி'யில் தமிழ்த்துறைப் பன்னாட்டு கருத்தரங்கத்தில் பங்கு பெற்றது ஒரு நெகிழ்வான அனுபவம். உலகத்தமிழர் இலக்கியமும் வாழ்வியலும் என்ற தலைப்பில் அமெரிக்க அறிபுனை இலக்கியங்கள் குறித்துப் பகிர்ந்திருந்தேன். பொதுவாகவே எனக்கு மாணவர்களுடன் உரையாடுவது பிடிக்கும். அந்த வகையில் இந்த நிகழ்வு மனதுக்கு நெகிழ்ச்சி தருவதாக அமைந்தது. இந்த வாய்ப்புக்கும் S2S அமைப்புக்கும் மற்றும் நிகில் கம்யூனிகேஷன்ஸுக்கும், Ravi Chokkalingam அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
6. விஞ்ஞானச்சிறுகதைகள் மட்டுமல்லாது சில குறு நாவல்களும் எழுதினேன். 'புராதன ஏலியன்கள்', 'மெட் செயலி' ஆகியன தமிழிலும், 'Met App' என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் எழுதினேன். ஆங்கிலத்தில் எழுதிய Met App, கோரோனா காரணமாக Emerald Publishers மின் நூலாக வெளியிட்டார்கள்.
மொத்தத்தில் 2020ம் சிறப்பாகத்தான் அமைந்தது்.
இவ்வருடத்தை, கோரோனா சூழலிலும் சிறப்பானதாக்கிய Ravi Chokkalingam, Ekambavanan Filmmaker ஆகியோர்களுக்கும், என் சிறுகதைகள், கவிதைகளை வெளியிடும் பதாகை, வாசகசாலை, கனலி, சொல்வனம், ஆனந்த விகடன், Literary Yard, Readomania, MadSwirl போன்ற பத்திரிக்கை மற்றும் தளங்களுக்கும், மற்றும் என் சிறுகதைகளைத் தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் இத்தருணத்தில் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Commen