உடற்பயிற்சி - சில உண்மைகள்...
http://youthful.vikatan.com/youth/bcorner5.asp
தான் செய்யும்/ செய்ய நேரும் ஒவ்வொரு காரியத்தையும் நியாயப்படுத்தவேண்டிய கட்டாயம் தனக்கு இருப்பதாகவே ஒவ்வொரு மனிதனும் நினைத்துக்கொள்கிறான். நாடு, மொழி, இன வேறுபாடுகளையும் கடந்து உலகம் முழுவதும் மனிதர்கள் இப்படி நினைப்பவர்களாகத் தான் உள்ளார்கள். இப்படியான செய்கைகளுக்கு டிஃபன்சிவ் (defensive attitude) அட்டிடுட் எனக் கொள்ளலாம்.
உதாரணமாக, நேற்று ஜிம்மிலிருந்து திரும்பி வீட்டிற்க்குள் நுழைந்தேன். நண்பர் ஒருவர் வந்திருந்தார். நண்பருடன் இன்னொரு நபரும் வந்திருந்தார். வழக்கமான உபசரிப்புகளுக்குப் பிறகு உடற்பயிற்சி பற்றிய பேச்சு வந்தது. நானும் நண்பரும் உடற்பயிற்சி தேக ஆரோக்யம் என்றும் எல்லோரும் செய்ய வேண்டிய ஒன்று என்றும் வலியுறுத்திக் கொண்டிருக்க அந்த இன்னொரு நபர், ஜிம் என்பது பயனற்ற நேர விரயம் என்றும், தேகப்பயிற்சி செய்யாதவர்கள் ஆரோக்யமற்றவர்களா? எனக் கேள்வி எழுப்பியும், பெண்களை வசப்படுத்த விரும்பும் ஆண்கள் மட்டுமே செய்ய விரும்பும் ஒன்று என்பன உட்பட பல எதிரான கருத்துக்களையே சொல்லிக்கொண்டிருந்தார்.[ தேக ஆரோக்யம் பேணுதல் என்பது ஒரு நல்ல பாராட்டப்பட வேண்டிய செய்கை. யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, ஜிம் செல்லும் அனைவருமே இப்படித்தான் என்று கொள்வது தவறானது. ஆனால், இந்த போக்கு ஆண்/பெண் வித்தியாசமின்றி அனைவரிடமும் உள்ளது. மேலும், பெரும்பாலும் தேகப்பயிற்சி செய்யும் ஆண்மகனைப் பற்றி இவ்வாறு தவறாக எண்ணுவது எளிதாக மேற்கொள்ளப்படுகிறது.]
ஆழ்ந்து யோசித்ததில் விஷயம் இவ்வளவுதான்.
ஆங்கிலத்தில் கணிதத்தில் ப்ராபபிலிட்டி (probability) என்று சொல்வார்கள். அதன்படி யோசித்தால், நூறு பேரில் ஒரு பகுதியினருக்கு தேக ஆரோக்யம் பற்றிய சிந்தனையே இருப்பதில்லை. மீதம் உள்ளவர்களில் பலரை சோம்பேரித்தனம் தடுக்கிறது. அவர்களையும் கழித்துவிட்டு பார்த்தால், இன்னும் பலருக்கு இருக்கும் கெட்ட பழக்கங்களால் தேகப்பயிற்சி செய்ய லாயக்கற்றவர்களாகி விடுகிறார்கள். மீதம் உள்ளவர்களில் ஒரு சிலருக்கே தேகப்பயிற்சி செய்ய காரணங்கள் நிறைய இருக்கின்றன. ஆரோக்யமும் அழகான உடலையும் வெறுப்பவரும் உண்டோ?
ஆனால், இவ்வாறு இல்லாத மனிதர்கள்தாம், தேகப்பயிற்சி செய்ய முடியாத தன் நிலையை நியாயப்படுத்தவும், தேகப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஆரோக்யம் மற்றும் அழகான உடலால் கவனிக்கப்படுவதை ஜீரணிக்கமுடியாமலும் ஜிம் நேர விரயம் என்றும், பெண்களை வசப்படுத்த விரும்பும் ஆண்கள் செய்ய விரும்பும் ஒன்று எனவும் பலவாறாக காரணம் கற்பிக்கிறார்கள்.
விலங்கியல் மற்றும் தாவரவியலில் ஜெனடிக்ஸ் (genetics) என்று ஒன்று வருகிறது. டி.என்.ஏ (DNA) என்று சொல்வார்கள். டெக்னிகலாக பார்த்தால் இது ஒரு இரட்டை வட சங்கிலித் தொடர் ஆகும். இதில், அடினைன், குயினன், சயிட்டோசைன், தைமன் என்கிற நான்கு வேதிப்பொருள்கள் தங்களுக்குள்ளேயே இரண்டிரண்டாக பல்வேறு துணைகளாக அடுக்கடுக்காக உள்ளன. எவ்வாறெல்லாம் துணைகளாக இருக்கலாம் என்பதை காம்பினேஷன் (combination) என்கிற கணித முறைப்படி அறியலாம். இவைகள் தான் பிறக்கும் குழந்தையின் உருவம், எடை, வளர்ந்தபின் அதன் குணம் முதலான அனைத்தையும் முடிவு செய்கின்றன.
நன்றாகக் கூர்ந்து கவனித்தால், ஒரு உண்மை புரிகிறது. அது, தேகப்பயிற்சி தொடர்ச்சியாக செய்யும்போது அந்த செயலுக்கான சாரம், அதாவது, நிறைய ஆக்சிஜன் உட்கொள்ளும் தன்மை, சீரான ரத்த ஓட்டம், கடினமான வேலையை தொடர்ச்சியாக செய்யும் திறன், அவ்வாறு செய்யும் போது பல்வேறு ஹார்மோன்கள் சீராக சுரக்கும் தன்மை, ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாதவாறு ரத்தம் ஒடும் தன்மை முதலான சாரங்கள் இந்த டி.என்.ஏ சங்கிலித்தொடரில் காலப்போக்கில் பதிந்து விடுகிறது. இவ்வாறு பதிந்த சாரங்கள் அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகின்றன.
இவ்வாறு கடத்தப்படும் சாரங்கள் தான் விளையாட்டுத் துறையில் மற்றும் ஃபாஷன் உலகில் பல்வேறு சாதனையாளர்கள் உருவாகக் காரணங்கள் ஆகின்றன. இத்துறைகளில் பல்வேறு மனிதர்கள் பிறப்பிலேயே அத்துறையில் சிறந்து வருவதற்க்கான உடல்வாகைப் பெற்றவர்களாக இருப்பதைக் காணலாம். முன்னாள் டென்னிஸ் வீரரின் மகள் ஃபாஷன் மற்றும் சினிமா உலகில் சிறப்பாக இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஆதலால், தேகப்பயிற்சி செய்வதில் பல நன்மைகள் இருக்கின்றன என்பதை நாம் ஆழமாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
உண்மையில், தேக பயிற்சி என்பது கட்டாயம் இல்லை. செய்வது நல்லது. கட்டாயம் செய்யவேண்டும் என்றில்லை. தேக பயிற்சி செய்வோரை, ஒரு நல்ல செயலை நேரம் ஒதுக்கி, சிரமேற்கொண்டு முயற்சிப்போர் என்று கொள்வதே உசிதம். மணமானவுடன் குழந்தைகளின் எதிர்காலத்திற்கென்று கஷ்டப்பட்டு ஓடியோடி பணம் சேமிக்கும் மனிதர்கள், இது போன்று தேகப்பயிற்சி மேற்கொண்டால், தனக்கும், தன் சந்ததியருக்கும் பொக்கிஷமாய் ஆரோக்யத்தின் சாரத்தை சேகரித்து வழங்குவது, கோடானு கோடி பணம் சேமித்துத் தருவதற்க்குச் சமம். மேலும், அடுத்த தலைமுறையின் சர்வைவலுக்குத் தேவையான அத்தியாவசியமான ஆரோக்யத்தின் சாரங்களை இது எளிதாகத் தருமானால் இதை சிரமேற்கொண்டு செய்வது முகவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
- ராம்ப்ரசாத், சென்னை.
http://www.ramprasathkavithaigal.blogspot.com/