உடற்பயிற்சி - சில உண்மைகள்...
http://youthful.vikatan.com/youth/bcorner5.asp
தான் செய்யும்/ செய்ய நேரும் ஒவ்வொரு காரியத்தையும் நியாயப்படுத்தவேண்டிய கட்டாயம் தனக்கு இருப்பதாகவே ஒவ்வொரு மனிதனும் நினைத்துக்கொள்கிறான். நாடு, மொழி, இன வேறுபாடுகளையும் கடந்து உலகம் முழுவதும் மனிதர்கள் இப்படி நினைப்பவர்களாகத் தான் உள்ளார்கள். இப்படியான செய்கைகளுக்கு டிஃபன்சிவ் (defensive attitude) அட்டிடுட் எனக் கொள்ளலாம்.
உதாரணமாக, நேற்று ஜிம்மிலிருந்து திரும்பி வீட்டிற்க்குள் நுழைந்தேன். நண்பர் ஒருவர் வந்திருந்தார். நண்பருடன் இன்னொரு நபரும் வந்திருந்தார். வழக்கமான உபசரிப்புகளுக்குப் பிறகு உடற்பயிற்சி பற்றிய பேச்சு வந்தது. நானும் நண்பரும் உடற்பயிற்சி தேக ஆரோக்யம் என்றும் எல்லோரும் செய்ய வேண்டிய ஒன்று என்றும் வலியுறுத்திக் கொண்டிருக்க அந்த இன்னொரு நபர், ஜிம் என்பது பயனற்ற நேர விரயம் என்றும், தேகப்பயிற்சி செய்யாதவர்கள் ஆரோக்யமற்றவர்களா? எனக் கேள்வி எழுப்பியும், பெண்களை வசப்படுத்த விரும்பும் ஆண்கள் மட்டுமே செய்ய விரும்பும் ஒன்று என்பன உட்பட பல எதிரான கருத்துக்களையே சொல்லிக்கொண்டிருந்தார்.[ தேக ஆரோக்யம் பேணுதல் என்பது ஒரு நல்ல பாராட்டப்பட வேண்டிய செய்கை. யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, ஜிம் செல்லும் அனைவருமே இப்படித்தான் என்று கொள்வது தவறானது. ஆனால், இந்த போக்கு ஆண்/பெண் வித்தியாசமின்றி அனைவரிடமும் உள்ளது. மேலும், பெரும்பாலும் தேகப்பயிற்சி செய்யும் ஆண்மகனைப் பற்றி இவ்வாறு தவறாக எண்ணுவது எளிதாக மேற்கொள்ளப்படுகிறது.]
ஆழ்ந்து யோசித்ததில் விஷயம் இவ்வளவுதான்.
ஆங்கிலத்தில் கணிதத்தில் ப்ராபபிலிட்டி (probability) என்று சொல்வார்கள். அதன்படி யோசித்தால், நூறு பேரில் ஒரு பகுதியினருக்கு தேக ஆரோக்யம் பற்றிய சிந்தனையே இருப்பதில்லை. மீதம் உள்ளவர்களில் பலரை சோம்பேரித்தனம் தடுக்கிறது. அவர்களையும் கழித்துவிட்டு பார்த்தால், இன்னும் பலருக்கு இருக்கும் கெட்ட பழக்கங்களால் தேகப்பயிற்சி செய்ய லாயக்கற்றவர்களாகி விடுகிறார்கள். மீதம் உள்ளவர்களில் ஒரு சிலருக்கே தேகப்பயிற்சி செய்ய காரணங்கள் நிறைய இருக்கின்றன. ஆரோக்யமும் அழகான உடலையும் வெறுப்பவரும் உண்டோ?
ஆனால், இவ்வாறு இல்லாத மனிதர்கள்தாம், தேகப்பயிற்சி செய்ய முடியாத தன் நிலையை நியாயப்படுத்தவும், தேகப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஆரோக்யம் மற்றும் அழகான உடலால் கவனிக்கப்படுவதை ஜீரணிக்கமுடியாமலும் ஜிம் நேர விரயம் என்றும், பெண்களை வசப்படுத்த விரும்பும் ஆண்கள் செய்ய விரும்பும் ஒன்று எனவும் பலவாறாக காரணம் கற்பிக்கிறார்கள்.
விலங்கியல் மற்றும் தாவரவியலில் ஜெனடிக்ஸ் (genetics) என்று ஒன்று வருகிறது. டி.என்.ஏ (DNA) என்று சொல்வார்கள். டெக்னிகலாக பார்த்தால் இது ஒரு இரட்டை வட சங்கிலித் தொடர் ஆகும். இதில், அடினைன், குயினன், சயிட்டோசைன், தைமன் என்கிற நான்கு வேதிப்பொருள்கள் தங்களுக்குள்ளேயே இரண்டிரண்டாக பல்வேறு துணைகளாக அடுக்கடுக்காக உள்ளன. எவ்வாறெல்லாம் துணைகளாக இருக்கலாம் என்பதை காம்பினேஷன் (combination) என்கிற கணித முறைப்படி அறியலாம். இவைகள் தான் பிறக்கும் குழந்தையின் உருவம், எடை, வளர்ந்தபின் அதன் குணம் முதலான அனைத்தையும் முடிவு செய்கின்றன.
நன்றாகக் கூர்ந்து கவனித்தால், ஒரு உண்மை புரிகிறது. அது, தேகப்பயிற்சி தொடர்ச்சியாக செய்யும்போது அந்த செயலுக்கான சாரம், அதாவது, நிறைய ஆக்சிஜன் உட்கொள்ளும் தன்மை, சீரான ரத்த ஓட்டம், கடினமான வேலையை தொடர்ச்சியாக செய்யும் திறன், அவ்வாறு செய்யும் போது பல்வேறு ஹார்மோன்கள் சீராக சுரக்கும் தன்மை, ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாதவாறு ரத்தம் ஒடும் தன்மை முதலான சாரங்கள் இந்த டி.என்.ஏ சங்கிலித்தொடரில் காலப்போக்கில் பதிந்து விடுகிறது. இவ்வாறு பதிந்த சாரங்கள் அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகின்றன.
இவ்வாறு கடத்தப்படும் சாரங்கள் தான் விளையாட்டுத் துறையில் மற்றும் ஃபாஷன் உலகில் பல்வேறு சாதனையாளர்கள் உருவாகக் காரணங்கள் ஆகின்றன. இத்துறைகளில் பல்வேறு மனிதர்கள் பிறப்பிலேயே அத்துறையில் சிறந்து வருவதற்க்கான உடல்வாகைப் பெற்றவர்களாக இருப்பதைக் காணலாம். முன்னாள் டென்னிஸ் வீரரின் மகள் ஃபாஷன் மற்றும் சினிமா உலகில் சிறப்பாக இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஆதலால், தேகப்பயிற்சி செய்வதில் பல நன்மைகள் இருக்கின்றன என்பதை நாம் ஆழமாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
உண்மையில், தேக பயிற்சி என்பது கட்டாயம் இல்லை. செய்வது நல்லது. கட்டாயம் செய்யவேண்டும் என்றில்லை. தேக பயிற்சி செய்வோரை, ஒரு நல்ல செயலை நேரம் ஒதுக்கி, சிரமேற்கொண்டு முயற்சிப்போர் என்று கொள்வதே உசிதம். மணமானவுடன் குழந்தைகளின் எதிர்காலத்திற்கென்று கஷ்டப்பட்டு ஓடியோடி பணம் சேமிக்கும் மனிதர்கள், இது போன்று தேகப்பயிற்சி மேற்கொண்டால், தனக்கும், தன் சந்ததியருக்கும் பொக்கிஷமாய் ஆரோக்யத்தின் சாரத்தை சேகரித்து வழங்குவது, கோடானு கோடி பணம் சேமித்துத் தருவதற்க்குச் சமம். மேலும், அடுத்த தலைமுறையின் சர்வைவலுக்குத் தேவையான அத்தியாவசியமான ஆரோக்யத்தின் சாரங்களை இது எளிதாகத் தருமானால் இதை சிரமேற்கொண்டு செய்வது முகவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
- ராம்ப்ரசாத், சென்னை.
http://www.ramprasathkavithaigal.blogspot.com/
Wednesday, 22 April 2009
Friday, 10 April 2009
காரணங்களும் காரியங்களும் - விகடன்
காரணங்களும் காரியங்களும்...
http://youthful.vikatan.com/youth/ramstory09042009.asp
உலகில் எல்லாமும் எல்லாவற்றுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையதாகவோ அல்லது சார்ந்தோ தான் இருக்கிறது. உதாரணத்திற்கு, என் நண்பர் சென்னை வடபழனியில் வீடு வாங்கினார். அவர் அங்கு வீடு வாங்குவதற்கும், சென்னையில் நூறடிசாலையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் ஒரு நாள் வருமானம் குறைவதற்க்கும் கூட தொடர்பு உண்டு எனலாம்.
எப்படி என்றால், கடலூரிலிருந்து வேலை தேடி, நெர்காணலுக்கு வரும் என் நண்பரின் உறவுக்காரர், என் நண்பர் சென்னையில் இல்லாதிருந்தால், அந்த ஹோட்டலில் தான் தங்கியிருப்பார். ஆனால், இப்போது அப்படி இல்லை. இப்போது, அவருக்கு என் நண்பர் வீட்டில் தங்குவதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு காரணம் உறவுகாரரை சந்திப்பது, இன்னொன்று நண்பர் வீட்டில் தங்குவதன் மூலம் மாமாவுடனான நேசத்தைக் காண்பிப்பது. மறைமுகக் காரணம், ஹோட்டலில் தங்கும் செலவை குறைப்பது.
இந்த காரணங்களே ஒரு மிகப்பெரிய விஷயங்களாக உள்ளன. சரியாக யோசித்துப்பார்த்தால், காரணங்கள் என்பது மனிதர்க்கு மனிதர் மாறுபடும் விஷயமாக தான் உள்ளது. ஆங்கிலத்தில் இதனை relative concept என்பர். இதைத்தான் ஐன்ச்டின் விதி என்று ஆங்கிலேயர்கள் குறிப்பர்.[ ஆனால், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே, தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் முறைகளில் இதைத் தெளிவாக உணர்த்தியுள்ளனர். ஏனோ நம் மக்களுக்கு ஆங்கிலேயர்கள் கண்டுவிடித்துச் சொன்னால் மட்டுமே புரிகிறது!!!!]
காரணங்கள் என்பது, இன்னும் பல விஷயங்களைச் சார்ந்த ஒரு விஷயமாகவும் உள்ளது. சரி/தவறு, நல்லது/கெட்டது என்பன போன்றவைதான் அவைகள். எல்லோருக்கும், ஒரே விஷயம் சரியாக படுவதே இல்லை.
உதாரணத்திற்கு, உறவுக்காரர் பகட்டு ஆசாமியாக இருப்பின், அல்லது, செலவாளியாக இருப்பின், அல்லது நண்பருடனான உறவு சுமூகமாக இல்லாதிருப்பின், வேண்டுமென்றே ஹோட்டலில் தங்கவும் செய்யலாம். அவரைப் பொருத்தவரை அதுவே அவருக்கு சரி என்று பட்டிருக்கும்.
இதுவே, அவருக்கு நண்பருடன் நல்ல நட்பிருப்பின், ஹோட்டலில் தங்குவதுதான் தவறு என்றாகியிருக்கும். அதலால், இந்த சரி/தவறுகளும் கூட ஐன்ச்டின் விதிப்படி, மேலும் சில காரணங்களைச் சார்ந்து இருக்கிறது. அந்த காரணங்கள், தன் பங்கிற்கு வேறு சில காரணங்களையோ அல்லது சில விதிகளையோ சார்ந்து இருக்கின்றது. இது ஒரு சுழற்சி. ஆங்கிலத்தில் cyclic behaviour என்பார்கள்.
உண்மைதான். சற்றே ஆழமாக தொடர்புபடுத்தி யோசித்தால், உலகில் சற்றேரக்குறைய, எல்லாமே இந்த சுழற்சி முறையில் தான் இயங்குகின்றது என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும். காய்கறிக்கடைக்காரனின் பிள்ளையை பள்ளியில் சேர்த்துக்கொள்ள நன்கொடை வாங்கும் துணைவேந்தர், அந்தப் பணத்தை கல்லூரி செல்லும் தன் பேரன்களுக்குக் கைச்செலவுக்குத் தருகிறார். பேரன்கள் அந்த பணத்தை சிறப்பு வகுப்புகள் நடத்தும் பேராசிரியர்களுக்குத் தருகிறார்கள். அப்பேராசிரியரின் மனைவி அந்த பணத்தைக் கொண்டு காய்கறிகாரனிடம் கறிகாய் வாங்குகிறாள். இதுவே சுழற்சி என்பது. இதே கருத்தைத்தான் ஷ்ரி கிருஷ்ணரின் கீதா உபதேசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ' நேற்று உன்னுடையதாயிருந்தது இன்று வேறொருவருடையதாகிறது. நாளை அது மற்றொருவருடையதாகும்'. இன்னும் சொல்லப்போனோல், இது போன்ற பல சாரங்களை, இறைவனின் படைப்பு விதிகளை, மனிதர்களின் இயல்புகளை கீதா உபதேசத்தில் தெள்ளத் தெளிவாகக் காணலாம்.
இதை மானுடம் தெரிந்துகொள்ளவேண்டும், வாழ்க்கையை எளிதாக வாழ வேண்டும் என்பன போன்ற பல கருத்துக்களை வலியுருத்தித் தானோ அன்றைய நம் முன்னோர்கள் இறைவனின் பெயரால் கதையாகச் சொல்லி இலக்கியமாக பல தலைமுறைகள் பயன்படுத்த பாதுகாத்து வைத்தார்கள்.
யோசித்துப்பார்த்தால், நாம் எல்லோரும் காலத்தின் வெவ்வெறு கட்டங்களில், அவரவர்க்கு உள்ள நிறை/குறைகளுடன், பல்வேறு காரணங்களால் விளையும் சூழ்நிலைகளில் அந்தந்த நெரத்திற்கேற்ப நம்மை நாம் வெளிப்படுத்திக்கொள்கிறோம். கணிதத்தில் ஆங்கிலத்தில் permutation and combination என்று சொல்வார்கள்.
ஒரு குறிப்பிட்ட குணாதிசயங்களைக் கொண்ட பல்வேறு வஸ்துக்களை ஒன்றாக ஒரு ஜாடியில் போட்டுக் குலுக்கினால், அந்த வஸ்துக்கள் ஒன்றோடோன்று எவ்வாறெல்லாம் முட்டிக்கொள்கின்றன, எவ்வாறெல்லாம் விளைவுகள் உண்டாகின்றன என்பதுதான் இது. இது போலத்தான் நாம் எல்லொரும் உலகம் என்னும் ஜாடியில் அவரவர்க்கு உண்டான தன்மைகளையும், சரி தவறு முதலான கோட்பாடுகளுடன் சந்தித்துக்கொள்ளும்போது பல விளைவுகள் உண்டாகின்றன.
ஆழ்ந்து யோசித்துப்பார்த்தால், உலகின் தன்மையையும், மனிதனின் தன்மையையும் சரியாகப் புரிந்துகொண்டால், வெற்றிக்கான வழி கிடைக்கும் என்றே தோன்றுகிறது.
இன்னும் எழுதுவேன்.........................

Subscribe to:
Posts (Atom)